வியாழன், 2 ஏப்ரல், 2015

மாட்டிறைச்சியின் மறுபக்கம்.!
மோடி யின் இந்துத்துவா கொள்கை ஆட்சியில் மாட்டிறைச்சிக்கு தடை,மாடுகளைக் கொல்லத் தடையால் பலப் பிரச்னைகள் உணடாகியுள்ளது.
அந்த பட்டியலில் மருந்துப் பொருட்கள் விலை உயர்வும் இடம் பிடித்துள்ளது.
ஜெலட்டின் கேப்ஸ்யூல் கள், வைட்டமின் சத்து மாத்திரைகள் மருந்துப் பொருள்கள் மாட்டின் எலும்புகள், தோல், கால்நடைகளின் திசுக்கள் ஆகியவைகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன.
இதனால் இப்பொருள் களின் விலைகளும் உயரு கின்றன.
மாட்டிறைச்சிக்காகத் தடை கோரி போராடுப வர்கள் இந்த உண்மை தெரியும்போது சற்று கடினமாகவே இருக்கும். 
ஆனால், கால்நடைகள் கொல்லப்படுவது வெறும் இறைச்சி உண்பவர்களின் மகிழ்வுக்காக மட்டுமல்ல. மருந்து தயாரிக்கும் துறை களிலும் பயன்படுத்துவதற் காக கால்நடைகள் கொல் லப்படுகின்றன.
மருந்துகளை ஜெலட்டின் கேப்ஸ்யூல்களில் (குப்பிகள்) அடைத்து வழங்குகிறார்கள். வைட்ட மின் சத்து மாத்திரைகள், கோழித் தீவனம் எலும் புகள், தோல் மற்றும் கால் நடைகளின் திசுக்களிலி ருந்து தயாரிக்கப்படுகிறது.
மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் மூத்த செயல்அலுவலராக உள்ள ஒருவர் கூறும்போது, சில வழிகளில் அல்லது மற்ற வழிகளில் நாம் எல்லோ ருமே நம்முடைய அன் றாட வாழ்வில் மாட்டி றைச்சியை எடுத்துக்கொள் கிறோம் என்று கூறினார். மாநில அரசு வழக்கு போட்டுவிடும் என்கிற அச்சத்தால் தம் பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண் டுள்ளார்.
இந்தியாவில் பெரும் பாலான ஜெலட்டின் தயாரிக்கும் நிறுவனத்தினர் கூறும்போது,  மாட்டின் எலும்புகளைக் கொண்டுதான் ஜெலட் டின் தயாரிக்கிறோம் என்று கூறுகின்றனர். மகாராட்டிரம் மற்றும் அரியானா மாநிலங்களில் மாட்டிறைச்சித் தடையில் கடுமையான சட்டங்களின் மூலம் தடை போடப்பட் டுள்ளதால், வரும் நாள் களில் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் அச் சுறுத்தலாக இருப்பதாக அச்சத்தை வெளிப்படுத் துகின்றனர்.
 எருமைகளின் எலும்பு களையே மருந்து நிறுவனங்கள் பயன் படுத்துகின்றன. எருமை யின் எலும்பிலிருந்து கிடைக்கும் உறுதியான படிமங்களிலிருந்து எடுத் துக்கொள்கிறார்கள்..
ஆனால் இதில் உள்ள பிரச் சினை என்னவென்றால், அவைகளை எடுத்துச் செல்லும்போது, நேரடியாக எந்த மாட்டின் எலும்பி லிருந்து எடுக்கப்பட்டது என்பதை அது எருமை மாட்டிலிருந்து எடுக்கப் பட்டதா?
 பசு மாட்டிலி ருந்து எடுக்கப்பட்டதா? 
என்று யாரும் சாதாரண மாகக் கூறிவிடமுடியாது. 
ஆனாலும், இதில் எந்த வகை எலும்பு என்பதில் சிலர் ஏற்படுத்துகிற பிரச் சினை மருந்து உற்பத்தித் தொழிலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறினார்.
பசுக்கொலை தடுப்புச் சட்டத்தை விரிவாக்கி எருது, வண்டி மாடுகளையும் மகாராட்டிரம் மற்றும் அரியானா அண்மையில் குற்றமாக்கி சட்டங்களை நிறைவேற்றியுள்ளன.
எருதைக் கொல்வதும் தற்போது தண்டனைக்குரியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராட்டிரத்தில் அய்ந்து ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அரியானாவில் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று அறி விக்கப்பட்டுள்ளது.
மாட்டிறைச்சியில் முக்கிய பங்கு வகிப்பவை எருமைமாடுகள்தான். இது வரையிலும் சட்டத்தின் படி தடை இல்லாமல் இருந்தது. 
இப்போது அதற்கும் தடை இல்லாவிட்டாலும், தண்டனைக்கு பயந்து ஏராளமான உணவு விடுதிகள், உணவகங்களில் மாட்டிறைச்சி உணவு வழங்குவதை நிறுத்திவிட்டனர்.
21 லட்சம் கால்நடைகள் பன்னாட்டு வேளாண் முறைமை நிறுவனத்தின் தகவலின்படி, இந்தியா உலகிலேயே கால்நடை களில் அதிக எண்ணிக்கை உள்ள நாடாக இருக்கிறது. 
21 இலட்சம் கால்நடை எலும்புகள் தொழிற் சாலைகளில் பயன்படுத் தப்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
அதிக அளவிலான கால் நடைகளின் எண்ணிக்கை இருப்பதால் ஜெலட்டின் ஏற்றுமதியாளர்கள் முன்னணியில் உள்ளனர்.
மோடியின்  குஜராத்தில் இயங்கிவரும் நீட்டா தொழிற்சாலை தான் ஜெலட்டின் உற் பத்தியில் முக்கிய மய்யமாக உள்ளது.
கால்முட்டி வலிக்கு அளிக்கப்படும் புரோட் டின் துணைப்பொருள் கொலோஜென் பெப் டைட், ஜெலட்டினிலி ருந்து உருவாக்கும் தொழில் தற்போது அபாயத்துக் குள்ளாகியுள்ளது.
ஜெலட்டின் உற்பத்தித் தொழிலில் ரூ.5,000 கோடி மதிப்பிலான ஜெலட் டினை வாங்குகிற இடத் தில் உள்ள முதன்மையான பெரிய நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.
மருந்து நிறுவனங்களில் ஒவ்வொரு 10 மாத்திரை கள் விற்பனையாகும்போ தும் ஒரு கேப்ஸ்யூல் விற்பனையாகிறது. 
ஆஸ்த் துமாவுக்கான மருந்துகளில், கேப்ஸ்யூல்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் சார்பில் கூறும்போது, கேப்ஸ் யூல்கள் பயன்பாடு அலோ பதி மருத்துவத்துக்கு மட்டும் என்கிற வரை யறைக்குட்பட்டதல்ல.
 ஆயுர்வேத,சித்த  மருந்து தயா ரிப்பாளர்களும் தற்போது  கேப்ஸ்யூல் முறையைக் கையாளத் தொடங்கி விட்டார்கள்.
 தாழ்த்தப்பட்ட வகுப்பின ராக உள்ளவர்களே எங் களைப்போன்ற  மருந்து தொழில் நிறுவனங்களுக்கு கால்நடை எலும்புகளை சேகரித்துக் கொடுத்து வருகிறார்கள். 
இந்தத் தடையானது அவர்கள் மத்தியில் பெரும் தாக் கத்தை ஏற்படுத்திவிடும். ஆகவே, இனி நாங்கள் கேப்ஸ்யூல்களை இறக் குமதி செய்ய வேண்டி உள்ளது. அதேநேரத்தில் பலபேருக்கான பணிவாய்ப் பும் இதில் தொடர்புள்ளது என்பதை உணரவேண்டும்.
மருந்துகளில் ஏராள மான அளவில் மாட் டிறைச்சியிலிருந்து பெறப் படக்கூடிய பொருள்கள்  பயன் படுத்தப்படுகின்றன.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ரோட்டாவைரஸ் போன்ற தடுப்பு மருந்துகள் எதிர்ப்பு சக்திக்காக பரிந் துரைக்கப்படுகின்றன. 
அறுவை சிகிச்சையின் போது இரத்தம் உறைந்து போவதைத் தடுப்பதற்கான துரோம்பின் எனும் மருந்து மாட்டின் கருவிலிருந்து பெறப்படும் சீரத்திலிருந்தும் பசு மாட்டின் கருவிலிருந்தும் துணைப்பொருள்களாக பெறப்படுகின்றன.
இல்லினாய்ஸ் பகுதி யில் இயங்கிவரும் பன் னாட்டு செர்ரம் தொழில் கூட்டமைப்பு விலங்குகளி லிருந்து பெறப்படும் சீரம் விற்பனையை முறைப்படுத் திவருகிறது. 
அந்த அமைப் பின் உறுப்பினர்கள் மருந்து நிறுவனங்களுக்கு பெற்றுத்தருவதற்கும், விற்பனை செய்வதற்கும் பொறுப்பானவர்களாக உள்ளனர்.
மாட்டின் கருவிலிருந்து கிடைக்கும் இரத்தம் இந்தியாவிலிருந்து பெறப் படுகிறது. 
பன்னாட்டு செர்ரம் தொழில் கூட்ட மைப்புடன் இணைந்து  இந்தியாவிலிருந்து விநி யோகஸ்தர்கள் அதற்குரிய கால்நடை மருத்துவச் சான்றுகளுடன் அளிப் பார்கள் என்பதை அக்கூட் டமைப்பின் சார்பில் உறுதி செய்துள்ளனர்.

மாட்டிறைச்சிக்குத் தடைவிதிக்கின்ற மாநில அரசுகள் வெளிநாடுகளி லிருந்து கால்நடைகளின் இறைச்சிகளை இறக்குமதி செய்வதையும் தண்ட னைக்கு உரிய குற்றமாக கொண்டுவருவதில், மருத் துவத்துறைக்காக மாட்டி றைச்சி தடைகுறித்து மூளையை பயன் படுத்தி மறு சிந்தனை செய்ய வேண்டும்.
கடந்த பத்தாண்டு களில் மருந்து தொழிலில் கால்நடைகளில் மாற்றாக சிலவற்றைப் பயன்படுத் துவது குறித்து ஆய்வு நடைபெற்றுள்ளது.
அறுவை சிகிச்சைக்குப் பின் தையல் போட பயன் படும் நூலாக, மாட்டின் குடலுக்குப்பதிலாக மருந்து நிறுவனங்கள் செம்மறி ஆடுகளைப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளன. என் றாலும் மாட்டிறைச்சியின் துணைப் பொருளையே பரவலாகப் பயன்படுத்தி வருகிறார்கள்
சில ஆண்டு களுக்கு முன்பாக தாவரங் களிலிருந்து (கடற்பாசி, மரக்கூழ்) பெறப் படும் கேப்ஸ்யூல்களை அறிமுகப்படுத்தப்பட்டன.ஆனால் மருந்து நிறுவனங்கள் அதை ஒரு பொருட்டா கவே எடுத்துக்கொள்ள வில்லை. இதற்கெல்லாம் பற்றாக்குறை ஏற்படும் என்று நிறுவனங்கள் கருதின .  நுகர்வோரும் தாங்கள் உட் கொள்ளும் மருந்து வேலை செய்கிறதா என்பதை தவிர குப்பி பிளாஸ்டிக்கா,மாட்டின் ஜெலட்டினா,மரக்கூழா என்பதைப்பற்றி  கவலை கொள்வ தில்லை
இந்த மாட்டிறைச்சி  விவகாரத்தின் மறுபக்கத்தை பார்த்தீர்களா?
=========================================================================
இன்று,
ஏப்ரல்-02.
  • உலக ஆட்டிசம் தினம்
  • உலக சிறுவர் நூல் தினம்
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் வ.வே.சு.ஐயர் பிறந்த தினம்(1881)
  • அமெரிக்காவின் முதல் திரையரங்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திறக்கப்பட்டது(1902)
  • போக்லாந்து தீவுகளை அர்ஜெண்டீனா முற்றுகையிட்டது(1982)
ஆட்டிசம் என்றால் ?
ஆட்டிசம்  என்பது குழந்தைகளுக்கு மூளைவளர்ச்சி குறைவதால் ஏற்படுகிற நோய் என்று தான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசும் மூளைவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பட்டியலில் தான் ஆட்டிசக் குழந்தைகளைச் சேர்த்திருக்கிறது.
ஆனால், ஈஈஜி, சிடி ஸ்கேன், எம் ஆர் ஐ ஸ்கேன் எனப் பல பரிசோதனைகளில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மூளையைப் பரிசோதித்த போது அவர்களுக்கு மூளை பாதிப்பு இல்லை என்கிற உண்மை தெரியவந்தது.
 இது குழந்தைகளைப் பாதிக்கின்ற மூளை நரம்பு வளர்ச்சி சார்ந்த கோளாறுகளில் ஒன்று.
 இது பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைளைத்தான் அதிகம் பாதிக்கிறது. இந்தியாவில் தற்போது ஒரு லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ளது. இந்த எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.
 சமீபத்திய புள்ளிவிவரப்படி ஆயிரத்தில் ஒரு குழந்தைக்கு ஆட்டிசம் உள்ளது. இது குழந்தையின் மொழித் திறன், பேச்சுத்திறன், சமூகத் திறன், ஒருங்கிணைப்புத்திறன் போன்ற நரம்பு சார்ந்த செயல்பாடுகளை வெகுவாக பாதிக்கிறது. இவர்களுக்கு அறிவு இருக்கும்.ஆனால் அந்த அறிவைப் பயன்படுத்தவோ, வெளிப்படுத்தவோ வழிதெரியாது.
 இவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை இவர்களால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் அந்தப்புரிதலை நமக்குப் புரியவைப்பதற்கான மொழிதான் தெரியாது.
ஆட்டிசம் குறைபாடு ஒரு பரம்பரைக் கோளாறு.
குழந்தையின் மரபணுவில் தோன்றும் பிழை காரணமாக இது ஏற்படுகிறது. நெருங்கிய உறவில் திருமணமான பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்தக் குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
 மிகவும் தாமதமான திருமணம், தாமதமான குழந்தைப் பேறு, நீரிழிவு நோய் போன்றவை பெண்ணிடம் காணப்பட்டால் அந்தப் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்கு ஆட்டிசம் குறைபாடு ஏற்படலாம்.
 கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிக்கு ருபெல்லா வைரஸ் தாக்கினால், தைராய்டு பிரச்னை இருந்தால் அல்லது போலிக் அமிலச்சத்து குறைவாக இருந்தால் குழந்தைக்கு இந்தக் குறைபாடு வரலாம்.
கர்ப்பிணியிடம் காணப்படும் மனஅழுத்தம், மது அருந்தும் பழக்கம், புகைபிடித்தல், வலிப்பு நோய் மற்றும் மன நோய்க்கான மாத்திரைகளைச் சாப்பிடுதல் போன்ற காரணிகள் இந்தக் குறைபாடு ஏற்படுவதை ஊக்குவிக்கின்றன.
குழந்தையின் வயிற்றில் ஏற்படுகிற வளர்சிதை மாற்றப் பிரச்சினைகளும் இந்தக் குறைபாட்டை ஏற்படுத்தலாம் என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று.


அறிகுறிகள்,

தாய் பாலூட்டும் போது தாயின் கண்களைப் பார்க்காது.
ஆறு மாதம் ஆனால் கூட தாயின் முகம் பார்த்துச் சிரிக்காது.
ஒன்பது மாதம் கடந்த பிறகும் ஒலி எழுப்பினால் அல்லது பெயரைச் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்க்காது.
 கண்ணில்படும் பொருள்களை ஆர்வமாகப் பார்க்காது;
 அவற்றைத் தனக்கு விளையாடத் தரும்படி கேட்காது.
 டாட்டா காட்டுதல் போன்ற கை அசைப்பு இருக்காது.
மழலைப் பேச்சு பேசாது.
 மற்ற குழந்தைகளுடன் விளையாட முயற்சிக்காது.
குழந்தையின் வளர்ச்சிப்படிகளில் தாமதம் ஏற்படுவதும்உண்டு.
 மேற்சொன்ன அறிகுறிகள் தெரிந்தால் போகப் போகச் சரியாகிவிடும் என்று பெற்றோர்கள் எண்ணிவிடக்கூடாது. அதே வேளையில் இவற்றில் ஒருசில அறி குறிகளை மட்டும் வைத்துக் கொண்டு குழந்தைக்கு ஆட்டிசம் உள்ளது என்றும் கணித்துவிடக்கூடாது.
 பல அறிகுறிகள் இருந்து குழந்தையின் இயல்பான திறமைகள் பாதிக்கப்படுகின்றன என்றால் அப்போது குழந்தைக்கு ஆட்டிசம் ஏற்படுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.
ஆட்டிசம் உள்ள குழந்தைக்கு மூன்று வயதுக்கு முன்னரே மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சைகளை மேற்கொண்டால் அதனால் ஏற்படும் நன்மைகள் அதிகம்.
ஆட்டிசத்துக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவுமிலை. 
அன்பு ஒன்றே மருந்து. 
 இந்தக் குழந்தைகளுடன் அன்போடு நெருங்கிப் பழகும்போது தான் நம்மை நெருங்கி வருவார்கள். அதனால் இவர்களோடு அதிக நேரம் செலவழிக்க வேண்டும். 
பூங்கா, கோவில், கடற்கரை, பொருட்காட்சி என்று பல இடங்களுக்கு இவர்களை அழைத்துச் செல்லவேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு பல் தேய்த்தல், குளித்தல், சாப்பாடு, தூக்கம் என அன்றாடப் பழக்கவழக்கங்களை ஒழுங்குபடுத்தபயிற்சி தர வேண்டும். 
குழந்தைக்குப் புரிகிற விதமாக நிறையப் பேச வேண்டும். நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், ஸ்கேட்டிங் போன்ற பயிற்சிகள் தரப்பட வேண்டும். இப்பயிற்சிகள் அவர்களின் உடல்திறனை அதிகப்படுத்துவது மட்டுமன்றி, தன்னுடைய வேலைகளைத் தானே சுயமாகச் செய்யமுடியும் என்ற தன்னம்பிக்கையைத் தரும். உளவியல் சார்ந்த பயிற்சிகள், கல்விக்கான பயிற்சிகள், அறிவுத்திறன் பயிற்சிகள் என்று பலவற்றை முறைப்படி தர வேண்டும்.
 இந்தக் குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர், லேப்டாப், அலைபேசி, டிவி போன்ற எலெக்ட்ரானிக் கருவிகளில் ஈர்ப்பு அதிகமாக இருக்கும் ஆனால், இவற்றிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு இவர்களைப் அதிகம் பாதிக்கும். எனவே இதில் நாம் கவனமாக இதைத் தவிர்க்கவேண்டும்.
=========================================================================
 ஏப்ரல்-4.
குற்றப்பரம்பரை தியாகிகள் நாள்.

19ம் நூறாண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வங்காளத்தில் கொள்ளைகள் தொடர்ந்து நடந்து வந்தன.
தொடர் கொள்ளைகளுக்குக் காரணம் தக்கீ என்றபிரிவுமக்கள்தான் என்று கூறி அவர்களைச் சுட்டுக்கொன்றும்-தூக்கிலிட்டும்-ஆயுள் தண்டனை விதித்தும்-நாடு கடத்தியும் வில்லியம் ஸ்லீமென் என்ற காவல்அதிகாரி தலைமையில் வேட்டையாடினர்.
எங்கெல்லாம் இத்தகு பிரச்சனைகள் வந்ததோ அங்கெல்லாம் இதே பாணியில் வேட்டையாட பிரிட்டிஷ் அரசுதிட்டமிட்டு 1871 ம்ஆண்டு குற்றப்பரம்பரைச் சட்டம் இயற்றியது -இந்தியா முழுவதும் 215 சாதிகளை குற்றப்பரம்பரையினர் என அறிவித்தது.
இச்சட்டப்படி மாவட்ட கலெக்டர் எந்தச் சாதியையும் குற்றப்பரம்பரை எனஅறிவிக்கலாம்.
அதில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது-
அன்றைய தமிழகத்தில் 89 சாதிகள் குற்றப்பரம்பரை எனப் பட்டியலிடப்பட்டன.
இச்சட்டம் முதலில் மதுரை மாவட்டத்தில் கீழக்குயில்குடி கள்ளர் இன மக்களிடையே அமல்படுத்தப்பட்டது.
கள்ளர் சாதியில் பிறந்த 13 வயதான ஆண், பெண் அனைவரும் தங்கள் முகவரியுடன் கைரேகையைக் காவல் நிலையத்தில் பதிவு செய்யவேண்டும். குற்றம் எதுவும் செய்திருக்க வேண்டியதில்லை.
அந்தச்சாதியில் பிறந்தாலே போதுமானது.
இம்மக்கள் சட்டப்பிரிவு 10ன்படி ஊரைவிட்டு எங்குபோனாலும் காவல்நிலையத்தில் அனுமதி பெறவேண்டும்.
இரவில் யாரும் வீட்டில் தூங்கக்கூடாது.
காவல் நிலையத்தில் அல்லது அவர்கள் கண்காணிப்பில் பொது மந்தையில் தூங்க வேண்டும்.
வயதானவரானாலும் புதுமாப்பிள்ளையானாலும் இதுதான் கதி.
திருமலை நாயகக்கர்அளித்த எட்டுநாட்டுத் தலைமைப் பொறுப்பை கீழக்குயில்குடி யாரிடம் உள்ளது.
நாயக்கர் அளித்த செம்புப்பட்டயமும் உள்ளது.
மேலும் நாங்கள் விவசாயம் செய்து பிழைத்து வருகிறோம் என்று அரசுக்கு எடுத்துக் கூறியும் அரசு ஏற்கவில்லை.
1918 முதல் பிரமலைக்கள்ளர் சாதி முழுவதும் இந்தச் சட்டத்தின்கீழ் கொண்டு வரப்பட்டது.
பெருங்காமநல்லூர் கலகம்
13 வயதுக்கு மேற்பட்ட ஆண்களை ஊர் மந்தையில் வட்டமாய் கயிறு கட்டி அடைப்பர்-இரவு 11 மணிக்கு தலைகள் எண்ணப்படும்.
இந்தச்சட்டத்தை பெருங்காமநல்லூர் மக்கள்ஏற்க மறுத்தனர்.
என்ன செய்தும் முடியாமல் போகவே அன்றிருந்த டிஎஸ்பி   ஏ.சி.கி ளின்ச் என்பவன் அவர்களை ஒடுக்க முடிவு செய்து படையுடன் நுழைந்தான்.
பெருங்காமநல்லூர் மக்களோடு அருகாமை கிராம மக்களும் திரண்டனர். ஊரில் நுழைந்த போலீசை மக்கள் எதிர்த்தனர்.
1920ம் ஆண்டு ஏப்ரல் 4 ந்தேதி போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
இதில் 16 பேர் கொல்லப்பட்டனர். 
குற்றுயிரும் குலை உயிருமாய் தாகத்தால் தவித்தவர்களுக்கு மாயக்காள் என்றபெண் குடத்தில் தண்ணீர் கொண்டு வந்தார்.
அவரையும் ஈவிரக்கமற்ற முறையில் சுட்டுக் கொன்றனர்.
700 பேரைக் கைது செய்து திருமங்கலம் கொண்டு சென்றனர்.
 கால்நடையாய் பட்டினியோடு வந்தவர்களை கிராம மக்கள் வழிமறித்து உணவளித்தனர். இறந்தவர்களின் உடல்களை உசிலம்பட்டி அருகில் போலீஸ் ஒரேகுழியில் போட்டுப் புதைத்தது.
 பிரிட்டிஷாரின் இந்த அட்டூழியத்தை தென்னகத்தின் ஜாலியன்வாலாபாக் படுகொலை என்று மதுரைவரலாறு கூறுகிறது.
ஆனால் இந்தப் படுகொலையை பிரிட்டிஷ் நாடாளுமன்றம் கண்டித்ததோடு அம்மக்களின் சமூக-கல்வி-பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுங்கள் என்று அறிவுறுத்தியது.
அதைத்தொடர்ந்து கள்ளர் சீரமைப்பு துறையை அரசு உருவாக்கியது.
போரும் விடுதலையும்ரேகைச் சட்டத்திற்கெதிராக பார்வர்ட்பிளாக் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து போராடின.
1937ம் ஆண்டிலிருந்து எழுச்சியான தொடர் போராட்டங்கள் நடந்தன. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், சசிவர்ணத்தேவர், மூக்கையாத்தேவர் போன்றோர் பார்வர்ட்பிளாக் தலைவர்கள்.
அவர்களோடு கம்யூனிஸ்ட் தலைவர்கள் பி.ராமமூர்த்தி, ஜீவானந்தம், கே.டி.கே. தங்கமணி, கே.பி.ஜானகியம்மாள், என்.சங்கரய்யா, ஐ.மாயாண்டி பாரதி போன்றோர் களத்தில் நின்றனர்.
1939ம்ஆண்டு இருகட்சித் தலைவர்களும் இணைந்து திருச்சுழியில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முத்துராமலிங்கத் தேவரும் பி. ராமமூர்த்தியும் இதை முன்னின்று நடத்தினர்.
தொடர்ந்த போராட்டங்களால் 1947ம் ஆண்டு மே மாதம் 30ம் தேதி ரேகைச்சட்டம் நீக்கப்பட்டது. 
இவ்விடுதலைக்கு உரமாய் நின்றது பெருங்காமநல்லூர் தியாகிகளின் தியாகமாகும்.
 இந்த வரலாறு இன்றைய அந்த குறிப்பிட்ட சமுக இளம் தலை முறைக்கு தெரியுமா?
                                                                                                                                     நன்றி:தீக்கதிர்.
==========================================================================