`தை பிறந்தால் வழி பிறக்கும்‘
 

`தை பிறந்தால் வழி பிறக்கும்‘ 
என்பது தமிழகத்தின் நெடு நாளைய பழமொழி.
 சூரியன் சுற்றும் நிலையின் கணக்கினைக் கொண்டு, அந்நாளில் தை முதல் ஆனி ஈறாக ஒரு பகுதியும், ஆடி முதல் மார்கழி ஈறாக மற்றொருபகுதியும் விளங்கின. ஆடி முதல் மார்கழி ஈறாக உள்ள காலம் இருள் நிலை கொண்டது.

தை முதல் ஆனி ஈறாகக்கொண்ட காலம் பகல்நிலை கொண்டது.

ஆண்டின் இரவுக் காலமாகிய ஆடி முதல் மார்கழி ஈறாக உள்ள காலத்தில் -அதாவது ஆடிக் காற்றிலும், 

அடுத்துள்ள ஐப்பசி மழையிலும், மார்கழிப் பனியிலும் குளிரிலும் இடர்ப்படும் பொழுது மக்கள் உள்ளத்தில்
 `தை பிறந்தால் வழி பிறக்கும்‘ என்ற நம்பிக்கை ஒலி பேரொலியாய்க் கேட்கிறது.

இந்த இரவு நிலை மாறிப் பகல்நிலை பெற்றுப் பயன்தரும் தைப்பிறப்பு நாளைப் புத்தாண்டின் புனித நாளாய்,பிறப்பு நாளாய்ப் பழந்தமிழர் கொண்டாடி வந்தனர்.
இன்றுங்கூட, தைப் பிறப்பபைத் தனிப் பெருஞ் சிறப்பாகத் தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். 
ஆகவே, 
நாம் தைத் திங்களையே தமிழர் ஆண்டின் முதல் திங்களாய்க் கணக்கெடுத்துச் செயற்படுத்துவோம்....
இடையில் ,{இப்போதும்} ஆரியர்களால் திணிக்கப்பட்ட சித்திரையை 
மறப்போம்.
`

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

விடுதலைப்போர்.முதல் பலி தூத்துக்குடியில்.