வியாழன், 23 ஏப்ரல், 2015

கார்ப்பரேட் வைரஸ்

அலைபேசி வழி இணைய சேவையில் தற்போது ’கார்ப்பரேட் வைரஸ்’ ஊடுருவ முயன்று வருகிறது. 
இந்த வைரஸ் பரவும் பட்சத்தில் பணத்தின் அடிப்படையில் இணையத்திலும் ஏற்றத்தாழ்வு நிலை உருவாகும். அதுமட்டுமல்ல யார் எதைப் பார்க்க வேண்டும். எந்தத் தகவலை சேகரிக்க வேண்டும் என்பதைக் கூட இந்த கார்ப்பரேட் வைரஸ்களே தீர்மானிக்கும் அபாயம் இதனால் ஏற்பட்டிருக்கிறது.
அலைபேசி வழியான இணையப் பயன்பாடு இந்தியாவில் நாளுக்கு நாள் மிகவேகமாக அதிகரித்து வருகிறது. இணைய சேவையை 83 சதவிகிதம் பேர் ஸ்மார்ட் போன் (அலைபேசி) மூலமே பயன்படுத்தி வருகின்றனர். இச்சேவையை வழங்கும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் டேட்டாவின் அளவிற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கின்றன.
2014ம் ஆண்டில் மட்டும் இதன் அளவு நூறு சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இதன் மூலமும் லாபத்தின் அளவு பன்மடங்கு பெருகியிருக் கிறது. 
இது போதாது என்று தற்போது குறிப்பிட்ட இணையதளங்களை பார்க்க தனி கட்டணம் என்பதை நோக்கி சில திட்டங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.
அதாவது, சில இணைய பக்கங்கள் இலவசம்; சில இணைய பக்கங்கள் அதி வேகத்தில் இயங் கும் என கவர்ச்சிகரமாக திட்டத்தை அறிமுகம் செய்கின்றன. அப்படியென்றால் மற்ற இணையப் பக்கங்களுக்கு பணம் செலுத்தினால் மட்டுமே கிடைக் கும். 
ஏனைய இணைய பக்கங்களின் வேகம் மிக வும் குறைவாகவே இருக்கும் என்பதும் இதில் உள்ளடங்கியிருக்கிறது.
 அதாவது இணைய சம வாய்ப்பை சீர்குலைத்து, பணம் உள்ளோருக்கு மட்டுமே சிறந்த சேவை கிடைக்கும்; அதிக தகவல்கள் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதிலும் மிகப்பெரிய அளவில் ஏற்றத்தாழ்வை உருவாக்க முயன்று வருகின்றன.அதன் ஒருபகுதியாக பேஸ்புக் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் நிறுவனம் இணைந்து இண்டர்நெட் ஆர்க் என்னும் திட்டத்தை அறிவித்திருக்கிறது. 
அதனைத் தொடர்ந்து தற்போது ஏர்டெல் நிறுவனம் பிலிப்கார்ட் உள்ளிட்ட சில நிறுவனங்களுடன் இணைந்து ஏர்டெல் ஜீரோ எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது. 
இதற்கு நாடுமுழுவதும் எழுந்த எதிர்ப்பிற்குப் பிறகு ஏர்டெல் நிறுவனம் தனது திட்டத்தில் இருந்து தற்போது பின்வாங்கியிருக்கிறது.
இது ஒரு புறம் என்றால் மறுபுறம், பயன்பாட்டா ளர்கள் எதைப் பார்க்க வேண்டும். எந்தத் தகவலை மட்டும் தெரிந்து கொள்ள வேண்டும்.
 அது சரியா ? தவறா ? என்பதைக் கூட ஒப்புநோக்கக் கூடாதுஎன்ற அரசியல் உள்நோக்கமும் இதில் உள்ளடங்கி யிருக்கிறது. 
மேலும் இந்தச் சேவையில் குறிப்பிட்ட ஏகபோகங்கள் மட்டும் கோலோச்ச முடியும் என்ற வகையில் ஒரு சதிவலை பின்னப்படுகிறது.
 இந்தத் திட்டத்தின் மூலம் எதிர்காலத்தில் அரசியல்ரீதியாக வேண்டப்படாதவர்களை ஒழித்துக்கட்ட வும்,
அவர்கள் குறித்த அவதூறுப் பிரச்சாரங்களை திட்டமிட்டுப் பரப்பவும் முடியும்.
 இப்படி பல்வேறு ஆபத்துக்களை ஒருங்கிணைத்த ஒரு திட்டத்தை அமலாக்குவதற்கான முயற்சியில் மோடி அரசு இறங்கியிருக்கிறது.
அதுவும் நேரடியாக அல்லாமல், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் ( டிராய்) மூலம் அமலாக்க மோடி அரசு துடித்துக் கொண்டிருக்கிறது. 
இந்த அலைபேசி இணைய வழியில் ஊடுருவ முயலும் கார்ப்பரேட் வைரஸ்களை ஆரம்பத்திலேயே அழித்தொழிக்க வேண்டும்.
 அப்போதுதான் இணையத்தில் அனைவருக்கும் சமவாய்ப்பை உத்தரவாதப்படுத்த முடியும்.
============================================================================================================

செம்மரமும் ராஜ ரிஷியும்.

செம்மரக் கடத்தலும், தமிழககூலித்தொழிலாளர்கள் 20 பேர்அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்டதும் கடுமையான அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கடத்தலின் முக்கியப் புள்ளிகள்யார்? பின்னணியில் உள்ள அரசியல்வாதிகள் யார் எனும் கேள்விகள் முன்னுக்கு வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், பிரதமர் மோடியின் நெருக்கமான ‘அன்பைப்’ பெற்ற,
பாஜகவின் ஆஸ்தான ஆன்மீக குருவாக தன்னை முன்னிறுத்திக் கொள்கிற போலிச் சாமியார் ராம்தேவுக்கு செம்மரத் தொழிலுடன் உள்ள தொடர்பு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.கடத்தல்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செம்மரங்களை ஆந்திர அரசாங்கம் மத்திய அரசின் அனுமதி பெற்று ஏலத்தில் விற்றது. (செம்மரம் மறைந்து வருகின்ற தாவரம் என்பதால் மத்திய அரசின் அனுமதியின்றி விற்க முடியாது) அந்த ஏலத்தில் ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேதா லிமிடெட் எனும் நிறுவனம் 706 டன் செம்மரங்களை ரூ.207 கோடிக்கு, சமீபத்தில் வாங்கியுள்ளது.
ராம்தேவிற்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது என்பது மிகப்பெரிய கேள்வி! அதுமட்டுமல்ல, செம்மரங்கள் ஏலத்தில் பங்கேற்று இவ்வளவு பெரும்தொகைக்கு ஏலம் எடுத்த ஒரே இந்திய நிறுவனம், ராம்தேவின் நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏலத்தில் எடுக்கப்பட்ட செம்மரங்களை எடுத்துச் செல்ல ராம்தேவ் இன்னும் முழுப்பணத்தையும் கட்டவில்லை. என்ன காரணம்?ஆந்திர அதிகாரிகள் கூறுகின்றனர்: “எங்களிடம் வாங்கிய விலையைவிட அதிகமாக சர்வதேசச் சந்தையில்விற்பதற்கு முயற்சிகள் நடக்கின்றன.
சர்வதேசச் சந்தையில் கூடுதல் விலைக்கு செம்மரங்களை வாங்குபவர் கிடைக்கும் வரை ராம்தேவ் நிறுவனம் செம்மரங்களை எடுக்க அதற்குரிய தொகையை கட்டமாட்டார்கள் என்பதே எங்களது கருத்து” என்கின்றனர்.அதாவது, விலை மதிப்பற்ற செம்மரங்களை அரசாங்கத்திடம் குறைவான விலைக்கு வாங்கி சர்வதேசச் சந்தையில் அதிகவிலைக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்து வருகிறது ராம்தேவின் நிறுவனம் என்பதுதான் உண்மை. செம்மரங்களை ஆந்திர அரசாங்கத்திடமிருந்து வாங்குவதற்கு பதிலாக நேரடியாகவே கடத்தல்புள்ளிகளிடம் வாங்கினால் இன்னும் அபரிமிதமாக லாபம் கிடைக்கும் என்பது,
ஒரு சர்வதேச ஆன்மீக வியாபாரியான ராம்தேவுக்கு தெரியாத ஒன்றல்ல. பெயரளவுக்கு ஆந்திர அரசின் ஏலத்தில் எடுத்ததுபோக, பெருமளவில் கடத்தல்காரர்களிடம் இருந்த இவர்களைப் போன்ற வியாபாரிகள் வாங்குகிறார்கள் என்பதே உண்மை. எனவே செம்மரக் கடத்தலின் பின்னணியில் உள்ள பெயர்கள் வெளிவந்தால் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் அதில்இருக்கலாம். ராம்தேவிற்கும் செம்மரத்தொழிலுக்கும் உள்ள தொடர்பு அதனைச் சுட்டிக்காட்டுகிறது.
“சீச்சீ இந்த பழம் புளிக்கும்” என்ற கதையாக அமைச்சர் பதவி வேண்டாம் என கூறிய ராம்தேவ் அடுத்து கூறியது கவனிக்கத்தக்கது:“இப்பொழுது பிரதமர் நம்மவர்; மத்திய அமைச்சரவை முழுவதும் நம்முடையது;ஹரியானா முதல்வர் நம்முடையவர்;அவருடைய அமைச்சரவையும் நம்முடையதே!”மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மத்தியில் அமைந்த பிறகு சங்பரிவாரம் தனது செயல்களை மிருக பலத்துடன் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. சங்பரிவாரத்தின் அனைத்து பிரிவுகளும் தமது முகமூடிகளை அவிழ்த்து விட்டு நேரடியாக களம் இறங்கியுள்ளன. அதன் ஒரு பகுதிதான், ராம்தேவ் அடித்து வரும் மெகா கொள்ளைகளும்!(செய்தி ஆதாரங்கள்: பிடிஐ, டைம்ஸ் ஆப் இந்தியா)

===========================================================================

இன்று,
ஏப்ரல்-23.


  • சர்வதேச புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்

  • ஆங்கில நாடக எழுத்தாளர் வில்லியம் ஷேக்ஸ்பியர் இறந்த தினம்(1616)

  • உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் சத்யஜித் ரே இறந்த தினம்(1992)

  • எயிட்ஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது(1984)

  • புனித ஜார்ஜ் கோட்டை மதராசில்(சென்னை) கட்டப்பட்டது(1639)
1640 - ஏப்ரல் 23
சென்னையில், செயின்ட் ஜார்ஜ் கோட்டை கட்டி முடிக்கப்பட்ட நாள். கப்பலில் வந்து துறைமுகத்தில் இறங்கும் பண்டங்களை, பாதுகாப்பாக வைக்க, கிழக்கிந்திய கம்பெனி கட்டிய மாபெரும் கட்டடம் இது. 
கம்பெனி அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் வீட்டுப் பணியாளர்கள் தங்குவதற்கென்று, கோட்டைக்குள்ளேயே தனித்தனி தெருக்கள் அமைக்கப்பட்டன. 
அவர்களது அன்றாட தேவைக்குரிய பொருட்களை பெற, உள்ளேயே ஒரு கடைத் தெருவும் அமைக்கப்பட்டது.
பிரான்சிஸ் டே என்பவர், கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தக தேவைக்காக, 10 சதுர கி.மீ., பரப்புடைய நிலத்தை, கடற்கரையையொட்டி வாங்கினார். 
அவரும், கிழக்கிந்திய கம்பெனி உரிமையாளர் ஆண்ட்ரூ ஜோகன் என்பவரும், இந்த இடத்தில் ஒரு பண்டக சாலை கட்டி முடித்த இந்நாள், செயின்ட் ஜார்ஜ் தினம்.
 எனவே, அவர் நினைவாக இதற்கு, 'செயின்ட் ஜார்ஜ் கோட்டை' எனப் பெயர் வைத்தனர். 
சத்திய ஜித்ரெ மரணம்,