விபரீத மரபணு மாற்றம்"
மனிதர்களுக்கு வரும் புற்றுநோய்களில் மூன்றில் இரண்டு பங்கு புற்றுநோய்கள் அவர்களின் உடலில் இயற்கையாக நடக்கும் மரபணு மாற்றம் காரணமாக நடப்பதாகவும், இந்த வகை புற்றுநோய்களுக்கும், ஒருவரின் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளிட்ட மோசமான பழக்க வழக்கங்களுக்கும் தொடர்பு இல்லை என்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள்.
அதேசமயம், மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய்கள் ஒருவரின் பழக்க வழக்கங்களால் தூண்டப்படுகின்றன என்பதையும் இவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
எனவே புற்றுநோயை தோற்றுவிக்கும் அல்லது ஊக்குவிக்கும் மனிதர்களின் தவறான பழக்கவழக்கங்களுக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கும் இந்த ஆய்வாளர்கள், அத்தோடு கூட மரபணுக்களில் ஏற்படும் விபரீத மாற்றங்களால் மட்டுமே உருவாகும் மூன்றில் இரண்டுபங்கு புற்றுநோய்களை அவற்றின் தோற்றத்தின் ஆரம்பகட்டத்திலேயே கண்டறிவதற்கான பரிசோதனை முயற்சிகளையும் மிகப்பெரிய அளவில் முன்னெடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறார்கள்.
மனிதர்களுக்கு புற்றுநோய் வருதற்கு அடிப்படை காரணம் அவர்களின் உடலில் இருக்கும் செல்களில் ஏற்படும் விபரீத மாற்றம். நம் உடலில் இருக்கும் எல்லா அங்கங்களிலும் வயதான மற்றும் சேதமடைந்த செல்கள் மடிந்து மறைவதும் அவற்றின் இடத்தை புதிய செல்கள் வளர்ந்து நிரப்புவதும் இயல்பாக தொடர்ந்து நடக்கும் அன்றாட செயல். நம் உடலில் இருக்கும் குருத்தணுக்களில் இருந்து இப்படி புதிய செல்கள் தோன்றி வளரும் சமயத்தில் சில செல்களில் மட்டும் ஏற்படும் விபரீதமான மரபணு மாற்றமானது, அவற்றை புற்றுநோய் தோற்றுவிக்கும் செல்களாக மாற்றிவிடுகிறது என்பது விஞ்ஞானிகளின் விளக்கம்.
இப்படியாக குறிப்பிட்ட சில செல்கள் மட்டும் திடீரென புற்றுநோய்க்கான செல்களாக மாறுவது ஏன் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் ஆராய்ந்தார்கள். உடலில் தோன்றும் எத்தனையோ கோடி செல்களில் குறிப்பிட்ட சில செல்கள் மட்டும் ஏன் இப்படி நடந்துகொள்கின்றன என்பது இவர்களின் ஆய்வின் மையப்பொருள்.
இந்த ஆய்வின் முடிவு தற்போது சயின்ஸ் சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் மூன்றில் இரண்டு மடங்கு புற்றுநோய்கள் இப்படி செல்களுக்குள் நடக்கும் விபரீத மரபணு மாற்றம் காரணமாகவே உருவாவதாகவும் அதற்கும் ஒருவரின் பழக்க வழகங்களுக்கும் நேரடி தொடர்புகள் இல்லை என்றும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், மீதமுள்ள மூன்றில் ஒரு பங்கு புற்றுநோய்கள் ஒருவர் உண்ணும் தவறான உணவுகள், அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம் மற்றும் புகைப்பிடித்தல் போன்ற தவறான பழக்கங்களால் ஊக்குவிக்கப்படுவதையும் இவர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.
எனவே ஒருவருக்கு புற்றுநோய் வருவது என்பது அடிப்படையில் அவரது உடலில் இருக்கும் செல்கள் தம்மை புதுப்பித்துக்கொள்ளும் நடைமுறையில் இருந்து ஆரம்பிப்பதாக இந்த ஆய்வை மெற்கொண்ட ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளி மற்றும் பொது சுகாதாரத்திற்கான புளூம்பெர்க் பள்ளியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த ஆய்வின் அடிப்படையில் புற்றுநோய்களை இரண்டு வகையானவைகளாக பிரிக்கலாம். அதாவது, ஒருவரின் செல்களில் நடக்கும் விபரீத மரபணு மாற்றத்தால் உருவாகும் புற்றுநோய்கள் மற்றவை ஒருவரின் பழக்கவழங்களால் தூண்டப்படும் புற்றுநோய்கள்.
இதில் ஒருவரின் மரபணுவில் ஏற்படும் மாற்றம் காரணமாக உருவாகும் முக்கியமான புற்றுநோய்கள் என்பவை மூளையில் தோன்றும் ஒரு புற்றுநோய், வயிற்றின் சிறுகுடலில் தோன்றும் புற்றுநோய் மற்றும் கணைய புற்றுநோய் ஆகியவை என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட புற்றுநோய்கள் தோன்றாமலே தடுப்பது என்பது இன்றைய நிலையில் இயலாது என்னும்போது அவை தோன்றுவதை ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடிப்பது அவற்றை குணப்படுத்த உதவும் என்கிறார் இந்த ஆய்வாளர்களில் ஒருவரான கிறிஸ்டியன் டோமசெட்டி.
அதேசமயம் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்த ஒருவரின் பழக்க வழக்கங்களால் தூண்டப்படும் புற்றுநோய்கள் என்பதாக அடையாளம் காணப்பட்டிருப்பனவற்றில் ஒருவகை தோல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், குதப்புற்றுநோய் ஆகியவை முக்கியமானவை
இதில் குறிப்பிட்ட ஒருவகை தோல் புற்றுநோய் சூரிய ஒளியில் அளவுக்கு அதிகமாக இருப்பதால் தூண்டப்படுகிறது; புகைப்பழக்கம் நுரையீரல் புற்றுநோயை தூண்டுகிறது, மோசமான உணவுப்பழக்கம் மற்றும் குடும்ப மரபணுக்களால் குதப்புற்றுநோய் தூண்டப்படுகிறது என்பதும் இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
எனவே சிலவகையான புற்றுநோய்கள் வேண்டுமானால் விபரீத மரபணு மாற்றங்கள் காரணமாக உருவாகலாம். ஆனால் மற்றவகை புற்றுநோய்களை ஒருவரின் பழக்கவழக்கங்கள் தூண்டுகின்றன என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும் என்கிறார் ஐக்கிய ராஜ்ஜியத்தின் புற்றுநோய்க்கான ஆய்வு மையத்தின் மருத்துவர் எம்மா ஸ்மித்.
இவை தவிர பரவலாக மனிதர்களை பாதிக்கும் மார்பக புற்றுநோய் மற்றும் புராஸ்டேட் சுரப்பிகளில் தோன்றும் புற்றுநோய்கள் இந்த ஆய்வில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
எனவே புற்றுநோயை ஊக்குவிக்கும் பழக்கவழக்கங்களை தவிர்ப்பது, மற்றும் புற்றுநோய்களை அவற்றின் ஆரம்பகட்டங்களிலேயே கண்டுபிடித்து உடனடி சிகிச்சை அளிப்பது ஆகிய இரண்டுவகையான அணுகுமுறைகளும் சம அளவில் கைக்கொள்வதே உலக அளவில் உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றாக பார்க்கப்படும் புற்றுநோயை கையாள்வதற்கான மருத்துவ வழிமுறைகள் என்பது இந்த ஆய்வாளர்களின் பரிந்துரையாக இருக்கிறது.
நன்றி:தமிழோசை
ஆந்திரா பேங்கை பேங்க் ஆப் பரோடாவுடனோ, பஞ்சாப் நேசனல் பேங்குடனோ இணைப்பதற்கான முடிவு எடுக்கப்படலாமெனச் செய்திகள் கூறுகின்றன.
பேசல்-3 விதிமுறைகளுக்கு ஏற்ப ரூ.800 கோடி மூலதனம் தேவையென ஆந்திரா பேங்க், அரசிடம் முன் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டதாம். வங்கி உயரதிகாரிகளும், 20,000 ஊழியர்களும் இணைப்புத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.
அரசு வங்கியான ஆந்திரா வங்கிக்கு வந்துள்ள சிக்கலுக்கு காரணம் அதிகமான வாராக்கடன்களே.

செயல்படாத சொத்துக்கள் எனச் சொல்லப்படும் இவ்வாராக் கடன்கள் 5.99 சதவீதம் என்கிற உச்சத்தை தொட்டுள்ளது. இதற்கு காரணம் அரசு மற்றும் ரிசர்வ் வங்கிகளின் கொள்கைகளே என ஊழியர் சங்கங்கள் குற்றம்சாட்டுவதில் நியாயம் உள்ளது. தனியார்கள் ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவார்கள் என்று இப்போதும் கூட ஆட்சியாளர்கள் மாலைகளோடு அலைகிறார்கள்.
ஆனால் ஆந்திரா பேங் கிற்கு வில்லன்களே இவர்கள்தான். லாங்கோ இன்ஃப்ரா, ஐவிஆர்சிஎல் போன்ற தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்த கடன்கள் பிரச்சனையாக மாறியுள்ளன.தனியார் கைகளில் வங்கி இருந்தாலும் சிக்கல். அரசு வங்கிகளுக்கும் தனியார்களால் சிக்கல்.

இந்திய ரிசர்வ் வங்கியின் “இந்திய வங்கித் துறையின் போக்குகள் மற்றும் வளர்ச்சி குறித்த அறிக்கை 2013-14” உலக அளவிலான நிதித் தொற்று நோய் இந்திய வங்கிகளை பாதிக்கலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.அவ்வறிக்கையின்படி “வளர்ந்த நாடுகளில் குறை வான வட்டி விகிதங்கள் இருப்பதால் பங்குச் சந்தை முதலீடுகள் வளரும் நாடுகளை நோக்கி உற்சாகமாய் வருகின்றன.
இப்படிக் குவியும் முதலீடுகள் பின்னோக்கி ஓடுகிற ரிஸ்க் உள்ளது. அது வளர்ச்சியை பாதிப்பதோடு நிதிச் சந்தை அதிர்ச்சிகளையும் உருவாக்கக்கூடும். எனவே, அதிகமான எச்சரிக்கை அவசியம்.”ரிசர்வ் வங்கி சொல்லாத ஒன்று, இத்தொற்று நோய்க் கிருமிகள் வெளியே இருந்து நிதிக் கட்டமைப்பை தாக்கு வதில்லை.

சர்வதேச நிதிமூலதனத்தின் நலன்களை உள்ளடக்கிய பொருளியல் கட்டமைப்பே இக்கிருமிகளை உற்பத்தி செய்கிறது. இப்படி மூலதனம் லாபத்திற்காக கட்டுப்பாடின்றி உலகம் முழுவதும் மேய்வதும், பொருளாதாரத்தை நாசமாக்குவதும் கட்டமைப்பின் இயல்பான குணமேயாகும்.‘செபி’ அண்மையில் நீண்டகால முதலீடுகளை செய்யுங்கள்,
குறுகிய கால முதலீடுகளை நாடாதீர்கள் என்று முதலீட்டாளர்களுக்கு ஊடக விளம்பரங்கள் மூலம்அறிவுரை வழங்கியுள்ளது. பின்னால் நெருக்கடி வந்தால் கைகளைத் தூக்கி தப்பித்துக் கொள்வதற்கான சாகசம் இது.
குறுகிய கால முதலீடுகளை நாடாதீர்கள் என்று முதலீட்டாளர்களுக்கு ஊடக விளம்பரங்கள் மூலம்அறிவுரை வழங்கியுள்ளது. பின்னால் நெருக்கடி வந்தால் கைகளைத் தூக்கி தப்பித்துக் கொள்வதற்கான சாகசம் இது.
!“21ஆம் நூற்றாண்டில் முதலாளித்துவம்” என்கிற பிரபல நூலை எழுதிய தாமஸ் பிக்கெட்டிக்கு பிரான்ஸ் அரசு அளித்த அந்நாட்டின் உச்சபட்ச பெருமைக்குரிய ஆளுமை விருதை அவர் வாங்க மறுத்துள்ளார்.“
யார் பெருமைக்குரியவர்? என்பதைத் தீர்மானிப்பது அரசின் பொறுப்பல்ல” என்று கூறியுள்ள தாமஸ் பிக்கெட்டி “பிரான்சிலும் ஐரோப்பாவிலும் பொருளாதார மீட்சிக்காக அரசாங்கம் முயற்சிப்பது நல்லது” என்று அறிவுறுத்தியுள்ளார்.
தாமஸ் பிக்கெட்டியின் மேற்கூறிய நூல் 15 இலட்சம் பிரதிகள் விற்பனையாகி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

புத்தாண்டு நாள் இந்திய ரூபாய்க்கு ‘ஹேப்பி நியூ இயர்’ சொல்லுகிற நாளாக அமையவில்லை.
ஜனவரி 1 அன்று ரூபாயின் மதிப்பு 32 பைசா வீழ்ச்சியடைந்துள்ளது. புதன்கிழமை (டிசம்பர் 31) அன்று 35 பைசா ஏறிய ரூபாய் மறுநாளே அதே அளவு சறுக்கியுள்ளது.
வங்கிகளிடமிருந்து வந்தகோரிக்கைகள், இறக்குமதி யாளர்களின் தேவை அதிக மானதும் அதை ஈடு செய்கிற அளவிற்கு பங்குச் சந்தை கைகொடுக்காததுமே காரணம்.

மேலும், அமெரிக்க பெடரல் ரிசர்வ் இவ்வாண்டின் மத்தியில் வட்டி விகிதங்களை உயர்த்தலாம் என்று வந்துள்ள செய்திகளும் டாலரை வலிமை பெறச் செய்துள்ளன.மும்பை பங்குச் சந்தையில் புத்தாண்டு குதூகலம் வெளிப்படவில்லை. எட்டே எட்டுப் புள்ளிகள் மட்டுமே உயர்ந்தன. அதுவும் நூறு புள்ளிகள் விழுந்து சுதாரித்து எழுந்து எட்டுப்புள்ளி உயர்வைத் தொட்டு இருக்கிறது.
=====================================================================
தமிழ்ப் புத்தாண்டு எது?
=====================================================================
தமிழ்ப் புத்தாண்டு எது?