வெள்ளி, 13 மார்ச், 2015

கொசுவும்,ஊழலும்நாம்  புகை பிடிப்பது எவ்வளவு ஆபத்தானதோ அவ்வளவு ஏன் அதை விட ஆபத்தானது, கொசுவர்த்திச் சுருள்களை பயன்படுத்துவது.
ரொம்ப நாட்களாக இதை பயன்படுத்தி வருவதால், குழந்தைகளுக்கும், நமக்கும், ஆஸ்துமா போன்ற பல பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மலேரியா, டெங்கு,போன்ற நோய்கள் வர, கொசுக்கள்தான்  காரணம் . அவற்றை நாம் நமது வீட்டில் இருந்து அழிப்பது மிக முக்கியம் .
 ஆனால், அதற்காக நாம் வீடுகளில் பயன்படுத்தும், கொசுவர்த்திச் சுருள், எலக்ட்ரானிக் லிக்குடேட்டர் போன்ற சாதனங்கள், நச்சுத் தன்மை கொண்டவை.
 அவை, கொசுக்களை மட்டும் அழிப்பதில்லை; நம் நுரையீரலையும் மெல்ல,மெல்ல அழிக்கின்றது..
ஒருவர் புகை பிடிப்பது எவ்வளவு ஆபத்தானதோஅதை விட ஆபத்தானது இந்த கொசு விரட்டிகள் , இந்த கொசுவர்த்திச் சுருள்களை  நாம், தொடர்ந்து பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம்.
 இதனாலேயே, நம் குழந்தைகளுக்கும், நமக்கும், ஆஸ்துமா போன்ற பல பின்விளைவுகள் ஏற்படலாம்.
எனவே, கொசுக்களிடம் இருந்து நம்மை பாது காக்க, கொசு வலைகள், உடலில் பூசிக் கொள்ளக் கூடிய கிரீம்கள் பயன்படுத்துவது நல்லது. 
அதை விட மிக எளிய இயற்கையான பல வழிகள் உள்ளன.
நம் வீட்டருகே கிடைக்கும் வேப்பமர காய்ந்த இலைகள்,சருகுகள் போன்றவற்றை இ ருட்டத்துவங்கியதும் ஒரு மண் பானையில் போட்டு புகைய வைத்து வீட்டினுள் புகை நன்றாக பரவ விட வேண்டும் .
இந்த புகையை நாம் சுவாசித்தாலும் நம் உடல் நலனுக்கு நல்லதுதான்.
பின்னர் சன்னல்கள் ,கதவுகளை திறந்து புகை வெளியேற வைக்க வெண்டும்.
இதனால் நம் வீட்டினுள் உள்ள கொசுக்கள் புகை நெறிக்கு தாக்குப்பிடிக்காமல்நம் வீட்டை விட்டு வெளி நடப்பு செய்து விடும்.
பின்னர் சன்னல்கள்,கதவுகளை மூடி ஒரு ஓரமாக அந்த புகை பானையை வைத்து விட்டு தூங்க வேண்டியதுதான்.
இது கொசுவை விரட்டுவதுடன்.நம் உடல் நலத்துக்கும் நன்மை தரும் புகை. இப்புகை நமக்கில்லை பகை.
கொசுக்களை அழிக்கும் சிறு மீன் குஞ்சுகள் சில நாடுகளில் வளர்க்கப்படுகின்றன.அவை கொசு முட்டைகளை சாப்பிட்டு வாழ்வதால் கொசு உறபத்தியே இல்லாமலாகி விடும்.
டாமி புளு மாத்திரைகளுக்கு அமெரிக்காவுக்கு 12000 கொடிகளை வாராய் இறைத்த இந்திய அரசு இந்த மீன் குஞ்சுகளை வாங்கி குட்டைகள் சாக்கடைகளில் விட்டால் போதும் கொசில்லாமல் நாம் வாழலாம் .
ஆனால் கொசுவும்,ஊழலும் இல்லாமல் இந்தியா இருக்க  அரசியல் வாதிகள் விடுவார்களா என்ன?