ஸ்டாலின் பற்றி

suran
இ ந்த அழகான காட்சி இப்போது சென்னையில்தான்.
கருணாநிதி ஆட்சிகாலத்தில் துவக்கப்பட்டு இடையில் ஆட்சி மாறியதில் மூலையில் போடப்பட்டு மக்களின் குரலால் மீண்டும் ஆரம்பாமாகி ஓடத்துவங்கியுள்ள மெட்ரோ ரெயில்.
முதல்கட்ட சோதனை ஓட்டம்.கோயம்பேட்டில் இருந்து அசோக் தூண் வரை.
--------------------------------------------------------------------------------------------------------------------------
 
ஸ்டாலின் பற்றி
நெதர்லாந்து தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு ஆவணப் படம் ஒளிபரப்பினார்கள். (Ned 2: In the Wake of Stalin, 12 februari) ஸ்டாலின் இறந்து, அறுபது வருடங்களுக்குப் பிறகும், ரஷ்யாவில் இன்னமும் அவரைப் பற்றிய நூல்கள், புதிது புதிதாக வெளிவந்து கொண்டிருக்கின்றன என்று குறைப் பட்டார்கள். மேற்கத்திய நாடுகளிலும் அது தான் நிலைமை. இன்னமும் ஸ்டாலின் பற்றிய புதிய புதிய ஆவணப் படங்களை தயாரித்து ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மேற்கத்திய நாடுகளில் எதிர்மறையான தகவல்கள் மட்டுமே சொல்லப் படும். ரஷ்யாவில் ஸ்டாலினை ஆதரித்தும், எதிர்த்தும் நூல்கள் வருகின்றன. அது மட்டுமே வித்தியாசம்.

இந்த ஆவணப் படமும், ஸ்டாலினை ஒரு கொடுங்கோலனாக சித்தரிக்கும், ஸ்டாலின் காலத்தில் நடந்தாதாகக் கூ றப்படும் ப்படும்  கொடுமைகளை கூறும் படம் தான். இருப்பினும், இன்றைய ரஷ்ய மக்கள், ஸ்டாலினை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதையும், ஆவணப் படத்தின் இறுதியில் காட்டுகின்றனர். 


- ரஷ்ய அதிபர் புத்தின் ஸ்டாலினின் அபிமானி அல்லர். தனிப்பட்ட முறையில் ஸ்டாலினை வெறுக்கலாம். ஆனால், அவர் கூட, அதை வெளிப்படையாக சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார். "ஸ்டாலினை விமர்சிக்கலாம். ஆனால், அவதூறுகளை ஏற்றுக் கொள்ள முடியாது." என்று புத்தின் தெரிவித்துள்ளார். அதற்குக் காரணம், ஸ்டாலின் கால சோவியத் யூனியன், மேலைத்தேய வல்லரசு நாடுகளை துணிச்சலுடன் எதிர்த்து நின்றதை, இன்றைய ரஷ்ய மக்கள் பிரமிப்புடன் நோக்குகின்றார்கள். இன்றைக்கும், மேற்குலகம் பல்வேறு வழிகளில் ரஷ்யாவை மிரட்டிக் கொண்டிருக்கும் நேரத்தில், புத்தின் மக்களின் மனங் கவர்ந்த ஸ்டாலினை அங்கீகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் தோன்றி உள்ளது.

- மொஸ்கோ நகரில், "ஸ்டாலினிச பயங்கரவாதத்திற்கு" பலியானவர்களின் குடும்ப உறுப்பினர்கள், வருடா வருடம் ஓரிடத்தில் ஒன்று கூடி நினைவேந்துகின்றனர். ஒரு பெருந் தொகையாக இல்லா விடினும், அது அரசினால் புறக்கணிக்க முடியாத நிகழ்வு. ஆனால், கடந்த சில வருடங்களாக, அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அந்த நிகழ்வில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வருகின்றனர். என்ன காரணம்? எந்தவொரு அரசியல்வாதியும், பெரும்பான்மை ரஷ்ய மக்களை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. (அண்மையில், பிரபலமான ரஷ்ய தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று மக்களிடம் வாக்கெடுப்பு நடத்தியது. ரஷ்ய வரலாற்றில் சிறந்த தேசிய நாயகனாக ஸ்டாலினை பெரும்பான்மை மக்கள் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.)

- மொஸ்கோ நகரில், இன்றைக்கும் ஸ்டாலின் ஆதரவு ஊர்வலங்கள், கூட்டங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன. நெதர்லாந்து தொலைக்காட்சி படப்பிடிப்பாளர், வீதியில் நிற்கும் பொது மக்களிடம் கருத்துக் கேட்கின்றனர். ஸ்டாலினை ஆதரித்தும், எதிர்த்தும் பலர் பலவிதமான கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் கூறுகின்றார்: (இங்கேயுள்ள படத்தில் இருப்பவர்.)
"நானோ, எனது குடும்பமோ கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களாக இருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் எனது தாத்தாவை சிறையில் அடைத்து துன்புறுத்தினார்கள். ஆனால், அவரை கைது செய்தது ஸ்டாலின் அல்ல. மாறாக, ட்ராஸ்கிஸ்டுகள்."
உடனே ஒருவர் குறுக்கிட்டு, "ட்ராஸ்கிஸ்டுகளை எப்போதோ ஒழித்துக் கட்டி விட்டார்களே?" என்கிறார். "இல்லை, இல்லை... ட்ராஸ்கிஸ்டுகள் தான் எனது தாத்தாவை கைது செய்து துன்புறுத்தினார்கள். ஸ்டாலின் அல்ல." என்கிறார், முதலில் பேசியவர். இந்த இடத்தில், அவரை மேற்கொண்டு பேச விடாமல், இரண்டு பேர் வந்து பிடித்துக் கொள்கிறார்கள். 


- ஸ்டாலின் ஆதரவு ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஆர்வலர் ஒருவரிடம், ஆவணப் படப் பிடிப்பாளர் பேச்சுக் கொடுக்கிறார்.
"ஸ்டாலின் போன்ற ஒரு தலைவர் மீண்டும் வர வேண்டும் என்று விரும்புகிறீர்களா?"
அதற்கு அந்த ஆர்வலர் பின்வருமாறு பதிலளிக்கிறார்:
"ஸ்டாலின் ஒரு ஒப்பற்ற தலைவராக திகழ்ந்தார். நாஜி ஜெர்மனியை தைரியமாக எதிர்த்து நின்று தோற்கடித்தார். இப்போது இருக்கும் அரசியல் தலைவர்கள் கையாலாகாதவர்கள். பயந்தாங் கொள்ளிகள். அன்று அவர்கள் ஆட்சியில் இருந்திருந்தால், இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா தோற்றிருக்கும்.

எதிர்காலத்திலும் ஸ்டாலின் காலத்தில் இருந்ததைப் போன்ற ஆட்சி வந்தால் நான் வரவேற்பேன். அந்தக் காலத்தில் இருந்ததைப் போன்று, நாடு முழுவதும் சிறை முகாம்களை கட்ட வேண்டும். எதற்கென்று கேட்கிறீர்களா? இன்றைக்கு சுதந்திரமாகத் திரியும் ஊழல் பெருச்சாளிகள், திருட்டுப் பயல்கள் எல்லோரையும் தூக்கி உள்ளுக்கு போடுவதற்கு தான்!"
 
இதுதான் இன்றைய எதிர்பார்ப்பு.இந்தியாவில் மட்டுமல்ல உலகமெங்கும்.
அதிலும் கண்டிப்பாக இந்தியாவுக்கு அவசரத்தேவை  ஸ்டாலின் . 
 
ஒரு கவிதையின் சிறு பகுதி.

  "பேசிக்கொண்டே போக
“ஸ்டாலின்” என்பது வெறும் பேச்சல்லவே…
முதலாளித்துவ சுரண்டலுக்கெதிரான வீச்சு!
அந்த… வீச்சோடு கொண்டாடுவோம்
ஸ்டாலினை !



  .நன்றி :கலை அரசன் [g+]
----------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?