எரிச்சல் தரும் இடுகைகளை நீக்கிட...
எரிச்சல் தரும் இடுகைகளை நீக்கிட என்றவுடன் இந்த இடுகையை எப்படி நீக்கலாம் என்று எண்ண வேண்டாம்.
பேஸ்புக் தளத்தில், நமக்கென அக்கவுண்ட் வைத்து, இயக்கத் தொடங்கிய சில வாரங்களிலேயே நம் நண்பர்கள் வட்டம் வேகமாக விரிவடையும்.
நாம் என்னதான் நம் நண்பர்களை எடைபோட்டு தேர்ந்தெடுத்தாலும், ஒரு சிலர் தங்களுடைய செய்திப் பதிவுகள் (news feed) மூலம் நம்மை எரிச்சல் அடைய வைப்பார்கள்.
இவர்களிடமிருந்து நாம் ஆர்வம் காட்டாத செய்திப் பதிவுகள் அதிக எண்ணிக்கையில் கிடைக்கப் பெறுவோம்.
இதனால் கடுப்பாவது ஒரு பக்கம் இருந்தாலும், இந்த பதிவுகளை நிறுத்த முடியாமல் ,வழி தெரியாமல் தவிப்போம்.
பேஸ்புக் தளம் தற்போது இதற்கு ஒரு தீர்வினைத் தந்துள்ளது.
பேஸ்புக் தளம் தற்போது இதற்கு ஒரு தீர்வினைத் தந்துள்ளது.
இந்தப் பிரிவில், உங்களுடைய செய்திப் பதிவு பக்கத்தில், கடந்த வாரத்தில் அதிகம் பதிவுகளைத் தந்த நண்பர்கள், பக்கங்கள் மற்றும் குழுக்கள் பட்டியலிடப்படும்.
இதில் யாரிடமிருந்து இத்தகைய பதிவுகளை நிறுத்த வேண்டுமோ, அவர்கள் பெயர் முன் ஒரு டிக் கிளிக் செய்து, அவர்கள் நம்மைப் பின் தொடர்ந்து வந்து செய்திப் பதிவுகளை இடுவதனை நிறுத்தலாம்.
இதனை நிறுத்திய பின்னரும், அவர்களுடன் தொடர்ந்து நீங்கள் நட்பாக இருக்கலாம். ஆனால், அவர்களிடமிருந்து நம்மை எரிச்சலடையச் செய்திடும் பதிவுகள், நிலைப்பாடுகள் நமக்கு வராது.
இதே பட்டியலில், கடந்த காலத்தில் நம்மைப் பின்பற்றி பதிவுகள் இடாமல் ஒதுக்கி வைக்கப்பட்டவர்களின் பெயர்களையும் காணலாம்.
நீங்கள் முடிவெடுக்கும் எந்த நேரத்திலும், இவர்களுக்கு உங்களைப் பின்பற்ற அனுமதி அளிக்கலாம்.
இந்த News feed settings பிரிவு மொபைல் சாதனங்களிலும், நம் டெஸ்க்டாப்பிலும் இப்போது கிடைக்கிறது.
இந்த News feed settings பிரிவு மொபைல் சாதனங்களிலும், நம் டெஸ்க்டாப்பிலும் இப்போது கிடைக்கிறது.
இதனைப் பெற "more" மெனு கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் மெனுவில், கீழாகச் செல்லவும்.
அங்கு "help & settings" என்ற பிரிவில், நீங்கள் இந்த வசதியினைப் பெறலாம்.
இதற்கிடையே, இன்னொரு வேலையையும் நீங்கள் மேற்கொள்ளலாம். குறிப்பிட்ட விரும்பத்தகாத நபரிடமிருந்து வரும் தகவல்களை மறைத்து வைக்கலாம். அந்த பதிவில், வலது மேல் மூலையில் உள்ள சிறிய அம்புக் குறியில் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், hide என்பதை அழுத்தி, தகவலை மறைக்கலாம்.

இவ்வாறு மறைக்கப்பட்ட நிலையில், குறிப்பிட்ட நபரிடமிருந்து வரும் தகவல் பதிவுகள் மறைக்கப்படும் மற்றும் குறைக்கப்படும்.
“ஒரு நண்பர் நம்மைப் பின் தொடர அனுமதி அளிப்பதுவும், அனுமதியை நிறுத்துவதும் இனி உங்கள் கைகளில் உள்ளது” என்று இது குறித்து பேஸ்புக் நிர்வாகி க்ரெய்க் மர்ரா தன் வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.
“ஒரு நண்பர் நம்மைப் பின் தொடர அனுமதி அளிப்பதுவும், அனுமதியை நிறுத்துவதும் இனி உங்கள் கைகளில் உள்ளது” என்று இது குறித்து பேஸ்புக் நிர்வாகி க்ரெய்க் மர்ரா தன் வலைப்பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த செட்டிங்ஸ் இயக்குவது பற்றிய காணொளி விளக்கக் காட்சியையும் காணலாம்.
அண்மையில் இன்னொரு சமூக இணைய தளமான, ட்விட்டர் தளத்தில், இதே போன்ற தகவல்களை மறைக்கும் வசதி தரப்பட்டது.
அண்மையில் இன்னொரு சமூக இணைய தளமான, ட்விட்டர் தளத்தில், இதே போன்ற தகவல்களை மறைக்கும் வசதி தரப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பேஸ்புக் தளமும் இந்த வசதியைத் தந்துள்ளது.
மர்ரா வலைப்பதிவு இணைப்பு:http://newsroom.fb.com/news/2014/11/news-feed-fyi-more-ways-to-control-what-you-see-in-your-news-feed/
===========================================================================================================================================================================================
உலக அளவில் கட்டி குடிக்கப்படாதஆறு உயர்ந்த கட்டிடங்கள்.
நக்கீல் டவர்:துபாய்.
இந்தியா டவர்:மும்பை.
ரஷ்யா டவர்:
டொகா கன்வென்சன் செண்டர் டவர்:
புர்ஜ் அல் ஆலம்:துபாய்.
சோவியத் ஒன்றியத்தில் 2 ம் உலகப் போர் நினைவாக உருவாக்க முனைந்த கட்டிடம்[மாதிரி]
கீழே கட்டிடம அமைக்க அடித்தளத்துக்கு தோண்டப்பட்டு இன்று ஏரியாக இருக்கும் இடம்.