செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

உலோகங்களின் விஷத் தன்மை.

சுற்றுச்சூழல் மாசுபடுதல் என்பது இன்று உலகம் சந்திக்கும் மிகக் கடுமையான பிரச்சனைகளில் ஒன்று.
 விஷத்தன்மையுள்ள சில உலோகங்கள் மாசுபடுதலுக்கு மிக முக்கியக் காரணியாக இருக்கின்றன.
தொல்எரிபொருட்களை எரிப்பது, ஆலைக் கழிவுகள் வெளியேறுவது, வேளாண்மையில் வேதிப்பொருட்களைப் பயன்படுத்துவது ஆகிய காரணங்களால் இந்த விஷத்தன்மையுடைய உலோகங்களில் சிறிதளவு காற்று மண்டலத்தில் கலந்து விடுகின்றன.
 பாதரசம், காட்மியம், குரோமியம், ஆர்சினிக், தாமிரம், ஈயம் போன்ற விஷத்தன்மையுள்ள உலோகங்கள் நீர்நிலைகளின் அடியில் வண்டல்களாகத் தங்கி பின்னர் அந்த நீரைப் பயன்படுத்தும் மனிதர்களை வந்தடைகின்றன.
உலோகங்களால் காற்று, நீர், மண், உணவு ஆகியவை மேலும் மேலும் மாசடைவது எண்ணற்ற தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் மட்டுமல்ல, மனித இனத்தின் இருப்புக்கே கூட ஆபத்தாக மாறியிருக்கிறது.
மாசடைந்த காற்றை உள்ளிழுக்கும்போதே உலோக விஷம் உடலில் சேர்ந்துவிடுகிறது. உலோக விஷம் கலந்த உணவை உட்கொள்வதன் மூலமாகவும் அது உடலில் சேருகிறது.
ஆற்றுப்படுகையில் உள்ள சிதிலமடைந்த பாறைகள், பாறைத்துகள்கள் போன்றவற்றிலிருந்தும் நீரில் ஏற்படும் இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்கள், உயிரிப் பொருட்களின் சிதைவு போன்ற காரணங்களாலும் காற்றிலும் நீரிலும் விஷத்தன்மை இயற்கையிலேயே உருவாகிவிடுகிறது.
நிலக்கரி, தங்கம், வெள்ளி, தாமிரம், தகரம் போன்ற உலோகங்களை வெட்டியெடுக்கும் சுரங்கங்களில் விஷத்தன்மையுடன் உள்ள உலோகங்கள் நிலத்தடி நீரை மாசுபடுத்துகின்றன.
 தாவரம், விலங்குகளின் திசுக்களில் பரவியிருக்கும் ஆர்சினிக் விஷத்தன்மையுடையது என்பது பலரும் அறிந்த செய்தி. முடி, நகங்கள், தோல் ஆகியவற்றின் வழியாக ஊடுருவும் ஆர்சினைட் உடலில் தங்கிவிடுகிறது.
ஆர்சினிக்கினால் மாசடைந்த நீரைத் தொடர்ந்து குடிப்பதால் இரைப்பை, குடல், தோல், ஈரல், நரம்புத் திசு ஆகியவை சேதமடைகின்றன.குரோமியம் விஷத்தன்மை குறைவாக உள்ள உலோகம்.
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் உலோகங்களில் காட்மியம் எட்டாவது இடத்தில் இருக்கிறது.
சிறுநீரகம், நரம்பு மண்டலம், எலும்புகள் ஆகியவற்றில் கடுமையான பாதிப்புகளை இது ஏற்படுத்தக் கூடியது.
 புற்றுநோயைத் தூண்டும் காரணியாகவும் காட்மியம் இருக்கிறது.
இதேபோல், ஈயமும் புற்றுநோயை உருவாக்கக்கூடிய உலோகமே.
உடலில் ஈயம் அதிகமாகச் சேர்ந்தால், சிறுநீரகங்களை அது பாதிக்கும். வலிப்பு நோயையும்நினைவிழத்தலையும்மட்டுமல்ல மரணத்தையே வரவழைக்கக் கூடியது.
மக்னீசியம் மரபியல் மாற்றத்தையே உருவாக்கக்கூடியது.
உலோக அயனிகளுக்கு உயிரியல் அமைப்பில் முக்கியப் பங்கு உண்டு. உலோக அயனிகளின்றி எந்த உயிரியும் வளரவோ, உயிர் வாழவோ இயலாது.
உயிரிகளின் இருப்பை சாத்தியமாக்க சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் ஆகிய உலோகங்களின் அயனிகள் இன்றியமையாதவை. உதாரணமாக, குளூகோஸ் பயன்பாட்டிற்கு மக்னீசியம் அவசியமானது. ஹீமோகுளோபின் என்ற புரோட்டீனைத் தயாரிக்க இரும்புச் சத்து அவசியமானது.
உடலில் சில உலோகங்களின் அளவு மிகக் குறைந்து போனால் உயிர்ச்சத்துக்களில் பற்றாக்குறை ஏற்படும். சரியான அளவில் இருந்தால் உடல்நலமும் சரியான முறையில் பாதுகாக்கப்படும். அளவு கூடிவிட்டால் விஷமாகி, இறுதியில் உயிருக்கு ஆபத்தாகவே முடியும்.
உணவில் அளவோடு சேர்க்கப்படும் கால்சியம், செலினியம், துத்தநாகம் ஆகிய உடலுக்கு மிகத் தேவையான சத்துக்கள் உடலை ஆபத்தான விஷத்தன்மையிலிருந்து காப்பாற்றக்கூடியவை.
சுத்தமான நீரும் சத்தான உணவும் ஆர்சினிக்கின் விஷத்தன்மையை முறிக்கும் மருந்துகள். காரட், பலாக்கொட்டைகள், சோயாபீன்ஸ் போன்றவை ஆர்சினிக்கின் விஷத்தன்மைக்கு எதிராகப் போராடும் வல்லமையை உடலுக்கு அளிக்கின்றன.
                                                                                                                - டாக்டர் அம்ரிதா சிங் 

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


110 கோடி ரூபாய் வீட்டையும் மும்பை மாநகராட்சி விதிகளை மீறி கட்டி தனது செல்வாக்கு மூலம் சரி கட்டியுள்ளான் இந்த சச்சின் தெண்டுல்கர் 
.இந்த கிரிக்கெட் வியாபாரிக்கு இந்தியாவின் மகத்தான விருதான பாரத ரத்னா விருதை [அண்ணா,பெரியாருக்கு கூட கொடுக்காததை ]கொடுத்து அந்த விருதையே கேவலப்படுத்தி விட்டார்கள் நம் அரசியல் வியாபாரிகள்.
=============================================================