வெள்ளி, 3 ஏப்ரல், 2015

கைகள் செய்யும் மாயம்.

இவை எல்லாம் நாம் சிறு குழந்தையாக இருக்கையில் பார்த்து வியந்த கைகள்  செய்யும் வித்தைகள்.
இதை செய்ய கைகளும் சுவர் மீது நாம் செய்யும் கை வித்தைகளை காட்ட சிறு மின் விளக்கு [டார்ச்] இருந்தாலே போதுமானது.
அதை விட முக்கியம் நம் வித்தைகளை பார்த்து உற்சாகம் கொள்ள சிறார்கள் தேவை.
இனி படங்களில் உள்ளது போன்று உங்கள் கைகளை வைத்து பல விதமான மிருகங்களை சுவரில் வரவைத்து மழலைகளை மகிழ்வியுங்கள்.
 

 

 

 

 
 

 

 

                                                                                                                     -நன்றி:சீன வானொலி.

==========================================================================
தலை மயிர் உதிர்வு.
தலை மயிர் உதிர்வு, தற்போது பலருக்கு உள்ள தலையாயப்  பிரச்சினையாகும்.
 இதற்கு இதுவரை சரியான , முடி உதிர்வோருக்கு மனநிறைவு தரும் மருந்துகள், சிகிச்சை வழிமுறைகள்  கண்டு பிடிக்க ப்படவில்லை.
மனிதரின் உடலில் நோய் எதிர்ப்பு உறுப்பில் இருக்கும் குறைபாடே  தலை மயிர் உதிர்வுக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.
ஸ்பெயின் தேசிய புற்று நோய் ஆய்வு மையத்தின் ஆய்வாளர்கள் வெளியிட்ட கட்டுரையில் பொதுவாக மனிதரின் மயிர் ஆயுள்காலம் முழுவதும் வளர்ந்து வருகின்றது. தலை மயிர் உதிர்வு, உடலின் நோய் எதிர்ப்பு உறுப்பைச் சேர்ந்த macrophage எனும் உயிரணுவுடன் தொடர்புடையது.
நமது தோலில் நோய் ஏற்படும்போது, இந்த உயிரணு நோய்த்தோற்ற வகையை ஒழிப்பதோடு, மயிர் வளர்வதற்கு துணைபுரியும் உயிரணுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
சுறுசுறுப்பாக உள்ள Macrophage உயிரணு, மயிர் வளர்ச்சி வேகத்தை குறைத்து, தடை செய்யும்.
 விலங்குகளில் சோதனை செய்தபோது, Macrophage உயிரணு சுறுசுறுப்பான அளவில்  இல்லையென்றால், மயிரின் வளர்ச்சி வேகம் தெளிவாக அதிகரித்தது.
==========================================================================

==========================================================================
                     என்ன கவலையோ?சோகமாக பாட்டிசைக்கிறது?