பூண்டை சேர்ப்பது அவசியமா?
வெள்ளைப் பூண்டில் நிறைந்திருக்கும் அலைல் சல்பைடு என்னும் பொருள் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
குறிப்பாக இரைப்பை புற்றுநோயை பூண்டு தடுப்பதாக பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள், வைட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றன.

தினமும் பூண்டை உட்கொண்டு வருவதால் வைரஸ் மற்றும் பாக்டீரியா தாக்குதலில் இருந்து உடலை காத்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
மொத்தத்தில், உடலில் நச்சுகள் சேராமல் தடுப்பதில் பூண்டு முக்கியப் பங்கு வகிக்கிறது. மாரடைப்பு மற்றும் இதர இதய நோய் பிரச்சினைகளில் இருந்து பூண்டு பாதுகாக்கிறது.
இதில் உள்ள சல்பர் கலந்த பொருட்கள் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும்.
அதுமட்டுமின்றி, கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையும் பூண்டுக்கு உண்டு.

தொண்டை பிரச்சினைகளுக்கு விடைகொடுக்கும் பூண்டில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பொருட்கள், தொண்டை பிரச்சினைகளிலிருந்து விடுவிக்கிறது.
தொண்டை எரிச்சல்களைக் குணப்படுத்துவதுடன், சுவாசப் பாதை தொற்றுகளின் தீவிரத்தையும் குறைக்கிறது.
மேலும் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது.
தொண்டை எரிச்சல்களைக் குணப்படுத்துவதுடன், சுவாசப் பாதை தொற்றுகளின் தீவிரத்தையும் குறைக்கிறது.
மேலும் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமைகிறது.
பூண்டில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வலி நிவாரண குணங்கள் பல்வலிக்கு நிவாரணம் அளிக்கின்றன.
==========================================
குளிர் பதனப் பெட்டியில்
வைக்கக் கூடா பொருட்கள்.
நாம் சமைக்க பயன்படும், சமைத்த பொருட்களை பிரிட்ஜில் வைத்து பல நாட்களுக்கு பாதுகாக்கிறோம்.
ஆனால், சில பொருட்களை பிரிட்ஜ் எனப்படும் குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது.
வைக்கக் கூடாது மட்டும் அல்ல, வைக்கவேக் கூடாது என்றும் சொல்லலாம்.
அது போன்ற போருட்களின் பட்டியலை பார்க்கலாம்.
அது போன்ற போருட்களின் பட்டியலை பார்க்கலாம்.
வெங்காயம்
வெங்காயம் பொதுவாக காற்றோட்டமான சூழ்நிலையில் இருக்க வேண்டும். பாலீதீன் பையில் அடைத்து விற்கப்படும் வெங்காயத்தையும் நான் வாங்கி வீட்டுக்கு கொண்டு வந்த பிறகு அதனை காற்றோட்டமாக வைக்க வேண்டும்.
பூண்டு
பூண்டை எப்போதுமே பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அது பூரணம் பிடிக்க ஆரம்பித்துவிடும். அதனை காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பூண்டுகளை வாங்கி வந்ததும், அதனை தனித்தனி பல்லாக பிரித்து எடுத்து வைக்கலாம்.
உருளைக் கிழங்கு
உருளைக் கிழங்குகளை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அதுபோலவே அதனை கழுவியும் எடுத்து வைக்கக் கூடாது. உருளைக் கிழங்குகளில் பச்சை வேர்கள் மற்றும் பச்சை நிறம் இல்லாமல் பார்த்து வாங்க வேண்டும். காற்றோட்டமான சூழலில் வைக்க வேண்டும். பாலீதீன் பையில் வைக்கக் கூடாது.
தேன்
உலகத்திலேயே கெட்டுப் போகாத உணவு பொருள் என்று ஒன்று உண்டு என்றால் அது தேன்தான். ஆனால், நாம் இப்போது கடைகளில் வாங்கப்படும் தேன், சுமை மற்றும் பலவற்றுக்காக பல வித பொருட்கள் கலக்கப்பட்டு வருகிறது. எனினும், தேனை பிரிட்ஜில் வைத்து பராமரிக்கக் கூடாது.
வாழைப்பழம்
வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைத்தால் அது விரைவில் கெட்டுப் போய் தோல் கருத்து விடும். எனவே வாழைப் பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது.
பூசணிக்காய்
பூசணிக்காயை நன்கு காற்றோட்டமான இடத்தில் வைக்க வேண்டும்.
முலாம்பழம்
கடையில் இருந்து முழுதாக வாங்கி வந்தமுலாம்பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால், முலாம் பழத்தில் இருக்கும் சில சத்துக்களை பழம் இழந்து விடுகிறது. ஆனால், நறுக்கிய முலாம்பழத்தை டப்பாவிலோ பாலிதீன் பையிலோ போட்டு பிரிட்ஜில் வைக்கலாம்.
அன்னாசி, கிவி பழம், பிலம் பழம், மாங்காய் போன்றவற்றையும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.
==============================================
பார் கோடு பற்றி
பார்த்துக்
கொள்ளுங்கள்.