புதன், 11 மார்ச், 2015

"மின்னல் வேக 5- ஜி"வயர்லெஸ் நெட்வொர்க்கிங் தொழில் நுட்பத்தில், அடுத்த புரட்சியாக 5ஜி இணைப்பு வர இருக்கிறது.
 இப்போதல்ல, வரும் 2020 ஆம் ஆண்டு இது உறுதி என, அண்மையில் நடந்த உலக மொபைல் கருத்தரங்கில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 இன்றைக்கு நம்முடைய ஸ்மார்ட்போன் மற்றும் நெட்வொர்க்கினை இணைப்பதில் முன்னணியில் இருப்பது 4ஜி தொழில் நுட்பமாகும்.
ஆனால், வர இருக்கும் 5ஜி தொழில் நுட்பம், தற்போது நாம் கனவில் மட்டுமே எண்ணிப் பார்க்கும் இணைப்பினைத் தர இருக்கிறது.
 நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் இணையத்தோடு இணைக்கப்பட்டு நமக்கு உதவ இருக்கின்றன. இந்நிலையைத் தான் Internet of Things (IoT) என அழைக்கின்றனர். கோடிக்கணக்கான சென்சார்கள், நாம் பயன்படுத்தும் சாதனங்கள், பாதுகாப்பு கட்டமைப்புகள், உடல் நலத்தைக் காட்டும் கருவிகள், கதவுகளில் அமைக்கப்படும் பூட்டுகள், கார்கள், கை, கால் மற்றும் பிற உறுப்புகளில் அணிந்திடும் சாதனங்களில் அமைக்கப்படும்.

ஏன், நாம் வளர்க்கு நாய் குட்டிகளின் காதுகளின் பின்னேயும் இந்த சென்சர் அமைக்கப்பட்டு, அது நம்மையும் நாயையும் வழி நடத்தும்.

இது குறித்து ஆய்வு நடத்திய கார்ட்னர் மையம், இவ்வுலகில் இயங்கும் நெட்வொர்க்குகளின் எண்ணிக்கை, 2020 ஆம் ஆண்டில், தற்போதைய 500 கோடி என்ற எண்ணிக்கையிலிருந்து, 2,500 கோடி என்ற எண்ணிக்கையைத் தொடும்.

இந்த நெட்வொர்க்குகளில் உருவாக்கப்படும் மலையளவு டேட்டா தகவல்களைக் கையாள பல கோடி டாலர் பணம் செலவழிக்கப்படும்.
இதற்கு மாறாக, நம் வர்த்தகத்தில் லாபம் பெருகும்;

 வாழ்க்கையில் வசதிகள் அதிகமாகும்.
 உங்கள் நாய்க்குட்டியின் காதுகளில் பொருத்தப்படும் சென்சார்கள், உங்கள் வீட்டில் உள்ள சாதனங்களை இயக்கும். குழந்தைகள் பள்ளிகளிலிருந்து வீட்டுக்குள் வந்துவிட்டார்களா என்று அலுவலகத்தில், அல்லது பயணத்தில் இருந்தபடியே நீங்கள் அறியலாம்.

 உயர் வேக சாலைகளில் செல்லும் வாகனங்கள் தாமாகவே கட்டுப்படுத்தப்பட்டு இயக்கப்படும்.
இன்றைய 4ஜி இணைப்பைக் காட்டிலும் 66 மடங்கு வேகத்தில் 5ஜி இயங்கும். இது புதிய திறனை நமக்கு வழங்கும்.

தானாகவே இயங்கும் கார்கள், எதிர்வரும் சிக்கல்களைச் சமாளிக்கும் முடிவுகளை எடுக்கும்.

வீடியோ வழி நாம் மேற்கொள்ளும் உரையாடல்கள், நாம் ஒரே அறையில் அமர்ந்து பேசுவது போன்ற உணர்வினைத் தரும்.

அனைத்து நகரங்களிலும் போக்குவரத்து நெரிசல், மாசு கட்டுப்பாடு, வாகனங்கள் நிறுத்த இடம் ஆகியவை தாமாகவே நிர்வகிக்கப்படும்.

5ஜி மூலம் நம் நேரடி தேவைகளையும், விரும்பும் சூழ்நிலைகளையும் இணைக்கலாம்.
 குறிப்பிட்ட இடத்திற்கு எந்த வழியில் செல்ல வேண்டும், பொருட்களின் இன்றைய விலை அல்லது நாம் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்களின் பெயர்கள் என்பவை எல்லாம் நம் நேரடி தேவைகள்.

 காரின் கண்ணாடியில் நமக்குத் தேவையான டேட்டா வெளிப்பாடு போன்றவை எல்லாம் நம் மனது விரும்பும் கற்பனைகள். இந்த இரு உலகையும், 5ஜி மூலம் இணைக்கலாம்.

இவை இரண்டுக்குமே தேவையான டேட்டாவினை 5ஜி உடனுக்குடன் வழங்கும்.


 நமக்குத் தேவையான டேட்டாவினைத் தரவிறக்கம் செய்வதற்கு இப்போது அசாத்திய பொறுமை தேவைப்படுகிறது.

 4ஜி நொடிக்கு 150 மெகா பிட்ஸ் என்ற வேகத்தில் இயங்குகிறது. இது 5ஜி செயல்பாட்டில், குறைந்தது 10 கிகா பிட்ஸ் என உயரும்.

இப்போது 7 நிமிடங்களில் இறக்கப்படும் விடியோ, 4 நொடிகளில் தரவிறக்கம் செய்யப்படும்.


 தற்போது முதல் டேட்டா கிடைப்பதற்கு நாம் காத்திருக்கும் நேரம் இனி இருக்காது.

கேட்டவுடன் மின்னல் வேகத்தில் டேட்டா வரத் தொடங்கும். ஏனென்றால், 5G இயக்கும் கார்களுக்கெல்லாம், ஒவ்வொரு மில்லி செகண்டும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

னவே, உடனடி தகவல்கள் மின்னல் வேகத்தில் நம்மை, நம் சாதனங்களை வந்தடைய வேண்டும்.

 4ஜி தொழில் நுட்பம், ஒரு காரிலிருந்து இன்னொரு காருக்கு டேட்டா அனுப்புவதைத் தொடங்க 15 முதல் 25 மில்லி செகண்டுகளை எடுத்துக் கொள்கிறது. இந்த தயக்கம் 0 வாக, 5ஜியில் அமையும்.

  2020 ஆம் ஆண்டில் 5ஜி நடைமுறைப் பயன்பாட்டிற்கு வரும் வாய்ப்புகள் உள்ளதாக ஏ.டி. அண்ட் டி (AT&T) மற்றும் நோக்கியா நெட்வொர்க்ஸ் நெட்வொர்க் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

வேறு சில முன்னணி நிறுவனங்கள் 2022 மற்றும் 2025 என இதற்கு இலக்கு தெரிவித்துள்ளன. எப்படியும் 5ஜி வரப்போவது உறுதி.

 காரில் ஏறி அமர்ந்து நாம் செல்ல வேண்டிய இடத்தை செட் செய்துவிட்டு, ஹாயாக ஒரு சிறு தூக்கம் போட்டு, இடம் வந்தவுடன் எழுந்து சென்று விடலாம்.

அப்போது தேவையான கனவுக் காட்சியைக் கூட செட் செய்து காணலாம்.

இதுதாங்க கணினியும்- 5-ஜி யும் தரும் வசதிகள்.

இவை மனிதனை சிந்திக்கவும்,செயல்படவும் இனி விடாது என்ற அபாயம் நெருங்குகிறது.
என்பதைத்தான் வரும் ஜி 'க்கள் உணர்த்துகின்றன.
"ஓ மக்குச்சி "நரசிம்மன் 

பழம்பெரும் தமிழ் நகைச்சுவை நடிகர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நரசிம்மன், தனது 73-வது வயதி ல் 2009, மார்ச் 11, புதன் இரவு 9.30 மணிக்கு சென்னையில் இறந்தார்.
இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர்.
நாடக இயக்குனர் தில்லைராஜனின், நாரதரும் நான்கு திருடர்களும் என்ற நாடகத்தில் நரசிம்மன், கராத்தே பயில்வான் வேடத்தில் நடித்தார்.
இக்காட்சி நகைச்சுவையாக அமைய வேண்டும் என்பதற்காக யப்பானைச் சேர்ந்த பிரபல கராத்தே வீரர் யாமக்குச்சியின் பெயரை நாடகத்தில் கேரக்டர் பெயராக வைக்க இயக்குனர் முடிவு செய்தபோது, தமிழில் அப்பெயரை ஓமக்குச்சி என்று வைத்தால் நகைச்சுவையாக இருக்கும் என்று நினைத்து, அப்பெயரையே வைத்தார்.
இந்த நாடகத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்ததால், நூறு நாட்கள் வரை நடந்தது. அதிலிருந்தே நரசிம்மனை, "ஓமக்குச்சி நரசிம்மன்" என அழைக்க ஆரம்பித்தனர்.
தமிழில் ஔவையார் (1953) திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஓமக்குச்சி நரசிம்மன்.
அதன் பிறகு சென்னையில் எல்.ஐ.சியில் பணிபுரிந்தபடியே 1969 ஆம் ஆண்டு திருக்கல்யாணம் படத்தில் நடித்தார்.
தொடர்ந்து சகலகலா வல்லவன், சூரியன், மீண்டும் கோகிலா, தம்பிக்கு எந்த ஊரு, குடும்பம் ஒரு கதம்பம், புருஷன் எனக்கு அரசன், போக்கிரிராஜா உட்படப் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இந்தியன் சம்மர் என்ற ஆங்கிலப் படத்திலும் நடித்துள்ளார்.
இவர் கடைசியாக நடித்தப் படம் தலைநகரம்.
==========================================================================