வியாழன், 5 பிப்ரவரி, 2015

சில விளக்கங்கள்.

டை' யில் உள்ள ரசாயனம், சிலருக்கு, அலர்ஜியை ஏற்படுத்தும்.
மீசையில், 'டை' அடிக்கும்போது, அந்த ரசாயனத்தை, நீங்கள் சுவாசிக்க நேர்வதால், தும்மல், மூச்சுத் திணறல் போன்ற, பல பிரச்னைகள் உண்டாகலாம்.
அது மட்டுமின்றி, அந்த ரசாயனம், உடலினுள் செல்வதால் கூட, பிரச்னைகள் உண்டாகலாம்.
இந்த, 'அலர்ஜி' சிறிய அளவில் இருந்தால், 'செட்ரிசின்' மருந்தை எடுத்துக் கொள்ளலாம். இப்போது, 'அம்மோனியா' கலக்காத, 'டை' கிடைக்கிறது. அதை உபயோகியுங்கள். இல்லையெனில் இவற்றை நிறுத்திவிட்டு, இயற்கை, 'டை'யை உபயோகிக்கவும்.
வைரஸ் மற்றும் பாக்டீரியா போன்ற நோய்க் கிருமிகள், காய்ச்சலை உண்டு பண்ணுகின்றன. இவை, நுரையீரலையும் பாதிப்பதால், இருமல் உண்டாகிறது. வைரஸ் நோய்த் தொற்றால் உண்டாகும் தொந்தரவுகள், ஆறு வாரங்கள் வரை நம்மை பாதிக்கும்.
இருமல் தொந்தரவு, வைரஸ் நோய் தொற்றினால் தான் ஏற்பட்டது என்றால், அதற்கு தனியாக, மருந்துகள் எடுக்கத் தேவையில்லை.
இருமல் அதிகமாக இருந்தால், இருமலை நிறுத்தும் மருந்து மட்டும் எடுத்தால் போதுமானது.
 உடலில் சேரும் கொழுப்பைக் குறைத்து, ரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பாதுகாப்பதில், பூண்டின் பணி மகத்தானது. இதன் மூலம், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் ஆகியவற்றைத் தவிர்க்கலாம்.
மூட்டுவலி வர, பல காரணங்கள் உள்ளன. உடல் பருமனாக இருப்பவர்களுக்கு, மூட்டுவலி வர வாய்ப்பு அதிகம்.
உடற்பயிற்சி செய்வது, சரிவிகித உணவு, காய்கறிகள், கீரை வகைகள், நார்ச்சத்து உள்ள உணவு உண்பது, கொழுப்பு பதார்த்தங்களை தவிர்ப்பது, எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படுவது போன்றவற்றை கடைபிடித்தால், உடல், பருமன் ஆவதையும் தடுக்கலாம்; மூட்டு வலியையும் குறைக்கலாம்.

நடைப் பயிற்சியை துவக்க, வயது ஒரு பொருட்டல்ல. எந்த வயதில் நடைப் பயிற்சி துவங்கினாலும், அதனால் ஏற்படும் பலன் ஏராளம். குறிப்பாக, சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு வராமல் தடுப்பதுடன், இருதயத்துக்கும் பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கிறது.
அதுமட்டுமின்றி, மனதிலும் நல்ல எண்ணங்களை உருவாக்குகிறது. இருந்தாலும் இதை துவங்கும் முன், முழுஉடல் பரிசோதனை செய்து, மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின், துவங்குவது நல்லது. துவங்கும் போது, பயிற்சியை மெதுவாக துவங்கி, சில மாதங்களுக்குப் பின், தீவிரமாக செய்யலாம்.
TGL என்ற 2டிரைகிளிசரைடு' என்பது, ரத்தத்தில் உள்ள ஒருவகை கெட்ட கொழுப்பு. சர்க்கரை நோயாளிகளுக்கு, இது அதிகமாகவே உள்ளது. இதன் அளவு, ரத்தத்தில் 150 மி.கி.,க்குள் இருந்தாக வேண்டும்.
 இதற்கு உணவுக் கட்டுப்பாடு, உணவில் எண்ணெயை தவிர்ப்பது, பால் சார்ந்த உணவுகளை குறைப்பது முக்கியம்.
இதுதவிர, தினமும் நடைப் பயிற்சி அவசியம். சர்க்கரை நோய் இருந்தால், ரத்தத்தில் அதன்அளவை, கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
மருந்துகளைப் பொறுத்தவரை, FIBRATE வகை மருந்துகள், "டிரைகிளிசரைடை' நன்கு குறைக்கும். இதுதவிர மீன் எண்ணெய் மாத்திரையும் குறைக்கும். "ஸ்டேட்டின்' வகை மருந்துகளைப் பொறுத்தவரை, 'ROSUVA STATIN' வகை மருந்துகள், கெட்டக் கொழுப்பை நன்கு குறைக்கின்றன.
இருதய நோயை பொறுத்தவரை, மாரடைப்பு வந்தவர்கள், பலூன் மற்றும் "ஸ்டென்ட்' பொருத்தியவர்கள், பைபாஸ் சர்ஜரி செய்தவர்கள், அப்பாதிப்பில் இருந்து மீண்டு வர, சில பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.
இதற்கு தற்போது, சில வழிகாட்டுதல்கள் உள்ளன.
"மறுவாழ்வு மையங்களில்' ஒவ்வொரு வாரத்திலும், ஒருவர் என்னென்ன பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும், என்றே அட்டவணை உள்ளது.
இதற்கென்றே சில மையங்கள் துவக்கப்பட்டுள்ளன.
 இங்கு உள்நோயாளிகளாக தங்கியிருந்தும், வெளிநோயாளிகளாக தினமும் வந்து, 2 மணி நேரம் பயிற்சி பெற்று வீடுதிரும்பலாம். இதை "கார்டியாக் ரிஹேபிலிடேஷன் சென்டர்' என்பர்.
இங்கு பயிற்சிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள், செவிலியர்கள், டாக்டர்கள் கண்காணிப்பிலேயே செய்யப்படும். இதனால், நீங்கள் எளிதில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிடலாம்.
இருதய ரத்தநாளங்களில், "ஸ்டென்ட்' பொருத்தியவர்கள், முதல் ஆறுமாதங்களுக்கு, மருந்து மாத்திரையை வேளை தவறாமல் எடுப்பது அவசியம். ஏனெனில், ஒருமுறை மாத்திரையை எடுக்கத் தவறினாலும், 2ஸ்டென்டுக்குள்', மறுபடியும் அடைப்பு வரும், தன்மை அதிகமாகவே உள்ளது.
எனவே, இருதய மாத்திரைகளை, ஒருவேளைகூட தவறாமல் எடுப்பது முக்கியம்.
இருதய மருந்தை எடுத்துக் கொண்டிருக்கும்போது, டி.பி., போன்ற நோய் ஏற்பட்டாலும், அந்த மருந்தையும் தாராளமாக எடுத்துக் கொள்ள முடியும். ஆனால், சில மருந்துகளின் அளவை கூட்டியோ, குறைத்தோ மாற்றி அமைக்க வேண்டி இருக்கும்.
இதை, உங்கள் டாக்டர் நன்கு அறிவார். டி.பி., நோய்க்கான மாத்திரையை, 9 மாதங்கள் முதல் ஓராண்டு வரை எடுக்க வேண்டும்.
இருதய மருந்துகளை பொறுத்தவரை, நாளடைவில் குறைக்கலாம்.
 ஆனால், வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து எடுத்தாக வேண்டும்.
உங்களுக்கு தொடர்ந்து இருமல் இருந்ததால் தொண்டையில் புண் ஏற்பட்டு இருக்கலாம். அதனால் இருமலுடன் சிலசொட்டு ரத்தம் வருவதற்காக பயப்படத் தேவையில்லை.
ஆனால் ஒருமுறை ரத்தம் வந்தாலும், உங்கள் நுரையீரல் மற்றும் காது, மூக்கு, தொண்டையினை முழுமையாக பரிசோதிப்பது அவசியம்.
மேலும் ஒரு நுரையீரல் நிபுணரையும் காது, மூக்கு, தொண்டை நிபுணரையும் ஆலோசித்து ரத்தத்திகான காரணத்தை கண்டறிவது மிகவும் நல்லது.
 டி.பி., நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இருமும்போதும், தும்மும் போதும், காற்றின் மூலம் அருகில்உள்ளவர்களுக்கு தொற்றுகிறது.
 டி.பி., நோய்க்கான மருந்துகளை ஒருவர் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தபின், அவரிடம் இருந்து, அவர் அருகில் உள்ளவர்களுக்கு நோய் தொற்று ஏற்படுவதில்லை.
ஆனால் டி.பி.,க்கான மருந்துகளை எடுக்க ஆரம்பிப்பதற்கு முன், அதிகளவில் நோய் தொற்று ஏற்படுகிறது.
உங்கள் கணவர் டி.பி.,க்கான மருந்துகளை எடுக்க ஆரம்பிப்பதற்கு முன், நோய் தொற்று ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது.
 அதனால் நீங்களும், உங்கள் குழந்தையும், எக்ஸ்ரே, மேன்டேக்ஸ் டெஸ்ட் மற்றும் ரத்தப்பரிசோதனைகள் செய்து, உங்களுக்கு டி.பி., நோய் இல்லை என்பதை உறுதி செய்து கொள்வதே நல்லது.
கை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வலி உள்ளது. தேனீர் கிண்ணத்தைக் கூட கையில் ஏந்த இயலாதா வலி.
கட்டை விரலின் அடிப்பகுதியில் உள்ள, சி.எம்.சி., ஜாயின்ட் என்கிற, சிறுமூட்டில் இருந்து ஏற்படும் பிரச்னை.
இந்த ஜாயின்ட் தேய்மானம், ஆரம்பத்தில் வலியும், வீக்கமும் ஏற்பட்டு, அது மோசமடையும்போது, கட்டை விரலின் முழுச் செயலை பாதிக்கும் வாய்ப்புள்ளது.
=========================================================================
இந்தியாவில் ஆண்களைவிட பெண்களே கேன்சர் நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. கேன்சருக்கான அறிகுறிகள்  தெரியும்போதே அதை  கண்டறியவேண்டும். ஆனால் அதுபோன்ற அறிகுறிகளை பெண்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். அதேசமயம் கேன்சர்  பாதிப்பால் இறப்பு விகிதம் பெண்களை விட  ஆண்களே அதிகம்.

கடந்த 2012ம் ஆண்டு இந்தியாவில் 5.37 லட்சம் பெண்கள் கேன்சர் பாதிப்புக்கு உள்ளாகினர். ஆண்களில் 4.77 லட்சம் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று உலக கேன்சர்  ஆய்வறிக்கை  தெரிவிக்கிறது. அதே ஆண்டு 3.56 லட்சம் ஆண்கள் கேன்சர் பாதிப்பில் இறந்துள்ளனர். பெண்களில் 3.26 லட்சம் பேர் இறந்துள்ளனர். கடந்த 4  ஆண்டுகளில் 62 முதல் 65 சதவீதம் பெண்கள் கேன்சர் பாதிப்புக்கான சிகிச்சை பெறுவதற்கு இன்சூரன்ஸ் கோரி உள்ளனர்.

ஆண்களில் 35 முதல் 38 சதவீதம்பேர்  இன்சூரன்ஸ் கோரி உள்ளனர். இதனை தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. பெண்கள் பெரும்பாலும்  மார்பக புற்றுநோய்க்காகவே இன்சூரன்ஸ் கேட்டிருக்கின்றனர். ஆண் பெண் இருபாலாருக்கும் இடையே கேன்சர் பாதிப்புக்கான வித்தியாசத்துக்கு காரணம்   அவர்களின் ஹார்மோன் மற்றும் பழக்க வழக்கங்களே ஆகும் - See more at: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130363#sthash.3ncCbomL.dpuf
இந்தியாவில் ஆண்களைவிட பெண்களே கேன்சர் நோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. கேன்சருக்கான அறிகுறிகள்  தெரியும்போதே அதை  கண்டறியவேண்டும். ஆனால் அதுபோன்ற அறிகுறிகளை பெண்கள் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். அதேசமயம் கேன்சர்  பாதிப்பால் இறப்பு விகிதம் பெண்களை விட  ஆண்களே அதிகம்.

கடந்த 2012ம் ஆண்டு இந்தியாவில் 5.37 லட்சம் பெண்கள் கேன்சர் பாதிப்புக்கு உள்ளாகினர். ஆண்களில் 4.77 லட்சம் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று உலக கேன்சர்  ஆய்வறிக்கை  தெரிவிக்கிறது. அதே ஆண்டு 3.56 லட்சம் ஆண்கள் கேன்சர் பாதிப்பில் இறந்துள்ளனர். பெண்களில் 3.26 லட்சம் பேர் இறந்துள்ளனர். கடந்த 4  ஆண்டுகளில் 62 முதல் 65 சதவீதம் பெண்கள் கேன்சர் பாதிப்புக்கான சிகிச்சை பெறுவதற்கு இன்சூரன்ஸ் கோரி உள்ளனர்.

ஆண்களில் 35 முதல் 38 சதவீதம்பேர்  இன்சூரன்ஸ் கோரி உள்ளனர். இதனை தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. பெண்கள் பெரும்பாலும்  மார்பக புற்றுநோய்க்காகவே இன்சூரன்ஸ் கேட்டிருக்கின்றனர். ஆண் பெண் இருபாலாருக்கும் இடையே கேன்சர் பாதிப்புக்கான வித்தியாசத்துக்கு காரணம்   அவர்களின் ஹார்மோன் மற்றும் பழக்க வழக்கங்களே ஆகும் - See more at: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=130363#sthash.3ncCbomL.dpuf