கல்வி [வித்] தாய்?



  • மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள எம்.புதுப்பட்டியில் அமைந்துள்ள அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியின் கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்ததில் ஐந்து மாணவ, மாணவியர் படுகாயமடைந்தனர். 
  • விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகில் உள்ள வடஅகரம் பஞ்சாயத்து யூனியன் பள்ளியின் அலங்கார வளைவுச் சுவர் இடிந்து விழுந்ததில் ஐந்தாம் வகுப்பு மாணவன் அகால மரணமடைந்தான்.

  • தமிழகம் முழுவதுமுள்ள 25,200 அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளிகளில் 10,000 பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் இருபதுக்கும் மேற்பட்ட பாடங்களை இந்த இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே எடுக்க வேண்டிய நிலையில், ஒருவர் விடுப்பு எடுத்தாலோ அல்லது மாற்றுப் பணிகளுக்குச் சென்றுவிட்டாலோ அன்று பள்ளிக்கு ஏறத்தாழ விடுமுறைதான்.
  • ஓராசிரியர் பள்ளிகளே இருக்கக் கூடாது எனத் தமிழக அரசு கூறி வந்தாலும், வத்திராயிருப்பு அருகேயுள்ள ரெங்கபாளையம் தொடக்கப்பள்ளி, பரமக்குடி சிவானந்தபுரம் நகராட்சி தொடக்கப்பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களும், பெற்றோர்களும் தமது பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக இயங்கி வருவதைக் கண்டித்துப் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
  • தமிழகத்திலுள்ள 2,600 அரசு மேநிலைப் பள்ளிகளுள் 1,400 பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப் பிரிவுக்கு ஆசிரியர்கள் அறவே நியமிக்கப்படாததால் கணினி ஆய்வகங்கள் மூடிக் கிடக்கின்றன. ஜனவரி 2014-க்குள் கணினி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
  • தமிழகமெங்குமுள்ள 300 அரசுப் பள்ளிகள் தலைமையாசிரியர்களே இல்லாமல் இயங்கி வருகின்றன. 
  • இந்தக் கல்வியாண்டுக்கான அரையாண்டுத் தேர்வுகள் முடிந்த பிறகும் இப்பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நிலையைக் கருதியாவது உடனடியாகத் தலைமையாசிரியர்களை நியமிக்க வேண்டுமென ஆசிரியர் சங்கங்கள் கோரியுள்ளன.

இவை அங்கொன்றும் இங்கொன்றுமான புள்ளிவிவரங்கள் அல்ல. தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளின் அவல நிலையை எடுத்துக்காட்டும் குறுக்குவெட்டுத் தோற்றமிது. கட்டிட வசதி இல்லாமல் மரத்தடியில் நடக்கும் பள்ளிக்கூடங்கள், ஆய்வுக்கூடங்கள், விளையாட்டு மைதானங்கள், குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லாத பள்ளிக்கூடங்கள் என ஓராயிரம் பிரச்சினைகளை அரசுப் பள்ளி மாணவர்கள் எதிர்கொள்கின்றனர்.
“தேசிய இடைநிலைக் கல்வி இயக்கத்தின்படி 2009 முதல் 2012 வரையிலான மூன்றாண்டுகளில் தமிழகத்தில் 1,096 பள்ளிகள் புதிதாகக் கட்டப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2009-10 முதல் 2015 பிப்ரவரி வரையிலான ஆறாண்டுகளில் 125 பள்ளிகள் மட்டுமே புதிதாகக் கட்டப்பட்டுள்ளன.
 75 பள்ளிகள் புதிதாகக் கட்டப்பட்டு வருகின்றன. 
மீதமுள்ள 896 பள்ளிகளைக் கட்டுவதற்கான ஆயத்த பணிகள்கூட இன்னும் தொடங்கப்படவில்லை. 2,033 பள்ளிகளைச் சீரமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்ட பிறகும் அதற்கான பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. மாணவிகளுக்கு 44 விடுதிகளைக் கட்ட நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் இதுவரை 18 விடுதிகள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன.”
“5,265 பள்ளிகளில் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு வசதியை ஏற்படுத்த அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை 920 பள்ளிகளில் மட்டுமே இந்த வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. மேலும், 1,616 அறிவியல் ஆய்வகங்கள், 1,504 கணினி அறைகள், 1,873 நூலகங்கள், 1,990 கலை/கைத்தொழில் அறைகள் கட்டுவதற்கு அனுமதி அளித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் இதற்கான பணிகளைத் தமிழக அரசு இன்னும் தொடங்கவில்லை.”
 டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த திட்ட ஒப்புதல் வாரியக் கூட்டத்தில் மனித வள மேம்பாட்டுத் துறையின் இடைநிலைக் கல்வித் துறை செயலர் பிருந்தா சரூப் தனது கவலையையும்,கண்டனத்தையும்  தமிழக அதிகாரிகளிடம் தெரிவித்திருக்கிறார்.
எதற்காகத்தெரியுமா?
மிழக அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு மத்திய  அரசு ஒதுக்கிய 4,400 கோடி ரூபாயை பயன்படுத்தாமல் அதனை மீண்டும் மத்திய அரசுக்கு ஒப்படைத்து சாதனை  செய்து தனது கல்விச்சேவையை தமிழக் ஜெயா அரசு செய்து  பெற்றுள்ளது.
இதற்கு காரணம் என்ன?இங்கு இருக்கும் பள்ளிகள் கட்டிடங்கள் இடிந்து விழந்து கொண்டிருக்கிறது.
பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் போதுமானதாக இல்லை.புதிய வகுப்பறைகள் கட்ட வெண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில் மத்திய அரசு கொடுத்த ஒரு கோடி,இரு கோடி அல்ல.4400 கோடிகளை ஜெயா அரசு பயன்படுத்தாமல் திருப்பி அனுப்ப ஜெயலலிதா சொல்லும் காரணம் என்ன?
மின் திட்டங்களை செய்யாமல் அதிகப்பணம் கொடுத்து வெளி மாநிலங்களில் வாங்கி தனிப்பட்ட முறையில் லாபம் சம்பாதிப்பதை போல் கல்வித்துறையிலும் அரசு பள்ளிகளை முடக்கி தனியார கல்வி வியாபாரிகள் கொள்ளைக்கு வழி வகுத்து கொடுத்து தான் தனிப்பட்ட முறையில் பணம் சம்பாதிக்கவே இந்த வந்த நிதியை செலவிடாத அயோக்கியத்தனம் நடந்துள்ளது.
சொகுசு அரசுப் பேருந்துகளை  குளிர் காலத்தி ஏ.சி.போட்டும் வெயில் காலத்தில் இயக்காமலும் நட்டத்தை உண்டாக்கி,ஓட்டை உடைசலாக ஓடவைத்து அதன் மூலம் தனியார், ஆம்னி பேருந்து முதலாளிகளின் கொள்ளைக்கு உதவுவதைப் போலவே, தனியார் கல்விக்கொள்ளைக்காக அரசுப்பள்ளிகள் ஒழித்துக் கட்டப்படுகின்றன. தனியார்மயத்தை மேலும் மேலும் தீவிரப்படுத்துவதற்காகவே ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியைப் படிப்படியாகக் குறைப்பது மட்டுமின்றி, மைய அரசால் ஒதுக்கப்பட்ட 4,400 கோடி ரூபாயையும் திருப்பியனுப்பியிருப்பதன் மூலம், நான் கல்வி வியாபாரிகளின் கையாள்தான் என்று ஐயந்திரிபற நிரூபித்திருக்கிறது ஜெ அரசு.
முதல்வர் பதவியில் அமர்ந்தவுடனேயே பொதுப் பாடத்திட்ட முறையைப் (சமச்சீர் கல்வி) புதைகுழிக்கு அனுப்ப முயன்று தோற்றுப் போன ஜெயா கும்பல், அரசுப் பள்ளிகளை முடிந்த மட்டும் ஒழித்துக் கட்டுவதையே தனது கொள்கையாகக் கொண்டு செயல்படுகிறது.
சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான ஏழு பள்ளிகளில் காணப்படும் குறைவான மாணவர் சேர்க்கையைக் காட்டி, அவற்றின் நிர்வாகத்தைத் தனியார்வசம் ஒப்படைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
 போதிய மாணவர்கள் சேரவில்லை என்ற காரணத்தைக் காட்டி, தமிழகமெங்கும் ஏறத்தாழ 1,000 பள்ளிகள் மூடப்பட்டு விட்டன. 
அந்த மாணவர்கள் சேர்க்கை குறைந்துவிட்டதைக் காரணமாகக் காட்டி 1,000 ஆசிரியர் பணியிடங்கள்  திரும்பப் பெறப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இடையே கற்கும் திறனில் பெருத்த வேறுபாடு இல்லை என்பதைப் பல ஆய்வுகள் மெய்ப்பித்த பிறகும், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அரசுப் பள்ளிகளைவிட அதிகரித்துக் கொண்டே போவதற்கு பெற்றோர்களின் ஆங்கில மோகம் மட்டுமின்றி, அரசு பள்ளிகளில் காணப்படும் இந்தச் சீரழிவிற்கும் முக்கிய இடமுண்டு. 
இச்சீரழிவை மென்மேலும் தீவிரப்படுத்துவதன் வழியாகத் தமிழக மாணவர்களை வேகவேகமாகக் கல்விக் கொள்ளையர்களிடம் தள்ளிவிட்டு லாபம் சம்பாதிக்கிறது.இந்த ஜெயலலிதா கட்சி பினாமி முதல்வர் ஆட்சி.
                                                                                                                                         - குப்பன்
நன்றி:புதிய ஜனநாயகம்.
=================================================================================
சார்லி சாப்ளின்
 பிறந்த நாள்: 16.04.1889

அப்பொழுது அந்தச் சிறுவனுக்கு 5 வயதுதான். அவனது தாய் மேடையில் நடித்துக்கொண்டிருந்தார். 
அப்போது திடீரன அவரால் சரிவரப் பேச முடியாமல் போனது.
 அவருக்குப் பதிலாக அந்தச் சிறுவன் நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
அந்தச் சிறுவன் பாடியபொழுது மேடையில் பண மழை பொழிந்தது. உடனே பாடுவதை நிறுத்தினான் அந்தச் சிறுவன்.
 முதலில் பணத்தைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு பிறகு பாடுவதாக அறிவித்தான். இதைக் கேட்டதும் அரங்கினுள் ஒரே சிரிப்பு.
 அரங்கத்தின் நிர்வாகி ஒரு கைக்குட்டையைக் கொண்டு பணத்தைச் சேகரிக்க உதவினார்.
அந்தப் பணத்தை அவரே எடுத்துக்கொள்வார் என்று நினைத்தான் சிறுவன். தான் அப்படி நினைத்ததை அரங்கினுள் இருந்த ரசிகர்களிடமும் கூறிவிட்டான்.
 இது மீண்டும் அரங்கினுள் பலத்த சிரிப்பைக் கிளப்பியது.
அந்த நிர்வாகி பண முடிப்புடன் மேடையைவிட்டு இறங்கி நடந்தார். சிறுவன் ஆர்வம் கலந்த சந்தேகத்துடன் அவரையே பின் தொடர்ந்தான். ரசிகர்களின் சிரிப்பு இன்னும் அதிகமாகியது. 
அந்த நிர்வாகி தன் தாயிடம் அந்தப் பண முடிப்பைக் கொடுக்கும் வரை சிறுவன் மேடைக்குத் திரும்பவில்லை.
சிறுவனாக இருந்தபோதே தன் இயல்பான செயல்களால் அனைவரையும் சிரிக்கவைத்த அந்தச் சிறுவன்தான் சார்லி சாப்ளின்.
 உலகம் போற்றும் மாபெரும் நகைச்சுவைக் கலைஞனாக உருவான அந்தச் சிறுவனின் முதல் மேடை அனுபவம் இப்படித்தான் தொடங்கியது.
சாப்ளினின் நகைச்சுவையில் எப்போதுமே ஒரு மென்மையான சோகம் கலந்திருக்கும். இது ஏன் தெரியுமா? 
அந்தச் சோகத்துக்கு என்ன காரணம் என்பதைக் குழந்தைப் பருவத்தில் நடந்த ஒரு நிகழ்வை சாப்ளின் பின்னாளில் நினைவு கூர்ந்தார்.
“அந்நாளில் நடந்த ஒரு நிகழ்ச்சி எனக்குத் தெளிவாக நினைவிருக்கிறது. எங்கள் தெருவின் ஒரு கோடியில் ஆடுகளை வெட்டும் இடம் ஒன்றிருந்தது. பலியாகப் போகும் ஆடுகளை எங்கள் வீட்டின் வழியாகத்தான் இழுத்துப் போவார்கள்.
 ஒரு நாள், அதில் ஒரு ஆடு தப்பி ஓடியது.
தெருவில் போய்க்கொண்டிருந்தவர்களுக்கு இது வேடிக்கையாக இருந்தது. சிலர் ஆட்டைப் பிடிக்க முயன்றார்கள். 
சிலர் தடுமாறி விழுந்தார்கள். 
அந்த ஆட்டின் பதற்றத்தையும், தவிப்பையும் கண்டு எனக்கு ஒரே சிரிப்பு.
ஆனால் அந்த ஆட்டை மீண்டும் கொல்வதற்குப் பிடித்துச் செல்லும் போதுதான் அந்நிகழ்சியின் சோகம் எனக்குப் புரிந்தது.
 நான் உடனே வீட்டுக்குள் ஓடினேன்.
 என் அம்மாவிடம், ‘அவர்கள் அந்த ஆட்டைக் கொல்லப் போகிறார்கள்' என்று கூறி அழுதேன்.
 அந்தக் காட்சி என் மனதில் பல நாட்கள் இருந்தது. சோகமும் நகைச்சுவையும் கலந்த அந்தக் காட்சிதான் எதிர்காலத்தில் என் படங்களுக்கு அடிப்படையாக இருந்திருக்குமோ என நினைத்து வியக்கிறேன்”.
சாப்ளின் தனது நகைச்சுவையால் யாரையும் காயப்படுத்தியதில்லை. “என்னுடைய வலி பிறரின் சிரிப்புக்குக் காரணமாக இருக்கலாம். 
ஆனால், என்னுடைய சிரிப்பு ஒருபோதும் பிறருக்கு வலியை ஏற்படுத்தக் கூடாது” என்ற சாப்ளினின் புகழ்பெற்ற வாசகத்தின் பின்னணிக்கு என்ன காரணம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது இல்லையா?

 நன்றி:இந்து.

மாயா பஜார்


ஊடக சந்திப்பில் ஊடல்?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?