ஆர்.கே.லஷ்மண்
ஆர்.கே.லஷ்மண் 24 அக்டோபர், 1921 ஆம் ஆண்டு மைசூரில் பிறந்தார். இவரின்
சகோதரர் பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயண். 'டைம்ஸ் ஆப் இந்தியா'வில்
அறுபதாண்டு காலமாக 'யூ செட் இட்' (You Said it ) என்கிற தலைப்பில் பொதுஜனம் (Common Man) என்கிற கதாபாத்திரத்தின் மூலம் இவர் வரைந்த அரசியல் கருத்துப் படங்கள் சிரிக்கவும்,சிந்திக்கவும் வைத்து வாசகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றது. .
'டைம்ஸ் ஆஃப் இந்தியா'வின் ஒன்றரை நூற்றாண்டு முடிவடைந்த விழாவில் ஓர்
அஞ்சல் தலையே அந்த 'காமன்மேன்' நினைவாக வெளியிடப்பட்டது. ஆர்.கே. நாராயனின்
'மால்குடி நாட்கள்' தொலைக்காட்சி தொடருக்கு இவரே ஓவியம் வரைந்தார்.
எளிய ஆனால் ஆழ்ந்த சமூகப் பார்வைக்கு நல்ல எடுத்துகாட்டு இவரின்
கார்ட்டூன்கள். ஆசியன் பெய்ன்ட்ஸ் நிறுவனத்தின் முத்திரையும் இவர்
வரைந்ததே.
இவரை ஒட்டி ஒரு நகைச்சுவை தொடரே இந்தியில் வந்தது. இவரின்
கார்ட்டூன்கள் நூல்களாக வந்து நல்ல விற்பனை ஆகின.
லஷ்மணின் தூரிகை தெளித்த வெளிச்சத்தில் எத்தனையோ பேர் இப்பொழுது
மின்னுகிறார்கள். இப்பொழுதும் அவர் உருவாக்கிய 'பொதுமனிதன்'' சிலை மும்பையில்
நிற்கிறது.
அவரின் தைரியம் பலரால் வசீகரிக்கப்பட்டது.
பத்ம விபூஷண், மகேசச விருது உள்ளிட்ட உயரிய கவுரங்களைப் பெற்றவர், கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லஷ்மண்.ஆர்.கே.லஷ்மணுக்கு கடந்த 2010-ல் பக்கவாதம் ஏற்பட்டு, அவரது உடலின் வலதுபுறம் செயலிழந்ததுடன் பேசும் திறனும் குறைந்தது.
புனேவில் உள்ள தீனாநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையில் சிறுநீரக தொற்று
காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு
வந்தது.
சிறுநீரக பாதிப்பு மற்றும் பல்வேறு உறுப்புகள் செயலிழந்த நிலையில், அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உயிர் பிரியும் போது அவருக்கு வயது 93.
1921ம் ஆண்டு அக்.24ல் கர்நாடகாவின் மைசூருவில் பிறந்தார்.
இவரது
முழுப்பெயர் ராசிபுரம் கிருஷ்ணசுவாமி ஐயர் லஷ்மண். இதன் சுருக்கமமே
ஆர்.கே.லஷ்மண். இவரது தந்தை பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தார். புகழ்பெற்ற
எழுத்தாளர் ஆர்.கே.நாராயணன் இவரது மூத்த சகோதரர்.
ஆர்.கே.லஷ்மண் சிறு வயதிலேயே வீட்டு சுவர் மற்றும் கதவுகளில் கேலியாக ஓவியம் வரையத் தொடங்கினார். பின் தான் படித்த பள்ளியில் ஆசிரியர்களை பற்றி கேலி சித்திரம் வரைந்தார்.
ஆர்.கே.லஷ்மண் சிறு வயதிலேயே வீட்டு சுவர் மற்றும் கதவுகளில் கேலியாக ஓவியம் வரையத் தொடங்கினார். பின் தான் படித்த பள்ளியில் ஆசிரியர்களை பற்றி கேலி சித்திரம் வரைந்தார்.
ஆசிரியர்கள் இவரது திறமையை கண்டு, அவரை மேலும் வரைய
ஊக்குவித்தனர். பள்ளிப்படிப்பை முடித்த இவர் மும்பையில் உள்ள தனியார்
ஓவியக் கல்லூரியில் சேர விண்ணப்பித்தார்.
ஆனால் இடம் கிடைக்கவில்லை.
இதையடுத்து மைசூரு பல்கலைக்கழகத்தில் பி.ஏ., பட்டம் பெற்றார்.
படிக்கும்போதே தனது கார்ட்டூன் திறமையை வளர்த்துக் கொண்டார்.
முதன்முதலில் கன்னட பத்திரிகையில் கார்ட்டூன் வரைய ஆரம்பித்தார். பின் டைம்ஸ் ஆப் இந்தியாவில் கார்ட்டூனிஸ்ட் ஆகி பிரபலமடைந்தார்.
முதன்முதலில் கன்னட பத்திரிகையில் கார்ட்டூன் வரைய ஆரம்பித்தார். பின் டைம்ஸ் ஆப் இந்தியாவில் கார்ட்டூனிஸ்ட் ஆகி பிரபலமடைந்தார்.
அந்த பத்திரிகையில் "காமன்
மேன்' என்ற கதாபாத்திரத்தை வைத்து 60 ஆண்டுகள் கார்ட்டூன் வரைந்து
கொண்டிருந்தார்.
இவரது திறமையை அங்கீகரிக்கும் விதமாக 1984ல்
பத்திரிகையாளர்களுக்கான ராமன் மகசேசே விருது வழங்கப்பட்டது. 2005ல்
மத்திய அரசு இவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்தது. புகழ்பெற்ற
பரதநாட்டிய கலைஞர் குமாரி கமலாவை திருமணம் செய்தார். பின் அவரை விவாகரத்து
செய்து விட்டு குழந்தைகளுக்கான எழுத்தாளர் கமலா என்பவரை மணந்தார்.
=========================================================================