சனி, 14 மார்ச், 2015

மறைக்க முயன்று...!

சளி, காய்ச்சல் நம்மை பாடாய்ப்படுத்தக் காத்திருக்கும் இந்த நாட்களில், அதிலிருந்து தற்காத்துக்கொள்ளும் ‘அஞ்சறைப் பெட்டி’ வைத்தியம் இதோ..!

* தினமும் காலை தேநீரில்  கொஞ்சம் இஞ்சித்துண்டு, துளசி இலை   சேர்த்துக்கொள்ளலாம்.

* காலையில் இட்லிக்கு சட்னியாக தூதுவேளை துவையல், இஞ்சி துவையல் செய்யலாம். மதிய சாப்பாட்டில் துளசி ரசம், தூதுவேளை ரசம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம். சாயங்கால வேளையில் சுக்கு காபி குடிக்கலாம்.

* சுக்கு காபி என்றதும், சுக்கை பொடியாக்கி பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்துக் குடிப்பது என பலரும் நம்புகின்றனர். அதில் பலனில்லை. சுக்கு காபி தயாரிக்க என வழிமுறை இருக்கிறது.
 மிளகு ஒரு பங்கு, இரண்டு பங்கு சுக்கு, நான்கு மடங்கு கொத்தமல்லி (தனியா), கொஞ்சம் ஏலக்காய் என... இவற்றை எல்லாம் சேர்த்து பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். தூதுவேளை, துளசி, கற்பூரவல்லி, ஆடாதொடை இவை ஏதேனும் கிடைத்தால், அந்தப் பொடியுடன் இதையும் சேர்த்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, பனைவெல்லம் சேர்த்துக் குடியுங்கள்.
சளி அதிகமாகி நெஞ்சை அடைத்தால், இரவு உறங்கப்போவதற்கு முன் பூண்டுப்பால் குடிக்கலாம்.

10, 12 பூண்டுப்பல்லை 50 மில்லி பாலுடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்து நன்றாக வேக வையுங்கள். அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன் மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக்கொள்ளுங்கள். இறக்கிய பாலில் பூண்டு கரைய நன்றாகக் கடைந்து, அதனுடன் பனங்கற்கண்டு அல்லது சர்க்கரை சேர்த்து அருந்துங்கள்.

* காலையில எழுந்ததும் சிலருக்கு தும்மல் வரும். அந்த மாதிரி நேரங்களில் தேங்காய் நாரை தீயில் எரித்து வரும் புகையை சுவாசிக்க, தும்மல் உடனே நிற்கும். ஆனால் இதை அடிக்கடி செய்யக்கூடாது.

* தலைக்கு குளித்ததும் தும்மல், மூக்கடைப்பு, தலைவலி வந்தால் கொஞ்சம் மிளகை பொடி செய்து, மெலிதான துணியில் கட்டி, உச்சந்தலையில் தேய்த்தால், தீர்வு கிடைக்கும்.

* மூக்கடைப்புக்கு ஜாதிக்காயை தண்ணீர் விட்டு கொழகொழப்பாக இழைத்து, அதைக் கரண்டியில் எடுத்து அடுப்பில் சூடேற்றவும். அது குழம்பாக ஆனதும், பொறுக்கும் சூட்டில் மூக்கின் மேல் பத்து போட... அடைப்பு விலகும்.

* நெஞ்சுச்சளி அதிகமாக இருந்தால், பூண்டு குழம்பும், சமைக்காத சின்ன வெங்காயமும் சாப்பிடலாம். அதேபோல, தேங்காய் எண்ணெயில் சில சூடக்கட்டிகளை இட்டு சூடேற்றி, கரைந்ததும் அதை சூடு பொறுக்க நெஞ்சு, விலா, முதுகு, மூக்கு பகுதிகளில் தடவலாம்.

* தலை பாரமாக இருந்தால் நொச்சி இலையை தலையணையில வைத்துப் படுக்க, நிம்மதியான தூக்கம் கிடைக்கும்! 

===========================================================================
பால்கஹால்.
இது என்னவோ பால் சம்பந்தப்பட்ட உணவுப் பொருளாக இருக்கும் என்று எண்ணி விடாதீர்கள்.
எங்கேயும் எப்போதும் மது கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கண்டுபிடிக்கப்பட்டது தான் பால்கஹால். இது முற்றிலும் அமெரிக்க கண்டு பிடிப்பு.
ஒரு பாக்கெட் பால்கஹால், ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்தால் மது கிடைக்கும் என்ற பால்கஹாலின் செய்முறை மிகவும் எளிமையானது.  இந்த பால்கஹால் கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள், மருத்துவ சோதனைகள் என்று பல கோடி டாலர் செலவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பல சிரமங்களைக் கடந்து உருவாக்கப்பட்டுள்ள பால்கஹால் பாக்கெட்டுகளை நாடு முழுவதும் விற்க அமெரிக்க அரசு கடந்த புதன் கிழமை பெருந்தன்மையுடன் அனுமதி அளித்துள்ளது.

பால்கஹால் நிறுவன டாம் ஹியூக் கூறுகையில் ”பால்கஹாலுக்கு கடந்த வசந்த காலத்திலேயே அரசு அனுமதி கிடைத்துவிட்டது.
 இருப்பினும் அங்கீகார லேபிளில் ஏற்பட்ட தவறால் இது விற்பனைக்கு வராமல் இருந்தது. இந்நிலையில் இந்த முறை ’பவுடெரிடா’ ’காஸ்மோபாலிடன்’ உட்பட நான்கு வெரைட்டியான ப்ளேவர்களுடன் பால்கஹால் வர இருக்கிறது“ என்றார்.
இந்த பொடிப் பையின் [பவுடர் பாக்கெட் ] வருகை மருத்துவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பெறும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் நாட்டில் டாஸ்மாக்கில் அம்மாஉற்சாகப்  பானம் சாப்பிட்டு வாடையுடன் பள்ளி சென்று மாட்டிக் கொண்டு முழிக்கும் மாணவர்களுக்கு இந்த அமெரிக்க தயாரிப்பு ஒரு வரப்பிரசாதம்தான்.விரைவில் அம்மா சிமிண்ட் போல இந்த பாககெட்டுகளும் கிடைக்கலாம்.
தனது  கார் கண்ணாடியை உடைத்து ,காரை சேதப்படுத்தி தன்னையும் தாக்கி [?]கொலை மிரட்டல் விட்டதாக 36 வயது அதிமுக வியாபாரி  தந்த குற்ற சாட்டின் பேரில்  சிறையில் அடைக்கப்பட்டு  காயங்களுடன் சிகிச்சை பெறும் 83 வயது தா[த்]தா  டி ராபிக் ராமசாமி.
அவரை பார்த்து  நலன் விசாரிக்கும் மு.க. ஸ்டாலின்.

குறிப்பு:- வழக்கமாக ஜெயலலிதா பேனர்களை கிழிக்கும் டி ராபிக்கார்  அன்று முக ஸ்டாலின் பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவி பேனரை கிழித்து விட்டுதான் பத்திரிகையாளர்களுக்கு சாலை ஓரமாக நின்று பேட்டி கொடுத்துள்ளார்.அவரையும் ,ஸ்டாலினையும் மாட்டி விடவே அதிமுக வியாபாரி  வழிய சண்டை இழுத்து .பின்னர் வீட்டுக்கு சென்று கட்சி மேலிட ஆலோசனையின் பேரில்  மிரட்டல் போய்ப்புகாரை கொடுத்துள்ளார்.திமுக மீது பலி போட நினைத்த அரசு அந்த வியாபாரி அதிமுக தொண்டர் என்பதை மறைக்க முயன்றும் முடியவில்லை....!
===========================================================================
கண்டுபிடித்தது... கடவுள் அல்ல!
                                                                                                                                                                                               -மதிமன்னன்

சகலமானவற்றையும் படைத்தது கடவுள் எனும் நம்பிக்கை பலரிடத்தில் இருக்கிறது. உலகின் பலநாட்டு மக்களிடமும் இருக்கிறது. உலகின் பெரிய மதங்கள் எனப்படும் ஆறு மதத்தைச் சேர்ந்த மக்களிடமும் இந்த நம்பிக்கை இருக்கிறது.
நம்புங்கள் என்பதுதான் எல்லா மதங்களின் ஆரம்ப வாக்கியம். எதையும் நம்பி ஒருவன் தொடங்கினால் இறுதியில் அவனுக்குச் சந்தேகங்களே மிஞ்சும்; ஆனால் சந்தேகங்களுடன் தொடங்கினால், இறுதியில் உறுதியான கருத்து கிடைக்கும்.

இந்தக் கருத்தைத்தான் சாக்ரடீஸ், தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ் போன்ற அறிஞர் பெருமக்களின் வாழ்வும், செயலும், தத்துவக் கருத்துகளும் மெய்ப்பித்துக் கொண்டிருக்கின்றன.


எதையும் சந்தேகி என்ற மார்க்சின் சொற்களும், எதையும் ஏன், எதற்கு, எப்படி என்று கேள் என்ற மேற்கத்திய சாக்ரடீசும் கிழக்கத்திய பெரியாரும் சொன்ன சொற்களும் எண்பித்துக் கொண்டிருக்கின்றன.
வள்ளுவரும் புத்தரும் இதையேதான் உலகுக்கு அறிவித்தனர். ஆனால், குள்ள மனிதர்கள் நம்பு எனக் கூறி மக்களை மாக்களாகவே வைத்துவிட்டனர். எல்லாம் கடவுள் செயலாலே என அறிவித்து, மனிதனால் ஆவது எதுவுமே இல்லை என்ற எண்ணத்தை விதைத்துவிட்டனர்.
ஆனால், எல்லா மனிதர்களும் இதை ஏற்கவில்லை. ஆதாமும் ஏவாளும் அம்மணமாகத் திரிந்தது போல பின்னிட்ட சந்ததியினர் இருக்கவில்லை. வேட்டையாடிக் கொன்று தின்ற விலங்குகளின் தோலைக் கொண்டு ஆடை என்ற பெயரில் எதையோ அணிந்தனர்.

சாக்ரடீஸ்
மானத்தை மறைப்பது என்ற எண்ணம் இல்லாத நிலையில், குளிரில் இருந்து தம்மைக் காத்துக் கொண்டனர். தோலைத் தைப்பதற்கு எலும்பு ஊசிகளையும் ஆக்கினர். இத்தகைய கண்டுபிடிப்பு எண்ணம் எப்படி ஏற்பட்டது? மதப் போதனைகளைப் போலவே வாழ்ந்திருந்தால் இது முடிந்திருக்குமா?

தந்தை பெரியார்
அந்தக் காலத்தில் கடவுளும் இல்லை, அதைக் கட்டிக் காப்பாற்றிக் காசு பார்க்கும் மதங்களும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. இவை இரண்டும் பிற்காலப் பித்தலாட்டங்கள்!
இவை இல்லாத காலத்தில் கல் கருவிகள், தோல் ஆடைகள், நெருப்பில் வதக்கி உண்ணுதல் போன்றவை-யெல்லாம் மனிதனால் உருவாக்கப்பட்டவை; கடவுளால் அல்ல, இதற்கான தூண்டுதல் மனித மூளையின் செயல்பாடுகளால் விளைந்தவை.

கார்ல் மார்க்ஸ்
இத்தகைய தூண்டுதலை முதலில் புரிந்து செயல்பட்டவன் பாராட்டுக்குரிய மனிதன். இவனுக்கு வழிகாட்ட மோசே வரவில்லை. யேசு வரவில்லை. முகம்மது வரவில்லை. முப்பத்துமுக்-கோடி தேவன்களும் வரவில்லை.

தாமஸ் ஆல்வா எடிசன்
பின் எது வந்தது? மனிதனின் தேவை வந்தது. தேவைதான் கண்டுபிடிப்பின் தாய். குளிரிலிருந்தும் பனிப் பொழிவிலிருந்தும் காத்துக் கொள்ள வேண்டிய தேவை, தோலாடையைக் கண்டுபிடித்தது.
வேட்டைச் சமூகத்தின் வயிற்றுப் பசி, பசி ஆற்ற வேண்டிய தேவை விலங்குகளைக் கொல்லும் கல் கருவிகள், ஆயுதங்களைக் கண்டுபிடித்தது. தற்செயலாக ஏற்பட்ட காட்டுத் தீயில் வெந்த இறைச்சியின் சுவையின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு, அதுவே நெருப்பைக் கடைந்து ஏற்படுத்தும் சக்கிமுக்கிக் கல்லைப் பயன்படுத்தும் நுட்பத்தைக் கண்டுபிடிக்க உதவியது.
இப்படிக் கூறிக்-கொண்டே போகலாம். போதும் என்ற மனமே, பொன்செய்யும் மருந்து எனப்படுவதுபோலவே எல்லா மனிதர்களும் இருந்திருந்தால் கண்டுபிடிப்புகளே வந்திருக்காது.
எனவே, தேவைதான் கண்டுபிடிப்புகளின் தாய் என்றால், தந்தை வேண்டுமே! மதிநுட்பம் தந்தை எனலாம். மதி அனைவருக்கும் உண்டுதான். மதிநுட்பம் சிலர்க்கு மட்டுமே இருக்கிறது. இவர்கள் மதியைப் பயன்-படுத்துகிறார்கள். நுட்பம் சேர்கிறது. விதியை நம்பாததால், மதிநுட்பம் வளர்கிறது.
மதிநுட்பத்தால் கண்டுபிடிக்கப்பட்டவை, கருவிகளாகவோ பொருட்களாகவோ இருக்க வேண்டியது இல்லை. புதிய எண்ணம், புதிய கொள்கை, பாட்டு, நாட்டியம், இசை என்றும் இருக்கலாம்.
சமதர்மம், பொது உடைமை போன்ற புதிய எண்ணங்கள், மக்களாட்சி போலும் புதிய அரசமைப்புக் கொள்கைகள் கூட கண்டுபிடிப்புகளே எனலாம். தொல் பழங்காலக் கண்டுபிடிப்புகளான ஆடை, நெருப்பு, கூரிய கருவிகள், ஈட்டி போன்றவையும் ஆதிகாலக் கண்டுபிடிப்புகளே!
ஏழு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிலைபெற்று இருந்த மெசபடோமிய நாகரிகத்தில், சக்கரம், அச்சு போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. சக்கரம், அச்சு போன்றவற்றைக் கண்டுபிடித்தவன்தான் முதல் விஞ்ஞானி! அவனது கண்டுபிடிப்புகளால்-தான் மனிதன் இடம் பெயரவும் புதிய இடத்தில் வாழவும் தொடங்கினான்.

முதல் அறிவியல் கண்டுபிடிப்பு எனச் சக்கரத்தைக் கொண்டாடும் நோக்கம் இதுதான்! அய்ந்து ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நிலைபெற்றிருந்த சிந்துவெளி நாகரிகம் நீர்ப்பாசன முறைகளைக் கண்டுபிடித்தது.
இதுவே எகிப்து நாட்டின் நைல் நதிக்கரையில் சீன நாட்டின் மஞ்சள் ஆற்றின் கரையில் பரவிப் பெருமை பெற்றது. கட்டற்று ஓடும் காட்டாற்று நீரைக் கட்டுப்படுத்திப் பாசனம் செய்து வேளாண்மை செய்யும் கண்டுபிடிப்பு இன்றைய மானுட குலத்துக்குச் சிறப்பான கொடை.
2500 ஆண்டுகளுக்கு முன்பு மத்தியதரைக் கடல் பகுதி நாடுகளில், குறிப்பாக கிரீஸ், ரோம் ஆகிய நாடுகளில் தோன்றிய கணிதம், தத்துவம், அறிவியல் தொழில்நுட்பம் போன்ற அரிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன.
ஆர்கிமிடிஸ் கண்டுபிடித்த மிதவைத் தத்துவம் நீர்வழிப் பயணத்திற்கு உதவும் கப்பல், படகுகள் போன்றவை கண்டுபிடிப்பதற்கு உதவியது என்பது குறிப்பிடத்தக்கது. சிந்துவெளிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டவை வெளி-உலகுக்குத் தெரியாமலே இருக்கின்றன.
ஆனால், சீன நாட்டின் முக்கிய நான்கு கண்டுபிடிப்புகள் அனைவர்க்கும் பயன்படுகின்றன; வெடிமருந்து, காகிதம், காம்பஸ் எனப்படும் திசைகாட்டும் கருவி, அச்சுத் தொழில்முறை ஆகிய நான்கும் மிகப் பெரிய கண்டுபிடிப்புகள் எனலாம்.
அய்ரோப்பிய நாடுகளில் 14ஆம் நூற்றாண்டுக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நுண்ஆடி (மைக்ராஸ்கோப்) தொலைநோக்காடி (டெலஸ்கோப்) ஆகியவை மனிதர்களின் அறிவியல் ஆய்வுகளுக்குப் பல வகையிலும் ஆற்றிய பங்கு அளவிட்டுக் கூறமுடியாதது.
16ஆம் நூற்றாண்டு பகுத்தறிவின் காலம் என வருணிக்கப்பட்டாலும், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் வானவியல், உயிரியல், இயற்பியல், வேதியியல், கணிதம் போன்றவற்றின் வளர்ச்சி சிறப்பான வகையில் அமைந்தது.
பலப்பல கருவிகள் -_ தெர்மா மீட்டர், ஹைட்ரோ மீட்டர் போன்றவை கண்டுபிடிக்கப்-பட்டதன் விளைவாக இயற்பியலில் பல சாதனைகளை மனிதன் செய்தான். மின்சாரம், காந்தசக்தி ஆகிய இரு முக்கிய சக்திகளை மனிதன் கண்டுபிடித்ததும் இந்தக் காலத்தில்-தான்.
நிலக்கரியைப் பயன்படுத்தி இரும்பை உருக்கி எடுக்கவும் புதிய பொறிகளை உருவாக்கவும் மனிதன் கற்றான். தொழில் புரட்சிக்கு அடிப்படையாக அமைந்த தொழில்நுட்பம் இதுதான். இதனால் பெரும்பலன் அடைந்தது இங்கிலாந்து நாடு.
தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்காக ஏராளமான மக்கள் நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்து குடியேறியதும் இத்தகைய கண்டுபிடிப்புகளால்தான்.
பெரும்பாலான கண்டுபிடிப்புகளைச் செய்து சாதித்த மனிதர்கள் நிறைந்த நாடாக அமெரிக்கா விளங்குகிறது. பல நாடுகளி-லிருந்தும் வந்து குடியேறிய மக்கள் நிறைந்த நாடு அது.
அந்நாட்டின் தாமஸ் ஆல்வா எடிசன் என்பார் 1000 கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரர். இது எப்படி? யேவா கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களினத்தைச் சேர்ந்தவரா அவர்? அல்லவே! மனித அறிவை, ஆற்றலைப் பயன்படுத்திடக் கற்றவர், பயன்படுத்தியவர்! அவ்வளவே!
இப்படி எண்ணற்றவை! ஆற்றல்மிக்க இந்த மனிதர்கள் தம் அறிவைப் பயன்படுத்திக் கண்டுபிடித்துத் தந்த கண்டுபிடிப்புகளால் மனித குலம் முழுவதும் பயன்படுகிறது.
மனித குலத்துக்கு இத்தகைய மனிதர்களால் விளைந்த பயன்களில் ஒரு சிலவற்றையாவது நாம் அறிவது நலம்.
அதை விட்டுவிட்டு இந்தியத் தலைமை அமைச்சர் மோடி கூறுவதைப் போல பிளாஸ்டிக் சர்ஜரி பாரதத்தில் இருந்தது என்பதற்கு அடையாளம் விநாயகன் பொம்மை என்று பேசிக் கொண்டிருந்தால் மிஞ்சுவது என்ன?
மூடப் பைத்தியம் எனும் பட்டம்தான்! குந்தி குழந்தை பெற்றது, சோதனைக் குழாய்க் குழந்தை முறை இந்தியாவில் இருந்ததற்கான அடையாளம் என்று மோடி கூறியுள்ளதைத் திருப்பிக் கூறினால் சிரிப்பு பின்பக்கத் துளை வழியேதான் வருமே தவிர, புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஊக்கம் வரவே வராது!
குளோரஃபார்ம், அனஸ்தீசியா (மயக்க மருந்துகள்) கண்டுபிடிப்பதற்கு முன்னமேயே மயக்க மருந்து கொடுக்காமலே, ஆணின் விலா எலும்பை எடுத்து அதைக் கொண்டு ஏவா எனும் பெண்ணைப் படைத்தது எங்கள் கர்த்தர் என்றானாம் கிறித்தவன்.
ஒருவன், போடா போ! எங்கள் சிவன், தன் மகன் தலை காணாமல் போய்விட்ட நிலையில் யானைத் தலையை மனிதக் கழுத்தில் ஒட்டவைத்து மாற்று உறுப்பு அறுவை சிகிச்சையே செய்தது என்று சவடால் அடித்தானாம் இந்து ஒருவன்!
இவர்கள் இருவர் பேச்சைக் கேட்கும் ஒருவருக்கு என்ன நினைக்கத் தோன்றும்? இந்த இரண்டும் எந்தப் பைத்தியக்கார விடுதியிலிருந்து தப்பித்து வந்தன? என்ற அய்யம்தானே ஏற்படும்!
அதைப்போல பாரதப் பிரதமர் பேச்சைக் கேட்டுக் குழப்பிக் கொண்டிருக்காமல் நடைமுறை உலகுக்கு வருவோம்!
===========================================================================
கம்ப்யூட்டர் மூலம் விளையாடப்படும் கேம்கள் சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரையும் எளிதில் ஈர்த்து விடும் வகையில்ட தற்போது வடிவமைக்கப்படுகிறது.
இதனாலேயே பலர் இதற்கு அடிமையாகி எப்போதும் கம்ப்யூட்டரிலேயே விளையாடிக் கொண்டு இருக்கின்றனர்.
விளையாட்டு வினையாகும் என்பதற்கு எடுத்துக்காட்டாக தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் கேம் விளையாடிய சீனாவின் ஷாங்காய் நகரில் வசித்து வந்த 24 வயதான வு டாய் என்ற இளைஞர் விளையாட்டை தொடர்ச்சியாக 19 மணி நேரம் விளையாடியுள்ளார்.
அப்படி விளையாடிக் கணெணர்டிருந்த போது, கடுமையான இருமல் ஏற்பட்டு இருமியவாறே இருக்கையில் இருந்து கீழே சாய்ந்தார்.

இதனையடுத்து அவரது வாயில் இருந்து ரத்தம் வழிந்தது.

மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் வருவதற்குள் அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஓய்வின்றி விளையாடியதே  அவரது மரணத்திற்கு காரணம் என்று தெரிவித்துள்ளனர்.
===========================================================================

 இந்த மிருகத்தை இதுவரை நீங்கள் பார்த்ததில்லை என்றால் அது தவறு.தினசரி நாம் குடிக்கும் தண்ணீரில் காணப்படும் பாக்டிரியாதான் இது.நுண்னோக்கி மூலம் பன்மடங்கு பெரிதாக்கப்பட்டுள்ளது.
==========================================================================