அட வெங்காயம்.
சின்ன வெங்காயம் என்று பெயர் இருந்தாலும், பெரிய நோய்களை தீர்க்கும் அரிய மருத்துவ குணம் சின்ன வெங்காயத்தில் உள்ளது.
50க்கும் மேற்பட்ட நோய்களை போக்கும் சஞ்சீவியாக சின்ன வெங்காயம் பலன் தருகிறது.
வெங்காயத்துடன்
வெல்லத்தைச் சேர்த்துஅரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும், பித்த
ஏப்பம் மறையும். வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில்
எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில் விட்டால் காது இரைச்சல் மறையும்.
வெங்காய
நெடி தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட்டால்
உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்.
வெங்காயத்தைச் சுட்டு, சிறிது
மஞ்சள், சிறிது நெய் சேர்த்து பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத
கட்டிகள் மேல்
வைத்து கட்டினால், கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
வெங்காய சாற்றை மோரில் கலந்து குடித்தால், இருமல் குறையும்.
வெங்காயச்
சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச்சாறை
பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வந்தால்
பல்வலி, ஈறுவலி குறையும்.
வெங்காயத்தை
சமைத்து சாப்பாட்டில் சேர்த்துக்கொண்டால் உடல் வெப்பநிலை சமநிலை பெறும்,
மூலச்சூடு தணியும். வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டால்,
நரம்புத் தளர்ச்சி குணமாகும். வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில்
சாப்பிட்ட
பின், பசும் பால் குடித்தால் ஆண்மை பெருகும்.
வெங்காயச் சாற்றையும், தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால், சீதபேதி நிற்கும். வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
வெங்காயத்தில் குறைந்த கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயம் சாப்பிடலாம்.
வெங்காயம்
வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும்
உதவுகிறது. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த
சக்தியை
மீட்கும். தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு
அரை அவுன்ஸ் வீதம் 3 வேளை சாப்பிட்டால் நுரையீரல் சுத்தமாகும்.
வாயு
காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலிக்கு, வெங்காயச் சாற்றுடன், கடுகு
எண்ணெய்யை கலந்து தடவினால், வலி நீங்கும். நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு
உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும். வெங்காயச் சாற்றோடு சிறிது
உப்பு கலந்து அடிக்கடி
குடித்தால் மாலைக்கண் நோய் சரியாகும்.
வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட்டால் தொண்டை வலி குறையும்.
பாம்பு கடிக்கு, நிறைய வெங்காயம் தின்றால் விஷம் இறங்கும். வெங்காய சாற்றை
தண்ணீரில் கலந்து பருகினால் சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.
வெங்காயம்,
சோடா உப்பு இரண்டையும் சேர்த்து, அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவினால்,
நாய் விஷம் இறங்கும்.
பிறகு டாக்டரிடம் செல்லலாம். வெங்காயச் சாற்றோடு
சர்க்கரை கலந்து குடித்தால் மூலநோய் குணமாகும். சிறிய வெங்காயத்தில்
இன்சுலின் உள்ளது.
நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து, வழுக்கை விழுந்திருந்தால் சிறு
வெங்காயத்தை இருதுண்டாக நறுக்கி தேய்த்த்தால் முடி வளரும்.
காக்காய்
வலிப்பு நோய் உள்ளவர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு குடித்து
வந்தால் வலிப்பு குறையும்.
வெங்காயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் டி.பி.நோய் குறையும். வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் வாதநோய் குறையும்.
============================================================================
வெள்ளி விழாக் காணும் போட்டோ ஷாப் .
1990 ஆம் ஆண்டு, பிப்ரவரி 19 அன்று, அடோப் போட்டோஷாப் வெளியானது. கம்ப்யூட்டரின் உதவியோடு, யாரும் ஒரு போட்டோவினை எடிட் செய்திடவும், சிறப்பாக மாற்றி அமைக்கவும், மொத்தமாக வேறு ஒன்றாக அமைக்கவும் மற்றும் பலவகையான மாற்றங்களை மேற்கொள்ளவும் வழி தரும் ஒரு சிறந்த புரோகிராமாக போட்டோ ஷாப் அறிமுகமானது.
இன்று நாம் அனைவருமே, போட்டோ ஒன்றில் கை வைத்து, அதன் அளவை மாற்றுவது, ஒளி அமைப்பை மாற்றுவது மற்றும் சின்ன சின்ன மாற்றங்களிலிருந்து,
பெரிய அளவிலான மாற்றங்கள் வரை மேற்கொள்ள முடிகிறது என்றால், அதற்கு அடோப் போட்டோ ஷாப் தந்த தைரியம் எனக் கூடச் சொல்லலாம்.
இன்று இந்த மாற்றங்களை மேற்கொள்வது எளிதாக இருக்கலாம்.
ஆனால், 1990 ஆம் ஆண்டு, போட்டோ ஒன்றை மாற்றி அமைக்க முடியுமா என்பதே ஒரு பெரிய கேள்விக் குறியாக இருந்தது. அப்போது, பழைய வகையில் பிலிம் போட்டுத்தான் போட்டோக்கள் எடுக்கப்பட்டன. நுகர்வோர்கள் அனைவரும் பயன்படுத்தும் டிஜிட்டல் கேமரா 1994க்குப் பின்னரே வெளிவந்தன.
இந்தியாவிற்கு அவை வர இன்னும் சில ஆண்டுகள்
ஆயின. பின் நாளில், கிராபிக்ஸ், மெமரி மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர்களின்
ஸ்டோரேஜ் திறன் அதிகரிக்கையில், போட்டோ எடிட்டிங் என்பதை அனைவரும்
மேற்கொள்ளலாம் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
போட்டோஷாப் தன்னுடைய
முதல் மூச்சுக் காற்றினை 1987ல் மேற்கொண்டது. தாமஸ் நால் (Thomas Knoll)
இதற்கான விதையைக் கண்டறிந்து மேம்படுத்தினார்.
அவர் ஓர் ஆய்வு மாணவராகச் செயல்பட்ட போது, அவருக்கு போட்டோ ஷாப்பிற்கான எண்ணம் உதித்தது.
அதனைத் தன் சகோதரரின் தூண்டுதலுடன் மேம்படுத்தி வடிவமைத்து, கம்ப்யூட்டர் புரோகிராமாக உருவாக்கினார்.
முதலில் இந்த புரோகிராம் PhotoShop என்றே (Shop என்பது
தனிச் சொல்லாக S பெரிய எழுத்தில் இருப்பதைக் கவனிக்கவும்) அழைக்கப்பட்டது.
பின்னர், ஜான் நால், இந்த புரோகிராமினை ஆப்பிள் மற்றும் அடோப் நிறுவனங்களிடம் காட்டினார்.
பின்னர், ஜான் தொடர்ந்து உழைத்து, மேக் இன் டோஷ் கம்ப்யூட்டருக்கான புரோகிராமினை 25 ஆண்டுகளுக்கு முன்னால் வழங்கினார்.
அடோப் நிறுவனம், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் வகையில், போட்டோஷாப் புரோகிராமினை 1993 ஆம் ஆண்டு கொண்டு வந்தது. 'படங்களை உருவாக்குபவர்களுக்கு வலிமையான ஆயுதம் இது” என்ற புகழைப் பெற்றது.
படங்களை எடிட் செய்வதில் போட்டோஷாப் புதிய சந்தையை உருவாக்கியுள்ளது என்று பல பத்திரிக்கைகள் பாராட்டின.
தொடர்ந்து வந்த ஆண்டுகளில், போட்டோஷாப் பல புதிய நவீன தொழில் நுட்ப வசதிகளைத் தன் புரோகிராமில் சேர்த்தது.
அவை எல்லாம் இப்போது சாதாரணமாக எவரும் பயன்படுத்தும் வகையில் அமைந்த அம்சங்களாக மாறிவிட்டன.
பலருக்கு பணி வாய்ப்பு தந்த இந்த புரோகிராம் தந்தவர்களுக்குவெள்ளி விழா வாழ்த்துக்கள்.
