இங்கேயும் சில இட்லர்கள்...

இட்லர் ஜெர்மானியர்கள் மூல ஆரியர்கள் என்றான். 
அதனால் அவர்கள் உலகையே ஆளப்பிறந்தவர்கள் உபநிஷத்துக்களிலேயிருந்துதான் பாசிசத்தைக் கற்றுக் கொண்டதாய் கூறினான்.
 தனது நாஜிப்படையின் சின்னமாக ஸ்வஸ்திக் சின்னத்தை உருவாக்கிக் கொண்டான். 
அது கொக்கி போன்ற சிலுவைதான். 
அதை நுனியில் பதமேற்றி ஆயுதமாக்கினான். அதுமுதலாளிகளின் எதிரிகளைச் சிலுவையில் அறையத்தான். 
எதிரிகள்மீது மதவெறியோடு நெறிமுறையற்ற போர் நடத்தப்படும் என்றான்.
நாங்கள் பணக்கடவுள்களின் தூதர்கள்தான். ஆனால் நாங்கள் ஏசுகிறிஸ்துவின் புயல் படையினர் - எங்களுக்கே வாக்களியுங்கள் என்று மக்களை மிரட்டி வாக்களிக்க வைத்தான்.
ஏசு கிறிஸ்துவின் பேரால் நாம் யூதர்களை ஒழிப்போம் என்று இட்லர் முழங்கினான். 
ஆனால் ஏசுவே ஒரு யூதர் என்பதையும், அவர் யூத மக்களின் கலகத் தலைவர்தான் என்பதை மறைத்தான். 
ரோமப் பேரரசின் ஒடுக்குமுறைக்கெதிராகவே ஏசு மக்களைத் திரட்டினார். இட்லர் தனது `மெயின்கேம்ப்’ நூலில் கூறுகிறான்.
 பலவீனர்களைக் கொன்று வலிமையுடையவர்கள் வெற்றி பெறுவதே பாசிசத்தின் லட்சியமாகும். யூதர்களை ஒழிப்பதும் முதலாளிகளை உறுதி குலையாமல் பாதுகாப்பதுமே நமது கடமை. 
நாடுகளை அடிமைப்படுத்த வலிமையுள்ளவர்களுக்கு உரிமையுண்டு - என்கிறான்.பாசிசம் என்றாலே போர் என்பதுதான். 
வேலையில்லா இளைஞர்களுக்கு வேலையளிக்க அவர்களைப் போரில் ஈடுபடுத்த வேண்டும் என்றான். இட்லர் முதலில் செய்தவேலை - எழுத்தாளர்கள், அறிவுஜீவிகளை வேட்டையாடியது.
 பலரைக் கைது செய்து சிறையிலடைத்துச் சித்ரவதை செய்தான். அதில் பலரும் கொல்லப்பட்டனர். சிலரை நாடு கடத்தினான். சிறைகளில் சித்ரவதைகள் அவசியமானது, அது பயனுள்ளது என்றான் கோயபல்ஸ். அணுவிஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை நாடு கடத்தினான்.
 அவர் நல்ல வேளையாகத் தப்பி பிரான்சில் ஒரு பல்கலைக் கழகத்தில் போய் வேலைக்குச் சேர்ந்தார். 
பின்பு அவரது முக்கியத்துவம் அறிந்த பின்அதற்குப் பிறகு யாரையும் நாடு கடத்தக் கூடாதென முடிவெடுத்தான்.
கலை இலக்கியங்கள், அறிவியல், தத்துவ நூல்கள் என 20,000 தலைப்புகளில் இருந்த நூல்களைத் தீயிட்டுக் கொளுத்தினான். முதலில் அதற்கு இலக்கானவை பகுத்தறிவு நூல்கள்தான். முற்போக்கு சக்திகள் செயலற்று, பலவீனமாக விழிப்பற்ற நிலையில் இருக்கும்போதே அவர்களை அழித்துவிட வேண்டும். 
ஆன்மீகத்தை எழுச்சிபெறச் செய்ய வேண்டும் என்று கூறினான்.நாம் நாத்திகத்திற்கெதிராகவும், மக்களின் அறியாமை வீழ்ச்சிக்கெதிராகவும் போரிட்டு வருகிறோம். நமது பணிகளைக் கடவுள் ஆசீர்வதிக்கிறார் என்பது உறுதி என்றான் இட்லர்.
ஜெர்மன் முதலாளித்துவத்தின் ஊதுகுழல்கள்மூலம் இரவு பகலாகப் பிரச்சாரம் செய்து இட்லரை ஒரு அதிமனிதனாய் மக்கள் முன்பு நிறுத்தினார்கள். 
அன்றிருந்த அனைத்து ஊடகங்களும் அதற்காகவே திருப்பிவிடப்பட்டன. 

அதிமனிதன் என்றால் நாளைக் கடவுளாய் கொண்டாடப்படப்போகிறவன் என்று பொருள் - மனிதகுலத்திலேயே அவன்தான் அதிமனிதன் என்றனர். 

இவர்களும் இங்கு மோடியை அதிமனிதனாக்க முயற்சிக்கிறார்கள். 
தர்மங்களை அறிந்த மக்கள் அதர்மங்களையும், அதர்மிகளையும் ஆதரித்து நிற்பதால் ஏற்படும் நிலையே பாசிசத்தின் அடித்தளமாகிறது.

‘அறியாமையும் மூடநம்பிக்கைகளுமே கடவுளின் திருவிடமாகும். 
அறிவு அத்திருவிடத்தைத் தகர்த்துவிடும். 
எனவே பொருள்முதல்வாத தத்துவம் ஒழிக்கப்பட வேண்டும்.

 நமது பழைய பண்பாட்டை மீட்க ஒரு மாபெரும் போர் நடத்தப்பட வேண்டும்.
கடவுளின் துணையின்றி அறிவைப்பெற முடியும் என்கிறது பொருள்முதல்வாதம். 
நமது நற்பண்புகளின் துணையின்றி அறிவைப்பெற முடியும் என்கிறது பொருள்முதல்வாதம். 
நாம் பொருள் முதல்வாதப் பகுத்தறிவு வழிபாட்டை ஒழித்தால்தான் நமது பண்பாட்டைக் காப்பாற்ற முடியும்‘ என்றான் இட்லர்.
நமது நகரத்தெருக்களில் ஆயிரக்கணக்கான போக்கிரிகள் (கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், தொழிற்சங்கத் தலைவர்கள்) திரிகிறார்கள். 

இவர்களை ஒழித்தால்தான் நாம் நமது சுதந்திரத்தை மறுநிர்மாணம் செய்ய முடியும் என்று இட்லர் கொக்கரித்தான்.

இட்லர் என்ற அதிமனிதன் ஜெர்மானியப் பணக்கடவுள்களின் தூதனாகவே செயல்பட்டான். கடவுள் - மக்கள் - இட்லர் மூன்றும் சேர்ந்தால் அது திரிசூலமாய் எதிரிகளைத் தாக்குமாம்.

இட்லர் அதிமனிதனாக்கப்பட்ட பின்நாடாளுமன்றத்தை உதாசீனப்படுத்தினான். 
ஒரு நாள் தனது நாஜிப் படையினரை கம்யூனிஸ்டுகள் போல செஞ்சட்டை அணிவித்து அவர்கள் கையில்செங்கொடிகளைக் கொடுத்து அணிவகுத்துப் போய் நாடாளுமன்ற மாளிகையைத் தீக்கிரையாக்கினான்.

பின்பு கம்யூனிஸ்டுகள் நாடாளுமன்றத்தைக் கொளுத்திவிட்டனர் என்று பொய்கூறி அவர்களை வேட்டையாடினான்

. நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு அதிபராட்சியைக் கொண்டுவந்தான். அதன்பின் அந்த அதிமனிதன் ஜெர்மானியரின் கடவுளாக்கப்பட்டான். யூதர்கள் அறுபது லட்சம் பேரைக் கொன்று குவித்தான்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதிபிதாவான கோல்வால்கர் இட்லரையே தங்களது நாயகனாகவும், வழிகாட்டியாகவும் அறிவித்தார்.
 இந்துத்வாவின் பலவற்றை இட்லர் பின்பற்றினான்.
 பதிலுக்கு இவர்கள்பின்பற்றுகிறார்கள். 
மநுதர்மம் கூறுவதையே இட்லரிசமும் கூறுவதற்கு ஒரு உதாரணம் போதுமானது - அது பெண்கள் பற்றியது - பெண்களின் பணி தங்களை அழகுபடுத்திக் கொண்டு ஆண்களை ஈர்ப்பதும், போருக்காகக் குழந்தைகளைப் பெற்றுத் தருவதும் மட்டும்தான். 
ஆண் பறவைக்காகப் பெண்பறவை தன்னை அழகுபடுத்தி ஈர்க்கிறது. ஆண் பறவை உணவையும், பாதுகாப்பையும் தருகிறது என்கிறான் இட்லர். விலங்குகளுக்கும் மனிதருக்கும் பாசிஸ்டுகள் வேறுபாடு பார்ப்பதில்லை.
இட்லர் எனும் இனவெறியன் கூறுவது, கலாச்சார பிரம்மாக்கள், கலாச்சார ரட்சகர்கள், கலாச்சார அழிப்பர்கள் என்று மனிதர்களை மூன்று பிரிவுகளாய் பிரித்தால் ஆரியர்களே முதல் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
மகத்தான கலாச்சார மாளிகைக்கு அஸ்திவாரம் போட்டு அதன் சுவர்களையும் எழுப்பியவர்கள் ஆரியர்கள்தான். அதன் உருவம், வர்ணம் ஆகியவையே மற்றவர்களால் தீட்டப்பட்டவை.
கலாச்சாரங்களும் சாம்ராஜ்யங்களும் சரிவதற்குக் காரணம் ரத்தக் கலப்பும், நம் வம்சத்தின் மாற்றுக் குறைவதும்தான். 
யுத்தம் காரணமாக எந்த தேசமும் அழிவதில்லை. ஆனால் எதிர்க்கும் சக்தி குறைந்தால் தேசம் நாசமாகிறது.எதிர்க்கும் சக்தி குறைவதற்குக் காரணம் ரத்தக் கலப்புதான் என்று இட்லர்தனது மெயின்கேம்ப் நூலில் கூறியிருக்கிறான்.ரத்தக் கலப்பிலேதான் அறிவான, வலுவான வம்சம் பிறக்கிறது என்கிறதுஅறிவியல். 
ஆனால் பாசிசப் பிற்போக்குவாதி தனது ஆரிய இனத்தை கலப்பில்லாமல் காக்க வேண்டுமெனக் கூறுகிறான்.இட்லரின் தத்துவத்தையே இங்கு ஆர்எஸ்எஸ் பின்பற்றுகிறது. ஆனால் தாய்மதம் திரும்பினால் ரத்தம் கலக்கலாமென்கிறது. ஆனால் சாதி முக்கியம்....இட்லரின் மதவெறி பாசிசத்தையே இங்கு ஆர்எஸ்எஸ்., பாஜக, சங்பரிவாரங்கள் பின்பற்றி வருகின்றன. 
இட்லர் தன்னை ஒரு பிச்சைக்காரனாய் வாழ்ந்தவன் என்று கூறிக்கொண்டே முதலாளிகளுக்கு சேவை செய்தான். 
இங்கு மோடி நான் டீக்கடை நடத்திய சாதாரணமானவன் என்று கூறிக்கொண்டே அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும், அந்நிய முதலாளிகளுக்கும் சேவை புரிகிறார்.
 மனிதவள மேம்பாட்டு அமைச்சர் நடிகை ஸ்மிருதி இரானி கூடப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் பாத்திரம் கழுவும் வேலை செய்தவள் என்று கூறியிருக்கிறார்.
ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடாமல் மக்களைத் தடுப்பது என்று பாஜக தனது பாசிசப் பயணத்தைத் துவக்கியுள்ளது. 
இதை எதிர்த்து நிற்க வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமை.

                                                                                                                     நன்றி;தீக்கதிர்.
================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?