செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

பாரக் ஒபாமா பராக்,பராக்.!ரயில்வே திட்டப்பணிகள் பொறி யியல் பிரிவு, உற்பத்திப் பிரிவு, கண்காணிப்புப்பிரிவு, பராமரிப்புப்பிரிவு மற்றும் வளர்ச்சிப்பணி மேம்பாடுகள் போன்ற ரயில்வேயின் முதுகெலும்பான பிரிவுகள் தனியார் மயமாகின்றன.   இந்தியா முழுவதும் சுமார் லட் சக்கணக்கான ஒடுக்கப்பட்ட தாழ்த்தப் பட்ட மக்கள் பராமரிப்புத்துறையில் பணிபுரிந்து வருகின்றனர். 
அவர்களின் குடும்பங்களுக்கு இந்த அரசுப்பணி ஒன்றே பெரும் பாதுகாப்பாக இருந்து வருகிறது.
சரக்குகளைக் கையாளுதல். இந்திய உள்ளூர்ப் பொருளாதாரத்தில் முக்கிய பங்குவகிக்கும் சரக்குகள் இடமாற்றம் தனியார்மயமாகும் போது குறு சிறு தொழில் முனைவோர்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாவார்கள் பயணச்சீட்டு பிரிவு தனியார் மயம்:- ரயில்வே பயணச்சீட்டுப் பிரிவை பொறுத்தவரை நாடு முழுவதிலுமுள்ள 14 லட்சம் ரயில்வே பணியாளர்களில் சுமார் 2 லட்சத்து 42 ஆயிரம் பேர் ரயில்வே கவுண்டர்களில் பணியாற்றுகின்றனர்.
ரயில்வே பயணச்சீட்டு மய்யம் தனியார் மயமாகும் போது இந்த 2லட்சத்து 42 ஆயிரம் பேர் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது. 
அரசு இவர்களுக்கான மாற்றுப் பணிகுறித்து எந்த ஒரு திட்டத்தையும் முன்வைக்கவில்லை.   
ரயில்வே துறையை தனியார் மய மாக்குவதன் மூலம் இந்திய மக்கள் தொகையில் 0.4 விழுக்காடு மக்களை வேலையிழக்கின்றனர். 
 முக்கிய மாக இவர்களில் பெரும்பான்மையோர் முதல்தலைமுறை கல்வியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசுக்குச் சொந்தமான 250 பொதுத் துறை நிறுவனங்களில் 17 நிறுவனங்கள் மட்டுமே நலிவில் இயங்கிக்கொண்டு இருப்பதாக மத்திய தணிக்கைத் துறை 2012-ஆம் ஆண்டு தனது ஆய்வறிக் கையில் கூறியுள்ளது.
   மேலும் 79-பொதுத்துறை நிறுவனங்களில் நீண்ட காலமாக தொழில் நுட்பம் விரிவுபடுத்தப் படாமையும் முக்கிய காரணமாகும். 
 தொழிலாளர் பிரச்சினைகளைக் களைந் தால் அரசுக்கு நல்ல வருமானம் வரும் நிறுவனமாக மாறும் என்ற ஆலோ சனையைப் புறக்கணித்து, நிதி அமைச் சர் அருண் ஜெட்லி பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியாரிடம் கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
விபரீதமாக ஓசையின்றி பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன.
தனியார் துறைக்கு தாரைவார்ப்பதன் பாதிப்பு நம் கண் முன்னே தெரிகிறது; சென்னை உர நிறுவனம் சத்தமின்றி இழுத்து மூடப்படும் விதமாக உர உற்பத்தியை நிறுத்த உத்தரவிடப்பட் டுள்ளது. 
இதனால் இங்கு பணிபுரிந்த 2500 தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
எரிபொருள் செலவு என்று கூறி மத்திய அரசு திடீரென சென்னை உர ஆலையின் உரத் தயாரிப்புப் பணியை நிறுத்தவும் உத் தரவு. 
 இதனால், தமிழகத்தில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 
சம்பா நெல் நடவு அதிகம் இருப்பதால், யூரியா தேவையும் அதிகரித்துள்ளது. தேவைக்கு ஏற்ப உற்பத்தி இல்லாததால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதைப் பயன்படுத்தி, தனியார் உரவியாபாரிகள் யூரியாவை கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர். 
குறித்த நேரத்தில் யூரியா இடாவிட்டால் மகசூல் குறையும் என்ப தால், தமிழக விவசாயிகள் செய்வதறி யாமல் தவித்து வருகின்றனர்.
மத்திய அரசால் நன்கு இயங்கிக் கொண்டு இருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு வழங்க இருக்கும் பட்டியல்:
1. பாரத் அலுமினியம் நிறுவனம்
2. இந்திய சிங்க் நிறுவனம்
3. எச் டி எல்
4. இந்தியன் பெட்ரோ கெமிகல்
5. ஹிந்துஸ்தான் கார்பரேசன் நிறுவ னத்தின் கீழ் இயங்கும் நட்சத்திர விடுதிகள்
6. விதேஷ் சஞ்சார் நிறுவனம்
இந்த நிறுவனங்கள் அனைத்தும் நல்ல வருவாயில் இயங்குபவை; 
ஆனால், இந்த நிறுவனங்களால் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு வருவா யின்றிப் போகிறது.
இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத் தின் 49 விழுக்காட்டுப் பங்குகளை தனியாருக்குத் தாரைவார்க்க வரும் குளிர்கால நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சட்டமுன்வரைவு தாக்கல் செய்யப்பட்டு அது நிறைவேற்றப்படும் என்று அருண் ஜெட்லி கூறியதன் (5.11.14) மூலம் பல்வேறு பொருளாதார நிபுணர் களால் பாராட்டப்பட்ட பொதுத்துறை நிறுவனமான ஆயுள் காப்பீட்டு கழகம் தனியார்வசம் செல்கிறது. 
இதனால் எதிர்காலத்தில் இந்நிறுவனம் சில தனியார் முதலாளிகளின் கட்டளைக்கு ஏற்ப ஆடக்கூடும்.
இதன் விளைவு இந்தியா முழுவதும் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் இணைந்துள்ள 13 கோடி மக்களை நேரடியாகவும் பலகோடி மக்களை மறைமுகமாகவும் பாதிக்கும். மிக முக்கியமான பாதுகாப்புத் துறை யில்கூட 49 சதவீத பங்குகள் கொள்ளைப் போகின்றன.
இந்தத் துறைகளில் பங் குகள் விற்கப்படுவது குறித்து காங்கிரஸ் ஆட்சி தெரிவித்தபோது இதே பிஜேபி யினர் ஆகாயத்துக்கும் பூமிக்குமாக எப்படி எல்லாம் குதித்தார்கள் என்பதை ஒரு கணம் நினைத்துப் பார்த்தால் பிஜேபியின் அறிவு நாணயம் வெறும் சுழியாகத்தான் இருக்கும்.
நாட்டுடைமை ஆக்கப்பட்ட இந்தி யாவின் ஆயுள் காப்பீட்டுக் கழகம் 57ஆம் ஆண்டில் ஏறு நடை போடு கிறது. பொதுக் காப்பீட்டுத் துறை நாட் டுடைமையாக்கப்பட்டு 41 ஆண்டுகள் ஓடி விட்டன. 
இவை இலாபம் கொழிக் கும் கருவூலங்களாக இருந்து வரு கின்றன.
அதே நேரத்தில் அந்நிய மூல தனங்களுக்கு அவசரப்படுகிறதே - அந்த அந்நிய நாடுகளின் கதி என்ன?
 2008ஆம் ஆண்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு பன்னாட்டுக் காப்பீட்டு நிறுவனங்களும் 500-க்கும் மேற்பட்ட தனியார் வங்கிகளும் அமெரிக்காவில் திவாலாகிப் போனதை இந்தியா மறந்து விடலாமா?
இந்தியாவின் 11ஆவது அய்ந் தாண்டுத் திட்டத்துக்கு ஆயுள் காப் பீட்டுக் கழகம் அள்ளிக் கொடுத்த நிதி ரூ.7,04,400 கோடி. இந்தப் பொன் முட் டையிடும் வாத்தையா அறுத்துச் சுவைக்க ஆசை வெறி?
இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களான நிலக்கரி நிறுவனத்தில் 10 சதவீதம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் 5 சதவீதம், தேசிய நீர் மின் சக்தி கழகத் தின் 11.36 சதம் பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய் துள்ளது.
ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தின்  5 சதம், இந்தியன் ஆயுள் கார்ப்பரேசன் நிறுவனத்தில் குறிப்பிட்ட சதவீதம் பங்குகளையும் விற்றுத்தள்ள முனைப்பாக உள்ளன.
பொதுத்துறை நிறுவனங்களில் குறைந்தபட்சம் நான்கில் ஒன்று (25 சதம்) நிறுவனங்களின் பங்குகளை விற்றுத் தள்ள வீறு கொண்டு நிற்கிறது.
இந்தியாவின் நவரத்தினங்கள் என்ற பெருமைக்குரிய அணிகலன்களின் எண்ணிக்கை 16. ஆண்டுதோறும் அரசுக்கு இலாபத்தைக் கொட்டிக் கொடுக்கின்றன.
நவரத்தினா தகுதி நிலைக்க மத்திய அரசு வைக்கும் நிபந்தனை என்ன தெரியுமா? 
அந்நிய நிறுவனங்களிடத்தில் பங்குகளை விற்றிட பல்லிளித்து நிற்க வேண்டுமாம்.
கடந்த அய்ந்தாண்டுத் திட்டத்திற்கு மொத்த திட்டச் செலவுத் தொகை ரூ.9,21,921 கோடி என்றால் இதில் பொதுத்துறை நிறுவனங்கள் மட்டும் இந்திய அரசுக்குக் கொட்டிக் கொடுத்தது ரூ.5,15,556 கோடியாகும்.
2008இல் உலகெங்கும் பொருளாதார நெருக்கடி என்னும் கொடு நோயால் மரணப் படுக்கைக்குப் பல்வேறு நாடு களும் விரட்டப்பட்ட நிலையில், இந் தியா தாக்குப் பிடித்து தலை கவிழாமல் உறுதியாக நின்றதற்கே காரணம்  - இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங் களின்  உறுதியான கால்களால்தான்!
பன்னாட்டு நிறுவனங்கள் கடை விரிப்பதற்காகவே தொழிலாளர் சட் டங்களை எல்லாம் வளைக்க ஆரம் பித்து விட்டன.
 இந்த வகையில் 22 வகையான சட்டங்கள் புதை குழிக்குப் போகின்றன.
நிரந்தர ஊழியர்கள் 100 பேர் பணியாற்றினால் அந்த ஆலையை மூடுவதற்கு முன் அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்பது இன்றைய நிலை.
 அது 1000 என்று உயர்த்தப்படு கிறது, நோக்கியா நிறுவனம் நிரந்தர ஊழியர்கள் 999 என்று கணக்குக் காட்டி கதையை முடித்து விட்டது. 
தொழி லாளர்களின் வேலை நேரமும் அதி கரிக்க வழி செய்யப்படுகிறது.
அமெரிக்கா சென்றபோது 125 கோடி மக்களின் இந்தியப் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி எப்படி முழங்கினார்?
அரசுகளின் வேலை தொழில் களைத் தொடங்குவதல்ல - நடத்து வதல்ல! தொழில்களுக்கு உறுதுணை யாக இருப்பதுதான்! 
என்று சொன் னாரே பார்க்கலாம். அந்நிய முதலீடுகள் அட்டியின்றி ஆயிரம் கால் சிங்கமாக இந்தியாவுக்குள் பாய்ந்து பிடுங்க தற்கால சட்டங்களும் விதிமுறைகளும் தடைக் கற்களாக இருக்குமானால் அவற்றை நொறுக்கித் தள்ள இந்தியா தயார், தயார்! 
தயவு செய்து தயங்காமல் வாரீர்! என்று வரவேற்புப் பத்திரத்தை வைரப் பூண் போட்டுப் படித்து கொடுத்து விட்டார்.
வெளிநாடுகளிலிருந்து முதலீட்டைக் கொண்டு வருவது இருக்கட்டும்; இந்தியாவிலிருந்து வெளியிட்டுக்கு முதலீடுகள் இறக்கைக் கட்டிப் பறக்கின்றனவே - 
அவற்றை மடை மாற்றி இந்தியாவிற்குள்ளேயே அத் தொழிலினை நடைபெறும்படிச் செய்யத் துப்பு இல்லையே ஏன்?
ஜெயவிலாஸ் குழுமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் டெக்ஸ்டைல்ஸ் அதிப ரான ராம்குமார் வரதராஜன் என்பவரின் 240 கோடி ரூபாய் முதலீட்டை முத லாளித்துவ நாடான அமெரிக்காவுக்குக் கொண்டு சென்றது ஏன்?
இந்தியாவின் முகப்புரையில் இடம் பெற்றுள்ள We the People of India having solemnly resolved to constitute India into Sovereign Socialist, Secular, Democratic, Republic and Political என்பதில் உள்ள  Socialist &, Secular, என்பதை மத்தியில் உள்ள பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தூக்கி எறிந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இந்த மோடி மஸ்தான் பிரதமர் தான் "இந்தியாவில் தயாரி" என்ற வாக்கியத்தை போகிற இடங்களில் வாந்தி எடுக்கிறார். அதற்கு பதில் இந்தியாவை மீண்டும் அடிமையாக்கு என்ற வார்த்தையை அவர் சொன்னால் அதுதான் அவரின் உண்மையான மோடி மந்திர மாக இருக்கும்.
                                                                                                        - கலி. பூங்குன்றன்.
=========================================================================