மொபைல் பேங்கிங்
இன்றைய அவசர காலத்தில் யாருக்கும் தனது சொந்த வேலைகளை கவனிக்க கால அவகாசம் கிடைப்பதில்லை.
அது போன்ற அவசர வேலைகாரர்களுக்கு உதவ இப்போது அலை பேசி மிகவும் உதவுகிறது.
அதன் மூலம் வங்கி பரிவர்த்தனைகளை செய்து கொள்ள கை கொடுக்கும் மொபைல் பேங்கிங் இன்று பலரால் பயன்
படுத்தப்பட்டு வருகிறது.
இதனால் வங்கி சென்று வரிசையில் நின்று பணபரிவர்த்தனை செய்ய நேரம் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டாம்.
. விரல் நுனியில் அனைத்தையும் வங்கிப்பணிகள் அனைத்தையும் பெற லாம்.
வங்கி கணக்கு இருப்பு, காசோலை புத்தகத்திற்கான கோரிக்கை போன்ற பல சேவைகளை வங்கிகள் வழங்குகின்றன.
இவை அனைத்தையும் இப்போது மொபைல் பேங்கிங் வழியாக செய்ய முடியும்.
ஸ்மார்ட் போன் வரவுக்கு பிறகு மொபைல் பேங்கிங் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள், ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் உலகின் 2வது நாடாக இந்தியா திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு ஏற்ப வங்கிகள் ஆன்டிராய்டு, விண்டோஸ் இயங்குதளத்துக்கான அப்ளிகேஷன்களை உருவாக்கியுள்ளன. இவை பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒன் டைம் பாஸ்வேர்டை ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வங்கிகள் வழங்குகின்றன. இது தவிர இன்டர்நெட் பேங்கிங்கும் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே நீங்கள் கீழ் வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாள்வதன் மூலம் உங்கள் வங்கிப் பணிகளை பாதுகாப்பாக அலைபேசி மூலம் கையாளலாம்.
இதுவரை உங்கள் அலை பேசிக்கு கடவு சொல் [ பாஸ்வேர்ட்] நீங்கள் வைக்க வில்லை என்றால் முதலில் கடவு சொல் [ பாஸ்வேர்ட்] வைக்கவும்.
அலைபேசியில் எஸ்.எம்.எஸ். அலர்ட்[ஒலி]வருமாறு பதிவு செய்யவும்.
அலைபேசியில் கண்ட அப்ஸ்களை வைத்து அதன் மூலம் வைரஸ் தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
குறிப்பாக இன்டர்நெட் வசதி கொண்ட நவீன அலைபேசிகளை வைரஸ்கள் பாதிக்கக்கூடிய ஆபத்து அதிகம்.
உங்கள் அலைபேசியில் ஆன்ட்டி வைரஸ் சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்யவும்.
இணையதளத்தில் இருந்து எந்த விதமான கோப்புகளையும் டவுன்லோட் செய்ய வேண்டாம். உதராணமாக பயன்பாடுகள், விளையாட்டுகள், படங்கள், இசை போன்றவற்றைதான் .
டெபிட் / கிரெடிட் கார்ட் எண்கள், சிவிவி எண்கள் மற்றும் பின் நம்பர் போன்ற ரகசிய தகவல்களை அலைபேசியில் பதிவு செய்ய வேண்டாம். உங்களது அலைபேசி தொலைந்து போனால் உடனே வங்கியுடன் தொடர்பு கொண்டு மொபைல் பேங்கிங் வசதியை செயலிழக்கச் செய்யுங்கள்.
மொபைல் பேங்கிக்கிற்கான ரகசிய எண்களை அவ்வப்போது மாற்றுங்கள்.
மற்றவர்கள் எளிதாக கண்டு கொள்ளும்படியான வெளிப்படையான
கடவு சொற்களாக [பாஸ்வேர்டு] அதாவது உங்கள் அல்லது உறவினர்கள் பிறப்பு பெயர், தேதி பயன்படுத்த வேண்டாம்.
வை ஃபை இணைப்பை பயன்படுத்திக்கொண்டிருக்கும் போது மொபைல் பேங்கிங் செய்வது பாதுகாப்பானதல்ல.தவிர்க்கவும்.
அதேபோல் ப்ளூடூத்களை பயன் படுத்திக்கொண்டிருந்தால் அதையும் துண்டியுங்கள்.
மேற்கண்ட விஷயங்களை முறையாக பின்பற்றினாலும் மொபைல் பேங்கிங் 100 சதவீதம் பாதுகாப்பானதாக இருக்கும் என்று கூற முடியாது. ஆனாலும் 90 சதவிகிதம் நாம் ஒரு பயன்பாட்டாளராக உங்கள் பரிமாற்றங்கள் பாதுகாப்பாக இ்ருப்பதை
நம் பக்கம் இருந்து உறுதி செய்து கொள்ளலாம்.
ஏடிஎம் இலவச பரிவர்த்தனை குறைக்கப்பட்ட நிலையில் ஏடிஎம் கார்டுகள் மூலம் ஆன்லைனில் 3டி செக்யூர்டு பாஸ்வேர்டு அல்லது ஏடிஎம் பின் மூலம் பேமன்ட் வசதிகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு தனது தனிப்பட்ட கம்ப்யூட்டர்கள் மூலமே பரிவர்த்தனை செய்வது, வைரஸ் தடுப்பு சாப்ட்வேர் நிறுவி தகவல்களை பாதுகாப்பது,
வங்கிகள் வழங்கும் விர்சுவல் கீபேர்டு மூலம் பாஸ்வேர்டு உள்ளிட்ட தகவல்களை நிரப்புவது முழுமையான பாதுகாப்பை உறுதி செய்யும்.
எந்த ஒரு வங்கியும் வாடிக்கையாளர்களிடமிருந்து வங்கி கணக்கு,
ஏடிஎம் கார்டு எண்,
சிவிவி எண்,
கடவு சொற்கள் [ பாஸ்வேர்டு]போன்ற விவரங்களை கேட்பதில்லை.
என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இதுகுறித்து எச்சரிக்கை குறுந்தகவல்களை ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் வங்கிகள் அனுப்பி வருகின்றன.
அப்படி ஏதும் அழைப்பு வந்தால் தயக்கம் இன்றி துண்டித்து விடுங்கள்.
மீண்டும்,மீண்டும் வந்தால் வங்கியை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள்.
இது போன்ற செயல்களை முடிந்தவரை நீங்கள் கையாண்டால் போதும் உங்கள் மொபைல் வங்கி சேவை சிறப்பாக செயல் படும்.
உங்கள் வங்கிக்கணக்கு எண் ,கடவு சொற்கள் என்ன?
உங்கள் வங்கி சேவை பாதுகாப்பாக இருக்கத்தான் விசாரிக்கிறேன்!நம்புங்கள்.!!]
========================================================================
இன்று,
ஏப்ரல்-05.
- இந்திய தேசிய கடல்சார் தினம்
- பசிபிக் போர் ஆரம்பமானது(1879)
- அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் முதல் முறையாக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தினார்(1782)
- ஆங்கில-டச்சு போரை முடிவுக்கு கொண்டு வர வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாடு எட்டப்பட்டது(1654)
இந்திய தேசிய கடல் சார் தினம்
இந்தியாவின் முதல் நீராவிக் கப்பலான "எஸ்.எஸ்.லாயல்டி', 1919, ஏப்., 5ல், மும்பையில் இருந்து லண்டனுக்கு பயணித்தது.
அதை நினைவுகூறும் வகையில் 1964 முதல், ஏப்., 5ம் தேதி தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்படுகிறது. இந்திய கப்பல் துறையின் மகத்தான பணிகளை, சமூகத்திற்கு வெளிப்படுத்துவதே இத்தினத்தின் நோக்கம்.
இந்திய துணைக் கண்டத்தை கடல் பரப்பு பெருமளவு சூழ்ந்துள்ளதால், சிந்து சமவெளி நாகரிக காலமான கி.மு.3000த்தில் இருந்தே, கடல்வழி பயணம் பிரபலமாக இருந்தது.
சுதந்திரத்திற்கு பின் இந்திய கப்பல்துறை மிக வேகமாக வளர்ச்சி அடைய துவங்கியது
. இந்திய கடல் எல்லைகள் மற்றும் கப்பல் போக்குவரத்தை போர்க்காலத்தில் பாதுகாக்க வேண்டிய நமது கடற்படையும் தேவையான அளவுக்கு வளர்ச்சி பெற்றதாக, இப்பகுதியில் சக்தி வாய்ந்த அமைப்பாக விளங்கி வருகிறது.
இந்தியா ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் நீள கடல் எல்லையும், நூற்றுக்கும் மேற்பட்ட துறைமுகங்களும் கொண்டுள்ளது.
இந்தியா ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் நீள கடல் எல்லையும், நூற்றுக்கும் மேற்பட்ட துறைமுகங்களும் கொண்டுள்ளது.
சுமார் 90 சதவீதம் வாணிப பொருட்கள் கடல் வழியாக கொண்டு செல்லப்படுகின்றன.
கடல்சார் பகுதிகளின் முக்கியத்துவம், கடல் வழிகள் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை உணர்த்தும் அற்புதமான தினம் கடல்சார் தினம். நாட்டின் மொத்த கடல்சார் வளர்ச்சியில் முக்கியத்துவத்தை உணர்த்தவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
நாட்டின் கடல்பகுதி பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவற்றை ஏப்.,5 உணர்த்துகிறது.
ஒரு வார காலம் கொண்டாடப்படும் இந்த கடல்சார் தினம்.
ஒரு வார காலம் கொண்டாடப்படும் இந்த கடல்சார் தினம்.
இந்திய கப்பல் போக்குவரத்து துறையின் சேவைகளைக் மிகக் குறைவான மக்களே அறிந்துள்ளனர்.
கடல்சார் தினம் கொண்டாடப்படுவதன் மூலம் கப்பல் துறை மற்றும் கடற்படை குறித்து மக்கள் அறிந்து கொள்ளவும் கடந்த 50 ஆண்டுகளில் அதன் வளர்ச்சி மற்றும் சேவைகளைப் புரிந்து கொள்ளவும் இந்த இந்திய கடல் சார் தினம் கொண்டாடப்படுகிறது.
========================================================================
தானாக அணைகிறதா-உங்கள் கணினி?
உங்கள் கணினி அல்லது மடிக்கணினி[லேப்டாப்] அடிக்கடி தானாக ஆஃப் ஆகிக்கிட்டிருந்தா உங்களுக்கு் கோபம் உண்டாகாமல் இருக்காது.. உடனே கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பை சர்வீஸ் சென்டருக்கு தூக்கிட்டு போவோம்.
கடைக்காரர் விட்டுட்டு போங்க பார்த்து வைக்கிறேன் என்பார். காத்திருந்து வாங்குறதுக்குத் தான் நமக்கு நேரம் இருக்காதே, நாமும் சரின்னு சொல்லி கிளம்பிட்டு, மீண்டும் சாய்ங்காலமா போவோம்.
[ கம்ப்யூட்டரை துடைச்சி கிளீனா வைச்சிருப்பார்.]
ஒண்ணுமில்ல சார், ஒரு ஐசி மட்டும் போயிடுச்சி சார், ஒரு பின்னு போயிடுச்சி சார்னு சொல்லி நமக்கிட்ட ரூ.300ல் இருந்து ரூ.500 வரை பிடுங்கிடுவார்.
ஆனால் உண்மை வேறு . அது என்ன? பார்ப்போம்.!
[ லேப்டாப்பின் பக்கவாட்டில் உள்ள சிறு சிறு துளைகளில் காற்று வருமே அதுதான்.]
அதை தூசு அடைந்திருந்தால் பிராஷர் சூடாகி வரும். இதன் காரணமாக குறிப்பிட்ட வெப்ப நிலைக்கு மேலே போகும்போது கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் தானே அணைந்துவிடும்.
இதுதான் தானே ஷட்டவுன் ஆவதற்கு முழுக் காரணம்.
இதற்கு கம்ப்யூட்டர் சர்வீஸ் சென்டர் போக தேவையில்லை. வேகமாக காற்றடித்தால் தூசுகள் வெளியேறி விடும்.கடையில் காற்றை வேகமாக அடித்து தூசுகளை சுத்தம் செய்துதான் நம்மிடம் ஐ.சி க்குள்ள காசை பிடுங்கியிருப்பார்.இதற்கு சைக்கிள் காற்றடிக்கும் பம்பு இருந்தால் கூட போதும்.
லேப்டாப்பில் அதிக தூசி இவ்வளவு சூடு ஏற்படுத்தி அணைத்து விடும்.ஆனால் இதுவே கம்ப்யூட்டர் என்றால்? தூசின் அளவு இன்னும் அதிகமாக சேர்ந்து உள்ளே இருக்கும் இருக்கும். மின்னிணைப்பு தரும் எஸ்.எம்.பி.எஸ்.சில் தூசு நிறையவே சேர்ந்திருக்கும். அதையும் மூக்கில் துணிக்கட்டிக்கொண்டு காற்றடித்து வெளியேற்றுங்கள் .
உங்கள் கணினி ஷட் டவுன் ஆவதற்கு ஏதோ வைரஸ் தான் காரணம் என்று நினைக்க வேண்டாம்.
பொதுவாக வைரஸ்கள் ஷட் டவுன் செய்வதில்லை உங்கள் வேலையை பாதிக்கும் படி குழ றுபடிகளையே செய்து கடுப்பேத்தும்.
உங்கள் கணினி தானாக அணைந்து போக அனேகமாக தூசுகள்தான் காரணமாக இருக்கும்.
==================================================