மீண்டு[ம்] வந்த ஆச்சார்யா!


பி.வி. ஆச்சார்யா.
ஜெயலலிதா தனது வழக்கின் மேல் முறையீட்டு வழக்கில் முன்பு அரசு வழக்குரைஞராக இருந்து கொண்டு குற்றவாளியான தனக்கு ஆதரவாக வாதாடிய பவானிசிங்கையே அரசு வழக்குரைஞராக நியமித்துக்கொண்டார்.
பேராசிரியர் அன்பழகன் கர்நாடக அரசு வழக்கில் தமிழகம் எப்படி அரசு வழக்குரைஞரை  நியமிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதாடினார்.இதனால் பவானி சிங் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டது செல்லாது என உச்ச  நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

 ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக பி.வி.ஆச்சர்யாவை கர்நாடக அரசு நியமித்துள்ளது. இதற்கான அரசாணையை வெளியிடப்பட்டுள்ளது.

பி.வி. ஆச்சார்யா.
 நாட்டின் மூத்த, முக்கியமான வழக்கறிஞர்களில் ஒருவர். 
80 வருட வாழ்க்கையில், 60 வருடங்களைச் சட்டப் புத்தகங்களோடு கழித்திருப்பவர். 
ஐந்து முறை அட்வகேட் ஜெனரல், பார் கவுன்சில் தலைவர், இந்திய சட்ட ஆணைய உறுப்பினர் உள்பட பல முக்கிய பொறுப்புகளில் இருந்தவர். ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில், முன்னதாக அரசுத் தரப்பில் வாதாடி, ஜெயலலிதா மிரட்டல் மற்றும் பல தொடர் நெருக்கடிகள் காரணமாக விலகியவர்.
 சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்தவர்.
ஜெயலலிதா வழக்கிலிருந்து விலகுமாறு பாஜக மேலிடமும் கர்நாடக அரசும் தன்னை ராஜினாமா செய்யுமாறு அழுத்தம் கொடுத்ததாக 
தனது சுயசரிதையில் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இப்போது கர்நாடக அரசால் அரசு வழக்குரைஞராக நியமிக்கப்பட்டுள்ளபி.வி.ஆச்சார்யா தனது பணியை துவக்கிய 
உடனே உச்ச நீதிமன்ற அறிவுரைபடி 18 பக்க எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தார். எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்த ஆச்சார்யா, சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றார்.

மேலும் சாட்சிகள் மற்றும் ஆதாரப்பூர்வமாக குற்றம் நிரூபிக்ககப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து 2004ஆம் ஆண்டு ஜெயலலிதா வழக்கு கர்நாடகத்திற்கு மாற்றப்பட்டது. கர்நாடகத்திற்கு மாற்றப்பட்டதால் வழக்கில் அந்த மாநிலத்துக்கே முதல் உரிமை என்றும் ஆச்சார்யா வாதிட்டுள்ளார்.

ஜெயலலிதா மேல்முறையீட்டு மனுவிலோ கர்நாடகம் ஒரு தரப்பாகவே சேர்க்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ள ஆச்சார்யா, ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவே சட்டப்படி தவறானது என்று தெரிவித்துள்ளார்.
இப்போது ஜெயலலிதா,பாஜக அரசு என்ன நடவடிக்கையை முறைகேடாக எடுத்து நீதிமன்றம் மூலம் திணிக்கப் போகிறது.?

தினமணியின் மறுபக்கம் ? 
அம்மணமா?

ன்னர்களுக்கு தேள் கொட்டினால் அரசவைப் புலவர்களுக்கு நெறிகட்டுவது தமிழ் மரபு. என்ன இருந்தாலும் அண்டிப் பிழைப்பதில் உள்ள சுகமும், பாதுகாப்பும், எலும்புத் துண்டும் நேர் வழியில் இல்லை அல்லவா?
அவ்வழியில் பவானி சிங் நியமனம் செல்லாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதை ஒட்டி ஏகப்பட்ட சட்ட, சாத்திர, சாணக்கிய வாதங்களை அடுக்குகிறார், தினமணியின் வைத்தி.
சாரமாகச் சொன்னால் ஒரு வன்புணர்ச்சி நடைபெறுகிறது என்று வையுங்கள்! நாமெல்லாம் புணர்ந்தவனை பொளந்து கட்ட பொங்கியெழும் போது, பொறுக்கியை காப்பாற்றும் முகமாக அவனைப் பற்றி இல்லாதது, பொல்லாததையெல்லாம் இட்டுக்கட்டி நல்லவனாக்கும் கிரிமினல் லாயர் சூட்கேஸ் சகிதம் வருவார்கள் அல்லவா! அரசவைப் புலவர் வைத்தியும் அப்பேற்பட்ட லாயரின் வாயைக் கொண்டிருக்கிறார்.
பவானி சிங் நியமனம் தவறு என்றாலும் மறு விசாரணை தேவையில்லை என்று நீதிமன்றம் கூறியிருப்பதை வைத்தி மாமா முதலில் எடுத்து வைக்கிறார். இது தீர்ப்பு குறித்த விளக்கம் என்று இன்னும் தினமணியின் நடுநிலை வேடத்தை நம்பும் கோயிந்துகள் நம்பலாம்.
ஆனால், அந்த விளக்கத்தினுள்ளே மாபெரும் அர்த்த சாஸ்திரத்தின் பொழிப்புரை மறைந்துள்ளதை அடுத்து வரும் பத்திகளில் அசால்ட்டாக பிட்டு வைக்கிறார் சாணக்கிய வைத்தி.
போயஸ் தோட்டத்து மந்திரவாதி வைத்தி
போயஸ் தோட்டத்து மந்திரவாதி வைத்தி
ஒரு வழக்கில் வாதம் புரியும் அரசு வழக்குரைஞர் அந்த வழக்கின் மேல்முறையீடுகளிலும் வாதிடலாம் என்று குற்றவியல் சட்டப் பிரிவு 301 சொல்கிறதாம். இதைத்தான் நீதிபதி பானுமதி ஏற்று பவானி சிங் நியமனம் தவறில்லை என்று குறிப்பிட்டதாக எழுதுகிறார் வைத்தி. தற்போது உச்சநீதிமன்றத்தின் மூவர் அமர்வு இந்த நியமனத்தை தவறு என்று தீர்ப்பளித்திருப்பதை இப்படி மறைமுகமாக மறுக்கிறார் மாமா. இருப்பினும் நீதியின் தீர்ப்புக்கு வணங்குவதாக கூறி அவமதிப்பு வழக்கு அபாயங்களிலிருந்தும் காத்துக் கொள்கிறார்.
அதே நேரம் இந்தத் தீர்ப்பின் மூலம் உச்சநீதிமன்றம்தான் சுயமுரண்பாட்டோடு நடந்துள்ளதாக அடுத்து நிரூபிக்கிறார். அதாவது, இந்த மேல்முறையீட்டு வழக்கு முழுவதும் 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று கட்டளையிட்டதே உச்சநீதிமன்றம்தானாம். அதைத்தான் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி குறிப்பிட்டு, அன்பழகனது மனுவை நிராகரித்தாராம்.
இதன்படி ஒரு வழக்கு எத்தனை காலத்திற்குள் நடக்க வேண்டும் என ஒரு நீதிமன்றம் முடிவெடுத்து விட்டால் பிறகு குற்றவாளியே அரசு தரப்பில் வாதாட வழக்குரைஞரை நியமிப்பதெல்லாம் பிரச்சினை இல்லையாம். எதற்கு இப்படி சுற்றி வளைக்க வேண்டும் வைத்தி சார்? ஜெயலலிதாவையோ இல்லை வைத்தியையோ நீதிபதியாக்கினால் ஒரு விநாடியில் வழக்கு முடிந்து விடுமே! பக்கத்து இலை பாயாசம் மற்றும் பங்சுவாலிட்டி மேல என்னமா ஒரு லவ்வு………
சொத்துக் குவிப்பு வழக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏன் உத்திரவிட்டது? இந்த வழக்கை இந்தியாவிலேயே இப்படி ஒரு முன்னுதாரணம் இல்லாத அளவுக்கு ஆயிரெத்தெட்டு வழிகளில் இழுத்தடித்தது யாராய்யா? வாய்தா ராணி என்று பட்டமே இங்கு பொன்னெழுத்தில் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டதெல்லாம் வைத்திக்கு புரியாது என்றால் அவருக்கு பிடித்திருப்பது பைத்தியமா இல்லை பக்தியா?
எந்த மாநிலத்தில் வழக்கு நடைபெறுகிறதோ அந்த மாநிலம்தான் வழக்குரைஞரை நியமிக்க வேண்டும் என்றால் அப்படி நியமிக்காத கர்நாடக அரசைத்தான் நீதிமன்றம் கண்டித்திருக்க வேண்டுமாம். மாறாக தமிழக அரசை கண்டிருத்திருப்பது கண்டு பூணுல் சிவக்கக் கேட்கிறார் தினமணி வைத்தி.
conspiracy-theoriesஇதன்படி சொத்துக்குவிப்பு வழக்கில், ஏதோ நல்ல மனது காரணமாக கிடைக்கும் சொத்துக்களை குவித்து விட்ட  தோழிகளுக்கு பதில் அந்த சொத்துக்களை வம்படியாக திணித்த தொழிலதிபர்களைத்தான் டின் கட்டியிருக்க வேண்டும். ஒரு வீட்டிற்குள் பீரோ இருப்பதால்தான் பீரோ புல்லிங் திருடன் திருடுகிறான். இதற்கு பீரோ உரிமையாளரை கைது செய்யாமல் திருடியவரை கைது செய்வது நியாயமா என்று கேட்கிறார் நிமிர்ந்த நன்னடைக்கு சொந்தம் கொண்டாடும் மாமா.
சொல்லப் போனால் அம்மா அரசை கண்டித்திருக்கும் வாசகங்களை மேன்மை தாங்கிய நீதிபதிகள் பதிவு செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்று போல்டாக போடுகிறார். போயஸ் தோட்டத்திற்காக இப்படி மானங்கெட்டு போனாலும் உச்சநீதிமன்றத்தை எதிர்க்கும் தைரியம் வைத்தி மாமா அல்லாது யாருக்கு வரும்? ஒரு வேளை சோ-வுக்கு வரலாம்.
பவானி சிங்கின் வாதங்களை புறக்கணித்து விட்டு, நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பை வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழிகாட்ட முற்பட்டிருப்பது  அந்த நீதிபதியின் (குமாரசாமியின்) கௌரவத்தை குலைப்பதாகாதா என்று சீறுகிறார் நிலத்தில் அஞ்சாத நெறிகளுக்கு சொந்தக்காரரான வைத்தி.
ஜெயா எனும் ஊழல் பெருச்சாளியின் வழக்கை ஒரு மாபெரும் ஊழல் பிரச்சினையாக கருதியே தீர்ப்பளிக்க வேண்டும் என்ற தொனியில் நீதிமன்றம் கூறியிருப்பதைத்தான் இப்படி சாடுகிறார். இது நீதிபதி குமாரசாமியின் மீதான அக்கறையா இல்லை அம்மாவை அண்டிப்பிழைத்து வாழும் ஒரு அற்பத்தின் வியாக்கியானமா என்று யாருக்கும் குழப்பம் வரவே வராது.
ஏனெனில், உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பை வழங்கிய பிறகு மேல்முறையீட்டில் அந்தத் தீர்ப்பின் குறைகளை சுட்டிக் காட்டி, சரியான புரிதலுடன் –  அப்ஃளிகேஷன் ஆஃப் மைண்ட் – தீர்ப்பு எழுதப்படவில்லை என்று கூற உச்சநீதிமன்றத்திற்கு உரிமை இருக்கிறதாம். மாறாக, அந்த சுட்டிக்காட்டலை இப்போதே செய்ய நினைப்பது தவறான முன்னுதாரணம் என்று கன்னம் பழுக்க பேசுகிறார் ஜென்டில்மேன் வைத்தி.
என்ன செய்ய! நீதித்துறை என்பதே ஆதித்யா சேனலில் வரும் வண்டு முருகனது சிரிப்பு மன்றம் என்பதை சொத்துக் குவிப்பு வழக்கின் இத்தனை ஆண்டுகளில் எண்ணிறந்த முறைகளில் ஜெயா கும்பல் நிரூபித்தாலும் எச்சக்கலைகளுக்கு எப்படி புரியும்? ஜாமீனை மீனாக நினைத்த வண்டு முருகனது உதவியாளர்கள் போல, தாமதத்தை அம்மாவுக்கு எரிச்சலூட்டும் விடயங்களில் மட்டும் தேடுகிறது தினமணி.  அதன்படி ஜெயா கும்பல் தண்டிக்கப்படும் வாய்ப்பை உருவாக்குவது மட்டும் நீதித்துறையின் தவறான முன்னுதாரணமாம்.
இதே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இதே ஜெயாவுக்கு சட்ட விரோதமாக பிணை வழங்கினாரே அப்போது இதே வைத்தி எந்த கோவிலுக்கு மா விளக்கு வைக்க போயிருந்தார்?
மேல்முறையீட்டில் பவானி சிங் வாதிட்டது குறித்து தி.மு.கவுக்கு பெரும் ஆட்சேபணை இருந்தாலும் அவர்களது உள்நோக்கம் புதிய வழக்குரைஞரை நியமித்து தீர்ப்பு வழங்கப்படுவதை தாமதப்படுத்துவது என்று ஜேம்ஸ்பாண்ட் போல புலனாய்வு செய்து கூறுகிறார் வைத்தி.
பவானி சிங்கை தி.மு.கவிற்கு மட்டும் பிடிக்காதாம்.
பவானி சிங்கை தி.மு.கவிற்கு மட்டும் பிடிக்காதாம்.
பவானி சிங்குதான் வேண்டுமென்று ஜெயாவின் வக்கீல் படை எல்லா நீதிமன்றங்களிலும் வேர்க்க விறுவிறுக்க போராடியதும், அதற்கு பிராயச்சித்தமாக பவானி சிங்கும் அதிக சம்பளத்திற்கு பிகு பண்ணி பிறகு நீதிபதி குமாரசாமி கேள்வி கேட்கும் போது அச்சு அசலாக தில்லானா மோகானாம்பாள் வைத்தி போல சிரித்தாரே? பாம்பின் கால் பாம்பறிய வேண்டுமே மிஸ்டர் வைத்தி?
ஜெயாவின் சொத்து முறைகேடுகளை பச்சை பச்சையாக காப்பாற்றும் முயற்சியில் பவானி சிங் ஈடுபட்டது ஏதோ தி.மு.கவிற்கு மட்டும் ஆட்சேபணை ஏற்படுத்துமென்றால் இந்த வைத்தி சார் துன்னுவது அரிசியா இல்லை நரகலா என்று கேட்பது ஒன்றும் அநாகரிகமில்லையே?
தீர்ப்பை தாமதப்படுத்துவதால் தி.மு.கவிற்கு என்ன பயன்? ஜெயாவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்து விட்டால் அடுத்த தேர்தலில் அ.தி.மு.கவை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் தி.மு.கவுக்கு உண்டாம். அதனால்தான் வழக்கை இழுத்து தேர்தல் முடியும் வரை ஆதாயம் அடைய தி.மு.க சதி செய்கிறது என்று போயஸ் தோட்டத்து மந்திரவாதி போல ஜோசியம் கூறுகிறார் வைத்தி.
இந்த வழக்கில் தி.மு.க விற்கு என்ன ஆதாயம் என்பது இருக்கட்டும். ஜனநாயகம், அரசு, கட்சிகள், நேர்மை, நீதிமன்றம், வழக்கு, ஊழலற்ற ஆட்சி இந்த வஸ்துகளுக்கு என்ன பாதிப்பு என்பதை திருவாளர் வைத்தி ஏன் யோசிக்க வில்லை? ஊழல் குற்றவாளிகள் தண்டிக்ப்பட வேண்டும், அந்தத் தண்டனை இங்கே தவறு செய்யும் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்குமென்று ஏன் முழங்க முடியவில்லை?
ஆக பவானி சிங் நியமனம் குறித்த வழக்கு தி.மு.கவிற்கு ஆதாயமா இல்லை இந்த தீர்ப்பு குறித்து இப்படி ஜேப்படி திருடன் போல வெட்கம் கெட்டு பேசுவதால் தினமணிக்கு ஆதாயமா?
பவானி சிங் நியமனம் செல்லாது என்றாலும் மீண்டும் விசாரணை தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பதை தினமணி வைத்தி மனதார பாரட்டுகிறாராம். அதன் மூலம் இந்த வழக்கை தாமதப்படுத்தும் தி.மு.கவின் சதி முறியடிக்கப்பட்டதாம்.
உயர்நீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கில் ஜெயா விடுவிக்கப்படுவார் எனும் நிலையில் தி.மு.க தலைவர் அன்பழகனது வழக்கு அதை மாற்றி விட்டது என்று கால் முதல் தலை வரை எரிச்சலுடன் புலம்புகிறார் வைத்தி. நல்லது, இந்த தாமதத்திற்கான அறச்சீற்றம் வாய்தா ராணியின் இழுத்தடிப்புகள் குறித்த மகிழ்ச்சியின் மற்றுமொரு பக்கம் என்றால்…………
தினமணியின் மறுபக்கம் என்ன? அம்மணமா?
நன்றி"வினவு.
=============================================================================================
இன்று,
ஏப்ரல் -29.
ஓவியர் ரவி வர்மா 
  • சர்வதேச நடன தினம்

  • ஜப்பான் தேசிய தினம்

  • புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்(1891)

  • இந்திய ஓவியர் ரவி வர்மா பிறந்த தினம்(1848)========================================================================

தமிழகத்தில் நிலநடுக்கம் உண்டாகுமா?

நமது தமிழக நகரங்கள் பல கடற்கரையையொட்டி உள்ளது.தலை 
நகர் சென்னை சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களை 
ஏற்கனவே எதிர் கொண்டுள்ளது.
; நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் போன்று  தமிழ் நாட்டில் உள்ள நகரங்கள்  இயற்கை சீற்றங்களை தாங்கும் வகையில் உள்ளதா 
என்பதை பரிசீலனை செய்ய ஒருவாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.
சென்னை மாநகரமும் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்று கருதப்படும் பகுதியில்தான் உள்ளது.
சென்னை நகரில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் மக்கள்தொகை பெருக்கத்தால் கட்டுமான நிறுவனங்கள் வானளாவிய கட்டிடங்களை கட்டிக் கொண்டே இருக்கிறார்கள். 
வீட்டுக்கு வீடு வாகனங்களும் பெருகிவிட்டதால் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும்போது தரைதளத்தில் வாகன நிறுத்தும் இடத்திற்கு விட்டு விட்டு முதல்மாடியில் இருந்து குடியிருப்புகளை அமைக்கிறார்கள். அப்படி அமைக்கும்போது அந்த தூண்கள் வலுவானவையாக இருக்கவேண்டும். இல்லையெனில் இதுபோன்ற கட்டுமானங்கள் ஆபத்தை உருவாக்கும் .தரைதளம் முழுவதும் வாகனம் நிறுத்தும் இடத்திற்கு ஒதுக்கி கட்டப்படும் கட்டிடம் எந்த அளவில் கட்டவேண்டும்;
தூண்களின் சுற்றளவு எந்த அளவு இருக்கவேண்டும் என்றுவிதிமுறைகள் உள்ளன. குறைந்த பட்சம் அந்த தூண்கள் 300 மிமீ அளவு அல்லது ஒரு அடி அகலம் இருக்கவேண்டும். 
பத்துமாடி கட்டிடம் அல்லது அதற்கு மேல் என்றால் தூண்கள் குறைந்தபட்சம் ஒருமீட்டர் சுற்றளவோடு இருக்கவேண்டும். மேலும் பழைய கட்டிடங்கள் என்றால்அரசு நிர்வாகத்தினர் ஆய்வுசெய்து அந்தகட்டிடத்தை புதுப்பித்து பலப்படுத்தவேண்டும்.
பழைய கட்டிடத்தை புதுப்பிக்கவேண்டும் என்றால் தூண்களை அகலப்படுத்தவேண்டும்.
இது கட்டிடத்தின் மொத்த செலவில் 25 விழுக்காடாக இருக்கும். அதேநேரத்தில் நிலநடுக்கத்தை தாங்கக்கூடிய கட்டிடதொழில்நுட்பம் என்றால் மொத்த செலவில் 15 விழுக்காடுக்கும் சற்று அதிகமாக தேவைப்படும்.
கட்டிடங்களில் தீ தடுப்பு வசதிகளும் அவசியம். 
காரணம் நில நடுக்கம் ஏற்பட்டால் கட்டிடங்கள் இடிந்து விழும்போது மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடிக்கும் ஆபத்து உண்டு.

சென்னை மாநகரை பொறுத்தவரை நில நடுக்க மண்டலம் 3ல் உள்ளது. 
அதாவது சென்னை  நகரில் ரிக்டர் அளவையில் 6 வரைநிலநடுக்கம் ஏற்படும் ஆபத்து உள்ளது. 
நகரில் நில நடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகள் பல உண்டு என்றாலும் சில பகுதிகளில் வாய்ப்பு அதிகமாக உள்ளது. 
குறிப்பாக அடையாறுபகுதி மிகவும் மோசமான நிலத்தட்டின் மீது அமைந்துள்ளது. 
அந்தப்பகுதியில் பூமிக்கடியில் உள்ள மண் பொலபொலவென்று உள்ளதால் பூமிக்கடியில் மிகப்பெரிய பாறைகள் நகரும்போது கட்டிடங்கள் எளிதில் உடைந்து விழும் ஆபத்து உள்ளது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
மறுபுறம் கடும்பாறைகள் உள்ள பகுதிகளில் போடப்படும் தூண்கள் நில நடுக்கத்தை ஓரளவு சமாளிக்கும் வகையில் உள்ளன.
அதே நேரத்தில் சென்னையில் உள்ள கட்டிடங்கள் நில நடுக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் உள்ளன என்று அரசுத் தரப்பினர் தொடர்ந்து கூறிவருகிறார்கள். 
கடந்த 10 ஆண்டுகளில் கட்டப்பட்ட கட்டடங்கள் அனைத்தும் நில நடுக்கத்தை தாக்குப்பிடிக்கும் வகையில் கட்டவேண்டும் .
இங்கு ஆண்டுதோறும் ஆயிரம்கோடி ரூபாய் மதிப்புள்ள கட்டிடங்களை கட்டுகிறோம்;

இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்படும் பகுதிகள் என்று தகவல்களை புதுப்பிக்கும் இந்திய தரநிர்ணய அமைப்பு (பிஐஎஸ்) அதுகுறித்த வரைபடத்தையும் வெளியிட்டு வருகிறது. 
கடைசியாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள வரைப்படத்தில் முந்தைய வரைப்படத்தை விட தமிழகத்தில் மேலும் பலபகுதிகள் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதிக்குள் வந்துள்ளன.
 இந்த அமைப்புதான் நில நடுக்கத்தை தாங்கக்கூடிய கட்டிடத்திற்கான பொறியியல் வடிவமைப்புக்கான விதிமுறைகளையும் உருவாக்கி வருகிறது. மாநிலத்தில் மேலும் பல பகுதிகள் நில நடுக்கம் ஏற்படும் பகுதியின் மேல் அமைந்துள்ளதையும் அது கண்டுபிடித்துள்ளது.
காவிரி, வைகை ஆற்றோரப்பகுதி, கல்முனை அருகில் உள்ள பகுதி ஆகியவை இதில் அடங்கும். அதாவது மதுரை, தஞ்சாவூர், கோவை,நாகப்பட்டினம், புதுச்சேரி ஆகிய நகரங்கள் இதன் அருகில் உள்ளன.
இதனால் மற்றப் பகுதிகளில் நில நடுக்கம் ஏற்படாது என்பதல்ல.
இவை அனைத்தும் நிலநடுக்கம் கண்டிப்பாக என்றாவது உண்டாகும் நிலையில் உள்ள பகுதிகள் என்பதுதான்.அதை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் .வந்த பின் புலம்ப நாம் இருப்போமா என்று கூட தெரியாது.
========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உலகின் முதல் தமிழ் பைபிள்

திரிணாமுல் ஊழல்

மாரடைப்பு