தயார் நிலை `[ரெடிமேட்]’ உணவுகள் ?
இன்றைய அவசர உலகில் சென்னை, மும்பை, தில்லி போன்ற மெட்ரோபாலிட்டன் நகரங்கள் முதல், அடுத்தடுத்த இடங்களில் இருக்கும் நகராட்சிகள் வரை வேர் ஊன்றி உள்ளது
`ரெடி டு ஈட்’ எனப்படும் திடீர் உணவுகளின் வியாபாரம் `
பெரு நகரங்களில் 82 சதவீதம் குடும்பங்கள் ரெடிமேட் உணவுகளிடம் சரணடைந்துள்ளன’ என்கிறது சமீபத்தில் வெளியான ஒரு புள்ளிவிவரம்.
பல மணி நேர சமையலறைச்சுமையை, சில நிமிடங்கள் ஆக்கியிருப்பதாலே பலராலும் விரும்பப்படும் இந்த ரெடிமேட் உணவுகளில் கலக்கப்படும் ரசாயனங்களும், அது ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளும் நிறைய நிறைய! உங்கள் உணவில் எத்தனை ரசாயனங்கள் ?
!“காஸ்மெடிக் பொருட்கள் வாங்கும் போது கூட நார்மல் சருமத்துக்கானதா, வறண்ட சருமத்துக்கானதா, காலாவதி தேதி என்ன என்பதை எல்லாம் பார்த்து வாங்கும் நம் மக்கள் உண்ணும் உணவு விஷயத்தில் அந்த அக்கறையைக் காட்டாதது வேதனைக்குரிய து.
“சப்பாத்தி, பரோட்டா, இடியாப்பம். பனீர் மசாலா, மீன் கிரேவி என வகை வகையாக வந்திருக்கும் ரெடிமேட் உணவுகளை வாங்கும்போது அதில் கலந்துள்ள பொருட்கள் என்னென்ன, அந்தப் பொருட்கள் ஏற்படுத்தும் விளைவுகள் என்ன, அந்நிறுவனம் அரசு அனுமதி பெற்றதா போன்றவற்றைப் பார்க்க வேண்டும் என்ற விழிப்பு உணர்வு இங்கு இல்லை.
`ரெண்டு நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கினால், சமையல் முடிந்தது’ என்கிற எளிமையை மட்டுமே பார்த்து வாங்கிச் சாப்பிடும் அந்த உணவுகளில் பலவும்.... 15 வயதில் கேன்சரையும், 25 வயதில் சர்க்கரை நோயையும் உண்டாக்கும் தன்மையுடையது.
காலையில் சமைக்கும் உணவு, இரவுக்குள் கெட்டுவிடும் என்பதே இயற்கை.. கெட வேண்டும் என்பதுதான் இயற்கை தரும் விதி..
ஆனால் ஓர் உணவுப் பொருளை,
நாள் கணக்கில்... மாதக்கணக்கில் எல்லாம் கெடாமல் வைக்க வேண்டும் என்றால், அதில் எந்தளவுக்கு செயற்கைப் பொருட்களைச் சேர்க்க வேண்டும்? அப்படிச் சேர்க்கப்படும் பதனப்பொருட்கள் மற்றும் ரசாயனங்கள் உடலில் நச்சுத்தன்மையை உண்டாக்கி சிறுநீரகம், கல்லீரல் ஆகியவற்றை பாதிக்கும் குணம் உடையது.
உணவுப் பொருட்கள் நீண்ட நாள் கெடாமல் பதப்படுத்துவதற்காகச் சேர்க்கப்படும் சல்ஃபைடு, ஆஸ்துமா மற்றும் மனநலன் சார்ந்த பிரச்சனையை விளைவிக்கு ம்.
ரெடிமேட் உணவுகள் பெரும்பாலும் குளிர் விக்கப்பட்ட அல்லது உறைந்த நிலையில் இருப்பதால், அந்த உணவின் சுவை குறைவது இயல்பு.
இதைத் தவிர்க்கும் பொருட்டு,தயார் நிலை [ரெடிமேட்] உணவு வகைகளைத் தயாரிக்கும் நிறுவனங்கள், சுவையைத் தக்க வைக்க சர்க்கரை, உப்பு, கொழுப்பு, நறுமணம், வண்ணங்கள் போன்றவற்றை அளவுக்கு அதிகமாகச் சேர்க்கிறார்கள்.
தயார் நிலை உணவுகளில் உள்ள அதிக கொழுப்பு, இதயத்தைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும்.
சரும நோய்கள், உடல்பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற வளர்சிதை மாற்ற பிரச்சனைகளையும் தரவல்லது இந்ததயார் உணவுகள். அசைவ உணவுகளைப் பதப்படுத்த சேர்க்கப்படும் சோடியம்.. அலர்ஜி, வாந்தியில் தொடங்கி , புற்றுநோய் வரை பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
வீட்டில் தயாராகும் உணவுகளைவிட, இந்த தயார் நிலை உணவுகள் வழங்கும் ஊட்டச்சத்துகள் மிக குறைவு.ஆனால் உடலில் உண்டாக்கும் பாதிப்புகளோ அதிகம்.
அவை கெட்டுப் போகாமல் இருக்க பல வேதியியல் முறைகளுக்கு உட்செலுத்தப்படும்போது, அதிலுள்ள சத்துகள் அழிந்துபோகும்.
எனவே , ஒருவர் தொடர்ந்து தயார் நிலை உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் போவதோடு, அது அவரின் உடல் வளர்ச்சியைக் குறைத்து,
நோய் எதிர்ப்பு சக்தியையும் கரைக்கும்.
ஓர் உலக அரசியல் காரணி. சந்தையில் தங்களின் பொருளை நிலைநிறுத்த பெரும்பாலான நிறுவனங்கள் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, மக்களின் ஆரோக்கியம் பற்றிய அக்கறையை புறந்தள்ளுகின்றன.
தயார் நிலை உணவு தயாரிப்பாளர்களுக்கு தேவை அதிக லாபம்.
அதைப்பெற மணம், வண்ணம், கெட்டுப்போகாமல்நீடிக்கும் தன்மை என இவற்றுக்காக எதையும் சேர்க்கலாம் என்பது இவர்களின் கொள்கை. அவற்றை வாங்கிச் சாப்பிடும் நமக்கு என்ன நேரும் என்று கவலைப்பட, அவர்கள் நம் மனைவியோ அம்மாவோ, பாட்டியோ அல்லது நலம் நாடும் உறவினர்கள் இல்லையே!
2011ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, “2015ம் ஆண்டுக்குள் இந்தியாவில் `பேக்’ செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்களின் விற்பனை 30 பில்லியன் டாலரைத் தொடக்கூடும் என்கிறது.
ரெடிமேட் உணவுகளில் பல வகையான கெமிக்கல்கள், குறைந்த விலையில் கிடைக்கும் தடைசெய்யப்பட்ட வண்ணங்கள், பாதிப்புகளை ஏற்படுத்தும் கலவைகள் என பலவற்றையும் கேட்பாரற்றுக் கலந்து வருகின்றன தயார் நிலை உணவு நிறுவனங்கள்.
மேலும்,அந்த உணவை கட்டி வரும் கவர்ச்சியான வாசகங்கள் அடங்கிய பிளாஸ்டிக்குகள் ஏற்படுத்தும் பாதிப்புகளும் பல.
சாதாரணமாகவே பிளாஸ்டிக் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை .
இதில் மாதக்கணக்கில் உணவு பதப்படுத்தப்படும்போது ஏற்படும் மாற்றங்களும், விளைவிக்கும் கேடுகளும் மிக அதிகம் .
உணவுப் பொருட்களின் பயன்பாட்டுக்குத் தகுதியான பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தனியே சில விதிகளும் கட்டுப்பாடுகளும் விதிக்க வேண்டும் .
அவை இந்த நிறுவனங்கள் கடை பிடித்து வருகிறதா என்பதையம் கண்காணிக்க வேண்டும்.
இந்த உடனடி உணவுகள் மேலை நாடுகளில் அதிகம் உள்ளன.ஆனால் அங்குள்ள அரசு அவைகளில் சேரும் ரசாயனப் பொருட்கள்,கட்டும் பிளாஸ்டிக் போன்றவற்றை கடுமையாக சில விதிகளை விதித்து அதை கண்காணித்தும் வருகிறது.
ஒரு உதாரணம் கோக கோலா ,பெப்சி போன்றவைகளில் இந்தியாவில் உள்ளதை விட கெடுதல் தரும் சேர்மானங்கள் மிகக்குறைவு,இந்தியாவில் கோலாக்களில் உள்ள சிங் அமெரிக்கா போன்ற நாடுகளில் அரசு நிர்ணயித்த அளவில்தான் உள்ளது.அதுதான் அரசின் செயல் பாடு.ஆனால் இந்தியாவில் எல்லா வித கட்டுப்பாடுகளையும் அந்நிய நிறுவனங்கள் மீறித்தான செயல்படுகின்றன.நம் இந்திய அரசும் அதை கண்டு கொள்வதில்லை.காரணம் இங்கு மக்களுக்கான அரசு இல்லை.அந்நிய முதலீட்டை வரவேற்கும் அந்நிய அரசுதானே உள்ளது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தோனேசியாவில் புகை பிடிப்போர் மக்கள் தொகையில் 67% விகிதம்.அதில் சிறுவர்கள் எண்ணிக்கை 17% ஆகுமாம். |