ஞாயிறு, 26 ஏப்ரல், 2015

அஜீரணத்தை போக்கலாம்

இப்போது வெயில் காலம் ஆனால் இங்கோ மழையும்,வெயிலும் மாறி,மாறி குழப்புகிறது.
இது பொன்ற கால நிலைகளில் மனிதன் உடலில் வெப்பம் அதிகரித்து முதலி ல் மனிதனை  தாக்குவது சீரணக் கோளாறுதான்.   அதன் பின்னர்தான் கண்வலி,காய்ச்சல் ,அம்மை என்று வரிசை.
அடுத்து அவருக்கு பிடித்த சாப்பாடு கார குழம்போ 
அல்லது சாம்பாரோ,சிக்கனோ, மட்டனோ பிடித்ததை வீட்டில் வைத்திருந்தால் அதை மூக்கு முட்ட  ஒரு பிடி பிடித்து 
விட்டு அஜீரணக்கோளாறால் அவதிபடுவது வழக்கம். இவ்வாறு தீடீர் அஜீரணக்கோளாறால்  அவதி படுபவர்களுக்காகவே வீட்டில் இருக்கின்றது மருந்து. வெளியில் சென்று  வாங்கவும் வேண்டாம், 
அடுப்ப ங் கறை பொருட்களை வைத்து எப்படி  அஜீரணத்தை போக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம்.


 இஞ்சி 

எலுமிச்சை  மற்றும் இஞ்சி அனைவரின் வீடுகளிலும் கிடைக்கும் ஒரு சமையலறை பொருளாகும். அஜீரணக்கோளாறை போக்க இஞ்சி பெரிதும்  பயன்படுகிறது. அதிகமாக சாப்பிட்டு அஜீரணக்கோளாறால் அவதிபடுபவர்கள் சாப்பிட்ட பின்னர் தேவையான அளவு தண்ணீரை ஒரு தம்ளரில்  எடுத்துக்கொண்டு அதனுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 2 டீஸ்பூன் இஞ்சி சாறு மற்றும் தேன் எடுத்துக்கொண்டால் அஜீரணக்கோளாறுக்கு குட்பை  சொல்லிவிடலாம்.

ஆரஞ்சு சாறு

வீட்டு மருந்துகளில் அஜீரணக்கோளாறுகளுக்கு சிறந்த ஒன்று ஆரஞ்சு சாறு. சாப்பிட்டு முடித்த பின்னர் ஒரு தம்ளர் ஆரஞ்சு சாறு சாப்பிட்டால் உணவு  செரிமானம் அடைந்து உடல் உறுப்புகளுக்கும் ஓய்வை கொடுத்து உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தையும் வழங்குகிறது. 

மோர், பால் 

தினமும் மூன்று வேளை பசும்பாலில் தேனும் நான்கு பூண்டுப் பற்களும் சேர்த்துப் பருகினால் தாய்பால் நன்கு சுரக்கும். இதனால் குழந்தைகளுக்கும்  அஜீரணம், ஜலதோஷம் போன்றவை வராமல் தடுக்கப்படும். நீர்த்த மோரில் கால் டீஸ்பூன் மிளகுத் தூளும் சீரகத் தூளும் கலக்கிக் குடித்தால்,  அஜீரணக் கோளாறு உடனே சரியாகும்.
திராட்சை

வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்தது திராட்சைபழம்.. இந்தப்பழத்தை தோலுடன் சாப்பிட்டாலோ அல்லது ஜீஸ் செய்து  சாப்பிட்டாலும் வயிறு பிரச்சனைகளுக்கு சிறந்த நிவாரணமாக செயல்படும். 

எலுமிச்சை
சூடான எலுமிச்சை தண்ணீர் அஜீரணத்தை குணப்படுத்த சிறந்தது. உணவு எடுத்துக்கொள்வதற்கு முன்பு ஒரு கப் தண்ணீருடன் ஒரு டீஸ்பூன்  எலுமிச்சை சாறை எடுத்துக்கொண்டால் அமிலத்தை தடுத்து பாக்டீரியாவுடன் போராடி செரிமான பிரச்சனைகளை தீர்க்கிறது. 

பூண்டு மருத்துவம்

வீட்டு மருத்துவத்தில் இஞ்சிக்கும் பூண்டுக்கும் தனி இடமே உண்டு. அனைத்து மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு சிறந்த  அடுப்பங்கறை மருந்து பூண்டு. நீங்கள் வயிற்று வலியால் அவதிபடுகிறீர்கள் என்றால் சமஅளவு பூண்டு சாறு , சோயா எண்ணெய் எடுத்து வயிற்று  பகுதியில் மசாஜ் செய்யவேண்டும். வயிற்றில் தடவிய எண்ணெய் தோல் மூலமாக உறிஞ்சப்படும். இது அஜீரணத்தை உடனடியாக நீக்கிவிடும். 

சமையல் சோடா

செரிமான பிரச்சனையால் வயிற்று வலி ஏற்பட்டு விட்டதா! ஒரு தம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சமையல் சோடாவை போட்டு கலந்து குடித்தால்  செரிமான பிரச்சனையை குறைக்கலாம்.
கொத்துமல்லி இலை

ஒரு கிளாஸ் தண்ணீரில் சிறிதளவு சீரகம், கொத்துமல்லி சாறு, உப்பு ஒரு சிட்டிகை ஆகியவற்றை கலந்து குடிக்கலாம். வயிற்று வலி ற்படின் இதை  பருகலாம். மேலும் கொத்தமல்லி இலை இரண்டு தேக்கரண்டி, இஞ்சி சாறு ஒரு தேக்கரண்டி மூன்று ஏலக்காய், கிராம்பு கலந்து குடிக்கலாம். இது வாயு  தொந்தரவை நீங்கிவிடும். 
=================================================
இருமலா 
இதை செய்து பாருங்களேன்!

இருமல், ஜலதோஷம் மற்றும் தொண்டைப் புணகளுக்கு, பார்லி அரிசியை சிறிது நீர் விட்டுக் கொதிக்க வைத்து, அப்படியே இறக்கி வைத்து விட்டால்,  தெளிந்த நீர் கிடைக்கும். இந்த நீருடன் இரண்டு கரண்டி தேன் கலந்து சாப்பிட இருமல், ஜலதோஷம் குறையும். தொண்டைப் புண்ணும் ஆறும். மூன்று  நாட்கள் தொடர்ந்து சாப்பிட குணம் தெரியும். 

பலாச்சுளையை தேனில் நனைத்துச் சாப்பிட்டால், இருமல் போய்விடும். இரண்டு சிட்டிகை சித்தரத்தைப் பொடி, கொஞ்சம் கல்கண்டு பொடி, 1 ஸ்பூன்  நெய், மூன்றையும் குழைத்துச் சாப்பிட, வறட்டு இருமலுக்கு மிகவும் நல்லது. வெந்நீரில் தேன் கலந்து குடித்தால், ஜலதோஷம், இளைப்பு, நுரையீரலில்  உள்ள சளி நீங்கி விடும். 
வால்மிளகு-10, அதிமதுரம் 2 செ.மீ, சித்தரத்தை 2 செமீ, திப்பிலி, துளசி இலை 15 போட்டு அவித்து சாறு எடுத்துக் கொண்டு பனங்கற்கண்டுடன் ஒரு  நாளைக்கு மூன்று வேளை வீதம் அருந்தவும். இருமலுக்கு மிகவும் நல்லது.  மூன்று சொட்டு இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து சிறு குழந்தைகளுக்குப்  புகட்டினால் கக்குவான் இருமல் நிற்கும். 

தாங்க முடியாத அடுக்கு இருமலுக்கு முருங்கைக் கீரையை உப்பு சேர்த்து உள்ளங் கையில் கசக்கவும். சிறிது சுண்ணாம்பு சேர்த்து தொண்டையில்  தடவினால் இருமல் குறையும். அரிசித்திப்பிலியை கடாயில் போட்டு வறுத்துப் பொடி செய்து வைக்கவும். சதா இருமும் குழந்தைகள், பெரியவர்கள்  யாரும் இதை உட்கொள்ளலாம். ஒரு டீ ஸ்பூன் பொடியில் சிறிது தேன் விட்டுக் குழைத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும். 

இதை, காம்பு நீக்கிய வெற்றிலையின் நடுவில் அரை ஸ்பூன் வைத்து, வாயில் போட்டு வெற்றிலைச் சாறுடன் சேர்த்து சிறிது சிறிதாக சிறிது நேரம்  வாயில் அடக்கிக் கொண்டு சாப்பிட்டால் இருமல் குறையும். துளசிச் சாறையும் கல்கண்டையும் கலந்து சர்பத் போலக் காய்ச்சி வைத்துக்  கொள்ளுங்கள். வயதுக்குத் தகுந்தபடி இத் துளசிசர்ப்பத்தை சிறிதளவு எடுத்து 2 அல்லது 3 தடவைகள் சாப்பிட இருமல் குணமாகும்.
 வறட்டு இருமலால் அவதிப்படுவோர் அதிமதுர வேரினை அவ்வப்போது 1 துண்டு வாயிலிட்டு சுவைத்து வருவது நல்லது. கண்டங்கத்திரி, தூதுவளை,  ஆடாதொடை, துளசி இவைகளின் இலை வகைக்கு 1 படி, சித்தரத்தை 1 துண்டு, இஞ்சி 1 துண்டு சேர்த்து இடித்துப் பிழிந்த சாறு 10 முதல் 20 துளி  வரையில் வெண்ணையில் கலந்து காலை, மாலை கொடுத்து வர ஓயாத இருமல் நீங்கும். கபக்கட்டு, சிறுபிள்ளைகளுக்குக் காணும் கணைச்சூடு  விலகும். 

நன்றி:தினகரன்.

========================================================================
இன்று,
ஏப்ரல்-26.
 • அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு தினம்
 • தான்சானியா தேசிய தினம்
 • கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரி பிறந்த தினம்(1762)
 • கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜன் இறந்த தினம்(1920)
 • தமிழறிஞர் மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை இறந்த தினம்(1897)
 • மனோன்மணீயம் என்ற புகழ்பெற்ற நாடக
  நூலைப் படைத்தவர். மனோன்மணீயத்தில்
  இடம்பெற்ற தமிழ்த் தெய்வ வணக்கப்
  பாடலான நீராருங்கடலுடுத்த நிலமடந்தைக்
  கெழிலொழுகும் என்றபாடல் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசினரால் தமிழ்
  வணக்கப் பாடலாக ஜூன் 1970 இல் அதிகாரப்பூர்வமாக அரசாணை மூலம் 
  ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  
  
 • ================================================================
றிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு 

உலக அறிவுசார் காப்புரிமை அமைப்பினால் (World Intellectual Property OrganaiSation, WIPO)2001-ம்  ஆண்டு முதல்  ஏப்ரல் 26-ம் தேதி சர்வதேச  அளவில் இந்த நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 
ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்து வலியுறுத்தப்படுகிறது. காப்புரிமை பெறும் விஷயத்தில் இந்தியா  மிகவும் பின்தங்கி இருக்கிறது. வேப்ப மரத்திலிருந்து உருவாக்கப்படும் 40 வகை பொருட்களுக்கு அமெரிக்காவும், மேலும் 50 பொருட்களுக்கு  பிறநாடுகளும் காப்புரிமை பெற்றுள்ளன. 
ஆனால், வேப்பமரம் வேர்விட்டு வளர்ந்த இந்தியாவில் வெறும் 3 பொருட்களுக்கு மட்டுமே காப்புரிமை  பெறப்பட்டுள்ளது வேதனைக்குரியது. 


மஞ்சள் சிறந்த கிருமிநாசினி. 
அதில் இருந்து தயாரிக்கப்படும் 30 பொருட்களுக்கு அமெரிக்கா காப்புரிமை பெற்றுள்ளது. ஆனால் இந்தியா 8  பொருட்களுக்கு மட்டுமே பெற்றுள்ளது. மேலும் இந்தியாவில் பெருமளவில் விளையும் கடுகு, மிளகு, போன்றவற்றிற்கு அமெரிக்கா காப்புரிமை  பெற்றுள்ளது.  

திருப்பதி லட்டு, மதுரை மல்லி, மதுரை சுங்கடிச் சேலை, பத்தமடை பாய், தஞ்சை ஓவியம், தலையாட்டி பொம்மை, , காஞ்சிபுரம் பட்டு, ஆரணி பட்டு,  நாச்சியார் கோவில் குத்துவிளக்கு உள்ளிட்டவைகள் புவிசார் குறியீடு பெற்றவைகள். இவைகள், குறிப்பிட்ட இடத்தை, அதன் சிறப்பை தாங்கி  வருவதால் அந்தப் பெயரை அந்த குறிப்பிட்ட பொருளோடு சேர்த்து யாரும் விற்பனை செய்ய இயலாது என்பதாகும்.


நேபாள் நிலா நடுக்கத்தில் 1900 பேர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின்றன.எப்படியும் எண்ணிக்கை இதை விட அதிகமாகவே இருக்கும்.
இந்த அதிர்ச்சியில் இருந்து நேபாள் மக்கள்-நாடு  மீளவும்,மாண்டு போனவர்கள் குடும்பத்துக்கு இழப்பை ஈடு செய்ய முடியாது எனினும் அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
========================================================================
த்தம வி ல்லன்-3, முன்னோ ட்டம்.
========================================================================