குரோம்:எரிச்சல்தரும் அனுபவம் .
நீங்கள் குரோம் பிரவுசர் பயன்படுத்துகிறீர்களா?
அப்படியானால்நீங்கள் குரோமில் இணையத்தில் உலாவும் போது நீங்கள் பார்க்கும் பக்கத்தில் பாதியிடத்தை விளம்பரங்கள் வந்து அடைத்துக்கொ்ண்டு உங்களுக்கு எரிச்சல்தரும் அனுபவம் உண்டாயிருக்கும்.
நீங்கள் தரவிறக்கம் செய்து, பதிவு செய்து கொண்ட குரோம் நீட்சி புரோகிராம்களில் பல, உங்கள் கம்ப்யூட்டரில் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களாக இருக்கலாம்.
இந்த புரோகிராம்கள், நீங்கள் இணைய உலாவில் இருக்கையில், விளம்பரங்களைக் காட்டுபவையாக உள்ளன.
அந்த விளம்பரத்தில் சிக்கி, அவற்றில் கிளிக் செய்கையில், அவை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இணைய தளத்தில் நீங்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளை அப்படியே சுருக்கி நகலெடுத்து அனுப்புகின்றன.
இதனால், அந்த இணைய தளங்கள் பாதுகாப்பானவையாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், நீங்கள் தரும் தகவல்கள் இந்த விளம்பரங்களால் திருடப்படுகின்றன.
லெனோவா நிறுவனம் அண்மையில் விற்பனை செய்த கம்ப்யூட்டர்களில், Superfish என்ற நிறுவனத்தின் விளம்பர புரோகிராம்களை இணைத்து விற்பனை செய்தது.
இந்த புரோகிராம்கள், நாம் தேடல் சாதனத்தைப் பயன்படுத்துகையில், இடையே அதன் விளம்பரங்களையும் இணைத்துக் காட்டின. அதில் கிளிக் செய்திடும் வாடிக்கையாளர்களின் தனி நபர் தகவல்களைத் திருடி அனுப்பின.
இந்த பிரச்னை வெளிவந்தவுடன், கூகுள் நிறுவன ஆய்வாளர்கள், பெர்க்லீ நகரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் இது குறித்து ஆய்வு செய்தனர்.
முடிவுகள் அவர்களுக்கு மிகவும் அதிர்ச்சியைத் தருவதாக இருந்தன.
குரோம் பிரவுசருக்கான, கூகுள் அனுமதித்த, எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களில், மூன்றில் ஒரு பங்கு புரோகிராம்கள் ஏமாற்றுபவையாகவும், கெடுதல் விளைவிக்கும் சாப்ட்வேர் புரோகிராம்களாகவும் இருப்பது தெரிய வந்தது.
உடனே, கூகுள் அவற்றில் 200க்கும் மேற்பட்டவற்றை தன் தளத்திலிருந்து நீக்கியுள்ளது.
ஏறத்தாழ 1.4 கோடி பயனாளர்கள், 192 எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களால் பாதிக்கப்பட்டுள்ளது முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. இனி வரும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், இதைப் போல் செயல்படாமல் இருக்க தற்போது புதிய தொழில் நுட்பத்தினை கூகுள் ஆய்வாளர்கள் புகுத்தியுள்ளனர்.
கூகுள் இணைய தளங்களைப் பார்வையிடும் பயனாளர்களில், 5 சதவீதம் பேர் இது போல குறைந்தது ஒரு புரோகிராமினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். சிலர் இரண்டு அல்லது நான்கு புரோகிராம்களைத் தங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து இயக்கியுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
விண்டோஸ் மற்றும் ஓ.எஸ்.எக்ஸ் என இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும் கம்ப்யூட்டர்களி்ல் இந்த மோசமான
நீட்சி புரோகிராம்கள் பரவி தங்கள் கைவரிசையை காட்டி யுள்ளன.
கூகுள் நிறுவனம், இது போல, விளம்பரங்களை இடைச் செருகுவதைத் தடுப்பது கிடையாது.
ஆனால், அவற்றிற்கான வரைமுறைகளை, நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
இந்த விளம்பரங்களில் இருமுறை கிளிக் செய்தால் என்ன நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்க வேண்டும் என்பது, நிபந்தனைகளில் ஒன்றாகும்.
பயர் பாக்ஸ் உலவியிலும் இந்த நீட்சிகளின் விளம்பர அட்டகாசங்கள் அதிகமாக உள்ளன.அவர்கள் என்ன செய்யப்போகிறார்களோ?
ஒரு சந்தேகம்.
கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான குழு, ஒடிசா மாநில நீதிபதியாக மாற்றியுள்ளது. கர்நாடகா போன்ற பெரிய மாநிலத்தின், தலைமை நீதிபதியை, அதற்கும் சிறிய மாநிலமான ஒடிசாவுக்கு மாற்றியுள்ளனர்.
ஒடிசா மாநில தலைமை நீதிபதி பணியிடம், பிப்ரவரி முதல் காலியாக உள்ளது.
மேலும், நீதிபதிகள் நியமனம், பணி மாறுதல் உள்ளிட்ட விவகாரங்களை கவனிக்க, தேசிய நீதித் துறை நியமன ஆணையம் திங்கட்கிழமை முதல் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது.
ஆனால், ஞாயிற்றுக்கிழமை இரவு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான குழு, கர்நாடக தலைமை நீதிபதியை மாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில், அரசு வழக்கறிஞராக ஆஜராக, பவானி சிங்குக்கு அதிகாரம் இல்லை என, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி வகேலா கூறியுள்ளார்.
மேலும், பவானி சிங் ஆஜர் ஆவதைத் தடை செய்யக் கோரும் வழக்கு தீர்ப்பும், இன்று வெளியாக உள்ளது.
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இதுபோன்ற சூழலில், கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலாவை, ஒடிசா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி உள்ளது, பல்வேறு சந்தேகங்களை கிளப்புகிறது.
சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்கப்பட உள்ள வகேலா, மாற்றப்பட்டது முறையல்ல.
அவர் இடமாற்றம் செய்யப்பட்ட நேரம், பல சர்ச்சைகளை ,சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்து வரும் குமாரசாமி ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில், வகேலா இடமாற்றம் செய்யப்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
நீதிபதி வகேலா இடமாற்றம் செய்யப்பட்டது தொடர்பான சர்ச்சைகளையும், ஐயங்களையும் போக்க வேண்டியது சுப்ரீம் கோர்ட் மற்றும் மத்திய அரசின் கடமை.
எனவே, வகேலாவின் இடமாற்றத்தை ரத்து செய்து, பதவி உயர்வு வரும் வரை கர்நாடக ஐகோர்ட்டில் தொடர செய்ய வேண்டும்.
-கலைஞர் கருணாநிதி .
==================================================
இன்று,
ஏப்ரல்-15.
- முதல்வர் கலைஞர் கருணாநிதியால் வடிவமைத்து கட்டப்பட்ட வள்ளுவர் கோட்டம் திறப்பு.(1976)
- உலகப் புகழ்பெற்ற ஓவியர் லியானர்டோ டா வின்சி பிறந்த தினம்(1452)
- அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் இறந்த தினம்(1865)
- ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் உருவாக்கப்பட்டது(1892)
- சாமுவேல் ஜான்சன், தனது ஆங்கில அகராதியை வெளியிட்டார்(1755)
==================================================
=====================
இங்கு அமைக்கப்பட்டிருக்கிற பிரம்மாண்டமான தேர், திருவாரூர் கோயில் தேரை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது.
தேரின் பீடம் 25 அடி.
சதுரப் பளிங்கால் ஆனது.
ஏழு அடி உயரமுள்ள இரு யானைகள் தேரை இழுப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது.
பெரியதும், சிறியதுமாக உள்ள நான்கு சக்கரங்கள் ஒவ்வொன்றும் ஒரே கல்லால் ஆனவை.
பெரிய சக்கரத்தின் குறுக்களவு 11 1/4 அடி.
பருமன் இரண்டரை அடி. தேரின் உயரம் 101 அடி.
அதன் மேலுள்ள கலசம் 5 அடி. தேரின் அடித்தள அடுக்கில் நுண்ணிய சிற்பங்கள் உள்ளன.
அவை குறிப்பிட்ட குறள்களின் விளக்கும் வகையில் செதுக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள கருவறை, தரையிலிருந்து 30 அடி உயரத்தில் உள்ளது.
10 அடி அகலத்தில் எண்கோண வடிவமாக அமைக்கப்பட்டுள்ளது.
தோரண வாயில் அழகுற அமைக்கப்பட்டுள்ளது.
தூண்கள் ஏதுமில்லாத அரங்கத்தின் நீளம் 220 அடி; அகலம், 100 அடி. ஆசியாவின் மிகப்பெரிய அரங்குகளில் ஒன்று.
4,000 பேர் வரை அமரலாம். அரங்கத்தைச் சுற்றியுள்ள தாழ்வாரத்தின் நீளம் 20 அடி. மேல் மாடியில் மைய மாடமாக ஒரு தாழ்வாரம் உள்ளது.
அது, குறள் மணிமாடம்.
குறள் மணிமாடச் சுற்றில் அறத்துப்பால் கருநிறப் பளிங்கிலும், பொருட்பால் வெண்ணிறப் பளிங்கிலும், காமத்துப்பால் செந்நிறப் பளிங்கிலும் திறந்த புத்தக வடிவில் பொறிக்கப்பெற்றுள்ளன.
திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ள இடம். ஒன்றன்பின் ஒன்றாக மூன்று நீர்நிலைகள் உள்ளன.
அவை, கலசம், கோபுரம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றின் பிம்பங்களைக் காணும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை மாநகரத்தின் மத்திய சென்னையில் அமைந்துள்ளது வள்ளுவர் கோட்டம்.
பரபரப்பான சாலையை ஒட்டி இக்கோட்டம் அமைந்திருப்பதால் 5 நிமிடத்திற்கு ஒருமுறை பஸ் மற்றும் சேர் ஆட்டோ வசதி உள்ளது.