எல்லாம் அம்மாவுக்கு தெரியும்..?.

 மணி ஆர்டருக்கும் மூடுவிழா.

 தந்தியைத் தொடர்ந்து மணி ஆர்டருக்கும் மூடுவிழா நடத்த அஞ்சல்துறை முடி்வெடுத்துள்ளது.
 இதன் மூலம் 135 ஆண்டு கால மணி ஆர்டர்  வரலாறு முடிவுக்கு வருகிறது.
 நாடு முழுவதும் முன்பு மோர்ஸ் முறையில் இருந்த தந்தி முறை, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக படிப்படியாக  வழக்கொழிந்தது.
 தற்போது மக்கள் தகவல் தொடர்புக்காக  எஸ்எம்எஸ், இமெயில், செல்போன் என வளர்ச்சி அடைந்து விட்டதால் தந்தி முறையை  கைவிட்டனர். 
இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனைத்து தபால் நிலையங்களிலும்  பயன்பாட்டில் இருந்த தந்தி முறை முடிவுக்கு வந்தது. 
தற்போது தபால் நிலையங்களை பணம் வினியோகிக்கும் மையங்களாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

மேலும் தற்போது நடைமுறையில் உள்ள எலெக்டரானிக் மணி ஆர்டர்  முறை கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. 


தற்போது  தந்தியைத் தொடர்ந்து படிவத்தை நிரப்பி பணம் அனுப்பும் முறையான மணி ஆர்டர் முறையை  முடிவுக்கு கொண்டு வர அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது. 
  தற்போது உடனடியாக பணத்தை பெறும்  வகையிலான எலெக்ட்ரானிக்  மணியார்டர் முறை புழக்கத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. 

எனவே 135 ஆண்டு கால பழமையான படிவத்தை நிரப்பி தபால் மூலம் பணம் அனுப்பும்  மணியார்டர் முறைக்கு மூடுவிழா நடத்த அஞ்சல் துறை முடிவு செய்துள்ளது.

தற்போது  நாடு முழுவதும் உள்ள  1 லட்சத்து 62 ஆயிரத்திற்கும் அதிகமான தபால் நிலையங்கள் மூலமாக நேரடி பணம் பட்டுவாடா செய்யும்  நடைமுறை செயல்பட்டு வருகிறது.
========================================================================
நானோ துகள்கள் .


நமது அன்றாட வாழ்வில் நீளத்தை அளக்க மீட்டரையும் பொருட்திணிவை அளக்க கிலோ கிராமையும் நேரத்தை அளக்க நொடியையும் பயன்படுத்துகிறோம். 
இது மீட்டர், கிலோகிராம், செகண்ட் அமைப்புஎன அழைக்கப்படுகிறது. தூரமோ, அளவோ மிகமிகக் குறைவாக இருந்தால், நானோமீட்டர் என்ற அலகு பயன்படுத்தப்படுகிறது. 
அதே போல் மிகக் குறைந்த பொருட்திணிவு நானோகிராம் என்ற அலகிலும் மிகக் குறைந்த நேரம் நானோசெகண்ட் என்ற அலகிலும் அளக்கப்படுகிறது.
ஒரு மீட்டரில் பில்லியனில் ஒரு பகுதியே நானோமீட்டர் (10-9 மீட்டர்). அது எவ்வளவு சிறியது என்பதை இப்படி புரிந்துகொள்ளலாம். 
10 ஹைட்ரஜன் அணுக்களை (அல்லது 5 கார்பன் அணுக்களை) வரிசையாக அடுக்கிவைத்தால், அது ஒரு நானோமீட்டர் நீளம் இருக்கும்.
 ஒரு டிஎன்ஏ மூலக்கூறு சுமார் 2.5 நானோமீட்டர் அளவில் இருக்கும். ரத்தத்தில் உள்ள ஒரு சிவப்பணு சுமார் 7000 நானோமீட்டர் அளவிலும் ஒரு மனிதத் தலைமுடியின் அகலம் 80,000 நானோமீட்டர் (80 மைக்ரான்கள்) அளவிலும் இருக்கும்.
ஒரு மீட்டரில் ஆயிரத்தில் ஒரு பகுதி ஒரு மில்லிமீட்டர். 
ஒரு மில்லிமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பகுதி ஒரு மைக்ரோமீட்டர் (மைக்ரான்). கணினியில் பயன்படுத்தப்படும் சிப்புகள் இந்த அளவில் இருக்கும்.
 ஒரு மைக்ரோமீட்டரில் ஆயிரத்தில் ஒரு பகுதி ஒரு நானோமீட்டர் (1 nஅ). இந்த அளவில் இருக்கும் பொருட்களைப் பற்றி ஆராய்வதே நானோ அறிவியல்.
நானோதொழில்நுட்பம் பல துறைகளில் பயன்படுகிறது.
 நிறம், மற்ற பொருட்களோடு சேரும்போது ஏற்படும் எதிர்விளைவு  மின் குணங்கள் போன்ற ஒரு பொருளின் அடிப்படையான குணங்கள், நானோ அளவை எட்டும்போது மிகப் பெரிய மாற்றங்களை அடைகின்றன.
இதன் காரணமாக, மிக அசாதாரணமான முறையில் நானோதுகள்களைப் பயன்படுத்த முடிகிறது. 
அவை மிகவும் தனித்தன்மை வாய்ந்தவை. உதாரணமாக, ஒளி புக முடியாத பொருளை ஒளிபுகக் கூடியதாக (தாமிரம்); எந்தப் பொருளுடனும் சேர மறுக்கும் ஒரு பொருளை மற்ற பொருட்களுடன் எளிதில் சேரவைக்கும் கிரியாஊக்கியாக (பிளாட்டினம், தங்கம்);
 தீப்பற்றாத பொருளைத் தீப்பற்றக்கூடியதாக(அலுமினியம்); 
சாதாரண வெப்பநிலையில் திடப்பொருளாக இருப்பதை திரவமாக (தங்கம்); மின்சாரத்தைக் கடத்தாத பொருளை மின்கடத்தியாக (சிலிக்கன்) .
.. என மாற்றும் ரசவித்தையை நானோ அளவில் பார்க்க முடியும்.
நானோதுகள்களின் பெரும்பான்மையான வர்த்தகப் பயன்பாடுகள் டைட்டானியம், வெள்ளி போன்ற தனிமங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன. 
அழகுசாதனப் பொருட்களில் டைட்டானியம் டயாக்சைட் நானோதுகள்கள், உணவுப் பொருட்களைப் பாதுகாக்க வெள்ளி நானோதுகள்கள், துணிகள், நோய்க்கிருமிகளை அழிக்கும் மருந்துகள் போன்றவற்றில் துத்தநாக நானோதுகள்கள் என பல்வேறு விதங்களில் அவை பயன்படுத்தப்படுகின்றன. தற்போதைய யுகம் `சிலிக்கன் யுகம்’ என அழைக்கப்படுகிறது.

தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கான ஆதாரமே சிலிக்கன்தான்.
 மின்னணுச் சுற்றுகளில் உள்ள ஒரு சிலிக்கன் துண்டு ஆயிரக்கணக்கான சிலிக்கன் கருவிகளைக் கொண்டது. 
ஒரு சிலிக்கன் கருவியின் அளவு 500 nஅ. இன்னும் 20 வருடங்களில் இந்த அளவு 1 -லிருந்து 10 nஅ ஆகக் குறைக்கப்பட இருக்கிறது. 
கணினியில் உள்ள மின்னணுச் சுற்றுகளில் ஏராளமான டிரான்சிஸ்டர்களைப் பயன்படுத்தியே கணினியின் கணக்கிடும் திறனை மேம்படுத்த முடிந்திருக்கிறது. 
எதிர்காலத்தில் சிலிக்கனுக்குப் பதிலாக கிரஃபைனையும் ஒளிஇழைகளையும் பயன்படுத்தி கணினிச் சிப்புகள் தயாரிக்கப்பட உள்ளன. 
இது கணினியின் கணக்கிடும் திறனையும் இணையம் செயல்படும் வேகத்தையும் பல மடங்கு அதிகரித்துவிடும்.
                                                                                                                       - பேராசிரியர் கே. ராஜு'
============================================================================================================
அம்மாவுக்கு எல்லாம் தெரியும்...

நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
 இதைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையாக சென்னையைச் சேர்ந்த வேளாண் துறை தலைமை பொறியாளர் செந்தில் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தற்கொலை செய்துகொண்ட அதிகாரி முத்து குமாரசாமியை அடிக்கடி போனில் தொடர்பு கொண்டு மிரட்டி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
 தற்கொலை செய்த வேளாண் அதிகாரியை மிரட்டியது யார் யார்? 
என்ற பட்டியலை சிபிசிஐடி போலீசார் எடுத்தனர். 
இதில், சென்னையில் பணிபுரிந்து வரும் தலைமை இன்ஜினியர் செந்தில் அடிக்கடி முத்துக்குமார சாமியை போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அவர் கடுமையாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து முத்துக்குமாரசாமி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். இந்த விவரத்தை சேகரித்த சிபிசிஐடி போலீசார் செந்திலை கைது செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து மேலும் பட்டியல் தயாரிக்கப்பட்டது.
 இதில், வேளாண் துறையில் பணியாற்றும் மேலும் சில முக்கிய பிரமுகர்களும், அரசியல் பிரமுகர்களும் இடம் பெற்று இருப்பது தெரியவந்துள்ளது. 
குறிப்பாக தற்போதைய நெல்லையை சேர்ந்த அதிமுக எம்பி்யும் , அவரது மகனும் இந்த வழக்கில் நேரடியாக சம்பந்தப்பட்டு பணம் கேட்டு அதிகமாக அலைபேசியில் மிரட்டி இருப்பதும், மேலும் மற்றொரு அதிமுக பிரமுகருக்கும், அவரது உறவினருக்கும் வழக்கில் தொடர்புடையதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். 
அவர்கள் குறித்த விவரத்தை சேகரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் மேற்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவரின் 2 உதவியாளர்கள் சம்பந்தப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
 இதைத் தொடர்ந்து விசாரணை வளையத்திற்குள் இவர்களை கொண்டு வர போலீசார் முடிவு செய்தனர். இதை தெரிந்து கொண்ட உதவியாளர்கள் போலீசாருக்கு ஆட்டம் காட்டும் வகையில் தற்போது தலைமறைவாக உள்ளனராம்.
 இவர்களை சுற்றி வளைப்பதற்கான வியூகம் தற்போது அமைக்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை விவகாரம் தமிழகத்தில் பெரும் புயலை கிளப்பி இருந்தது.
 இதுகுறித்து எந்த அமைச்சர்களும் வாய் திறக்க மறுத்தனர். 
அதிகாரிகள் இதுகுறித்து கேட்டால் எங்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற விதத்தில் நழுவினர்.
 தற்செயலாக ஒருமுறை சிக்கிய அக்ரி கிருஷ்ண மூர்த்தியிடம் முத்துக்குமார சாமி தற்கொலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
 இதற்கு பதில் அளித்த அவர் எல்லாம் அம்மாவுக்கு தெரியும் என்று கூறியுள்ளா ர்.
 இது அதிமுக மேலிடத்தில் தங்களையும் மாட்டி விட முயற்சிக்கிறார் என்ற  கடும் கோபத்தை கிளப்பியது.
 இதன் பின்னணியில்தான் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

 நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்
குமாரசாமி தற்கொலை விவகாரத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது மூன்று பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 1. பிரிவு 120 கூட்டுச்சதி, 
2.பிரிவு 306 தற்கொலை செய்ய தூண்டுதல்,
 3. பிரிவு 7 அலுவலகப்பணி அல்லது அரசு கடமையை ஆற்ற முறைகேடாக பணம் அல்லது லஞ்சம் பெறுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எல்லாம் சரி.அம்மாவுக்கு எல்லாம் தெரியும் என்ற அக்ரியின் வாதத்தை சிபிசிஐடி கணக்கில் எடுத்துக் கொண்டு மேலும் விசாரணையை துவக்குமா?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?