செவ்வாய், 13 ஜனவரி, 2015

நலம் தரும் ஓமியோபதி ஓமியோபதி மருத்துவம் பற்றியும் அதன் குணமாக்கும் சக்தி பற்றியும் முன்பே பதிவிட்டிருக்கிறோம்.
அதனை வெறும் தகவல்கள் அடிப்படையில் கூற வில்லை.
ஓமியோபதி மருந்துகள் மூலம் நலமான அனுபவம் கொண்டெ பதிவிட்டும்.
இப்போது மீண்டும் ஒரு தெளிவாக்கல் கட்டுரை.
இது தினகரன் நாளிதழில் வந்த கட்டுரை மீள் இடுகை.
உலகின் இரண்டாவது பெரிய மருத்துவம் என்ற பெருமையை 250 ஆண்டுகளுக்குள்ளேயே பெற்றிருக்கிறது ஹோமியோபதி. 
வேகமாக வளர்ந்து வரும் இந்த மாற்று மருத்துவத்தைக் கண்டுபிடித்தது ஓர் அலோபதி மருத்துவர் என்பது சுவாரஸ்யமான தகவல். 

முள்ளை முள்ளால் எடுப்பது...

எந்த ஒரு காரணி நோயை ஏற்படுத்துகிறதோ அதே காரணிதான் அந்த நோயைத் தீர்க்கும் நிவாரணியாகவும் இருக்கும் என்பதன் அடிப்படையிலேயே ஹோமியோபதி செயல்படுகிறது. அதாவது, முள்ளை முள்ளால் எடுப்பதுதான் ஹோமியோபதி. டாக்டர் சாமுவேல் ஹானிமென் என்ற அலோபதி மருத்துவர்தான் இந்த மருத்துவ முறையைக் கண்டுபிடித்தார். 
மனித வாழ்வோடு ஒன்றிணைந்த மருத்துவம் என்று ஹோமியோபதியை சொல்லலாம். அதன்படி, அனைத்து உடல்நலக் குறைபாடுகளுக்கும் இதில் சிகிச்சைகள் உள்ளன. முக்கியமாக பக்க விளைவுகள் இல்லாத எளிமையான மருத்துவ முறை. செலவு மிகவும் குறைவு. ஊசி கிடையாது. 
மருந்துகள் இனிப்பானவை என்பதால் மருந்து கொடுப்பவர்களுக்கும் கஷ்டம் இல்லை... சாப்பிடுபவர்களுக்கும் கஷ்டம் இல்லை. 
மருந்து சாப்பிடுவதன் காரணமாக சோர்வும் ஏற்படாது. 

முதல் தேர்வு

ஆங்கில மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை என்ற காரணத்தால்தான் முன்பு ஹோமியோபதியை தேடினார்கள். அதிலும் நாள்பட்ட நோய்களுக்காகவே சிகிச்சைக்கு வருவார்கள். இன்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. 
பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், இணையதளங்கள் என்று பலவழிகளில் இதன் மகத்துவத்தைத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், இப்போது சாதாரண காய்ச்சல் ஏற்பட்டால் கூட, முதலிலேயே ஹோமியோபதியை தேடி வருகிறார்கள்.
தமிழக அளவில் 10 ஹோமியோபதி கல்லூரிகள் உருவாகி இருக்கின்றன. 

தாமத மருத்துவம் அல்ல!


‘ஹோமியோபதி தாமதமாகத்தான் குணப் படுத்தும்’ என்ற தவறான நம்பிக்கை சிலரிடம் உள்ளது. 
சமீபத்தில் ஒருவர் கடுமையான காய்ச்சலோடு வந்திருந்தார். பரிசோதித்த போது, அவருக்கு டெங்கு இருப்பது தெரிந்தது.
 ரத்தத் தட்டுகளின் (Platelets)   எண்ணிக்கை சராசரியாக ஒன்றரை லட்சமாவது இருக்க வேண்டும். 
அவருக்கோ 18 ஆயிரம்தான் இருந்தது. ரத்தத்தை உறைய வைக்கும் இந்த ரத்தத் தட்டுகள் மிகவும் குறைவாக இருந்ததால், சிறுநீரில் ரத்தமாக வெளியேறிக் கொண்டிருந் திருக்கிறது.
 சிறுநீரகக்கல் பிரச்னையும் அவருக்கு இருந்தது. இத்தனை சிரமங்களுக்கு இடையிலும், முறையான சிகிச்சைக்குப் பிறகு, 2 நாட்களில் அவருக்கு 1 லட்சத்து 46 ஆயிரம் என்கிற அளவுக்கு ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கை அதிகமானது.
 5வது நாளில் அவர் குணமாகிவிட்டார். 
இதுபோன்ற சிக்கலான நோயாளிகளையே விரைவில் குணப்படுத்தும் வல்லமை ஹோமியோபதிக்கு உண்டு. 

மருந்துகளின் சிறப்பம்சங்கள்


பக்க விளைவுகள் இல்லாத ஒரு மருத்துவத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற் காகத்தான் ஹோமியோபதியை ஹானிமென் கண்டுபிடித்தார்.
 ஹோமியோபதி மருந்துகளுக்கு எக்ஸ்பயரி இல்லை என்பதால், இந்த மருந்துகள் கட்டுப்போகாது. எந்த வயதினரும் எடுத்துக் கொள்ளலாம். மற்ற மருந்துகள் வயிற்றில் சென்றுதான் செயல்பட ஆரம்பிக்கும். ஹோமியோபதி மருந்தோ, நாக்கில் பட்டவுடனே வேலை செய்யத் தொடங்கிவிடும்.
 இதனாலேயே ஹோமியோபதி மருந்துகளை வெறும் வயிற்றில் சாப்பிடச் சொல்வார்கள். அதாவது, சாப்பிடும் அரை மணி நேரத்துக்கு முன்பாகவோ, சாப்பிட்ட அரைமணி நேரத்துக்குப் பிறகோ மருந்தை எடுக்க வேண்டும். 
இதில் நோய்க்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கும். ஒருமுறை குணமாகிவிட்டால் அந்த நோய் மீண்டும் வராது.

சிகிச்சை முறை


நோய் பற்றித் தெரிந்துகொள்ள அதன் அறிகுறிகள் என்னென்ன என்று ஆராய்வது, அதன்பிறகு என்ன காரணங்களால் ஏற்பட்டிருக்கிறது என்ற காரணிகளை கவனிப்பது ஆகிய இரு வழிகளிலேயே ஹோமியோபதியில் சிகிச்சை அளிக்கிறார்கள். 
டெங்கு காய்ச்சல் கூட முதல் நாள் சோதனை முடிவு நெகட்டிவ் என்றுதான் வரும். 
இரண்டாவது நாளில்தான் பாசிட்டிவ் என்ற ரிசல்ட் கிடைக்கும். டைபாய்டு காய்ச்சலை ஐந்தாம் நாளில்தான் பாசிட்டிவ் என்று கண்டுகொள்ள முடியும். 

வீட்டில் இருக்க வேண்டிய மருந்துகள்
ஹோமியோபதி மருத்துவத்தில் உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் எபோலாவுக்குக் கூட Crotalaus horridus என்ற மருந்து இருக்கிறது. 
இந்த மருந்தை அமெரிக்காவின் எஃப்.டி.ஏ., அங்கீகரித்திருக்கிறது. 
சாதாரண காய்ச்சலுக்கு Arsenicum album, Meroo sol, 
டைபாய்டாக இருந்தால் Baptisia,
 அம்மைநோய்க்கு variolinum
மெட்ராஸ் ஐ பிரச்னைக்கு Rhus tox, 
ஜலதோஷத்துக்கு Silicea
தீக்காயத்துக்கு Cantharis, Nuxvomica, Pulsatilla,
தண்ணீரில் நீண்ட நேரம் புழங்குபவர்களுக்கு, அதனால் வரும் நோய்களுக்கு  Calc carb, Calc Cphos,
பயணக் களைப்பு நீங்க Cocculus... 

ஹோமியோபதியில் மனம் சம்பந்தப்பட்ட குறைபாடுகளுக்கும் அற்புதமான மருந்துகள் உள்ளன. 
தனிமை பயம் இருப்பவர்களுக்கு phosphorus, 
கெட்ட கனவுகள் நீங்குவதற்கு   Belladonna,Thuja,  
தேர்வுப் பயம் நீங்க Anacardium, Gelsemium
 என மருந்துகள் நிறைய இருக்கின்றன. 
இவற்றை வரும் முன்னர் தடுக்கும் மருந்தாக - மருத்துவரின் வழிகாட்டுதல்படி வாங்கி வைத்துப் பயன்படுத்தலாம். 
நாம் இருக்கும் பகுதியில் என்ன நோய் இருக்கிறது, என்ன நோய் பரவி வருகிறது என்பதைத் தெரிந்து கொண்டு, அதற்கேற்ப தடுப்பு மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
 ஹோமியோபதி மருந்துகளால் பக்கவிளைவுகள் கிடையாது .தவறான மருந்தை உட் கொண்டால் அது தனக்கு வேலை இல்லை என்றால் தானாகவே உடல் கழிவுகளுடன் நீங்கி விடும்.காரணம் ஓமியோபதி மருந்துகள் ரசாயன அடிப்படையில் தயாரா வது இல்லை .ஆங்கில மருத்துவம் சளிக்கான மருந்து நம் உடலில் உண்டாகும் நீர் சத்தை உறிஞ்சி குறைக்கும் ரசாயனங்க்களைக்கொண்டு தயாராகிறது.அப்படி செய்வதினால்தான் நம் சளித் தன்மை உடலில் குறைத்து குணம் கிடைக்கிறது.அது அதிகமாக நீர் சத்தை உறிஞ்சினால்?அதனால் வயிற்றில் புண் உண்டாவது பொன்றபக்கவிளைவுகள் உண்டாகுகிறது. 
ஆனால் ஓமியோபதி மருந்துகள் நம் உடலில் மனதிலும் நோய வந்ததற்கான அடிப்படை காரணத்தை சரி செய்வதிலும்தான் இயங்குகிறது.
ஆனாலும் உங்கள் நோயை சரியாக தீர்மானித்து ,அதற்கு சரியான மருந்துகளை  மருத்துவரின் ஆலோசனைப்படி உட் கொள்வது மிக நல்ல பலனைத்தரும்.
=================================================================
அத்திப்பழம் 
உடலை அழகாகவும், மினுமினுப்பாகவும், இளமையாகவும் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக வசதியுள்ளவர்களும், இல்லாதவர்களும் எவ்வளவோ செலவு செய்து, எங்கெல்லாமோ சென்று, எதையெல்லாமோ செய்கிறார்கள். அதனால் நாளடைவில் உடல் அழகு குறைவதோடு ஆரோக்கியமும் கெட்டு விடும். ஆனால் அதிகாலையில் வெறும் வயிற்றில் அத்திப்பழத்தைச்சாப்பிட்டு வந்தால் உடல் அழகும், இளமையும் நாளுக்கு நாள் அதிகமாகும் என்று அரபிய மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அத்திப் பழத்தைத் சாப்பிடுவதால் கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது. 2 அத்திப்பழத்தை தினசரி சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.
நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும். போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும்.
தாம்பத்யத்தில் ஈடுபாடு குறைந்தவர்கள் இரவு நேரத்தில் பால் அருந்தும் போது மூன்று அத்திப்பழத்தை சாப்பிட்டுவிட்டு படுத்தால் பாலுணர்வு அதிகரிக்கும்.
உயர் ரத்த அழுத்தம் உள்ள நபர்கள் அத்திப்பழத்தை சாப்பிட்டால் அதில் உள்ள பொட்டாசியம் உயர்ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
சீமை அத்திப்பழம், நாட்டு அத்திப்பழம் என இரண்டு வகை உண்டு. அத்திப்பழத்தில் இரத்தத்தை விருத்தி செய்யக்கூடியதும், இரத்தத்தை சுத்தப்படுத்தக்கூடியதுமான உயிர்ச் சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.
அத்திப் பழத்தை ஆலிவ் எண்ணெயில் ஊறவைத்து சாப்பிடுவதால் ஏராளமான நோய்களுக்கு மருந்தாகின்றது.
குணமாகும் நோய்கள்:
மலட்டுத்தன்மை மூலம் வயிற்றில் தோன்றும் நோய்கள்
இரத்தசோகை
மலச்சிக்கல்
இரத்தத்தில் மிகுந்த கொழுப்பு
மூச்சுக்குழாய்/நுரையீரல் அழற்சி
ஆஸ்த்துமா
இத்துடன் வயிற்றிலுள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களையும் அழிக்கவும், வயிற்றில் தோன்றும் அல்சருக்கும் நல்ல மருந்தாக திகழ்கிறது.
இப்பொழுது ஆலிவ் எண்ணையுடன் அத்திப்பழ மருந்தை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.
தேவையானவை:
40 உலர்ந்த அத்திப்பழங்கள்
1 லிட்டர் ஆலிவ் எண்ணெய்
செய்முறை:
ஒரு கண்ணாடி ஜாடியில் அத்திப்பழங்களை இடவும். மேலாக ஆலிவ் எண்ணையை ஊற்றவும். இந்தக் கலவை 40 நாட்கள் ஊறவிட வேண்டும். 40 நாட்கள் ஊறியவுடன் ஒவ்வொரு நாளும் சாப்பாட்டுக்கு முன் ஒன்று வீதமாக குறைந்தது மூன்று அத்திப்பழங்களை சாப்பிட வேண்டும். இது தீருவதற்க்கு முன்பாக அடுத்த செட்டை தயாராக்கிக் கொள்ளவும். மறக்காமல் கண்ணாடி ஜாடியை வெளிச்சம் இல்லாத குளிர்ந்த இடத்தில் வைக்கவும்
உலர்ந்த அத்திப்பழங்களில் கால்சியம், செம்பு, பொட்டாசியம், மாங்கனீஸ், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற மினரல்கள் நிறைந்து உள்ளன். பழுத்த அத்திப்பழங்களைக் காட்டிலும் உலர்நத பழங்களில் புரதம், சரக்கரை, மினரல்கள் அதிகமாக உள்ளது.
புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து அதிகம் காணப்படுகின்றன. வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12, வைட்டமின் சி போன்ற சத்துக்களும் அத்திப்பழத்தில் அடங்கியுள்ளன.
உடல் பருமனாக உள்ளவர்கள் எடையை குறைக்க அத்திப்பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. நார்ச்சத்து அதிகம் காணப்படுவதால் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகி தேவையற்ற இடங்களில் கொழுப்பு சேருவது தடுக்கப்படுகிறது.
அத்திப்பழம் வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது. தினசரி 2 பழங்கள் சாப்பிடுவதன் மூலம் உடலில் ரத்த உற்பத்தி அதிகரித்து உடலும் வளர்ச்சி அடையும். கால்சியம் அதிகம் காணப்படுவதால் எலும்புகளை பலப்படுத்துகிறது.
நீரிழிவு நோயாளிகள் அதிகமாக சிறுநீர் கழிப்பதன் மூலம் ஏற்படும் கால்சியம் இழப்பினை ஈடுசெய்கிறது. கல்லீரல் வீக்கத்தை குணப்படுத்தும். தினமும் இரவு நேரத்தில் 5 அத்திப்பழம் சாப்பிட்டால் நாள்பட்ட மலச்சிக்கலை குணமாகும்.
வயதானவர்களுக்கு அத்திப்பழம் அருமருந்தாகும். தொண்டை எரிச்சலை போக்கும். இருமல், ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகிறது.
செரிமான கோளாறினால் ஏற்படும் வயிற்றுவலியை குணப்படுத்துகிறது. பித்தத்தைத் தணித்துச் சமப்படுத்துவதில் அத்திப்பழம் தனிச்சிறப்பு வாய்ந்தது
பதப்படுத்தப்பட்ட அத்திப்பழம் சீமை அத்திப்பழம் எனப்படும். இது வெண்குஷ்டத்தை குணமாக்கும். அரைகிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒருவேளை சாப்பிட்டால் வெண்புள்ளிகள், வெண்குஷ்டம், தோலின் நிறமாற்றம் போன்றவை குணமடையும்.
சீமை அத்திப்பழத்தை தொடர்ந்து 40 நாட்கள் உட்கொண்டு வந்தால் ஒருவருடைய உடல் பெறும்.
=================================================================