திங்கள், 19 ஜனவரி, 2015

அறுசுவைகளை அளவாக ....,

அறு சுவை என்று அடிக்கடி கூறு கிறோம்.

ஆனால் அதை பற்றி என்றாவது யோசித்திருக்கிறோமா?

அந்த அறுசுவையில் உள்ள ஒவ்வொரு சுவைக்கும் தனித்தனி குணம் உண்டு.

அந்த சுவைகள்  ஒவ்வொன்றும் நம் உடலில் ஒவ்வொரு நலனைத் தருகிறது. 
உடல் நலனுக்கு அந்த சுவையை அளவோடு பயன் படுத்தினால் மிக நல்லது. 

இனி சுவையும் அதன் நலனும்.

இனிப்பு 

தசையை வளர்க்கின்றது.

 மனதிற்கு மட்டும் அல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தை தரக்கூடியது. 
இனிப்பு அதிகமாக பயன்படுத்தினால் உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல்எடைக்கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்புள்ளது.
  உருளை,கேரட், அரிசி, கோதுமை,கரும்பு போன்றவை தண்டு வகைகள் அதிகமாக உள்ளது.

கசப்பு-

 நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.
நோய கிருமிகளை உடலில்  அகற்றுகிறது.தோல்  நலன்களை பாதுகாக்கிறது.குடலில் தங்கும் கிருமிகள்,கொக்கிப் புழுக்கள் போன்றவற்றை அகற்றுகிறது.
வாரம் ஒரு முறை வேப்பிலை சாறு குடிப்பது உடல் நலனுக்கு மிக நல்லது.


துவர்ப்பு -

 ரத்தப்போக்கை குறைத்து, ரத்தத்தை பெருக்குகின்றது. 
வயிற்றுப் போக்கை சரிசெய்ய வல்லது. 
வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.


புளிப்பு -

கொழுப்பினை வழங்குகிறது. பசியுணர்வை தூண்டும், உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கிறது. இது அதிகமாயின் தாக உணர்வுகளை அதிகரிக்கும்.

கார்ப்பு - 

எலும்பினை வளர்க்கின்றது. 
இந்த சுவை நுனி நாக்கில் எரிச்சலை உண்டாக்கும். 
கண், வாய் போன்றவற்றில் நீர் வரச்செய்யும். 
அதிகமானால் வயிறு மற்றும் குடல் பகுதிகளில் புண்களை உண்டாக்கும்.

உவர்ப்பு 

உமிழ் நீரை சுரக்கச் செய்கிறது,
 அன்றாடம் பயன்படுத்தும் உப்பை பயன்படுத்தினாலே போதுமானது. 
உப்போடு  வாழைக்காய், மாவடு, அத்திக்காய், அதிகமானால் வாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகம். 
எனவே, அனைவரும் அன்றாட உணவுகளில் அறுசுவைகளை அளவாக எடுத்துக்கொண்டால், ஆரோக்கியத்துடன் வாழலா ம்.
========================================================================
எளிய குறிப்புகள்:-

மருந்து, மாத்திரைகளை குளிர்ந்த நீரில் சாப்பிடக் கூடாது. 
மாலை 5 மணிக்கு மேல் கடுமையான உணவுகளை தவிர்ப்பது நன்மை. காலை வேளையில் அதிகப்படியான நீரும், இரவு வேளையில் குறைந்த அளவு நீரும் பருக வேண்டும்.

இரவு 10 மணி முதல் அதி காலை 4 மணி வரை ஆழ்ந்து உறங்க வேண்டும். சாப்பிட்ட உடன் படுக்கக்கூடாது. 

மொபைல் போனில் பேட்டரி குறைவாக இருக்கும் போது பேசக்கூடாது. 

ஏனெனில் அதிலிருந்து வெளிப்படும் கதிர் வீச்சு  1000 மடங்கு அதிகமாக இருக்கும். 

 இடது பக்க காதில் போனை  வைத்து  பேசுங்கள் அது  நன்மை.


பற்களை வெண்மையாக வைத்துக் கொள்ள வாழைப்பழத்தை சாப்பிட்டு கடைசியில் வாயில் இருக்கும் பழத்தை நாவினால்  பற்களின் மீதும்,ஈறுகள் மீதும் குதப்பி தேய்த்து வாயை கொப்பளியுங்கள் .

குறைந்தது  2 நிமிடம் இப்படி செய்தால் போதும்,உங்கள் பற்கள் பளிச்சென்றிருக்கும்.
காரணம்  வாழைப்பழத்தில்  உள்ள பொட்டாசியம், மெக்னீசியம்.
இவைகள் உங்கள்  பற்களை பளபளக்க வைக்கும்.

========================================================================
உலர் திராட்சை 

மலிவாக கிடைக்கும் பழவகைகளில் ஒன்று திராட்சை.
  கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகைகள் உள்ளன. 
இந்த பழங்களை உலரவைத்து எடுக்கப்படும் உலர்ந்த திராட்சையை கிஸ் மிஸ்  பழம் என்று வழக்கத்தில் கூறுவார்கள்.
 யுனானி வைத்தியத்தில் இந்த கிசுமுசு பழம் சர்வரோக நிவாரணியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 இதில் வைட்டமின் பி மற்றும் சுண்ணாம்பு சத்தும் அதிகம் நிறைந்து உள்ளது. 

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. 
இந்த பழம் அதிக மருத்துவ குணங்களை கொண்டது. 
வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற பழம் . 
எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கால்சியம்தான்.
 திராட்சையில் கால்சியம், சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளது.
திராட்சை பழத்தை இரவு உணவுக்குப்பின் பத்து பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும், பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், திடகாத்திரமாகவும் திகழ்வார்கள். 
ரத்த விருத்திக்கு, உடல் வலி குணமாக, மலச்சிக்கல் தீர, குடற்புண் ஆற, இதயதுடிப்பு சீராக, சுகமான நித்திரைக்கு இப்பழத்தின் பங்கு கணிசமானது

கர்ப்பிணி பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்கவைத்து பருகிவந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.

மாதவிலக்கு காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்து கொண்டே இருக்கும். 
இந்த வலி நிவாரணியாக உலர்ந்த திராட்சை பெரிதும் பயன்படுகிறது. 
இந்த பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கசாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்துபோகும்.


அஜீரணகோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவற்றை புண்ணாக்கி விடுகின்றன. 

இவர்கள் உலர்ந்த திராட்சை பழங்களை நீரில் கொதிக்கவைத்து கசாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடல்புண்கள் குணமாகும்.

சிலருக்கு இதயம் மிகவேகமாக துடிக்கும். 

இவர்கள் எப்போதும் ஒருவித பதட்டத்துடனே காணப்படுவார்கள்.
 இவர்கள் பாலில் இந்த பழங்களை போட்டு காய்ச்சி ஆறியபின் மீண்டும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயதுடிப்பு சீராகும்.

பதட்டம் குறையும்.
=======================================================================