நடுநிலை இணையம்'
சி ல நாட்களாக இந்தியாவில் இணையம் குறித்த விவாதங்களில்,
இணையப் பயன்பாடு என்பது தொலைபேசிக்கு இணையான ஒரு சாதனமாக மாறிவிட்டது. எனவே அது ஒவ்வொருவருக்கும் எந்தவிதத் தடையுமின்றி கிடைக்க வேண்டும் என அறிவித்தது. தற்போது அதன் மீதும் விவாதம் தொடர்கிறது.
இந்தியாவிலும் இந்தப் பிரச்னை குறித்து பல விவாதங்கள் அரங்கேறியுள்ளன.
“நெட் நியூட்ராலிட்டி” எனப்படும் 'வரையறையற்ற நடுநிலை இணையம்' என்ற விவாதப் பொருள் அதிகம் இடம் பெற்று வருகிறது.
இது சில மாதங்களாகவே உலகில் வள்ர்ந்த நாடுகளிடையே விவாதங்களைக் கிளப்பி வருகிறது.
அமெரிக்காவில் இது ஒரு பெரிய விவாதமாகவும், அரசுக்கும் மக்களுக்கும் இடையேயான கருத்துப் போர் ஆகவும் உருவெடுத்தது.
பின்னர் அமெரிக்க அரசின் 'ஐக்கிய தகவல் தொடர்பு தீர்ப்பாயம்' (Federal Communications Commission) சென்ற பிப்ரவரி 26 அன்று, ஒரு பொதுத் தீர்வினை ஆணையாக, 400 பக்க ஆவணமாகத் தந்தது.
“இணைய சேவை நிறுவனங்களை” பொது சேவை நிறுவனங்கள் என அறிவித்தது.
இந்தியாவிலும் இந்தப் பிரச்னை குறித்து பல விவாதங்கள் அரங்கேறியுள்ளன.
இங்கு நமக்கு இணைய இணைப்பு சேவை வழங்கும் நிறுவனங்கள், சில இணைய தளங்களைத் தடை செய்துள்ளன. பலவற்றை இலவசமாக அணுக அனுமதி வழங்குகின்றன.
தடை செய்யப்பட்ட தளங்கள், இலவசமாகப் பார்ப்பதற்குத் தடை செய்யப்பட்டவையாக உள்ளன. பயனாளர்கள் கட்டணம் செலுத்தினால், இவற்றைப் பார்க்க அனுமதி வழங்கப்படும்.
இதை இன்னும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
இதை இன்னும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
இந்தியாவில், வரையறையற்ற நடுநிலையுடன் கூடிய இணைய சேவை குறித்து இதுவரை இன்னும் சட்ட விதிமுறைகள் வகுக்கப்படவில்லை. அதனால், சில தகவல் தொடர்பு நிறுவனங்கள், வெளிப்படையாகவே எல்லை மீறி செயல்படும் சூழ்நிலையில், இங்கு தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களைக் கண்காணிக்கும் ட்ராய் அமைப்பு, அவற்றின் மீது நடவடிக்கை எடுப்பதற்கான சட்டப் பிரிவுகளைக் கொண்டிருக்கவில்லை.
இணையம் என்பதே ஒரு தனி மனிதருக்கோ, ஒரு நாட்டிற்கோ, அரசுக்கோ சொந்தமானது அல்ல.
இணையம் என்பதே ஒரு தனி மனிதருக்கோ, ஒரு நாட்டிற்கோ, அரசுக்கோ சொந்தமானது அல்ல.
அது ஒரு உலகளாவிய Internet Society என்னும் அமைப்பினால், அதன் பல்வேறு பிரிவுகளினால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
எனவே, இணையம் அனைவருக்கும் பொதுவானது.
யாரும் அவருடைய விருப்பப்படி பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதில் எந்த நிர்வாகமும் தலையிட முடியாது.
ஆனாலும் இந்தியாவில் இயங்கும் ஏர்டெல் போன்ற சில தகவல் தொடர்பு நிறுவனங்கள், ட்ராய் அமைப்பினைத் தங்கள் செல்வாக்கால், கட்டாயப்படுத்தி, அவர்களுக்கேற்ப வளைக்கப் பார்க்கின்றன.
சில இணைய தளங்களைத் தனியே பிரித்துத் தடை செய்து, கட்டணம் செலுத்தி மட்டுமே பார்க்கும் வகையில் கொண்டு வர முயற்சிக்கின்றன. இதனால், பயனாளர்களிடம் இருந்து அதிகக் கட்டணம் வசூலிக்க திட்டமிடுகின்றனர்.
இது “வரையறையற்ற நடுநிலையுடன் கூடிய இணைய சேவைக்கு” எதிரானத் திட்டமிட்ட சதியாகும்.
இது “வரையறையற்ற நடுநிலையுடன் கூடிய இணைய சேவைக்கு” எதிரானத் திட்டமிட்ட சதியாகும்.
நடுநிலையான இணைய சேவை என்பது, இணையத்தில் பதியப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பெறும் உரிமை, அனைவருக்கும் சமமாகத் தரப்பட வேண்டும் என்பதேயாகும்.
பயனாளர்கள், தகவல்கள், இணைய தளங்கள், இணைய தளங்களைப் பெறுவதற்கான அப்ளிகேஷன் புரோகிராம்கள் அல்லது எந்த வகை இணைப்பு என்பனவற்றின் அடிப்படையில் பாகுபாடு அல்லது கட்டணம் வசூல் செய்யப்படக் கூடாது.
ஆனால், அத்தகைய பாகுபாட்டினை ஏற்படுத்த, ஏர்டெல், ரிலையன்ஸ் மற்றும் டாட்டா டொகோமோ ஆகிய நிறுவனங்கள், ட்ராய் அமைப்பினை நெருக்கி வருகின்றன.
அமெரிக்காவிலும் இதே போல இணைய சேவை நிறுவனங்கள் முயற்சித்த போது, பெரும் அளவில் மக்கள் தங்கள் எதிர்ப்பினைக் காட்டி, மக்கள் சார்பான ஆணையைப் பெற்றனர்.
அமெரிக்காவிலும் இதே போல இணைய சேவை நிறுவனங்கள் முயற்சித்த போது, பெரும் அளவில் மக்கள் தங்கள் எதிர்ப்பினைக் காட்டி, மக்கள் சார்பான ஆணையைப் பெற்றனர்.
இன்றைய நிலையில், இணைய தகவல் மற்றும் தளங்களிடையே பாரபட்சம் காட்டுவது அமெரிக்காவில் சட்ட விதிமுறைகளுக்குப் புறம்பானதாகும்.
வரையறையற்ற நடுநிலையுடன் கூடிய இணைய சேவையினையும் தற்போது சேவை நிறுவனங்கள் மேற்கொள்ளத் திட்டமிடும் நிலைகளையும் பார்ப்போம் .
வரையறையற்ற நடுநிலையுடன் கூடிய இணைய சேவையினையும் தற்போது சேவை நிறுவனங்கள் மேற்கொள்ளத் திட்டமிடும் நிலைகளையும் பார்ப்போம் .
நாம் அனைவரும் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறோம்.
விளக்கு, மிக்சி, கிரைண்டர், டிவி, ப்ரிட்ஜ், ஏ.சி. என எதனைப் பயன்படுத்தினாலும், பயன்படுத்தும் மின்சாரத்திற்கேற்ற கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
இதற்குப் பதிலாக, பிலிப்ஸ் ட்யூப் லைட் பயன்படுத்தினால் ஒரு கட்டணம், அல்ட்ரா கிரைண்டர் பயன்படுத்தினால் ஒரு கட்டணம், எவரெடி விளக்கு பொன்மணி கிரைண்டர் பயன்படுத்தினால் ஒரு கட்டணம், சாம்சங் டிவிக்கு ஒரு கட்டணம் என்று மின்சாரத்திற்குக் கட்டணம் விதித்தால் அது எவ்வளவு அபத்தமானது.
அதே போல் தான், தற்போது ஏர்டெல்,டாடா,போன்ற இணைய சேவை நிறுவனங்கள் கட்டணம் விதிக்க முற்படுகின்றன.இதற்கு தங்களின் அரசியல் செல்வாக்கை,பாஜக வின் தனியார் மயமாக்கல் கொள்கைகளை பயன்படுத்துகின்றன .
இணையத்தைப் பயன்படுத்துவதில், அதன் செயல் வேகம். பயன்படுத்தும் டேட்டா அளவு, நாட்கள் வரையறை ஆகியவற்றின் அடிப்படையில் உள்ள கட்டணத் திட்டங்களைத் தேர்ந்தெடுத்து நாம் கட்டணம் செலுத்துகிறோம். இதற்குப் பதிலாக, பேஸ்புக் என்றால் இலவசம், ஜிமெயில் என்றால் கட்டணம், ட்விட்டர் என்றால் பாதி சலுகை என்று கட்டணம் விதித்தால் என்னவாகும்?

+2 தேர்வு முடிவுகள் பார்க்க, ரூ.20 என வசூலித்தால், யார் தான் சகித்துக் கொள்வார்கள்?
எனவே, தகவல் தொடர்பு இணைய சேவை நிறுவனங்கள் விரும்பும் வகையில் இணைய தளங்களையும், கட்டணத் திட்டங்களையும் வரையறை செய்திட ட்ராய் அனுமதித்தால் என்னவாகும்?
எனவே, தகவல் தொடர்பு இணைய சேவை நிறுவனங்கள் விரும்பும் வகையில் இணைய தளங்களையும், கட்டணத் திட்டங்களையும் வரையறை செய்திட ட்ராய் அனுமதித்தால் என்னவாகும்?
2ஜி இணைப்பிற்கு மாதம் ரூ.250,
3ஜி இணைப்பிற்கு மாதம் ரூ.650,
கூடுதலாக பேஸ்புக் பார்க்க ரூ.60,
ஜிமெயில் பார்க்க ரூ. 40,
யூட்யூப் பார்க்க ரூ.100,
ப்ளிப்கார்ட் மற்றும் பிற வர்த்தக தளங்கள் எனில் இலவசம் எனக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படலாம்.அதை இணைய பயன்பாட்டாளர்கள் தவிர்க்க முடியாது.
இந்தச் சூழ்நிலையில், “யு ட்யூப் போன்ற தளங்களில் பதிந்து வைக்கப்பட்டுள்ள பாடல், ஆடல் காணொளி விடியோக்களை, இணையப் பயனாளர்களுக்குத் தொடர்ந்து தர, அதிக செலவிட்டு கட்டமைப்பை உருவாக்கி இயக்கி வருகிறோம்.
இந்தச் சூழ்நிலையில், “யு ட்யூப் போன்ற தளங்களில் பதிந்து வைக்கப்பட்டுள்ள பாடல், ஆடல் காணொளி விடியோக்களை, இணையப் பயனாளர்களுக்குத் தொடர்ந்து தர, அதிக செலவிட்டு கட்டமைப்பை உருவாக்கி இயக்கி வருகிறோம்.
எனவே, அத்தகைய தளங்களைக் காண கூடுதல் கட்டணம் வசூலித்தால் என்ன?” என்று இணைய தள நிர்வாகிகளும், சேவை நிறுவனங்களும் கேட்கின்றன.
பயனாளர்களோ, இந்த செலவினங்கள் மற்றும் நிறுவனத்திற்கான லாபம் ஆகியவற்றைக் கணக்கிட்டுத்தான், இணைய சேவை கட்டணமே விதிக்கப்படுகிறது. பின், ஏன் மீண்டும் தனியே அதிகக் கட்டணம் என்ற வினாவினை எழுப்புகின்றனர்.
இன்னும் ட்ராய் எந்த முடிவும் எடுக்கவில்லை.

இதற்கிடையே, இணைய சேவை நிறுவனங்கள் மறைமுகமாக மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிக்க, இந்திய இணையப் பயனாளர்கள் முயன்று வருகின்றனர்.
ட்ராய் அமைப்பு மக்களிடம் இருந்து இது சார்பாகக் கருத்துகளை கேட்டது. இதனைப் பயன்படுத்தி சில தன்னார்வலர்கள் Savetheinternet.in என்னும் இணைய தளத்தை உருவாக்கி, அதன் மூலம் பயனாளர்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
மூன்று நாட்களில் 4 லட்சம் மின் அஞ்சல் அனுப்பப்பட்டன. நீங்களும் மின்னஞ்சல் அனுப்புவதன் மூலம் இந்த கட்டணக்கொள்ளையை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்.

காரணம் இப்போதுள்ள அரசு கார்ப்ரேட்டுகள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அவர்களுக்காக சட்டங்கள், மசோதாக்களை கொண்டுவரும் பாஜக மோடி அரசு.
தற்போது நிமிடத்திற்கு 10,000 அஞ்சல்கள் வீதம் ட்ராய் அமைப்பிற்கு இந்த தளம் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன.
இவர்களுடன் அரசியல் தலைவர்கள், நடிகர்கள், ஊடகத்தில் இயங்குபவர்கள் எனப் பலரும் இதனை மிகத் தீவிரமாகத் தங்கள் கரங்களில் எடுத்துள்ளனர்.
https://www.youtube.com/watch?v=mfY1NKrzqi0&feature=youtu.be என்ற இணைய தளத்தில் இது குறித்த விடியோ படம் ஒன்று பதியப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் மற்றும் இணைய நிறுவனங்களின் பிரதிநிதியாக இயங்கும் ' இந்திய இணையம் மற்றும் மொபைல் கூட்டமைப்பு' (Internet and Mobile Association of India (IAMAI) “தற்போது உள்ள தகவல் தொடர்பு சட்டத்திற்கும் மேலாக ஏதேனும் விதிமுறைகள் கொண்டு வந்தால், அது புதிய வசதிகளைக் கண்டறியும் திறமையின் கழுத்தை நெறிப்பதற்கு ஒப்பாகும்” என்று அறிவித்துள்ளது.

“எழுந்து வரும் நம் பண்பாட்டின் எழுச்சியை இந்த விதிமுறைகள் சிதைத்துவிடும்” என்றும் எச்சரித்துள்ளது.
இணையத்தில் இயங்கும் நிறுவனங்கள், அவர்களின் தகவல்கள் பயனாளர்களைச் சென்றடைய, இணைய இணைப்பு தரும் சேவை நிறுவனங்களுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறுவதை, கூகுள், பேஸ்புக் மற்றும் ப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் வன்மையாகக் கண்டித்துள்ளன.
பலமான எதிர்ப்பு காட்டப்பட்டுள்ள நிலையில், ட்ராய் அமைப்பு இணையப் பயனாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது என்றே அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் மீண்டும் சொல்கிறோம் .
"இப்போதுள்ள அரசு கார்ப்ரேட்டுகள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அவர்களுக்காக சட்டங்கள், மசோதாக்களை கொண்டுவரும் பாஜக மோடி அரசு.அவர்கள் பண முதலைகள்,தொழிலதிபர்கள் நலனுக்காகவே உழைப்பவர்கள்.மக்கள் நலன் எல்லாம் வாக்குகளைப்பெறும் வரைதான்.எனவே டிராய் ஏர்டெல்,டாடா ,வோடோபோன் நலனுக்காக இணைய பயனாளர்கள் நலனை புறக்கனித்து அறிவிப்பை வெளியிடலாம்.
வாட்ஸ்-அப் மூலம் போலீசில் புகார் அளிக்க:
திருச்சி: 96262 73399
மதுரை: 83000 21100
திருநெல்வேலி: 99527 40740
விழுப்புரம்: 96554 40092
தேனி: 88709 85100
சிவகங்கை: 94981 01670
விருதுநகர்: 85266 82266
வேலூர்: 94888 35716
நாமக்கல்: 94981 01020
ராமநாதபுரம்: 83000 31100
ஈரோடு: 94454 92686, 94981 75275
திண்டுக்கல்: 99949 34488
தூத்துக்குடி: 9487008800
தர்மபுரி: 94456 52253
ரயில் சேவை குறைபாடுகளுக்கு: 97176 30982
ரயில்வே பயணிகளின் காவல் உதவிக்கு: 99625 00500
-நன்றி:கவுதம் சுந்தர் .

இன்று,
ஏப்ரல்-21.
ஏப்ரல்-21.
- சோவியத் யூனியின் செஞ்சேனைப் படையினர் ஜேர்மனியின் பேர்லின் புறநகர் பகுதிகளை முற்றுகையிட்டனர்.
- 1960: பிரேஸில் தலைநகர் பிரஸில்லியா உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
- 1962: சியாட்டில் உலக சந்தை திறக்கப்பட்டது. 2 ஆம் உலக யுத்தத்தின் பின்னர் அமெரிக்காவில் திறக்கப்பட்ட முதலாவது உலக சந்தை இது.
- 1975: தென் வியட்நாம் ஜனாதிபதி என்குயென் வான் தியூ ராஜினாமா செய்தார்.
- 1987: கொழும்பு புறக்கோட்டையில் தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்திய வாகன குண்டுத் தாக்குதலில் 113 பேர் பலியாகினர்.
- 1989: சீன மறுசீரமைப்புத் தலைவர் ஹியூ யவோபாங்கை நினைவுகூரும் முகமாக சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் தியனமென் சதுக்கத்தில் கூடினர்.
- 1993: பொலிவியாவின் முன்னாள் சர்வாதிகாரி லூயிஸ் கார்சியா மேஸாவுக்கு கொலை, களவு, மோசடி, அரசியலமைப்பு மீறல் குற்றச்சாட்டில் அந்நாட்டு உயர் நீதிமன்றம் 30 வருட சிறைத்தண்டனை விதித்தது.
- பிரான்சில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது (1944)
- பாவேந்தர் பாரதிதாசன் இறந்த தினம்(1964)
- ரோம் நகரம் அமைக்கப்பட்டது(கிமு 753)
- 2004: ஈராக்கின் பஸ்ரா நகரில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களில் 74 பேர் பலியாகினர்.
பாவேந்தர் பாரதிதாசன்’
- “தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’,புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அ வரது தந்தை, அவ்வூரில் பெரிய வணிகராக இருந்தார். பாரதிதாசன் அவர்களின் இயற்பெயர் சுப்புரத்தினம்.அவரது தந்தையின் பெயரின் முதல் பாதியை, தன்னுடைய பெயரில் இணைத்து ‘கனகசுப்புரத்தினம்’ என்று அழைக்கப்பட்டார்.பாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிரெஞ்சு பள்ளியிலே சேர்ந்தார். . சிறு வயதிலேயே சுவைமிக்க அழகானப் பாடல்களை, எழுதும் திறனும் பெற்றிருந்தார். பள்ளிப்படிப்பை நன்கு கற்றுத் தேர்ந்த அவர், தனது பதினாறாவது வயதில், புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து, மூன்றாண்டுகள் பயிலக்கூடிய இளங்கலைப் பட்டத்தை, இரண்டு ஆண்டுகளிலேயே முடித்து கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்ச்சிப் பெற்றார். மிகச்சிறிய வயதிலேயே இத்தகைய தமிழ் புலமை அவரிடம் இருந்ததால், கல்லூரிப் படிப்பு முடிந்தவுடனே அவர், 1919ல் காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.பாரதிதாசன் அவர்கள், தமிழாசிரியாராகப் பதவியேற்ற அடுத்த ஆண்டிலே அதாவது 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி, 1928ஆம் ஆண்டில் மன்னர்மன்னன் என்ற மகன் பிறந்தான். அதன் பிறகு, சரஸ்வதி, வசந்தா மற்றும் ரமணி என்ற மகள்களும் பிறந்தனர்.அவரது மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத் தனது நண்பனின் திருமண நிகழ்வின் போது பாடிய அவர், பாரதியாரை நேரில் சந்திக்கவும் செய்தார். பாரதியிடமிருந்து பாராட்டுக்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்று முதல், அவர் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.தந்தை பெரியார் மற்றும் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றார். அவரது இலக்கிய நடையைக் கண்டு வியந்த அன்றைய திரைத் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கியதால், அவர் திரைப்படங்களுக்கும் கதை-வசனம் எழுதியுள்ளார். பெருந்தலைவர்களான அண்ணாதுரை, மு. கருணாநிதி, மற்றும் எம்.ஜி. ராமச்சந்திரன் போன்றோர் அவருடைய படைப்புகளுக்காக அவரை ஊக்குவித்ததாலும், அவர் 1954ஆம் ஆண்டில் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்து ஆண்டுகள் செம்மையாக செயல்புரிந்த அவர், 1960ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.‘பாண்டியன் பரிசு’, ‘எதிர்பாராத முத்தம்’, ‘குறிஞ்சித்திட்டு’, ‘குடும்ப விளக்கு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘தமிழ் இயக்கம்’, ‘இசையமுது’, ‘குயில்’, ‘தமிழச்சியின் கத்தி’, ‘பாண்டியன் பரிசு’, ‘பாரதிதாசன் ஆத்திசூடி’, ‘பெண்கள் விடுதலை’, ‘பிசிராந்தையார்’, ‘மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது’, ‘முல்லைக் காடு’, ‘கலை மன்றம்’, ‘விடுதலை வேட்கை’, மற்றும் பல.பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், “புரட்சி கவிஞர்” என்ற பட்டமும், அறிஞர் அண்ணா, ‘புரட்சிக்கவி’ என்ற பட்டமும் வழங்கினர். தமிழ்நாடு மாநில அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு ‘பாரதிதாசன் விருதினை’ வழங்கி வருகிறது மற்றும் ‘பாரதிதாசன் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் நிறுவப்பட்டது.1946 – அவரது “அமைதி-ஊமை” என்ற நாடகத்திற்காக அவர் ‘தங்கக் கிளி பரிசு’ வென்றார்.1970 – அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது2001 – அக்டோபர் மாதம் 9ஆம் தேதி, சென்னை தபால் துறை மூலமாக ஒரு நினைவு அஞ்சல்தலை அவரது பெயரில் வெளியிடப்பட்டது.எழுத்தாளர், திரைப்படக் கதாசிரியர், கவிஞர், அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட பாரதிதாசன் அவர்கள், ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.1891: புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.1919: காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.1920: பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.1954: புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.1960: சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.1964: ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.1970: அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது.=====================================================