சனி, 14 மார்ச், 2015

மக்களாவது?

மக்கள் நலனாவது??
நாடாவது?  
நாட்டு நலனாவது ??


இந்தியாவில் உள்ள எல்ஐசி, ஜிஐசி உள்ளிட்ட பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை நாசமாக் கியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு மோடி அரசு செயல்படுகிறது.

காப்பீட்டுத் துறையில் நேரடி அந்நிய முதலீட்டு உச்சவரம்பை 49 விழுக்காட் டிற்கு உயர்த்த வகை செய்யும் மசோதாவை மத்தியபாஜக அரசு, மக்களவையில் அவசர அவசரமாககொண்டுவந்து நிறைவேற்றியதில் இருந்தே அதுதெரிந்து விட்டது.
 மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மசோதாவும் சில புதிய நண்பர்களின் உதவியோடு நிறைவேறியுள்ளது. அந்த புதிய நண்பர்களில் அதிமுகவும் ஒன்று.
மாநிலங்களையில் அம் மசோதா மீதான விவாதத்தின்போது பேசிய அதிமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், “ சில்லறை வர்த்தகத்தில் நேரடிஅந்நிய முதலீட்டை அதிமுக கடுமையாக எதிர்க் கிறது.
 ஆனால் காப்பீட்டுத்துறையைப் பொறுத்த வரை அந்நிய முதலீட்டு உச்சவரம்பை 49 விழுக்கா டாக உயர்த்துவதை ஆதரிக்கிறது’’ என்றார். “தமிழகத்தில் ஏழை-எளிய மக்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட் டத்தை  பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலமாகவே நிறைவேற்றி வருகிறோம்.
ஆனால் காப்பீட்டுச் சேவைகளை பொறுத்தவரை விரிவாக மக்களுக்கு சென்று சேர அத்துறையில் நேரடி அந்நிய முதலீட்டிற்கான உச்சவரம்பை அதிகரிப்பது அவசியம்” என அதிமுக கருதுவதாக அவர் கூறினார்.
மத்திய அரசின் காப்பீட்டு மசோதா சட்டமானால் ஏராளமான அந்நிய முதலீடு இந்த துறைக்கு வரும் என்பதால் மசோதாவை ஆதரிக்குமாறு கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா பச்சைக் கொடி காட்டிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொதுத்துறை விஷயத்தில் அதிமுகவின் கடந்த கால நிலைப்பாட்டை ஆய்வு செய்தால் அக் கட்சி எந்த அளவிற்கு தடம்புரண்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளமுடியும்.
என்எல்சி பங்குகளை தனியாருக்கு விற்க முந்தைய மத்திய காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு முடிவு செய்தபோது அதை அதிமுக கடுமையாக எதிர்த்தது. கடந்த மக்களவைத் தேர்தலின்போது அக் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும், “பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்வதை அதிமுக ஒருபோதும் ஏற்காது’’ என்று குறிப் பிடப்பட்டுள்ளது.
அப்படிப்பட்ட பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை அழிக்கும் மசோதாதான் காப்பீட்டு மசோதா. அவற்றை மட்டும் அக்கட்சி ஆதரிப்பதற்கான காரணங்களை தேட மூளையை கசக்க வேண்டிய அவசியம் இல்லை.கடந்த மாதம் சென்னை வந்த நிதியமைச்சர் அருண் ஜெட்லி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்த பின்னர் மத்திய அரசு குறித்த அக் கட்சியின் கொள்கைகளில் தடுமாற்றம் ஏற்பட்டது.
பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்க்காமல் அமைதி காத்தது. இதன் தொடர்ச்சியாகத்தான் காப்பீட்டு மசோதாவையும் அக்கட்சி ஆதரித்திருக்கிறது.அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பெங்களூரு உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.
ஏற்கனவே வருமான வரி வழக்கில் இருந்து மத்திய அரசின் உதவியோடு தப்பித்து விட்டார். எனவே தம் மீதுள்ள மற்ற வழக்குகளில் இருந்தும் விடுதலையாக மத்திய அரசின் தயவை நாடியிருக்கிறார். இந்த இக்கட்டான நிலைமையை பாஜக நன்கு பயன்படுத்திக் கொள்கிறது.
 மாநிலங்களவையில் தனக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அதிமுக போன்ற பல கட்சிகளை வளைத்துப்போடும் முயற்சியிலும் அது இறங்கியுள்ளது. அதிமுக மட்டுமல்ல இந்த மசோதாவை ஆதரித்த காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் போன்ற கட்சிகளின் சந்தர்ப்பவாதமும் கடுமையான கண்டனத்திற்கு உரியதாகும்.
இக் கட்சிகள் வெளியே ஒன்று பேசினாலும் உள்ளுக்குள் பாஜக அரசின் நிகழ்ச்சி நிரலுடன் சேர்ந்து செயல்படுகின்றன என்பதைத்தான் மாநிலங்களவை வாக்கெடுப்பு காட்டுகிறது.
பச்சைத் துரோகம்
அன்று எதிர்ப்பு; 
இன்று ஆதரவு 
அதிமுக அடித்த அந்தர்பல்டி!


‘என்ன காரணத்திற்காகவோ’ தற்போது மாநிலங்களவையில் மோடி அரசுக்கு ஆதரவாக, நாசகர இன்சூரன்ஸ் சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்து கைதூக்கியிருக்கிறது அதிமுக.இதே அதிமுக கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பு இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்தது.
அப்போது காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் இந்த மசோதாவை நிறைவேற்ற முயற்சித்தது.
அதற்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளரும், அப்போதைய தமிழக முதல்வருமான ஜெயலலிதா 2013 ஜூலை 24ம்தேதி அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான ‘நமது எம்ஜிஆரி’ல் வெளியிட்ட அறிக்கையில், கடுமையாக சாடியிருந்தார்.
காங்கிரஸ் கூட்டணி அரசின் இத்தகைய நாசகர கொள்கைகளையெல்லாம் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பேசினார்.
அதையெல்லாம் நம்பித்தான் தமிழக மக்கள் வாக்களித்து அதிமுகவுக்கு 37 எம்.பி.க்களை அளித்தனர்.
ஆனால் தற்போது நேரெதிராக நிலைபாடு மேற்கொண்டு நாடாளுமன்றத்தில், இன்சூரன்ஸ் துறையை நாசமாக்கும் மசோதாவுக்கு அதிமுக எம்.பி.க்கள் கைதூக்கியிருக்கிறார்கள்.

2013 ஜூலை 24 அன்று நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையில் வெளியான ஜெயலலிதா அறிக்கையின் ஒரு பகுதி:

"காப்பீட்டுத் துறையில், நேரடி அந்நிய முதலீடு அதிகரித்து வருவதற்கு, நான் எதிர்ப்பு தெரிவித்துள்ளேன். 
இந்நாட்டில் பொது நலனை கருத்தில் கொண்டு, மிகச் சிறப்பாக சேவையாற்றி வரும் வலுவான பொதுத்துறை காப்பீட்டுதாரர்களை நாம் கொண்டுள்ளோம்.
தமிழ்நாட்டின் முதன்மைத் திட்டமான முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீட்டுத் திட்டம், அரசுப் பணியாளரின் சுகாதார காப்பீட்டுத் திட்டங்கள் ஆகிய இரண்டும் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றன. 
 பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்கள் வாயிலாக இத்திட்டங்கள் பிரத்யேகமாக மேற்கொள்ளப்படுகின்றன. 
மத்திய பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கு மாநில அரசு ஆதரவளிக்க முன்வந்தப் போதிலும் கூட, மத்திய அரசு ஆதரவு அளிக்கவில்லை. 
தொலைத் தொடர்பு மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளில், பொதுத்துறை நிறுவனங்கள் சமூக கடப்பாடுகளைக் கொண்டிருந்த நிலையில், தனியார் இயக்குபவர்களுக்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாத சூழ்நிலை காப்பீட்டுத் துறையில் திரும்ப கொண்டு வருவதற்கு மத்திய அரசு முனைப்பு காட்டுகிறது.
இது பொதுத்துறை நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது. இதற்கிடையில் 2008 ஆம் ஆண்டு காப்பீட்டுச் சட்ட (திருத்த) சட்ட முன்வடிவு நாடாளுமன்றத்தில் இன்னும் நிலுவையிலிருக்கிறது; 
நாடாளுமன்றத்தில் இந்த சட்டமுன்வடிவை நிறைவேற்றுவதற்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சி போதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டிருக்கவில்லை.'
மொத்தத்தில் அ .தி.மு.க ,கட்சி அரசியலும் கொள்கைகளும் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை மையம் கொண்டே இப்போ து உள்ளது.
நீதிபதி குமாரசாமி முன் நடைபெறும் வழக்கு தீர்ப்பு தனக்கு ஆதரவாக வருவதுதான் இப்போதைய ஜெயலலிதாவின் விருப்பம்.அதற்காக என்னவென்றாலும் செய்வார்.அவற்றின் கடந்த கால அரசியல் அப்படித்தான் உள்ளது.
இதில் மக்களாவது?,மக்கள் நலனாவது?,நாடாவது?

                   இன்று  காரல் மார்க்ஸ்   நினைவு நாள்.

 

இதழாளர் 'அவுட் லுக் 'வினோத் மேத்தா வுக்கு   அஞ்சலி.


 

==========================================================================
  இயற்பியல் அறிஞர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 
பிறந்த தினம்.
    மார்ச் -14  ஜெர்மனியில் யூத குடும்பத்தில் பிறந்த இவர் இளம் வயதில் மூன்று வயது வரை பேசாமல் இருந்த இவரை மந்தமான குழந்தை என்றே எண்ணினார்கள் , அவருக்கு அவரின் அப்பா கொடுத்த காம்பஸ் பெரிய ஈர்ப்பை உண்டு செய்தது . அது  எப்படி மிகச்சரியாக திசை காட்டுகிறது ஆரம்பித்தார் அவர் .
பள்ளியில் சொந்தமாகவே நுண்கணிதத்தை கற்றுத்தேறினார் .
 சிறு வயதிலேயிருந்து வார்த்தைகளாலும் சொற்களாலும்சிந்திப்பதைக்காட்டிலும் படங்களாகவும் காட்சிகளாகவும் சிந்திப்பார் ஐன்ஸ்டைன்.
ஐன்ஸ்டீனுக்கு 15 வயதானபோது இத்தாலியில் மிலான் நகருக்கு குடியேறினர்.
அங்கு அவரது தந்தை வர்த்தகத்தில் நொடித்துபோனதும் சுவிட்சர்லாந்துக்குசென்றார் ஐன்ஸ்டீன்.
புகழ்பெற்ற சுவிஸ் பெட்ரல் பாலிடெக்னிக் நுழைவுத்தேர்வில் அவர் தோல்வி அடைந்தார்.
 ‘உலகிலேயே ஒன்றரை கிலோ அதிசயத்தை அதிகம் பயன்படுத்திய மனிதனுக்கே இடம் கிடைக்காத கல்லூரி இது ‘என்கிற வாசகம் இன்றைக்கும் அலங்கரிக்கிறது .
ஐன்ஸ்டீனுக்கு கிடைத்த முதல் வேலை விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை பதிவு செய்து ஆராய்வது. அப்பொழுது எழுதி வெளியிட்ட மூன்று கட்டுரைகள் தான் இயற்பியல் உலகின் புதிய ஏற்பாடு எனப்புகழப்படுகின்றன.

அவரின் சார்பியல் தத்துவம் தான் மிகவும் விவாதத்துக்கு உள்ளானது . இவரின் இந்த சிந்தனை தான் எத்தனை அளப்பரியமாற்றங்களை அறிவியல் உலகில் உண்டு செய்து இருக்கிறது என நினைக்கிற பொழுது சிலிர்க்கிறது நியூட்டன் எனும் மாமேதையின் கருத்துக்களை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச பல பேர் பயந்த பொழுது ஐன்ஸ்டீன் மட்டும் மிக அழுத்தந்திருத்தமாக தன் கோட்பாடுகளை உலகின் முன் வைத்தார் !சார்பியல் தத்துவம் உதித்தது !
இத்தனைக்கும் அவர் என்றைக்கும் இயற்பியல் ஆய்வகங்களில் மூழ்கிக்கிடந்தவர் இல்லை !
பல இடங்களில் சார்பியலின்அடிப்படைகளை எளிமையாக விளக்கி வந்தார்
அவர் ஒளி மாதிரி சில சங்கதிகள் தான் மாறாதவை .காலம் எல்லாம் மாறுதலுக்கு உட்பட்டது என்றார் .
 எளிமையாக அதை ஐன்ஸ்டீன் இப்படி விளக்குவார்
,”ஒரு ஸ்டவ் அடுப்பின் மீது உட்கார்ந்து பாருங்கள் ஒரு நிமிடம் ஒரு மணிநேரமாக தோன்றும் ;அழகான ஒரு பெண்ணோடு உரையாடிக்கொண்டு இருங்கள் ஒரு மணிநேரம் ஒரு நிமிடம் போல தோன்றும் ” ஸ்டீவன் ஹாகிங் இதை “நீங்கள் ஏரோப்ளேனில் கிழக்கு நோக்கிப் பயணம் செய்யும்போது ரிலேட்டிவிட்டிபடி ஒரு மைக்ரோ செகண்டு இளமையாகிறீர்கள்… ஏரோப்ளேன் சாப்பாட்டைச் சாப்பிடாத பட்சத்தில்!”
சார்பியல் சார்ந்து உருவான E=mc 2 எனும் சூத்திரம் அதில் ஒன்று . இந்த சூத்திரத்தில் ஆற்றல் ஆனது நிறையோடு தொடர்புடையது என்றும் நிறையில் ஏற்படும் இழப்பு ஆற்றலாக வெளிப்படும் எனவும் வரையறுத்து சொன்னார்; இதன் மீது ஆரம்ப காலத்தில் ஏகத்துக்கும் விவாதங்கள் எழுந்தன ;அதனாலேயே நோபல் பரிசு இந்த ஆய்வுதாளுக்கு தராமல் ஒளிமின் விளைவுக்கு தரப்பட்டது.
எனினும், இந்த On the Electrodynamics of Moving Bodies ஆய்வுத்தாள் அடிப்படையாக கொண்டு அணுகுண்டு உருவானது சோகமான வரலாறு.
ஏ பாம் ப்ராஜக்டை ஹெய்சன்பர்கை கொண்டு ஜெர்மனியில் ஹிட்லர் தொடங்கி இருப்பதை பற்றி கவலையோடு அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார்
;அமெரிக்க அணுகுண்டு சார்ந்த ஆய்வில் இறங்கவேண்டும் என்ற அவரின் வார்த்தையை செயல்படுத்தி அணுகுண்டு தயாரித்தது அமெரிக்கா.
உலகை இறைவன் எப்படி படைத்தார் என கண்டறிந்து விட வேண்டும் என சொன்ன இவருக்கு சமயங்களில் பெயரே மறந்து விடும். வீட்டுக்கு வழிதெரியாமல் நின்ற கதைகள் உண்டு .
டிஸ்லெக்சியா வேறு இருந்தது . பின் எப்படி இயற்பியல் உலகின் சாதனைகள் சாத்தியமானது என கேட்ட பொழுது “எனக்கொன்று தனித்திறமை எதவுமில்லை .
எல்லையில்லா ஆர்வம் மற்றும் அறிவுக்கான தேடல் என்னை செலுத்துகிறது .சிக்கல்களோடு நான் கொஞ்சம் கூடுதலாக போராடுகிறேன் ” என்றார். இன்றைய கல்விமுறை மீன்களை மரமேறுவதன் மூலம் எடை போடுகிறது என்று விமர்சிக்கவும் செய்தார்.
                                                                                                                           -  பூ.கொ.சரவணன்