வியாழன், 16 ஏப்ரல், 2015

தீர்ப்புகள் திருத்தப்படலாம்.?


ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக நடந்து வரும் அனைத்துமே சந்தேகத்தையும்,விவாதத்தை கிளப்புவதாகவுமே நடக்கிறது.

பவானி சிங் நியமனம் தவறு என்று ஒரு நீதிபதி கூறுகையில் மற்றொருவர் அது சரிதான் என்கிறார்.

அவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர்.

ஆனால் இரு நீதிபதிகளுமே அன்பழகன் அரசு தரப்புக்கு உதவுவதை விரும்பவில்லை.

நீதிபதி குமாரசாமி தீர்ப்பை வழங்கவும் தடை இல்லை என்றுள்ள்னர்.
குற்றவாளிக்கு ஆதர்வாக பகிரங்கமாகவே செயல்பட்ட அரசு வழக்குரைஞர் பவானி சிங் நியமனமே தவறு என்று தீர்ப்பு வெளிவரும் நிலையில் அவர் குற்றவாளி ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நீதிக்கு புறம்பாக வாதாடி குழப்பியதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்கல் சரியான தீர்ப்பாகுமா?

ஜெயலலிதா கேட்கும் பிணை எல்லாம் ,எப்போதும் அவசர வழக்காக எடுத்து வாதாடும் உச்ச நீதிமன்றம் பவானிசிங் நியமனம்,அன்பழகன் அரசு தரப்புக்கு உதவும் வாய்ப்பு கேட்பதில் ஏன் இவ்வாளவு இழுத்தடிப்பு வேலைகள்.

ஆனால் தீர்ப்பை வழங்க மட்டும் தடை கிடையாது உடனே வழங்கலாம் என்பது பல சந்தேகங்களை தருகிறது அல்லவா?

மாற்றத்தின் பின்னணி ?

கர்நாடக தலைமை நீதிபதி வகேலா
கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றிய ஹிரேந்திர ஹிராலா வகேலா ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளையும், சந்தேகங்களையும் எழுப்புவ தாக உள்ளது.

 ஜெயலலிதா மற்றும் அவரது கூட்டாளிகள் தொடர்புடைய சொத்துக்குவிப்பு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடை பெற்றுவரும் நிலையில், செய்யப்பட்டுள்ள இந்த பணியிடமாற்றத்திற்கு அரசியல் தலையீடு ,அருண் ஜெட்லி ஜெயலலிதா சந்திப்பு,விவசாயிகள் நிலம் பறிப்பு மசோதாவுக்கு ஜெயலலிதா அதரவு போன்றவை காரணமாக இருக்குமோ என்ற ஐயத்தை எளிதாக புறக்கணிக்க முடியாது. 

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுமுதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதாவுக்கு இதுவரை யாருக்கும் இல்லாத வகையில் உச்சநீதிமன்றம் மிகக்குறுகிய கால இடைவெளி யில் ஜாமீன் வழங்கியது.லாலு பிரசாத் இந்த பிணைகாக ஆண்டுக்கனக்கில் காத்திருந்தார்.
மேலும் ஜெயலலிதா வழக்கை விரைவாக நடத்துமாறு உச்சநீதிமன்றம் கர்நாடக உயர்நீதிமன்றத்தை பணித்தது.அதற்கு கால கெடுவும் கொடுத்தது. ஜாமீனுக்கு நிபந்தனைகளாக பல்வேறு அம்சங்கள் இடம்பெற் றிருந்தபோதும், அவை பின்பற்றப்படுகின்றனவா என்ற கேள்வி அழுத்தமாகவே எழுகிறது.அந்த ஜாமீன் நிபந்தனைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்று கண்கானிக்கவும் உச்ச நீதிமன்றம் கவலைப்பட வில்லை.
ஜெயா ஆட்சி நடத்தும் பிம்பம் உருவாக்கப்படக்கூடாது.அவர் முதல்வர் போன்ற பிரமையை உண்டாக்கக் கூடாது என்பது முக்கிய நிபந்தனைகள்.
அவை என்ன லட்சணத்தில் உள்ளது,கடை பிடிக்கப்படுகிறது என்பதை தமிழ் நாட்டின் கடை கோடி மக்களும் சொல்லி விடுவார்கல்.
மக்களின் முதல்வர்,எல்லா அர்சுதுறை விள்மபர பதாகைகளிலும் ஜெயா படம் .செய்தி மக்கள் துறை ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் வைத்திருக்கும் பெரிய திரை தொலைகாட்சிகளில் ஜெயா புகழ் பாடும் விள்ம்பரங்கள்,அதில் வாய் நிறைய சிரிப்புடன் கையை ஆட்டும்ஜெயா?
கோக்குவரத்து துறை தொழிலாளர் பேச்சு வார்த்தையின் போது பின்னணியில் ஜெயா பட பதாகை.
ஜெயலலிதா பிறந்தானாளில் மரம் நடும்,அம்ருத்துவ முகாம் துவக்கி வைக்கும்,கோவில்களில் பூசை செய்யும் மாவட்ட ஆட்சியர்கள்,அமைச்சர்கள்.இந்த செய்திகல் உச்ச நீதிமன்றத்துக்கு தெரியாதா?
இவை எல்லாவற்றையும் விட தமிழ் நாடு வரவு-செலவு திட்ட றைக்கையில் சட்டமன்றத்தில் கவர்னர் முன்னிலையிலேயே ஜெயா வாழ்த்து புரானம்.அவர் அறிவுறையின் படி நடட்க்கும் ஆட்சி,அவர் வழிகாட்டலில் நடக்கும் ஆட்சி என்ற புலம்பல்களை முதல்வர் பன்னீர் செல்வம் பதிவு செய்துள்ளார்.
தலைமைச்செயலர்,டிஜிபி,பொறுப்பில் உள்ளவ்ர்கள் அடிக்கடி வீடு தேடி காத்திருந்து ஜெயலலிதாவுடன் ஆலோசிப்பதாக பத்திரிகைகளில் வரும் செய்திகளும் உச்ச நீதிமன்றம் கண்களில்படவே இல்லையா?
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி சந்தித்து பேசியது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டபோதும் அதுகுறித்து பல்வேறு ஐயங்கள் எழுப்பப்பட்டன.

இப்போது மிக மோசமான நீதித்துறை செயல்பாடாக ,அரசியல்வாதிகள் தலையீடாக இந்தப் பின்னணியில்தான் நீதிபதி வகேலா ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக் கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் நியமனம்செய்யப்பட்டது தவறானது என்று உச்சநீதிமன் றத்தில் தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில் வகேலா மாற்றப்பட்டிருக்கிறார். 
அதுமட்டுமின்றி நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை கொண்டுவர உருவாக்கப்பட்ட தேசிய நீதிபதிகள் நியமன ஆணை யத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வருவதற்கு முன்பு வகேலா மாற்றப்பட்டிருக்கிறார். 
மேலும் ஜெயலலிதா தொடர்புடைய சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்து வரும் நீதிபதி குமாரசாமி இந்த ஆண்டுஆகஸ்ட்டில் ஓய்வுபெற இருக்கிறார். 
அதற்குள் இந்த வழக்கு முடிவடையாவிட்டால் புதிய நீதிபதியை நியமிக்கும் அதிகாரம் கர்நாடக உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதிக்கே உண்டு.
இந்த நிலையில் வகேலா மாற்றப்பட்டிருக்கிறார்.
பவானி சிங்                                     அன்பழகன் 
 ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை உயர்நீதிமன்ற பதவி 2015 பிப்ரவரி மாதம் முதல் காலியாக உள்ள நிலையில் இந்த இடமாற்றம் நடைபெற்றுள்ளது. பொதுவாக பெரிய மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாக இருப் பவர்கள் பணிமாற்றம் செய்யப்படுமானால் அதைவிட பெரிய மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவதே மரபாக இருந்துவந்த நிலை.
ஆனால் தற்போது பதவியில் உள்ளதைவிட சிறிய மாநில மான ஒடிசா மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக வகேலா மாற்றப்பட்டிருப்பது ஏன் ? 
 அவர் நியாயமாக நடந்து கொண்டதற்கு அவரை பழி வாங்கவா?என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது.
 நீதிமன்றங்கள் மீதிருந்த நம்பிக்கை இது போன்ற ஒரு சார்பு நடவடிக்கைகள் மூலம் தற்போது மக்களிடம் குறைந்து வருகிறது.
அஞ்சாமல் நியாயம் வழங்கிய நீதிமன்றங்கள் தற்போது ஓய்யுவுக்குப்பின்னர் நல்ல  பதவி தேடியலையும் சம்பந்தம் போன்றவ்ர்களால் நிரப்பப்படுகிறதோ என்ற ஐயம்  மக்கள் மத்திய்ல் கிளம்பியுள்ளது.
==================================================

இன்று,
ஏப்ரல்-16.
  • சிரியா விடுதலை தினம்(1946)
  • உலகப் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் பிறந்த தினம்(1889)
  • இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் சேவை பம்பாயில் ஆரம்பிக்கப்பட்டது(1853)
  • செர்பியப் பேரரசு, டுசான் சில்னி என்பவரால் உருவாக்கப்பட்டது(1346)
==================================================
162 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான், 1853 ஏப்ரல் 16ந் தேதி, இந்தியாவில் முதல் ரயில் ஓடியது.

 முக்கிய வியாபார ஸ்தலமான பம்பாயில் இருந்து தானேவுக்கு அந்த ரயில் இயக்கப்பட்து .

1604-ல் இங்கிலாந்தின் வொலாட்டன் பகுதியில் மரத்தால் தண்டவாளம் அமைத்து, அதன்மீது சில பெட்டிகளை ஒன்றிணைத்து குதிரையைக் கொண்டு இழுத்துப் பார்த்திருக்கிறார்கள். 
சரியாக இரண்டு நூற்றாண்டுகள் கழித்து, 1804-ல் ரிச்சர்ட் ட்ரெவிதிக் (Richard Trevithick) என்ற பொறியாளர் உலகின் முதல் நீராவி ரயில் என்ஜினைக் கண்டுபிடித்தார்.
1825-ல் உலகின் முதல் பயணிகள் ரயில் இங்கிலாந்தில் ஓடியது. இல்லை.. இல்லை.. 1830களில்தான் முதல் ரயில் ஓடியது 
 இந்தியா அப்போது இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்ததால் அந்த கண்டுபிடிப்பு இங்கும் வந்தது.
 1846-ல் அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் பஞ்சுத் தட்டுபாடு, இங்கிலாந்து வணிகர்களை இந்தியாவை நோக்கி திசைதிருப்பியது. 
இந்தியாவின் பல பகுதிகளில்  பஞ்சு விளைந்தது. 

அதை எல்லாம் உடனுக்குடன் அருகில் உள்ள துறைமுக நகரங்களுக்கு கொண்டு சென்று இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். ஆனால் இந்தியாவின் உட்பகுதியில் விளையும் பஞ்சை துறைமுகப் பகுதிக்கு கொண்டு வரவே பல நாட்கள் ஆனது. 
இந்த கால விரயத்தை தவிர்க்க ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அப்போது ஆங்கிலேய உயர் அதிகாரியான டல்லவுசி (Lord Dalhousie), இந்தியா முழுவதையும் ரயில் மூலம் இணைக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். குறிப்பாக பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் ஆகிய துறைமுக நகரங்களை இணைப்பது முக்கியம் என்றார். 
இதற்காக இந்தியாவின் முதல் ரயில் நிறுவனமான கிரேட் இந்தியன் பெனின்சுலார் ரயில்வே கம்பெனி மசோதா 1847ஆம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 
ஆனால் கிழக்கிந்திய கம்பெனி இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மசோதா தோல்வியைத் தழுவியது.
இதனிடையே 1848-ல், தனது 36வது வயதில், இந்தியாவின் இளம் கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்றார் டல்லவுசி.  அவரது முயற்சியால் 1849ஆம் ஆண்டு ரயில்வே மசோதா இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாகத் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது.
கிழக்கிந்திய கம்பெனிக்கும், கிரேட் இந்தியன் பெனின்சுலார் ரயில்வே கம்பெனிக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. 
அதன்படி முதல்கட்டமாக ரயில்வே லைன் அமைக்க ரயில்வே கம்பெனி 5 லட்சம் பவுண்டுகளை முதலீடு செய்யும் என்றும், பின்னர் விரிவாக்கம் செய்யும்போது, இதனை 10 லட்சம் பவுண்டுகள் வரை அதிகரித்துக் கொள்ளலாம் என்றும் முடிவானது. 
இதன் அடிப்படையில் 1852, நவம்பர் மாதம் பம்பாய் – தானே இடையிலான ரயில் பாதை தயாரானது.
சோதனை முயற்சிகள் எல்லாம் முடிந்து, 1853 ஏப்ரல் 16-ம் தேதி, சனிக்கிழமை, மதியம் 3.35 மணிக்கு இந்தியாவின் முதல் ரயில் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
 பம்பாயின் போரி பந்தரிலிருந்து தானே வரையிலான 34 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த ரயில் இயக்கப்பட்டது. 14 பெட்டிகளைக் கொண்ட அந்த ரயிலில் 400 விருந்தினர்கள் பயணம் செய்தனர். இந்த வரலாற்று நிகழ்வை பொதுமக்கள் பார்த்து மகிழ வேண்டும் என்பதற்காக அன்றைய தினம் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.
புகைவிட்டுக் கொண்டே இரைச்சலுடன் ஓடிய அந்த இரும்பு வாகனத்தை ஏராளமானோர் வியப்புடன் பார்த்தனர்.
 சிலர் பீதியில் அலறிக்கொண்டு ஓடினர்.
 75 நிமிடங்களில் வெற்றிகரமாக இலக்கை வந்தடைந்த ரயிலுக்கு தானேவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
 கல்கத்தா தான் இந்தியாவின் தலைநகரமாக இருந்தது. 
கல்கத்தாவில் இருந்து முதல் ரயிலை இயக்க நிறைய முயற்சிகள் நடந்தன.
பம்பாய், ஹவுரா ஆகிய இரண்டு நகரங்களில் இருந்து இயக்குவதற்கான ரயில் என்ஜின்களும், பெட்டிகளும் இங்கிலாந்தில் இருந்து ஏறத்தாழ ஒரே சமயத்தில் தான் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டன. 
கிழக்கிந்திய ரயில்வேக்கான என்ஜினை ஏற்றி வந்த குட்வின் என்ற கப்பல் திசை மாறி ஆஸ்திரேலியா சென்றுவிட்டது.
 ரயில் பெட்டிகளை ஏற்றிவந்த மற்றொரு கப்பல் வங்கக் கடலில் நடுவழியில் கவிழ்ந்துவிட்டது.
இதெல்லாம் போதாதென்று கிழக்கிந்திய ரயில்வே கம்பெனி இருப்புப்பாதை அமைக்க விரும்பிய பாதையின் ஒரு பகுதி பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. பிரெஞ்சுக்காரர்கள் கிழக்கிந்திய ரயில்வேக்கு இடம்தர மறுத்தனர்.

 பின்னர் ஒருவழியாக ஓராண்டு கழித்து, 1854 ஆகஸ்ட் 15ந் தேதி ஹவுரா – ஹூக்ளி இடையே கிழக்கு இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் சேவையை தொடங்கியது.
 1845ஆம் ஆண்டே இதற்கென மெட்ராஸ் ரயில்வே கம்பெனி லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது. தென்னிந்தியாவில் இருப்புப் பாதை அமைக்கும் பணியை மெட்ராஸ் ரயில்வே கம்பெனி 1853இல் தொடங்கியது. 
அதற்காக அது தேர்ந்தெடுத்த இடம் புனித ஜார்ஜ் கோட்டைக்கு
 பக்கத்தில் இருந்த  ராயபுரம்.
 விசாலமான அறைகள், உயரமான தூண்கள், அழகான முகப்பு என பிரம்மாண்டமாக கட்டிமுடிக்கப்பட்ட ராயபுரம் ரயில் நிலையத்தை, மெட்ராஸ் ஆளுநர் ஹாரிஸ் பிரபு 1856, ஜூன் 28ந் தேதி திறந்து வைத்தார். ஜூலை 1ந் தேதி தென்னிந்தியாவின் முதல் ரயில் இங்கிருந்து புறப்பட்டது.
ஆற்காடு நவாப்பின் தலைமை இடமாக இருந்த ஆற்காடு வரை இந்த ரயில் இயக்கப்பட்டது. 
ஆளுநர் ஹாரிசும், சுமார் 300 ஐரோப்பியர்களும் இந்த ரயிலில் பயணித்தனர். 
ஆம்பூர் சென்றடைந்த ரயிலுக்கு துப்பாக்கி குண்டுகளும், பேண்டு வாத்தியங்களும் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
 இந்த ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் மற்றொரு ரயில் ராயபுரத்தில் இருந்து திருவள்ளூர் வரை இயக்கப்பட்டது.
===================================================