தயாநிதி விவகாரம் ?


தயாநிதி, 2004 - 2007 கால கட்டத்தில், மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்தார்.
 அமைச்சர் என்ற முறையில், பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் பெயரில், அவரது சென்னை வீட்டுக்கு, போன் இணைப்பு ஒன்று அளிக்கப்பட்டது. 
அந்த கால கட்டத்தில், ஒருங்கிணைந்த 'டேட்டா நெட்வொர்க்' சேவை (ஐ.எஸ்.டி.என்.,) அறிமுகமானது.
அதற்கு முன், தொலைபேசியில், பேச மட்டுமே முடியும். இப்புதிய சேவை மூலம், தொலைபேசியில் பேசுவதோடு, புகைப்படம், வீடியோ உள்ளிட்ட அனுப்பும் சேவைகளையும் பயன்படுத்த முடியும். 
இவற்றை ஒருங்கிணைத்து வழங்குவது தான், ஐ.எஸ்.டி.என்., சேவை.சென்னை, போட்கிளப் பகுதியில் உள்ள, தயாநிதி வீட்டுக்கு ஒதுக்கப்பட்ட தொலைபேசியில், ஐ.எஸ்.டி.என்., சேவை இருந்தது. 
சென்னை, மாம்பலம் தொலைபேசி இணைப்பகம் மூலம், இந்த இணைப்பில், 323 சர்க்யூட்கள் வடிவமைக்கப்பட்டன.
வெளிப் பார்வைக்கு, இணைப்பு ஒன்றாக தெரிந்தாலும், 323 தொலைபேசிகள் இயங்கும். 
இவை அனைத்திலும், ஐ.எஸ்.டி.என்., சேவை இருந்தது.



இந்த தொலைபேசி இணைப்புகளை, போட் கிளப் பகுதியில் இருந்து, அண்ணா அறிவாலயத்தில் இருந்த, சன் 'டிவி' அலுவலகத்துக்கு, தயாநிதி, மடை மாற்றி விட்டார். 
சன் 'டிவி' நிர்வாகம், அதன் தொழிலுக்கு, இச்சேவையை பயன்படுத்திக் கொண்டது. இதன்மூலம், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு, 440 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.
தயாநிதி மீதான புகாரைவிசாரிக்குமாறு, சி.பி.ஐ.,க்கு, மத்திய தொலை தொடர்பு துறை செயலராக இருந்த மாத்தூர், 2007ல் உத்தரவிட்டார். 
அப்போது, தொலைத் தொடர்பு துறை அமைச்சராக இருந்தவர் தி.மு.க.,வை சேர்ந்த ராஜா.சி.பி.ஐ., இணை இயக்குனர் தலைமையில் நடந்த விசாரணையில், தயாநிதி மீதான குற்றச்சாட்டுக்கு, முகாந்திரம் உள்ளதாக, தொலைத் தொடர்பு செயலருக்கு, 2008ல் அறிக்கை சமர்பிக்கப்பட்டது. 
ஆனால், சி.பி.ஐ., அறிக்கை மீது, தொடர் நடவடிக்கை எடுக்க, தொலைத் தொடர்பு துறை உத்தரவிடவில்லை. 
இந்நிலையில், 'சி.பி.ஐ., அறிக்கை மீது, தொடர் விசாரணை நடத்த வேண்டும்' என, ஆடிட்டர் குருமூர்த்தி, உச்ச நீதிமன்றத்தை அணுகினார். 
உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, 2014 அக்டோபரில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

அந்த முதல் தகவல் அறிக்கையில், 'ஒரு கோடி ரூபாய் இழப்பு' என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. 
ஆனால், உண்மையான இழப்பு, 440 கோடி ரூபாய். 
சி.பி.ஐ., தொடர் விசாரணை நடத்தும் என்ற நிலையில், தாங்கள் சிக்கி விடுவோமோ என்ற அச்சத்தில், இந்த விவகாரம் தொடர்பான ஆவணங்களை, அதிகாரிகளே அழித்துவிட்டனர். 
இதனால், இருக்கும் ஆவணங்களைக் கொண்டு, இழப்பு தொகை ஒரு கோடி ரூபாய் என, முதல் தகவல் அறிக்கையில், சி.பி.ஐ., குறிப்பிட்டுள்ளது.


அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்தும், அமைச்சருக்கான வசதியை, சகோதரர் நிறுவனத்துக்கு வழங்கி மோசடி செய்தும், அரசு நிறுவனத்துக்கு இழப்பீடு ஏற்படுத்தும் ஒரு செயலை தயாநிதி செய்துள்ளார்.
 எனவே, இந்த வழக்கை, சிவில் வழக்காக பாவித்து, இழப்பீட்டுத் தொகையை, வட்டியோடு செலுத்த முடியாது. 
அதிகார துஷ்பிரயோகம், மோசடி ஆகிய குற்றங்கள் கிரிமினல் சட்டத்தில் அணுகப்படுவதால், கிரிமினல் குற்றமாகவே பாவிக்கப்படும்.


தயாநிதி மீதான குற்றச்சாட்டை, வெளியுலகிற்கு கொண்டு வந்தவர்,
 தேசிய தொலைத் தொடர்பு ஊழியர் சங்க மாநில செயலர் மதிவாணன்.
தயாநிதி வீட்டில் தொலைபேசி இணைப்பகம் இருப்பதாக எழுந்த புகார் மீது, சி.பி.ஐ., விசாரணை நடத்தி, முகாந்திரம் இருப்பதாக, தொலைத் தொடர்பு துறை செயலருக்கு, 2008ல் அறிக்கை தாக்கல் செய்யும் வரை, இப்பிரச்னை வெளியில் தெரியவில்லை.
 'சி.பி.ஐ., அறிக்கை மீது, தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, 2008ல், தேசிய தொலைத் தொடர்பு ஊழியர் சங்கம், தொடர் போராட்டங்களை நடத்தியது.
 'இந்த வழக்கில் தொடர்புடைய சில ஆவணங்களை அழிக்கின்றனர்' என, ஆதாரங்களுடன் பிரச்னையை வெளிக் கொண்டு வந்தவர், சங்கத்தின் மாநில செயலர் மதிவாணன். 
இதன் பிறகே, சி.பி.ஐ., அறிக்கை மீது, தொடர் நடவடிக்கை வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்பகம் வைத்திருந்த வழக்கில், கைதான மூன்று பேரையும்,
போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி,
சி.பி.ஐ., தாக்கல் செய்த மனு மீது, 27ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.
 இதனால்  தயாநிதியின் தனி செயலர் கவுதமன்,
 சன் 'டிவி' முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன்,
எலக்ட்ரீஷியன் ரவி ஆகியோரை சி.பி.ஐ.,
2015ஜனவரி  22ம் தேதி இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர். 
========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?