இளமையை பாராமரிக்க....,
நிலக்கடலை இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது.
நிலக்கடலையில் பாலிப்பினால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது.
இது நமக்கு நோய்வருவதை தடுத்து இளமையை பராமரிக்கிறது.
நிலக்கடலையி ல் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்க உதவுகிறது.
நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பபை சீராக இருப்பதுடன் கர்ப்பபை கட்டிகள், நீர்க்கட்டிகள் உண்டாகாது.
100 கிராம் நிலக்கடலையில்அடங்கியுள்ள சத்துகள் (மில்லி கிராமில்)
கார்போஹைட்ரேட் - 21
நார்ச்சத்து - 9
கரையும் கொழுப்பு - 40
புரதம் - 25
ட்ரிப்டோபான் - 0.24
திரியோனின் - 0.85
ஐசோலூசின் - 0.85
லூசின் - 0.625
லைசின் - 0.901
குலுட்டாமிக் - 5
கிளைசின் - 1.512
கால்சியம் (சுண்ணாம்புச் சத்து) - 93.00
காப்பர் - 11.44
இரும்புச்சத்து - 4.58
மெக்னீசியம் - 168
மேங்கனீஸ் - 1.934
பாஸ்பரஸ் - 376
பொட்டாசியம் - 705
சோடியம் - 18
துத்தநாகச்சத்து - 3.27
தண்ணீர்ச்சத்து - 6.5 மற்றும் விட்டமின் -
பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
நீரிழிவு நோயை தடுக்கும்:
நிலக்கடலையில் மங்கனீசு சத்து, மாவுச்சத்து கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.
நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது.
நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதயம் காக்கும்:
நிலக்கடலையை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால், நிலக்கடலையை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும்.
நிலக்கடலையில் ரெஸ்வ ரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோயையும் தடுக்கிறது.
இதுவே மிகச்சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.
ஞாபகசக்தி அதிகரிக்கும்:
நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. இதில் மூளையின் வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது.
இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயன்படுகிறது.
ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.
மன அழுத்தம் போக்கும்:
நிலக்கடலையில் பரிப்டோபன் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும் உயிர் வேதிப்பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது.
செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டி, மன அழுத்தத்தை போக்குகிறது.
மூட்டு வலி.
குதிகாலில் எலும்பின் வளர்ச்சி ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பதை எக்ஸ்ரே மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாகவே, குதிகால் சதை, கணுக்கால் பூட்டு, உள்ளங்கால் ஆகியவை உடலின் பாரத்தைத் தாங்கும் எலும்புகளும் சதைகளும் அதிகமாக உள்ள இடங்களாகும். உள்ளங்கால் மற்றும் கணுக்கால் தசைகள் வலுவிழுந்தால் நடக்க முடியாது. நிற்க முடியாது.
குதிகால் வலி, இடுப்பு வலி ஆகியவை ஏற்படும்.
இவை வராமல் தடுக்க இரவு படுக்கும் முன்னும், காலையில் குளிப்பதற்கு முன்னும் உள்ளங்கால்களுக்கு எண்ணெய் தடவிக் கொள்ளுதல் அவசியம்.
சஹசராதி தைலம் 100 மி.லி.யும் கர்ப்பூராதி தைலம் 100 மி.லியும் கலந்து ஒரு இரும்பு கரண்டியில் சிறிது எண்ணெயை (10 மி.லி.) சூடு செய்து இரவில் படுக்கும் முன் வலது கணுக்கால் பூட்டு, குதிகால் சதை ஆகிய இடங்களில் மசாஜ் செய்து(20 நிமிடங்கள் வரை ) வெந்நீர் நிரப்பிய பாத்திரத்தில் கால் முழ்குமளவு 10 நிமிடம் வரை வைத்திருந்து பிறகு துணியால் காலைத் துடைத்துவிட்டுப் படுக்கச் செல்லவும.
காலையில் குளிப்பதற்கு முன்பும் இதுபோலச் செய்யலாம்.
கடினமான காலணியைத் தவிர்த்து மிருதுவான காலணியை உபயோகிக்கவும். திராட்சைப் பழத்தில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடென்டுகள் காணப்படுகின்றன.
வலி ஏற்படும் போது திராட்சை ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் வலி கட்டுப்படுவதோடு நிவாரணம் கிடைக்கும். சித்தரத்தை, அமுக்காரா, சுக்கு மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் அளவு பொடியை காலை, மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டால் மூட்டு வலி மற்றும் வாத நோய்கள் குணமாகும்.
முடக்கத்தானும், பிரண்டையும் மூட்டுவலிக்கு நிவாரணம் தரக்கூடியவை. பிரண்டைக்கீரை, முடக்கத்தான் கீரை மற்றும் சீரகம் சேர்த்து தலா 10 கிராம் அளவுக்கு எடுத்து அரைத்து காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி குணமாகும்.
குப்பைக்கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து கஷாயம் வைத்துக் குடித்தால் மூட்டு வலிகள் குண மாகும். பாக ற்காயை உண வில் சேர்த்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைத் தடுக்கலாம்.
அதிக உடல் எடையும் நாளடைவில் குதிகால் வலி வரக் காரணமாகின்றது.
ஹை ஹீல்ஸ் குதிகாலின் லும்பார் முள்ளெலும்பில் அழுத்தம் ஏற்படுத்தி, உங்கள் கீழ் முதுகில் தீவிரமான வலியை உண்டாக்குகிறது.
=========================================================================
மீன் பிடித் தொழிலும்
அந்நியருக்கு தாரைவார்ப்பு !
ஆழ்கடல் மீன்பிடி தொழில் கொள்கையை மறுசீரமைத்திட கடந்த மத்திய அரசு ஏற்படுத்திய மீனா குமாரி ஆணையத்தின் அறிக்கையை மத்திய பிஜேபி அரசு ஆகஸ்ட் மாதம் பெற்று கொண்டு அதை அமல்படுத்துவதால் மிகப்பெரிய எதிர்ப்பு கடலோர பகுதியில் ஏற்பட்டுள்ளது.
இந்த அறிக்கையால் மீன்பிடி தொழிலாளர்கள் முதல் பயன்படுத்துவோர்கள் வரை அனைத்து பகுதியினருக்கும் நன்மையை விட தீமையே ஏற்படும் என்று கூறப்படுகிறது.
ஆணைய பரிந்துரைகளை அமல்படுத்துவதை கைவிட கேட்டு கேரளாவில் மாநில அளவில் கடலோர முழு அடைப்பு நடைபெற்றபோது முழு ஆதரவு போராட்டத்திற்கு கிடைத்ததிலிருந்து பாதிப்புகளை மக்கள் உணர துவங்கிவிட்டார்கள் என்பதை மத்திய அரசு கவனத்தில் கொண்டு பரிந்துரைகளை கைவிட நடுநிலையாளர்கள் கூட மத்திய அரசை வலியுறுத்த துவங்கியுள்ளனர்.
நிபந்தனைகளுக்குட்பட்டு ஆழ்கடல் மீன்பிடித்தம் செய்ய வெளிநாட்டு கப்பல்களை ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருந்தது.
இதன் பாதிப்புகள் பற்றி விசாரணை செய்த குழு (1996ல் முராரி குழு) மத்திய அரசுக்கு ‘வெளிநாட்டு கப்பல்களை பயன்படுத்தி மீன்பிடிக்கக் கூடாது’ என்றும், வழங்கப்பட்ட லைசென்ஸ்களை ரத்து செய்ய வேண்டுமென்றும், எதிர்காலத்தில் லைசன்ஸ் வழங்கக்கூடாது என்றும் பரிந்துரையை வழங்கியுள்ளது கவனிக்கத்தக்கதாகும்.
ஒரு நாள் 400 டன் மீன்களை பிடித்து பண்படுத்த வசதியுள்ள வெளிநாட்டு கப்பல்களை நமது கடல் எல்லைப் பகுதிக்குள் சுதந்திரமாக உலாவர நம்நாட்டு அரசு அனுமதிப்பதால் தமது நாட்டு மீன் வளத்தை அந்நியர்களுக்கு தாரை வார்ப்பதாகவே உள்ளது.
இப்போதே குறைவான மீன் சேகரம் மட்டுமின்றி ஆழ்கடல் பகுதியே நமக்கு இல்லை என்ற நிலை ஏற்பட்டால் மீன்பிடி தொழில் தமிழ்நாட்டில் கடுமையாக பாதிக்கும். மீன்பிடி தொழிலை நம்பி தமிழக கடலோரத்திலுள்ள லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுமரங்களும் படகுகளும் வைத்திருப்போரும், அதை நம்பி வாழ்க்கையை நடத்தும் பல லட்சம் மீனவர் குடும்பங்களும் வாழ்விழந்து விடும் பேராபத்து ஏற்பட்டு விடும்.
இந்திய மீன்பிடி கப்பல்களில் வெளிநாட்டினர்களை அனுமதிக்க வேண்டுமென்று பரிந்துரை செய்யும் மீனாகுமாரி அறிக்கை, இந்திய மீனவர்களின் மீன்பிடிக்கும் திறமையை அங்கீகரிக்கவில்லை.
நமது நாட்டினர் ஓமன் கடல் எல்லை வரை சென்று மீன்பிடிக்கும் இந்தியர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழில் தெரிந்தவர்கள் என்று குழு அங்கீகரிக்க மறுக்கிறது.இந்தியர்களாக உள்ள மீன்பிடித் தொழிலாளர்களுக்கு மேலும் பயிற்சி வழங்கிட அறிவுறுத்துவதற்கு பதிலாக நம்நாட்டு மீனவர்களுக்கு உள்ள திறமைகளை மறுத்துவிட்டு வெளிநாட்டினரை குளிர்விக்கவே மீனாகுமாரி ஆணையம் அமைக்கப்பட்டு மத்திய அரசு உடனடியாக ஏற்றுள்ளதிலிருந்து தெளிவாக உணர முடிகிறது.
தகுதிவாய்ந்த திறமைமிக்க இந்திய மீன்பிடி தொழிலாளர்களுக்கு நவீன கப்பல்கள் வாங்க உதவி செய்ய வேண்டிய மத்திய அரசு இந்திய கடல் மீன் சேகரத்தை அந்நியர்களுக்கு தாரை வார்ப்பதை ஏற்கமுடியாது என்று கடலோர மீனவர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டு வருகிறது.
ஏற்கனவே உள்ள பல்வேறு ஆய்வுகுழுக்கள் எல்லாம் மீன்பிடி தொழிலாளர்களை பயன்படுத்தியும் உட்படுத்தியுள்ள ஆழ்கடல் மீன்பிடித்ததை, மீன்பிடி சங்கங்கள் மூலம் செய்ய வலியுறுத்தியுள்ளன.
ஆனால் இந்திய மீன்பிடி தொழிலாளர்களை பற்றி கவலைப்படாத மீன்பிடித் தொழில் பற்றி தெரியாத ,மீனவராக இல்லாத மீனா குமாரி ஆய்வு குழுவில் மீனவ தொழிலாளர் பிரதிநிதிகளே இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆய்வுக்குழு ஆய்வு செய்தபோதும் மீனவ ர்களை சந்திக்கவோ,அவர்கள் கோரிக்கைகளை பரிசீலிக்கவோ இல்லை.
மீன்பிடி தொழிலாளர்களின் உரிமைகளை நிராகரித்துவிட்டு, மீன் சேகரம் நம்நாட்டில் குறைந்துவிடும் முறையில் வழிவகைகளை ஏற்படுத்தி பரிந்துரைகளை மீனாகுமாரி ஆணையம் வழங்கியதை உடமையாக மத்திய அரசும் ஏற்றுள்ளதை கணக்கில் கொண்டு கடலோர பகுதி மக்கள்,மீனவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டிப்பாக போராட வெண்டிய நிலை உள்ளது.
7500 கிலோமீட்டர் கடல் எல்லை கொண்ட நமது நாட்டில் இப்பகுதியில் மீன்பிடி தொழிலை நம்பி வாழும் மக்களை பாதுகாக்க தவறும் மத்திய பாஜக அரசை உணர செய்ய வெண்டிய நிலையில் உள்ள மாநில ஆட்சியாளர்களான முந்தைய மீனவ நண்பனின்-இன்றைய ஜெயலலிதாவின் கட்சி வாயை மூடி இருக்கிறது..
காங்கிரஸ் அரசு கொண்டுவந்த இந்த மீனாகுமாரி ஆணையத்திற்கு திமுக மத்திய ஆட்சியில் இருந்தபோது அனுமதி வழங்கியதில் எதிர்த்து பேசமுடியாமல் சிரமப்படுவது புரிய முடியும்.
அருண் ஜெட்லி சந்திப்பால் அதிமுகவும் மவுனம் சாதிக்கிறது.
மத்தியில் மோடியை கொண்டு வர துடித்த தேமுதிக, மதிமுக, பாமக கட்சியினர் இப்போது என்ன சொல்கிறார்கள்?