"தாய்ப்பால்" பணக்காரராக்கும்..?
குழந்தையாக இருந்தபோது சுமார் ஓராண்டுகாலம் தாய்ப்பால் கொடுக்கப்பட்டவர்களின் IQ, அதாவது ஒருவரின் அறிவுத்திறனை குறிப்பதற்கான குறியீட்டுமுறையின் கீழ் அதிக புத்திசாலிகளாக இருப்பதாக தெரியவந்திருப்பதாக The Lancet Global Health மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருக்கும் ஆய்வறிக்கையின் முடிவுகள் தெரிவித்துள்ளன."அதிகநாட்கள் தாய்ப்பால் குடித்த குழந்தைகள் பெரியவர்களாக வளரும்போது, புத்திசாலிகளாகவும், கல்விமான்களாகவும் பொருளாதார ரீதியில் வெற்றிபெற்ற செல்வந்தர்களாகவும் வளர்வதாக "பிரேசிலில் செய்யப்பட்ட நீண்டதொரு ஆய்வு தெரிவித்திருக்கிறது.
அதாவது, ஒருமாதத்துக்கும் குறைவான காலமே தாய்ப்பால் குடித்த குழந்தைகளோடு ஒப்பிடும்போது, சுமார் ஓராண்டுகாலம் தாய்ப்பால் குடித்த குழந்தைகளின் IQ, சராசரியாக நான்கு புள்ளிகள் அதிகம் இருந்ததாக இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தாய்ப்பாலில் இயற்கையாகவே இருக்கும் ஒருவித கொழுப்பு அமிலங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்பதால் தாய்ப்பாலுடன் குழந்தைக்கு அந்த அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்களும் குழந்தைகளுக்கு நீண்டநாட்கள் கிடைக்கும்போது அந்த குழந்தைகளின் மூளை சீராக வளர்ந்து அவர்களின் புத்திக்கூர்மை மேம்படும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தாய்ப்பால் குறித்த முந்தைய ஆய்வு முடிவுகளைவிட இந்த ஆய்வின் முடிவுகள் மேம்பட்டவை என்று இதை மேற்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
1980களில் பிரேசிலின் அனைத்து சமூகங்கள் மத்தியிலும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் அதிக அளவில் கடைபிடிக்கப்பட்டபோது அதிக அளவிலான குழந்தைகள் மத்தியில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதால் தமது ஆய்வும் அதன் முடிவுகளும் முந்தைய ஆய்வுகளைவிட மேம்பட்டவை என்று இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வுக்காக சுமார் 3500 குழந்தைகளின் 30 ஆண்டுகால வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு, ஒப்பிட்டு அலசப்பட்டிருக்கிறது.
---------------------------------------------------------------------------------------------------------------
சுத்த ரத்தம்?
உங்கள் உடலில் உள்ள இரத்தம் சரியான சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப்பொருமல், சுவாசக்கோளாறுகள் போன்றவை உண்டாகலாம்.
அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும்.
இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதுநல்லது.அதற்கு உரிய வழிகளைப் பார்ப்போம்.
சுத்தம் செய்வதுடன்
இரத்தத்தை அதிகமாக உற்பத்தி செய்வது எப்படி என்பதையும் பார்க்கலாம்.
பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
இதுதவிர, செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.
நாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தியாகிறது.
இஞ்சிச் சாற்றுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.
தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால் வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.
இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டும் அல்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும்.
பசியையும் தூண்டும் தன்மை கொண்டது.இன்றைய காலக்கட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரணமாக தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.
அடுத்ததாக இரத்த அழுத்தம்.
இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு.
கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப்பொடி 12 நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும்.
மேலும் ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாபிட்டால் இரத்த அழுத்தம் சீராகும்.
இது தவிர அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாபிட்டு வந்தாலும் இரத்ததில் உண்டாகும் அதிக அழுத்தம் குணமாகும்.
இரத்தக்கட்டுகளுக்கு நிவர்த்தியாக மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் விட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும்.
விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.
ஏப்ரல் 4:
அமெரிக்க கறுப்பின [நீக்ரோ]மக்கள் உரிமைக்காக,வெள்ளை இன மக்களுடன் சமமாக வாழ போராடிய போராளி "மார்ட்டின் லூ தர் கிங்"கொல்லப்பட்ட தினம் இன்று
மார்டின் லூதர் கிங் முன் மாதிரியான போராளி.
வெள்ளையர்கள் அமெரிக்காவை பிடித்த பின்பு அங்கே வேலை செய்ய எண்ணற்ற ஆப்ரிக்க மக்களை கொண்டுவந்தனர்.
அவர்களை மிகவும் கொடுமைப்படுத்தினர். ஆடு, மாடுகளை விற்பதை போல அடிமை விற்பனை பல இடங்களில் இருந்தது.
கொல்லபட்டாலும் கேட்பதற்கு ஆளில்லாமல் இருந்த அவர்களுக்கு அடிமைமுறையில் இருந்து விடுதலை கொடுத்து லிங்கன் கொடுத்த அறிவிப்பில் நாடே இரண்டுபட்டு மோதிக்கொண்டு இருந்தது.இதில் வேடிக்கை என்ன வென்றால் கறுப்பின மக்களுக்கு உரிமை வசங்க வேண்டும் என்ற லிங்கனின் ஆதரவான வெள்ளையின மக்களும் அவர்கள் அடிமைகள்தான் என்ற வெள்ளையின மக்களுமே அமேரிக்கா முழுக்க மோதிக்கொண்டனர்.
இந்த உள்நாட்டுப்போருக்கு பின்அமைதி வந்து சேர்ந்தது.
ச ட்டரீதியாக சம உரிமை ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் பரவலாக கொடுமைகள் தொடர்ந்து நடந்து வந்தன.
இச்சமயத்தில்தான் மார்டின் லூதர் கிங் தனது போராட்டத்தை ஆரம்பித்தார். ஆங்காங்கே கூட்டங்க்களில் பேசி கறுப்பின மக்களை போராட தூண்டி வந்தார்.
. பாதிரியாராக மாறிய இவர் இயேசுவின் போதனைகளை அமெரிக்காவின் மனசாட்சியைஎழுப்ப பயன்படுத்திக் கொண்டார்.
அன்பான முயற்சிகளால் எல்லாம் நடக்கும் என முழங்கினார்.
அவர்களின் துன்பவியல் வாழ்வை உலகிற்கு எடுத்துக் காட்டியது.
அவர்களின் கனவை பகிரங்கப்படுத்தியது.
தன் வீட்டில் வெள்ளையினத்தினர் குண்டுவீசிய பொழுதுகூட அமைதி காத்து தீவிரவாதத்துக்கு எதிராக போராடினார்.
ரோசா பார்க்ஸ் எனும் கறுப்பின பெண்ணுக்கு பேருந்தில் உட்கார இடம் மறுக்கப்பட்ட பொழுது ஒரு வருடம் முழுக்க அத்தனை கறுப்பின மக்களையும் அலபாமா மாகாணத்தில் பேருந்தில் போகாமல் நடந்து அல்லது டேக்ஸியில் போக வைத்து உரிமையை மீட்டெடுத்தவர்.
எங்கேயும் எப்பொழுதும் கொல்லப்படலாம் என தெரிந்தும் தீர்க்கமாக வெள்ளை வெறியர்களில் அன்பை விளைவிக்க முயன்ற அன்புக்காரர். குண்டுகள், தாக்குதல்கள் என எல்லாமும் சுற்றி தாக்கிய பொழுதும்
"என் தலையில் இரண்டு காளைகள் மோதுகின்றன - ஒன்று அன்பு; இன்னொன்று அராஜகம் - இதில் எது ஜெயிக்கிறது தெரியுமா?
எதற்கு நான் அதிக உணவிடுகிறேனோ அதுவே ஜெயிக்கிறது!
அன்பே போதும் எனக்கு!"
என்றார்.
தனது முப்பத்தைந்தாவது வயதில் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவர் அவர்.
அந்த பணத்தை முழுக்க கறுப்பர்களின் உரிமை மீட்டெடுப்பு பணிகளுக்கு செலவு செய்தார். இறுதியில் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானார்.
அவரின் கனவை வேறுவழியின்றி அமெரிக்கா நிறைவேற்றியது.
முறையான போராட்டம் வெற்றியைத்தரும் என்பதை அவர் போராட்ட வடிவம் ,அன்று எடுத்துக் காட்டியது.
ஆனால் இன்று அந்த இன வெறிக்கு எதிரான போராட்டங்கள் வெற்றியை காண்பது ஆயுதங்களால் கூட முடிவதில்லை என்பதையே ஈழம்,ஆப்ரிக்க நாடுகள் நமக்கு காட்டி வருகின்றன.
==========================================================================
3.67 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதனின் மண்டையோடு.
=========================================================================
.