சனி, 24 ஜனவரி, 2015

"ராஜ" ........, பக்சே..?(துக்ளக் 24.12.2014 கேள்வி: 
இலங்கை அதிபர் தேர்தலில் யார் வெற்றி 
பெறுவது 
இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும், இலங்கைத் 
தமிழர் களுக்கும் நல்லது 
என்று நீங்கள் நினைக் கிறீர்கள்?
சோ பதில் : 
எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்ரி 
பால சிறீசேனா
 ராஜபக்சே போல் அல்லாமல், சமஷ்டி 
அமைப்பு ஏற்பட வழி செய்ய முன் 
வருவார் என்ற எதிர்பார்ப்பு சிலரிடம் 
இருந்தது. 
ஆனால், அவரோ, அப்படி 
எண்ணம் இல்லை என்பதைத் தெளிவாக்கி விட்டார்.
இது தவிர, அவர் எது செய்ய நினைத் தாலும் தன்னை ஆதரிக்கிற பல
 கட்சிகளின் ஒப்புதல் இல்லாமல் எதையும் செய்ய முடியாது.
தமிழர்கள் விஷயத்தில் அந்த மாதிரி ஒப்புதல், பல கட்சிகளிடம் இருந்து
 சுலப மாகப் பெறக் கூடியது அல்ல. ராஜபக்சே நிலை இப்படிப்பட்டது 
அல்ல. ஆகையால் அவரிடம் காரியம் சாதித்துக் கொள்ள முயல்வதே மேல்.
 அந்த வகையில் பார்த்தால் அவர்  வெற்றி பெறுவது இந்தி யாவிற்கு
 ஓரளவுக்காவது நல்லதாக இருக்கக் கூடும்.
(துக்ளக் 24.12.2014 பக்கம் 11)

சோ மட்டுமல்ல; இந்து ராம்,தினமலர்,என்றி டிவி,இந்தியா டுடே 
   உட்பட ஒட்டு  மொத்தமான
 பார்ப்பன ஊடகங்களின்  நிலைப்பாடும் 
இதுதான்.

ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போல நடக்கவில்லை; 
ராஜபக்சே தோல் 
வியைத்தான் தழுவினார்.
ஒன்றை இந்த இடத்தி
 குறிப்பிடுவது முக்கியம்; வெற்றி 
பெற வேண்டும் 
என்று இவர்கள் எதிர்பார்த்த அந்த 
ராஜபக்சே எத்தகையவர் என்பது
 இப்பொழுது வெளிச்சத்துக்கு 
வந்துள்ளது. எவ்வளவுக் குரூரமான 
மனிதர் 
இவர்! இந்த குடும்பமே பெரிய 
கொள்ளைக்காரக் குடும்பமாக 
அல்லவா 
இருந்திருக்கிறது.

ராஜபக்சேயின் தம்பி கோத்தபாய ராஜபக்சே தனது பினாமி பெயரால் ஆயுதக்
 கப்பலே வைத்திருந்தார் என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தங்களுக்கு எதிரானவர்களைப் படு கொலை செய்ய மரணப் படை ஒன்றைக்
 கையில் வைத்திருந்தார் இவர். வெள்ளை நிற வாகனங்கள் இதற்குப் 
பயன்படுத்தப் பட்டன என்கிற தகவல்கள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாகப் 
புற்றீசல் போல வெளி வரத் தொடங்கி விட்டன.
சர்வாதிகாரி போல் ஆடம்பரமாக வாழ்ந்த மகிந்த ராஜபக்சேபற்றி 
ஏராளமான தகவல்கள் வெளி வந்துள்ளன;
 அவற்றில் சில வருமாறு:
1. மகிந்தா அணியும் ஸன்கிளாஸின் மதிப்பு  35 லட்சம் ரூபாய்
2. மகிந்தா அணியும்கைக்கடிகாரத்தின் மதிப்பு 9 லட்சம் ரூபாய்; அவரிடம்
 அவ் வாறான 9 கைக்கடிகாரங்கள் உள்ளன
3. மகிந்தாவின் 2 ஆம் மகன் தன் காதலியின் பிறந்தநாளுக்குக் கொடுத்த
 பரிசு இங்கிலாந்து அரண்மைனையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல 
கோடி பெறுமதியான வெண் குதிரை.
4. உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த லம்போகினி கார் ரூ.1000 கோடி
 மதிப்புக்கு 9 கார்களை இறக்குமதி செய்தார். இதற்காக நமால் 
ராஜபக்சேக்குக் கிட்டத்தட்ட ரூ.500 கோடி வரிவிதிவிலக்கு வழங்கப்பட்டது.
 இதற்கு வரிவிலக்கு பாராளுமன்றத்தால் ஜனாதிபதியால்
 உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.
5. 100 மில்லியன் டொல் 5000 ரூபா தாளில் மத்தியவங்கியிலிருந்து 
மாற்றிச் சென்றுள்ளார்கள். அதாவது 1300 கோடி ரூபாய் தேர்தல் 
நடவடிக்கை களுக்கு லாரிகளில் எடுத்துச் சென்றுள் ளார்கள்.
6. தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஞிவீணீறீஷீரீ  நிறுவனத்திலிருந்து 500 
கோடி ரூபாய் பெற்றுள்ளார்கள்
7. மகிந்தா சிறீ லங்கா டெலிகொம் மூலம் ரூ.150 மில்லியன் பணம் தேர்தல் 
நடவடிக் கைக்காக எடுத்துள்ளனர்
8. நாடாளுமன்ற மந்திரி ஒருவரை விலகிப் போகாமலிருக்க வைப்பதற்காக
  ஒன்றரைக் கோடி ரூபாய் கை மாறியுள்ளது
9. பல்வேறு நாடாளுமன்ற உறுப்பினரை தமது பக்கம் இழுக்க 500 கோடி 
ரூபாய் செலவழித்திருக்கின்றனர்.
10. அநுராதபுர மகிந்தாவின் கூட்டத் துக்கு 1100 பேருந்துகள் கொண்டு வரப்
 பட்டன இதற்காக கொடுக்கப்பட்ட செலவு 250 லட்சம் ரூபாய். அனுராதபுர 
கூட்டத் திற்கு மாத்திரம் ரூ.70 கோடிகளுக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது.
11.  கோத்தபய ராஜபக்சவின் மகளின் திருமணத்துக்கு பல கோடி ரூபாய் 
மதிப்புள்ள பூக்கள் 2 கன்டெய்னர்களில் இந்தோனே சியா விலிருந்து 
வரவழைக்கப்பட்டன.
12.  சிரானி பண்டாரநாயக்கசட்டமா அதிபராக இருந்த போது 2 தீர்ப்புக்களை 
அரசுக்கு எதிராக வழங்கியதால் அவரை போலி குற்றச்சாட்டுகளைச் சுமத்தி 
பதவி யிலிருந்து துரத்திவிட்டு, இதுவரை எந்த வழக்கிலும் ஆஜராகாத 
நீதித்துறையில் எந்த ஆழமான சட்ட நுணுக்கமும் தெரியாத 
மொஹான்பீரிஸை இலங்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக 
 ஜனாதிபதி நியமித்தார்
13.  பொதுவிடத்திலேயே மதுபானம் அருந்தி பெண்களுடன் பாலியல் 
குற்றத் தில் ஈடுபட்ட பாலசூரியவை இலங்கை காவல்துறைத் தலைவராக 
தனது நிறை வேற்றும் அதிகாரம் மூலம் நியமித்தார்.
மஹிந்தா பற்றிய மேலும்  தகவல்கள் உண்டு.
1. மகிந்தாவின் மனைவி இலங்கையி 
லேயே அதிக  வசதிகளைக் கொண்ட 
கால் டன் என்ற மொன்டசூரியின்
 (கேளிக்கை விடுதி) உரிமையாளர்.
2. நமால் ராஜபக்ச 5 ரேடியோ  2 
தொலைக்காட்சிகளுக்கு சொந்தக்காரர்.
3. மகிந்தாவின் இரண்டாம் மகனுக்கு ரக்பி 
போட்டியில் போட்டியாக இருந்த 
துவான் என்றதிறமையான முஸ்லிம் 
இளைஞனை நாரஹேன்பிட்டியில் 
வைத்து இரவு வேளையில் உயிருடன் தீ 
வைத்து எரித்துக் கொலை
 செய்தனர்.
4. மியான்மாவில் பலரை உயிருடன் எரித்துக் கொலை செய்து மியான்மா 
படுகொலைகளுக்கு தலைமை தாங்கிய விராது என்ற பிக்குவுக்கு உலகில்
 எந்த நாடும் இதுவரை விசா வழங்கவில்லை. ஆனால், மகிந்தாவின் அரசு 
வழங்கியது. விராது  தனது உரையை மகிந்தாவுக்கு நன்றி செலுத்தி விட்டே 
தொடங்கினான்.
5. யாழ்ப்பாணத்தில் யுத்தத்தின்பின் கைப்பற்றிய பல பில்லியன் மதிப்பான 
தங்கங்களை 6கண்டெய்னர்கள் மூலமாக திருப்பதி ஏழுமலையானுக்குத் 
தானமாக கொடுத்தார்.  6. மகிந்தாவுக்கு எதிராக செயற்பட்ட பல 
ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்தான். நூற்றுக்கணக்கான 
ஊடகவிய லாளர்கள் நாட்டை விட்டே போய் விட்டார்கள்
7. மகிந்தாவுக்கு எதிரான இன்னும் ஆயிரக்கணக்கானோர் வெள்ளை வேன் 
களில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட் டார்கள்; இவர்கள் இறந்தார்களா? 
உயிருடன் இருக்கிறார்களா? என்று கூடத் தெரியாமல் தவித்துக் 
கொண்டிருக் கிறார்கள் இவர்களின் குடும்பத்தார்கள்.
8. பவுத்த பிக்குகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி எதனால் 
இறக்குமதிக்கு அனுமதிகொடுத்து மக்களை - இலங்கைத் தீவை மதுவிற்கு 
அடிமையாக்கி வைத்தார்.
9. மாசடைந்த குடிநீரினால் அவரது சொந்தத் தொகுதியான 
அனுராதபுரத்தில்  
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த மருத்துவ உதவியும் 
கொடுக்காமல், தனது ஓர் ஆண்டு செல வுக்காக ரூ.942 கோடிகளை 
ஒதுக்கிக் கொண்டார்.
10. நாட்டு மக்களிடமிருந்து வரி என்றபெயரில் சூதாட்டவிடுதிகளுக்கு அதீத 
உரிமைகளை வழங்கினார்.

11. பல்வேறு பாலியல் குற்றச்சாட்டு மற்றும் பெண்களை 
அயல்நாடுகளுக்கு 
கடத்தும் குற்றவாளிகளான மதுமிந்த சில்வா போன்றவர்களுக்கு முக்கிய 
பிரமுகர் களுக்கு நிகரான பாதுகாப்பு வழங்கினார்
12. நாட்டின் உச்சநீதிமன்றத்தையே முடக்கி நீதி, நியாயத்தையே கொலை 
செய்தவர்.
இப்படிப்பட்ட ஒரு கொடூரனைத் தான் சோ உள்ளிட்ட பார்ப்பனர்கள் 
தோளில் தூக்கி வைத்து ஆடினார்கள் என்பதை நினைத்துப் பார்க்க 
வேண்டும்.
இவரே மீண்டும் வர வேண்டும் என்றும் இந்தக் கூட்டம் ஆசைப்பட்டது - 
இவர்கள்  ராஜபக்சேயின் இன்னொரு வகை வாரிசுகள் என்பதை மறந்து 
விட 
வேண் டாம்! தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் 
அக்கிரகாரவாசிகளுக்கு அவல் பாயசம் சாப்பிட்டது மாதிரிதானே!
                                                     -மின்சாரம்   [விடுதலை] 
==================================================