வெற்றி பெற்றும் இந்த கர்மமா?
அழைப்பது எமனாக இருக்கலாம்
எத்தனையோ முறை எத்தனையோ பேர்கள் சொன்னாலும் எனக்கு அலைபேசியை சார்ஜ் போடும்போது அழைப்புகள் வந்தால் அப்படியே எடுத்து பேசும் கெட்டப் பழக்கம் இருந்து வந்தது.
அதற்கு உண்மையான காரணம் சோம்பேறித்தனம்தான்.
பின்னே?
மின் இணைப்பை துண்டித்து விட்டு சார்ஜரில் இருந்து தனியே அலைபேசியை எடுத்து பேசி விட்டு மீண்டும் இணைப்பு கொடுக்க சோம்பேறித்தனம் பட்டுத்தானே இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தத பலர் வரம்பு மீறி நடந்து கொள்ளுவதற்கு பேர் என்ன?
. பெரும்பாலும் இது போன்ற செயல்கள் விபரீதத்தில் தான் முடிகின்றன. ஆனால் கர்நாடக மாநிலம் மைசூரில் சமீபத்தில் நடந்தேறிய ஒரு விபரீதத்தை யும் அதில் மாட்டிக்கொண்ட வாலிபர் படத்தையும் பார்த்ததும் அலைபேசியை சும்மா எடுத்து பேசவே பயமாக இருக்கிறது.
பீகார் மாநிலத்தை சேர்ந்த சீதாராம் என்ற 18 வயது வாலிபர், வயிற்றுப் பிழைப்புக்காக கூலி வேலை தேடி மைசூர் நகருக்கு வந்துள்ளார். இங்குள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் தினக்கூலியாக வேலை செய்தபடி, பணி நடைபெறும் கட்டிட வளாகத்தில் தங்கியுள்ளார்.
இவரது செல்போன் ஒரு அழைப்பு வந்தது.
சார்ஜர் மூலம் செல்போன் பேட்டரிக்கு மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த நிலையில் அந்த அழைப்புக்கு பதில் சொல்லும் அவசரத்தில் சார்ஜர் இணைப்பில் இருந்து செல்போனை விடுவிக்காமலேயே ஆன் செய்து அவர் ஹலோ சொல்ல முயன்ற போது பயங்கர சத்தத்துடன் செல்போன் பேட்டரி வெடிகுண்டு போல் வெடித்து சிதறியது.
இதில் சீதாராமின் முகம் சிதைந்தது.
அ வரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த நண்பர்கள் பணியாளர்கள் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர்.
அங்கு அளிக்கப்பட்ட அவசரச் சிகிச்சையில் அவரது தொடை பகுதி தோலை எடுத்து முகத்தில் ஒட்டி தையல் போட்ட மருத்துவர்கள், கீழ் தாடை பகுதியின் முக்கிய எலும்பு சேதம் அடைந்து நொறுங்கி விட்டதால் முக சீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்துள்ளனர்.
அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் பிழைத்து விட்டாலும், முன்னர் இருந்த அந்த அழகிய முக அமைப்பை அந்த வாலிபர் மீண்டும் பெற பல லட்சம் ரூபாய் செலவும், பல ஆண்டு கால காத்திருப்பும் அவசியம் என தெரியவந்துள்ளது.
இத்தனை ஆண்டு காத்திருப்புக்கு பதிலாக ஒரு நிமிடம் யோசித்து, சார்ஜர் இணைப்பில் இருந்து செல்போன் துண்டித்து விட்டு வந்த அழைப்புக்கு பதில் அளித்திருந்தால் அந்த நபருக்கு இந்த பரிதாப நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை.
இந்த துயரம் அந்த நபருடன் முடிந்துப் போகவும், உலகில் வேறு யாருக்கும் இந்த விபத்து நடைபெறாமல் இருக்க இந்த செய்தியை நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்துவதுடன் நீங்களும் சார்ஜரில் செல்போன் இணைக்கப்பட்டிருக்கும் நேரத்தில் எந்த ஒரு அழைப்பு வந்தாலும் இணைப்பை துண்டித்து விட்டு பேசுங்கள்.
அல்லது சோம்பேறித்தனமாக இருந்தால் எடுக்கவே வேண்டாம் சார்ஜ் முடிந்த பின்னர் பேசிக்கொள்ளுங்கள்.
வாகனம் ஓட்டும் போது மட்டுமல்ல சார்ஜ் ஏற்றும் போது கூட அழைப்பது எமனாக இருக்கலாம் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டிய நிலை உண்டாகியுள்ளது.
==========================================================================
வெற்றி பெற்றும் இந்த கர்மமா?
திருவரங்கம் அதை ஸ்ரீ ரங்கம் என்று கூ ட சொல்லலாம் .இடைத்தேர்தல் முடிவுகள் நாளை தெரியும் என்று செய்தி தாட்களில் இன்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இதில் நாளை தெரிய என்ன இருக்கின்றது.
சென்ற இடைத்தேர்தலில் பிறந்த குழ்ந்தை கூட சொல்லி விடும் ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும் என்று.
டெல்லி மாயம் இங்கு நடக்க வாய்ப்பில்லை.
தமிழர்கள் நாணயஸ்தர்கள்.வாங்கின காசுக்கோ,தங்கள் வாக்கை காசுக்கு விற்றபின்னர் அதை மாற்றி போட மாட்டார்கள்.
எனவே அதிமுக வேட்பாளர் வளர்மதி வெல்வது நிச்சயம் இந்த நிமிடம் வரை.ஆனால் அ வருக்கு இருக்கும் ஒரே இக்கட்டு வென்று காட்டி தலைவிக்கு இன்னமும் செல்வாக்கு குறையவில்லை என்பதை நிருபிக்க வேண்டும் .
ஆனால் அதே நேரம் தனது தலைவி சென்ற தேர்தலில் பெற்ற வாக்கு வித்தியாசம் 44000த்து சொச்சத்தைவிட ஒரு வாக்கு கூட அதிகமாக இருக்க கூடாது.
வாக்கு வித்தியாசம் குறைவு ஏற்றுக் கொள்ளப்படும்.
வாக்குக்கு 2000 கொடுத்த அமைச்சர் பெருமக்கள் தங்களிடம் பணம் வாங்கியவர்கள் அனைவரும் "போடுங்கம்மா ஓட்டு ,இரட்டை இலையை பார்த்து " என்று அந்த பொத்தானை அமுக்கி விட்டால் என்ன செய்வது என்று கவலையில் இருக்கிறார்களாம்.
பின்னே லட்சக்கணக்கில் வாக்கு வித்தியாசம் போய் விட்டால்?தோட்டம் பக்கம் போக முடியுமா என்ன?
அமைச்சர் பதவியும் தக்க வே ண்டாமா?
தமிழர்களின் நாணயம் இங்குதான் தர்மசங்கடத்தை எட்டி பார்த்துள்ளது.
வாங்கிய காசுக்கு செஞ்ச்சொற்று கடனை தீர்க்க இயலாமல் போய் விடக்கூடாது என்ற அவர்களின் எண்ணம் இருதலை கொள்ளி எறும்பாக சிலரை தவிக்க விட்டுள்ளது.
அவர்களுக்கு ஒரு யோசனை.
ஊழல் வழக்கில் உள்ளே சென்று பிணையில் வந்த தியாகி என்று மக்கள் அனைவரும் வாக்களித்து விட்டார்கள்.
உங்களின் விதி-சதி கடிதம் எழுச்சியை உண்டாக்கி விட்டது.திமுகவினரே அழுது கொண்டு இரட்டை இலை பொத்தானை அழுத்தி விட்டார்கள்.
அங்கே வளர்மதி நின்றதாக யாரும் கருதவில்லை.உங்கள் கடிதப்படி நீங்களே கண்ணீரும் ,கம்பலையுமாக நிற்பதாக எண்ணி வாக்களித்து விட்டார்கள்.
இப்படி சொல்லி அவர் உள்ளே போனதும் நீங்கள் பதவியே ற்பு விழாவில் கொடுத்த முக பாவனையை கொடுங்கள் தோட்டத்தின் முதலாளியம்மா கொஞ்சம் அமைதியாகி விடுவார்.
முக்கியமாக முதல்வர் பன்னீர் செல்வத்தின் முக பாவத்தை பார்த்து அது போலவே நடியுங்கள்.
என்ன செய்ய நீங்கள் வெற்றி பெற்றும் இந்த கர்மமா?
============================================================================
ஒரு பகுதறிவாளனின் பரினா[ய் ]ம வளர்ச்சீ
=============================================================================

"சுரன் "-வலைப்பூ பக்கம் வந்து சென்ற நான்கு லட்சம் தோழமைக்கும் மனமார்ந்த நன்றிகள்.
மீ ண்டும் ,மீண்டும் வந்து செல்ல வேண்டுகிறேன்.==========================================================================