ஞாயிறு, 1 பிப்ரவரி, 2015

"மதம் "பிடித்தவர்கள்?


இப்போது தூத்துக்குடியில் நடக்கும் கிருத்துவ-இந்து முன்னணி சண்டை மிக நன்றாக இருக்கிறது.
"மா.ஆ.தலைவர் அலுவலகம் முன் இந்து முன்னணியினர் நடத்திய  ஆர்ப்பாட்டத்தில் எங்களின் புனித நூல் பைபிள் தரையில் கொட்டப்பட்டு கோசங்கள் எழுப்பப் பட்டன.இது புனித நூலுக்கு அவமானம்.இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுங்கள்"
இதுதான் தற்போதைய சண்டை நிலவரம்.
நமக்கு இந்து முன்னணியினரின் மத வாதம் பிடிக்காது.இந்து முன்னணி மட்டுமல்ல எந்த மதத்தினரின் தீவிரவாதமும் பிடிப்பத்தில்லை.மதமும் பிடிப்பதில்லை.
காரணம் நாம் மதம்,கடவுள்,சாதி இவைகள் எல்லாம் மனிதனை பிரித்து அடிமைகளாக்கிட சில ஆதிக்கவாதிகளின் செயல் என்பது நம் கருத்து.
மதம் பிடிக்காத நாம் இந்த சண்டையை வேடிக்கை பார்க்க சென்ற போது கிடைத்தது சுவாரசியமானது .
ஒரு பள்ளியில் கிருத்துவ மத பரப்பிகள் சிலர் புத் தம் புதிய பைபிள்களை மாண்வர்களுக்கு துண்டறிக்கை போல் வசங்கி தங்கள் ஏசுவிடம் அடைக்கலமாக வேண்டிக் கொள்ள அது மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரிய அங்கேயே வாக்குவாதம் பெற்றோர்களுக்கும்,கிருத்துவ மதவாதிகளுக்கும் நடந்துள்ளது.
ஏற்கனவே இது போன்ற பைபிள்கள் பள்ளி மாண்வர்களுக்கு வழ ங்க தடை உள்ளது.
இது தெரிந்த இந்து மதவாதிகள் இந்து முன்னணி பேரில் மா.ஆ.தலைவர் அலுவலகத்தில் அந்த பைபிள்களை கொட்டி பிரச்னையை கோசங்களாக போட இப்போது அந்த பைபிள்கள் மா.ஆ.த.அலுவலகத்தில் வைக்கப் பட்டுள்ளது.
பைபிளை பள்ளி மாண்வர்களுக்கு மிட்டாய் போல் கொடுத்தது தவறா?அதை எதிர்த்து போராடியது தவறா?
இப்போது பைபிள் அவமதிக்கப்பட்டதாக புலம்புவது சரியா?
உண்மையில் பைபிளை அவமதித்தது யார்?
மாற்று மதத்தினரிடம்,இது போன்ற ஆட பிடிப்பு வேலை தடையில் இருக்கையில் லேகிய வியாபாரி விளம்பர துண்டறிக்கை போல் ,பேருந்தில் நாக்கை காட்டி பயணிகள் மடியில் "உதவுங்கள் " என்று நோட்டீஸ் போடு வோர் போட்டது புனித நூல் [?]பைபிளை அவமதிப்பது இல்லையா?
பைபிளை தரையில் போட்டது குற்றம் என்றால் பள்ளியில் வலுக்கட்டாயமாக மாற்று மதத்தின மாணவர்களிடம் தடையை மீறி பைபிளை கொடுத்து தங்கள் மதத்திற்கு ஆள் சேர்ப்பில் இறங்கியது குற்றம் தானே?
பெசாவரில் சிறார்களை காப்பாற்றாத அல்லா,
இமாலய பயணத்தில் பக்தர்களை காப்பாற்ற முடியாத சிவா,
நார்வேயில் 60 பேர்கள் ஆலயத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட போதும்.இப்போது பாகில் குரானை எரித்ததாக எரிக்கப்பட்ட கிருத்துவனை காப்பாற்ற முடியாத ஏசு இவர்களை நம்பாதீர்கள்என்று கூற உரிமை இல்லாதது குற்றமா?

நீங்கள் ஜெபித்துவிட்டீர்களா?....

 உலகத்தின் முடிவுநாள் வரை உங்களுடனே நான் இருக்கிறேன்,,, என்று உறுதிமொழி கொடுத்தார் இயேசுநாதர். யாரிடம் எப்போது இப்படிப்பட்டதொரு வாக்குறுதியை வழங்கினார்? யோவான் என்பவர் பத்மு என்கின்ற தீவில், தனிமையிலே இருந்தபோது, கனவிலே காட்சியளித்த இயேசு சொன்ன இந்த வார்த்தை களின்பேரில் நூற்றுக்குநூறு நம்பிக்கை வைத்து, அவரது அடியவர்கள் இன்றும் இயேசுவுடன் ஜெபம் என்ற பேரில் உரையாடுகின்றனர். இயேசு அப்பா என பாசம் கலந்த உரிமையுடன் உறவாடி வருகின்றார்கள்.
நேற்றும் இன்றும் மாறாதவர், ஆலோசனைக்கர்த்தா, ஜெபங்களைக் கேட்கின்ற தேவன் மற்றும் ஜெபங் களுக்கு பதிலளிப்பவர் என வாழ்த்தி வணங்கி மண்டியிட்டு தங்களது பிரச்சினைகளையும் தேவைகளையும் இயேசுநாதரிடம் தெரிவித்து ஆலோ சனைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். கேளுங்கள் - (மறுமொழி) கொடுக் கப்படும்! 
என்று கூறியவரிடம் தங்களது வேண்டுதல்களை உடன் நிறை வேற்றியே தீரவேண்டும் என ஒரு சிலர் அவருக்கு உத்தரவுபோடுவதும் உண்டு! ஒரு தடவை சொன்னால் இயேசுவுக்குப் புரியாது - பலர் பட்டினிகிடந்து இரவு முழுவதும் ஜெபம் என்னும்பேரில் இயேசுவோடு பேசிக்கொண்டி ருக்கிறார்கள்!...
பகுத்தறிவுக்கும் சுயமரியாதைக்கும் முற்றிலும் முரண்பாடான பைபிளின் போதனைகள், பின்பற்றுவோரின் தன்மானத்தையும் துணிச்சலையும் தகர்த்துவிடுகின்றன. ஒரு கன்னத்தில் அறைந்துவிட்டால் மறுகன்னத்தையும் காட்டு, பகைவர்களை நேசியுங்கள், உங்களைத் துன்பப்படுத்துவோருக் காகவும் நிந்திக்கிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்! இப்படிப்பட்ட உபதேசங்கள் நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்துவராதவை! தினனவரும் புலி தனையும் அன்போடு சிந்தையில் போற்றிடுவாய்!... என்று பாடிய பாரதியார் போன்ற பிற்போக்குவாதிகள் மட்டுமே பைபிள் உபதேசங்களைப் பாராட்ட முடியும்; நம் போன்ற வர்களால் நினைத்துப் பார்க்கவும் முடியாது!
நானே உலகின் ஒளி என்று சொன்னாராம் இயேசு. இயேசுவின் மூலமாக உலகம் படைக்கப்பட்டது, என்று பைபிள் பிதற்றுகிறது. ஒளியின் வேகம் ஒரு விநாடிக்கு 1,86,000 மைல்கள் என்பதை அறியாத ஒருவர், நானே உலகின் ஒளி என்கிறார் - என்ன விபரீதம்! பகலும் இரவும் தோற்று விக்கப்பட்டபின், சூரியனும் சந்திரனும் படைக்கப்பட்டன என எழுதப் பட்டிருக்கும் ஒரு புத்தகத்தின் கதாநாயகருக்கு, விண்ணகத்தில் 10,000 கோடிக்கும் அதிகமான எண்ணிக் கையில் கதிரவன்கள் இருந்து வருகின்றன என்பதும் இந்தப்பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே வருகின்றது என்பதும் தெரியாது! ஏனென்றால் கதாசிரியர்களுக்குத் தெரிந்த உண்மைகள் மட்டுமே அவர்களாக உருவாக்கப்படும் கதாபாத்திரங்களுக்கும் தெரியும். பைபிள் ஆசிரியர்களைப் பொறுத்தவரை சூரியன்தான் பூமியைச் சுற்றிவருகின்றது; தட்டையானது பூமி என்று நினைத்துக் கொண்டிருந்தனர்.
நான் சொல்லவந்த ஆராய்ச்சி என்னவென்றால் - பகுத்தறிவற்ற பைபிள் பெரும்பாலான மொழிகளில் அச்சிடப்பட்டு இன்றும் விநியோ கிக்கப்பட்டு வருகின்றது. அந்தந்த மொழிகளைச் சார்ந்தவர்கள் தங்களது தாய்மொழியிலே இயேசுநாதரிடம் உரையாடுகிறார்கள். அதே மொழிகளில் பதில்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்கிறார்களாம். பைபிள் மதங்களைச் சேர்ந்தவர்கள் பெருமை பேசிவரும் இந்தத் தகவலின் அடிப் படையில் - இயேசு என்வர் அனைத்து மொழிகளும் தெரிந்தவர், புரிந்தவர்; பதில்களும் சொல்லக்கூடியவர் என்பது உண்மையானால் - பைபிளால் தங்களை மூளைச்சலவை செய்துகொண்ட பாஸ்டர்களும் பாதிரிமார்களும் இப்போது பதில் சொல்லவேண்டும்!
தமக்கு அறவே தெரியாததும், மற்றவர்கள் மூலமாக தெரிந்து கொண்டதுமான ஒரு வேற்று மொழியின் வாசகத்தை இயேசுநாதரிடம் தெரிவித்து; அதனை ஜெபிப்பவரின் தாய்மொழியில் மொழி மாற்றம் செய்து விளக்கவுரை சொல்லும்படி பிரார்த்தனை செய்தால் - இயேசுநாதர் பதில் அளிப்பாரா? மாட்டார் - இப்போது அவரால் எந்தபதிலும் சொல்லமுடியாது! ஜெபம் செய்துவரும் ஒருபக்தர் தமக்கு இந்நாள்வரை தெரிந்திராத இயற்பியல், அல்ஜீப்ரா தொடர்பான வினாக்களைக் கேட்டால் கேளுங்கள் - கொடுக்கப்படும் என்றவர் மறுமொழி கொடுப்பாரா - மாட்டார்!
ஏனென்றால், இயேசுவின் அடிமை களே! நீங்கள் உங்களது சொந்த மனஉருவகத்தைத் தான் (Imaginery) வணங்கிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்குத் தெரிந்த தகவல்கள் தான் நீங்கள் உருவாக்கிக் கொண்ட உருவங்களுக்குத் தெரியும்.  இயேசுநாதர் ஆலோசனை கூறினார், பேசினார், சிரித்தார், அழுதார் என்பதெல்லாம் உங்களது மனப் பிரேமைகள்! இயேசு என்பவர் பதில் சொன்னார் என்று நீங்கள் சொல்வதனைத்தும் உங்க ளுடைய சொந்த ஊகங்களே. (Auto Suggestions) என்பதில் அய்யமில்லை. எனவேதான் உங்களால் எல்லாமொழி களும் தெரிந்தவராக கருதப்பட்டுவரும் இயேசுநாதரால் உங்களுக்குத் தெரியாத வேறு ஒரு மொழியில் எதுவும் பேச முடிவதில்லை! கதை ஆசிரியர்களுக்கு (ஜெபம் செய்பவர்களுக்கு) தெரிந்த தகவல்கள் மட்டுமே கதாபாத்திரங் களுக்கு (நினைத்துக் கொண்டிருக்கும் தெய்வ உருவங்களுக்கு) தெரியும்!
உலகின் முடிவுநாள் வரை உங்களுடனே நான் இருந்துவருகிறேன். என்னும் இயேசுவின் வசனம் உண்மை யானால், அவர் பைபிள் மதங்களில் இத்தனை பிளவுகளை அனுமதித் திருக்கமாட்டார்! தமது பெயரால் சண்டை - சச்சரவுகள், போர்கள், வாதப்பிரதிவாதங்கள் வளர்ந்து; மூளைச்சலவை செய்துகொண்ட இலட்சக்கணக்கான பக்தர்கள் மேல்உலக சன்மானங்களை எதிர் பார்த்தும் நம்பியும் இரத்த சாட்சிகளாக சாவதற்கு சம்மதித்திருக்க மாட்டார்!... கணவரோடு பெற்றோர் பிள்ளைகளோடு வாழவேண்டிய பெண்கள், கன்னிமாடங்கள் என்னும் ஆயுட்கால சிறையிலே தள்ளப்பட்டு; அவர்களது மூளைகளும் பைபிள் என்னும் சிறையில் அடைக்கப்பட்டு, அவர்கள் கன்னிகையாகவே கல் லறையில் அடக்கம் செய்யப்படவும் ஒப்புக்கொண்டிருக்க மாட்டார்.
நீங்கள் ஜெபித்துவிட்டீர்களா!... என்று கேட்கும் பைபிள்காரர்கள், இந்தக்கட்டுரையை படித்துப்பார்த்து பகுத்தறிவுடன் சிந்திக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
                                                                                                                                                                                                   - குபேரன்