5000 பிணங்கள்.
இறந்துபோன தனது கணவரின் பிணத்தை வீட்டிற்கு எடுத்துச்செல்ல வழியில்லாமல் ஒரு பெண் ஆலங்குடி அரசு ஆஸ்பத்திரி முன் அழுது கொண்டிருந்தார்.
அந்தகாலகட்டத்தில் 108 கிடையாது, அந்த ஆஸ்பத்திரியில் அப்போது ஆம்புலன்சும் கிடையாது ஊரில் இரண்டே வாடகை கார்கள்தான் இருந்தன. பிணத்தை ஏற்றினால் பிறகு வேறுயாரும் அந்த காரில் பயணிக்கமாட்டார்கள் என்பதால் வாடகை கார்களும் பிணத்தை ஏற்ற வரவில்லை.
பிறகு கைவண்டியில் வைத்து அந்த பெண் தனது கணவரின் பிணத்தை கொண்டு செல்வதை பார்த்த கணேசன் அந்த கணமே முடிவு செய்தார், பிணத்தை ஏற்றி செல்வதற்காகவே ஒரு கார் வாங்குவது என்று.
அவர்தான் ஆலங்குடி கணேசன்.
இப்போது 62 வயதாகும் கணேசன் பிறந்தது வளர்ந்தது வாழ்ந்து வருவது எல்லாம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில்தான்.
குடும்ப சூழ்நிலை காரணமாக எட்டாம் வகுப்பிற்கு மேல்படிக்க முடியாதவர் பழைய இரும்புகளை வாங்கிவிற்கும் வியாபாரம் செய்வதை பழகி இன்றுவரை அதைத்தான் செய்துவருகிறார்.
கையில் இரும்பு வியாபாரத்திற்கு வைத்திருந்த 17 ஆயிரம் ரூபாயை வைத்து செகண்ட்ஹாண்ட் கார் வாங்கிதானே ஒட்டப் பழகிக்கொண்டார்.
''எனது கடையருகே காரை நிறுத்திவைத்திருப்பேன் அப்போது போன் எல்லாம் கிடையாது ஆஸ்பத்திரியில் இருந்தோ போலீஸ் நிலையத்தில் இருந்தோ தகவல் வந்தால் கடை வியபாரத்தை அப்படியே போட்டுவிட்டு காரை எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரி போய் பிணத்தை வாங்கி காரில் ஏற்றிக்கொண்டு சம்பந்தபட்டவர்களின் வீட்டில் கொண்டுபோய் இறக்கிவிடுவேன். அவர்கள் பார்த்து ஏதாவது டீசல் காசு என்று கொடுத்தால் வாங்கிக்கொள்வேன் இல்லாவிட்டால் திரும்பிவிடுவேன்.
இதைத்தாண்டி ஆஸ்பத்திரியில் இறந்துபோய் கேட்பாரற்று அனாதை பிணம் என்ற அடைமொழியோடு கிடக்கும் ஆதரவற்ற பிணத்தை எடுத்துக்கொண்டுபோய் நானே பிணத்தின் உறவாய் மாறி அடக்கம் செய்யஆரம்பித்தேன். கடந்த 44 ஆண்டுகளில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான ஆதரவற்ற பிணங்களை அடக்கம் செய்திருப்பேன். இது போக அவசர பிரசவத்திற்கு மற்றும் விபத்தில் அடிபட்டவர்களுக்கு எல்லாம் இலவசமாக சென்றுவந்தேன்.
சாதாரண சிறிய ஒடுவேயப்பட்ட வாடகைவீட்டில்தான் குடியிருக்கிறேன். இதுவரை பல கார்கள் மாற்றிவிட்டாலும் இன்னமும் முதல்முதல் வாங்கிய 515 கார் எண்தான் எனக்கு அடைமொழியாகிவிட்டது, 515 கணேசன் என்றால் ஆலங்குடியில் தெரியாதவர்கள் யாரும் கிடையாது.
எனக்கு ஐந்து மகள்கள் நான்கு பேருக்கு திருமணமாகிவிட்டது ஐந்தாவது மகள் படித்துக்கொண்டு இருக்கிறார் வீட்டு விஷயத்தையும் என்னையும் சேர்த்து பார்த்துக்கொள்வது என் மணைவி தெய்வானைதான்
'நீ உன் மனசுக்கு பிடிச்சதை செஞ்சுகிட்டே இருய்யா' என்று சொல்லி என்னை உற்சாகப்படுத்துபவர் அவர்தான்.
இப்போது எப்போது பிரசவதேதி என்று கேட்டு முந்தைய நாளே போய் ஆஸ்பத்திரியில் சேர்ந்து கொள்கின்றனர்.
விபத்து மற்றும் இறந்தவர்களுக்கு உதவ 108 மற்றும் ஆஸ்பத்திரி ஆம்புலன்ஸ் இருக்கிறது, என் வண்டி ஆதரவற்றவர்களுக்காக மட்டும் ஒடிக்கொண்டிருக்கிறது. நான் ஒடும்வரை ஒடிக்கொண்டே இருக்கும்.
ஆலங்குடி கணேசனிடம் பேசுவதற்கான எண்:98656 71486.(வயது முதிர்வின் காரணமாக வார்த்தை தெளிவில்லாமல் இருப்பது போல தோன்றலாம் கொஞ்சம் பொறுமையாக பேசவேண்டும், மிஸ்டுகால் பார்த்து பேச தெரியாது ஆகவே அவருடன் பேசவேண்டும் என்று முடிவு செய்தால் திரும்ப திரும்ப முயற்சி செய்துதான் பேசவேண்டும்.
-எல்.முருகராஜ்.
கட்டுரை உதவிரைட்மந்திரா சுந்தர் .
கற்பூரவல்லி
ஒரு சிறந்த கிருமி நாசினியாகும்.
இதனால்தான் நம் முன்னோர்கள் வீட்டின் முன்புறம் துளசியுடன் கற்பூர வல்லியும் நட்டு வளர்த்தனர். இரண்டும் விஷக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது.
கற்பூரவல்லியை தென்னை மரத்தைச் சுற்றி நட்டு வைத்தால் எந்த வகையான பூச்சிகளும் தென்னையைத் தாக்காது.
கற்ப மூலிகையில் கற்பூரவல்லிக்கு சிறந்த இடமுண்டு. இதனால்தான் இதன் பெயரும் கூட கற்பூர வல்லி என்று அழைக்கப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற மருந்தாக கற்பூரவல்லி அமைகிறது.
இந்தியாவில் தமிழகம் கேரளா, கர்நாடகா பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.
இதன் இலை வட்ட வடிவமாக பஞ்சு போன்று காணப்படும். இதில் காரத்தன்மை கொண்ட நீர்ச்சத்து நிறைந்துள்ளது.
கற்பூரவல்லி இலைகளை காயவைத்து பொடி செய்து அதனுடன் காய்ந்த தூதுவளை, துளசி பொடிகளை சம அளவு எடுத்து புட்டியில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் காலை வேளையில் குழந்தைகளுக்கு ஒரு சிறு தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் கொடுத்து வந்தால், குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல், ஈளை போன்றவை நீங்கும். சளியின் அபகாரம் குறையும்.
கற்பூர வல்லி இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதனுடன் காய்ந்த வேப்பிலை, வில்வம், அத்தி இலை, துளசி இலை, தும்பை இலை, தூதுவளை, ஆடாதோடை, நெல்லி, கீழாநெல்லி இவற்றை சம அளவு எடுத்து அதனுடன் சுக்கு, மிளகு, மஞ்சள்தூள், தனியா பொடி கலந்து ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு தினமும் மூன்று வேளையும் வேளைக்கு இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து நீரில் கொதிக்க வைத்து அருந்தி வரவேண்டும்.
இவ்வாறு அருந்தி வந்தால், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மூச்சுக் கிளைக்குழல்களில் தொற்றுநோய்களின் தாக்குதல் ஏதுமின்றி பாதுகாக்கும்.
சுருங்கியுள்ள மூச்சுக்குழல்களை விரிவடையச் செய்து சீராக செயல்பட வைக்கும். ஆஸ்துமாவுக்கு இது நல்ல மருந்து.
குழந்தைகளுக்கு உண்டான மார்புச்சளி நீங்க சிறு குழந்தைகளுக்கு மார்பில் சளி கட்டிக்கொண்டு இறுகிப்போயிருக்கும்.
இதனால், குழந்தைகளுக்கு அடிக்கடி மூச்சு விட முடியாமல் திணறுவார்கள். சில சமயங்களில் இது ஆஸ்துமா, காசநோயாக கூட மாற நேரிடும். இவர்களுக்கு கற்பூர வல்லி இலையையும், துளசி இலையையும் சம அளவு எடுத்து சுத்தம் செய்து, லேசாக வதக்கி சாறு எடுத்து, 5 மி.கி. அளவு தினமும் காலை வேளையில் கொடுத்து வந்தால், மார்புச்சளி அறவே நீங்கும்.
கற்பூரவல்லி இலை, தூதுவளை, வல்லாரை, இவற்றை சம அளவு எடுத்து பொடியாக்கி அதில் 1 ஸ்பூன் அளவு எடுத்து 100 மி.லி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து 50 மி.லியாக சுண்டக் காய்ச்சி, அதனுடன் சிறிது பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால், நுரையீரல் பாதிப்பு நீங்கும்.
மூச்சுக்குழல் அடைப்பு சீராகும் .
கற்பூரவல்லி சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வந்தால் மூக்கில் நீர்வடிதல், சளி, இருமல், தொண்டைக் கட்டு, தொண்டைக் கம்மல் குணமாகும். கற்பூரவல்லி உடலை நோயின்றி காப்பது போல், வீட்டையும் விஷப் பூச்சிகளிலிருந்து காப்பாற்றும்.