சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்தானா?
இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் தலைவரான சௌதாலா அரியானா மாநிலத்தில் நான்குமுறை முதல்வராக இருந்தவர்.
19992005ம் ஆண்டுகளில் முதல்வராக இருந்தபோது நடந்த ஆசிரியர் தேர்வு ஊழல் இந்தியாவையே நாறடித்தது. 3,206 இளநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டதில் ஏராளமான முறைகேடுகள் அரங்கேறின.
போலி ஆவணங்கள் கொடுத்தும் திருத்தியும் ஏராளமானோர் பணி நியமனம் வாங்கினர். சி.பி.ஐ விசாரித்த இந்த வழக்கில் சௌதாலா, அவரது மகன் அஜய் சௌதாலா, ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சஞ்சீவ் குமார், வித்யா தர், ஷேர் சிங் பத்சமி உட்பட 55 பேர் மீது ஊழல் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
டெல்லி சி.பி.ஐ கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. 2013 ஜனவரி 16ம் தேதி சௌதாலா, அவரது மகன் அஜய் சௌதாலாவுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது டெல்லி சி.பி.ஐ நீதிமன்றம். அத்துடன் மேலும் பலருக்குத் தண்டனை விதிக்கப்பட்டன.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து 2013 பிப்ரவரி 7ம் தேதி டெல்லி ஹைகோர்ட்டில் சௌதாலா மேல்முறையீடு செய்தார்.
சௌதாலாவுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையை டெல்லி ஹைகோர்ட் கடந்த மார்ச் 5ம் தேதி உறுதி செய்தது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த டெல்லி ஹைகோர்ட், சௌதாலா மற்றும் அவரது மகன் அஜய் சௌதாலா, சஞ்சீவ்குமார், வித்யா தர், ஷேர் சிங் பத்சமி ஆகியோருக்கு விசாரணை கோர்ட் வழங்கிய 10 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்தது.
'80 வயது முதியவரான சௌதாலாவின் வயதைக் கருத்தில்கொண்டு கருணை காட்ட வேண்டும் என்பதை என்னால் ஏற்க முடியாது.
முதல்வர் பதவியில் இருந்த சௌதாலா, இளைஞர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் முன்னுதாரணமாக விளங்கியிருக்க வேண்டும். ஆனால், அவர்களின் நம்பிக்கையை சீர்குலைத்து அவர்களை ஏமாற்றிவிட்டார். வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கும் இளைஞர்களின் மனதில் ஏமாற்றத்தையும், கவலையையும் ஏற்படுத்திவிட்டார்’ என தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார் நீதிபதி சித்தார்த் மிரிதுல்.
சௌதாலா வழக்கில், கீழ் கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது 2013 ஜனவரி 16ம் தேதி. இதன் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு டெல்லி உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது 2015 மார்ச் 5ம் தேதி.
அதாவது சௌதாலாவின் மேல்முறையீட்டு மனு மீது 2 ஆண்டுகள் கழித்துதான் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
18 ஆண்டுகளாக நீடித்த ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் 'நான்கு ஆண்டுகள் சிறை, 100 கோடி அபராதம்’ என 2014 செப்டம்பர் 27ம் தேதிதான் கீழ் கோர்ட்டில் தீர்ப்பு எழுதினார் குன்ஹா.
இதன் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஜனவரியில் தொடங்கி 41 நாட்கள் தொடர்ந்து நடைபெற்று முடிந்திருக்கிறது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவின் அடிப்படையில் மூன்றே மாதங்களில் மேல்முறையீட்டு மனு விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்புக்காகக் காத்திருக்கிறார் ஜெயலலிதா. சௌதாலாவுக்கு மேல்முறையீட்டு மனு முடிக்க இரண்டு ஆண்டுகள் ஆகின. ஜெயலலிதாவுக்கு சீக்கிரமே வழக்கு முடிந்திருக்கிறது.
''80 வயதான ஓம்பிரகாஷ் சௌதாலா 123 நாட்கள் சிறைத் தண்டனை அனுபிவித்த பிறகே ஜாமீன் பெற முடிந்தது.
கால்நடைத் தீவன வழக்கில் தண்டிக்கப்பட்ட லாலுவுக்கு 75 நாட்களுக்குப் பிறகே ஜாமீனில் விடுதலையாக முடிந்தது.
இவர்களின் மேல்முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆனால், ஜெயலலிதாவுக்கு அவர் கோரியவாறு மேம்முறையீட்டு மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது.
வழக்கின் போது 127 முறை ஜெயலலிதா கேட்டபோதெல்லாம் வாய்தா வழங்க்கப்ப்ட்டுள்ளது.
அவர் கேட்ட நீதிபதிகள்,அரசு வழக்குரைஞர்களுக்கு எதிர்ப்புகளை மீறி உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்க்கியுள்ளது.ஜெயலலிதா வுக்கு தேவையான பிணை கேட்ட்பு மனுவை எடுத்த அவசரத்தை அவருக்கு ஆதரவாக வாதாடும் பவானி சிங் விவகாரத்தை விசாரணை முடியும்வரை வழக்கை எடுக்கவில்லை.அவசரம் காட்டாமல் இழுத்தடித்துள்ளது.
இப்போதும் கூட அவசரமாக பிணை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.பவானிசிங்க் விவகாரத்தால் இழுபறி வந்ததால் இரு நீதிபதிகள் கருத்தை மாற்ற உடனே மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு தத்து உத்திரவிட்டு:ளார் .இது போன்று அவசரத்தை ஈன் மற்ற வழக்குகுகளில் கட்டப்படுவதில்லை.இப்படிப்பட்ட அவசரம் இதுவரை இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே கட்டப்பட்டதாக தெரியவில்லை.தீவிரவாதி கசாப் மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கூட காட்டப்படவில்லை.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து ஜெயலலிதா வழக்கில் காட்டும் அவசர த்தை அதேபோல் முன்னாள் முதல்வர்கள் தகுதியுள்ள சவ்தாலா ,
லாலு பிரசாத் வழக்குகளில் காட்டவில்லை என்பது மக்களி்ன் கவனத்துக்கு வந்துள்ளது.
கால் நூற்றாண்டுகளாக சிறையில் வாட்டும் முருகன்,நளினி வழக்கில் இந்த அவசரம் ஏ ன் இல்லை.?
இதையெல்லாம் பார்க்கும்போது 'சட்டத்தின் முன்பு அனைவரும் சமம்தானா?’ என்ற வினா சாமானியர் மனதில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை''
ஜெயலலிதா சம்மந்தப்பட்ட வழக்கில் மட்டும், அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திலேயே மின்னல் வேகத்தில் பெரிய அமர்வு ஏப்ரல் 21ஆம் தேதியன்று விசாரிக்குமென்று அறிவிக்கப்பட்டு விட்டது
எனக்குக் கிடைத்த இன்னொரு முக்கியமான தகவலையும் தெரிவிக்கிறேன். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அரசு வழக்கறிஞராக மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் பவானி சிங் ஆஜரானது தொடர்பான வழக்கில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முடிவு செய்யலாம் என்று 15ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட்ட மறுநாளே, அதாவது 16ஆம் தேதியன்றே, 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு 21ஆம் தேதியன்று விசாரிக்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
ஆனால் ராஜீவ் காந்தி படுகொலை சம்பந்தப்பட்ட வழக்கு அரசியல் சட்ட அமர்வுக்குப் பரிந்துரை செய்யப்பட்டு ஓராண்டு கடந்தும், இன்னும் அரசியல் சட்ட அமர்வு அமைக்கப்படவில்லை.
அதைப் போலவே சுமார் முப்பதுக்கும் மேலான இதுபோன்ற வழக்குகளில் பெரிய அமர்வுக்குப் பரிந்துரை செய்யப்பட்டு, பல மாதங்கள் ஆகியும், பெரிய அமர்வு அமைக்கப்படாமல் அந்த வழக்குகள் எல்லாம் கேட்பாரற்றுக் கிடக்கின்றன.
ஆனால் ஜெயலலிதா சம்மந்தப்பட்ட வழக்கில் மட்டும், அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திலேயே மின்னல் வேகத்தில் பெரிய அமர்வு ஏப்ரல் 21ஆம் தேதியன்று விசாரிக்குமென்று அறிவிக்கப்பட்டு விட்டது.
இந்தப் பெரிய அமர்வு அமைக்கப்படுவது சம்பந்தமாக, முக்கியமான ஒருவரே அவசர அவசரமாக உச்ச நீதிமன்றத்திலே பதிவாளர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து ஏற்பாடுகளைச் செய்தார் என்றும், ஜெயலலிதா வழக்கிலே இந்த அளவுக்கு முக்கியத்துவம் காட்டப்படுவது ஏன் என்றும், மூன்று நீதிபதிகள் யார் என்று தெரியாத நேரத்தில், அமர்வு 21ஆம் தேதி நடைபெறும் என்று எவ்வாறு அறிவிக்கப்படலாம் என்றும், இந்தச் சம்பவங்கள் எல்லாம் குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் தெரிந்துதான் நடைபெறுகின்றனவா அல்லது இவைகள் அவர்கள் அனுமதியின் பேரில்தான் நடக்கிறதா?என்று அனைத்து மாநில உயர் நீதிமன்ற வழக்குரை ஞர்கள் மத்தியிலே மிகப் பெரிதாக விவாதிக்கப்படுகிறதாம் .
========================================================================
========================================================================
இன்று,
ஏப்ரல்-20.
முஸ்லீம் மதத்தை உருவாக்கிய முகமது நபி பிறந்த தினம்(570)- திரைப்படத்தில் ஒலியை இணைக்கும் வைட்டாபோன் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது(1926)
- ஜெர்மனியை ஆண்ட சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் பிறந்த தினம்(1889)
- இழ்சாக் கார்ட்டியே, கனடாவை கண்டுபிடித்தார்(1534)
========================================================================
கணினியை சுத்தமாக வையுங்கள். |