சென்னையில்" ராஜ [பக்சே ] நடை" ஆரம்பம்.

கோடை வந்திருச்சு.

கோடை காலத்தில் எண்ணை பதார்த்தங்கள், காரம் முதலானவற்றை தவிர்க்கவும். சுத்தமான குடிநீரையும் அதிகமாக குடிக்கலாம்.
ஒவ்வொரு நாளும் நான்கு முறையாவது நல்ல சோப்பினால் தேய்த்து முகத்தைக் கழுவிக் கொள்வது நல்லது.
இதனால் முகத்தில் வியர்வைத் துவாரங்கள் திறக்கப்படுவதோடு, தோலில் படியும் அழுக்குகளும் அகற்றப்படும்.
குறிப்பாக இரவு படுக்கப் போகும் முன்பு, சோப்பு போட்டு முகத்தை கழுவுவது அவசியம். தினமும் இரண்டு வேளை குளிக்கவும்.
வேர்க்குருவைப் போக்க சந்தனத்தை பன்னீரில் குழைத்து, வேர்க்குருக்கள் மீது தடவலாம். நல்ல நிவாரணம் கிட்டும்.
வெயிலின் தாக்கம் தாங்காமல் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்படும். குறிப்பாக எண்ணைப் பசையான உடம்பு என்றால் முகத்தில் பருக்கள் ஏற்படுவதும் உண்டு.

கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைய பப்பாளிப் பழச்சாறை முகத்தில் தடவவும். எக்காரணம் கொண்டும் பருக்களை கிள்ளக் கூடாது. இதனால் பருக்கள் அதிகமாகும்.
முருங்கைக் கீரை மற்றும் ஏனைய கீரை வகைகளை வாரத்தில் 2 நாட்களாவது உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்லது.
வியர்வை அதிகமாக சுரப்பதால் தோல் வறட்சியை ஏற்படுத்தும். இதற்கு பழச்சாறு, காய்கறிச்சாறு, சூப் மற்றும் குடிநீரை அடிக்கடி குடிக்கவும்.
இதனால் தோல் வறட்சி தடுக்கப்படும்.
உடம்புக்கு புத்துணர்ச்சி கிடைப்பதோடு தோலும் பளபளப்பாக மாறும். கோடை காலத்தில் தயிர் சாப்பிடுவதை விட உப்பு சேர்த்து மோராக சாப்பிடுவதும் நல்லது.

வெயிலில் வெளியில் அலைபவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்பவர்கள் அடிக்கடி மோர் மற்றும் இளநீரை குடிக்க வேண்டும்.
உடல் சூடு குறைவதோடு, உடம்புக்கு புத்துணர்வு கிடைக்கும். 
==========================================================================
சென்னையில் ராஜ [பக்சே ] நடை ஆரம்பம்.

சென்னை பழைய மாமல்லபுரம் சாலையில் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலை வாங்கியுள்ளதுஹாரி ஜெயவர்த்தனே என்ற சிங்களருக்கு சொந்தமான பிரபல  நிறுவனம்.
இந்த நிறுவனத்தின் தலைவர் ஹாரி ஜெயவர்த்தனே, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு மிக நெருக்கமானவர்,அவரின் பினாமி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை இனப்படுகொலை போர்க் குற்றவாளிகள் மீது பன்னாட்டு விசாரணை நடத்தவேண்டும் என தமிழகமே ஐந்து ஆண்டுகளாக தீவிரமாகப் போராடி வருகிறது.

ஆனால் இன்று அதே தமிழகத்தின் தலைநகரில், அந்த இனப்படுகொலைகுற்றவாளி ராஜபக்சே, தன் பினாமியை வைத்து நட்சத்திர ஓட்டலை நடத்தப் போகிறார்.

ஈழத் தமிழர்களை கொன்று குவித்த தால் தமிழகத்துக்குள் நேரடியாக நுழைய முடியாத ராஜபக்சே, அரசியல், சினிமா, தொழில் முதலீடுகள் என சகல வகையிலும் இப்போது தன் பினாமிகள் மூலம் கால்பதிக்க ஆரம்பித்துள்ளார்.
முதலில் லைக்கா இப்போது ஹாரி ஜெயவர்த்தனே.
ராஜ பக்சே  -                                                                                                                           ஹாரி ஜெயவர்த்தனே
"எயிட்கென் ஸ்பென்ஸ் " என்பதுதான் அந்த  நட்சத்திர பிரபல  சொகுசு ஓட்டலின் பெயர்.
. பிரிட்டன் தொழிலதிபர் ஒருவரால் தொடங்கப்பட்ட இந்த நட்சத்திர ஓட்டலுக்கு , இலங்கை, இந்தியா, மாலத்தீவு, ஓமன் ஆகிய நாடுகளில் கிளை ஓட்டல்கள் இருக்கிறது.இதை வாங்கியுள்ள ஹாரி ஜெயவர்த்தனே

இ  லங்கையின் முக்கியமான வர்த்தக முதலாளி!
சாதாரண வர்த்தகம் அல்ல, இலங்கையின் ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகத்தில் முன்னிலையில் இருக்கும் புள்ளி.
லங்கா மில்க் ஃபுட்ஸ், லங்கா டிஸ்டில்லரீஸ் (மதுபான) நிறுவனம் ஆகியவற்றின் உரிமையாளர், இலங்கையின் மிகப் பெரிய வங்கியான ஹாட்டன் நேசனல் வங்கியின் இயக்குநர், சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேசனின் தலைவர் என அந்நாட்டின் மிக முக்கிய பிரமுகர்களில் ஒருவராகவும் உள்ளார்.
இந்த ஹாரி ராஜபக்சேயின் பினாமி.லைக்கா போல் இந்த நிறுவனத்திலும் 70 சதவிகிதம் பங்கு பக்செக்கு இருக்கிறதாம்.
இந்த ஹாரி ஜெயவர்த்தனே ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்.
.
. இந்த ஹாரி ஜெயவர்த்தனே இப்போது சென்னையை குறிவைத்து முதலீடுகளை இறக்க ஆரம்பித்துள்ளார்.
ராயலா டெக்னோபார்க் கார்ப்பரேசன்’என்ற நிறுவனம் பெருங்குடி அருகில் கட்டி முடித்த ரெசேடா தி ஃபெர்ன் (Reseda-The Fern) என்ற ஐந்து நட்சத்திர ஓட்டலை கடந்த ஜூன் மாதம் வாங்கியிருக்கிறார் ஜெயவர்த்தனே. எயிட்கென் ஸ்பென்ஸ் என்ற பெயரிலேயே இயங்கும் எயிட்கென் ஸ்பென்ஸ் நிறுவனத்துக்கு ஏற்கனவே கோவையில் ஓட்டல் அதிதி மற்றும் புதுச்சேரியில் ஓட்டல் தமரா ஓட்டல்கள் சொந்தமாக உள்ளன.
ரூ 150 கோடி 143 அறைகள் கொண்ட இந்த எட்டு மாடி ஓட்டல் 25 மில்லியன் டாலர் (கிட்டத்தட்ட ரூ 150 கோடி)க்கு கைமாறியுள்ளது.
ராயலா டெக்னோபார்க் கார்ப்பரேசன்’என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ரஞ்சித் பிரதாப், சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் பெருங்குடி அருகில், 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றைக் கட்டி முடித்திருக்கிறார்.
பிரபலங்களுக்காக ஓட்டல்களைக் கட்டி அவர்களுக்கு விற்பதுதான் இவரின் தொழில் என்றும் தொழில்துறை வட் டாரங்களில் இவரைப் பற்றிச் சொல்கிறார்கள்.
இவர்தான் இந்த ஓட்டலை  ஹாரி ஜெயவர்த்தனேவுக்கு 125 கோடிக்கு கைமாற்றியுள்ளார்.. 
எயிட்கென் ஸ்பென்ஸ் என்ற பெயரிலேயே இயங்கவிருக்கும் இந்த ஓட்டலின் திறப்பு விழா விரைவில் நடைபெற உள்ளது.
ராஜபக்சேவும் கூட்டாளி  ஹாரி ஜெயவர்தனாவும் 60:40 என்ற சதவீத அடிப்படையில் இந்த ஓட்டலை நடத்தப் போவதாக பரபரப்பாக தகவல் பரவி வருகிறது.

கொழும்புவில் ஈழத் தமிழர்கள் உயிர்களையும்,தமிழர்கள் சொத்துக்களையும்,அவர்கள் அதுவரை செய்து வந்த  ஓட்டல் மற்றும் பிற தொழில் நிறுவனங்களைக் கையகப்படுத்தி பறித்துக்கொண்ட, அதே ராஜபக்சேதான் இப்போது இலங்கையில் இருந்து தான் கொள்ளையடித்த பணத்துடன் தமிழகத்தில் நட்சத்திர ஓட்டல் தொழில் நடத்தப் போகிறார்.
பொருளாதாரத் தடை இலங்கை மீது மத்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர்   ஜெயலலிதா.
இப்போது அவர் ஆட்சி நடக்கும் தமிழ் நாட்டிலேயே ராஜபக்சேவை பின்னணியாகக் கொண்டு இந்த ரூ 150 கோடி பேரம் நடந்து முடிந்து ஓட்டல் திறப்பு விழாவை எதிர் பார்த்து காத்திருக்கிறது. 
இப்போது தமிழ் நாட்டின் அதிகாரத்தை தன் கையில் வைத்திருக்கும் ஜெயலலிதா என்ன செய்யப்போகிறார்.முருகனின் பெயரன் சீமோன் என்ன வகை போராட்டத்தை அறிவிக்கப் போகிறார்.இப்போது ஈழ வியாபர த்தை விட்டு  முப்பாட்டர்கள் வியாபாரத்தை துவக்கியுள்ள சீமோன் காவடி தூக்கும் போராட்டத்தை துவக்கலாம்.அல்லது லைக்கா வுக்கு ஆதரவாக இருந்த மாதிரி ஆதரவை தெரிவிக்கலாம்.
==========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

விடுதலைப்போர்.முதல் பலி தூத்துக்குடியில்.