செவ்வாய், 7 ஏப்ரல், 2015

.இந்திய [ஆ] க ட்சிப்பணி

 
அல்லது 

அகில இந்திய {அண்ணா திமு} கழகப்பணி?

அதிமுகவின் ஆதரவாளர்களாக செயல் பட்டுக்கொண்டிருந்த மாவட்ட ஆட்சியர்கள்,அரசு அதிகாரிகள் இப்போது அதிமுக அடிமைகளாகவே மாறி பகிரங்கமாக அதிமுக கட்சிக்காரர்களாக செயல்பட ஆரம்பித்து விட்டனர்.
இது தமிழ் நாடு அரசு நிர்வாகத்தை சீரழிப்பதோடு  வரும் தேர்தலில் மாற்றுக்கட்சினர் ஆட்சிக்கு வந்தாலும் நிர்வாகத்தை கெடுப்பதாக இருக்கும்.
இ.ஆ.ப.அதிகாரிகளே இந்த கட்சி அடிமைகளாக நடந்து கொள்வது தமிழக மக்களுக்கு பெரும் ஆபத்தை கொண்டுவரும்.
இதைப் போன்ற அதிகாரிகள் தங்கள் வேலையை விட்டு .விட்டு அதிமுகவில் சேர்ந்து கட்சிப்பணி ஆற்றலாம்.ஜெயலலிதா மீண்டும் முதல்வராக அழகு குத்திக் கொள்ளலாமே?
நடராஜ்,அலெகசாண்டர் ,மலைச்சாமி போன்றவர்கள் அரசு அதிகாரிகளாக இருந்து விட்டு வேலையை விட்டு ஓய்வு பெற்றதும் அதிமுகவில் இணைந்தனர்.
அதை போலவே முந்தைய நீதியரசர் [?] சம்பந்தம் தனது ஆளுனர் பதவிக்காக பாஜக கடியினருடன் ஒட்டி உலாவிக்கொண்டிருக்கிறார்.அமித் ஷா வுக்கு சார்பாக நீதி[?] வழங்கியதாகவும் செய்திகள் வருகின்றன.
இத்தனை பேரும் பதவியில் இருக்கும் போது என்ன லட்சணத்தில் நடு நிலையுடன் பனி புரிந்திருப்பார்கள்.
இது போன்ற அவலங்களைத்தடுக்க ஓய்வு பெற்ற அதிகாரிகள் கட்சிகளில் சேர்வதை தடுக்கும் விதமாக சட்டம் கொண்டு வர வேண்டும்.
சரி .இப்போது இந்த கருத்துக்களை அள்ளித்தெளிக்க காரணம் என்ன?
ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி புதுக் கோட்டையில் அதிமுகவின் சார்பில் அமைச்சர்கள் நடத்திய பூஜையில் புதுக் கோட்டை மாவட்ட ஆட்சி யர் கலந்துகொண்டதுதான் .இந்த கடுப்பிற்கு காரணம். ஒரு மாவட்ட ஆட்சியரே அதிமுகவினர் நடத்திய மீண்டும் ஜெயா முதல்வர் பூசையில் கலந்து கொண்டது மற்ற கட்சியினர் பொதுமக்கள் மத்தியில் கடும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
 ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஞாயிற்றுக்கிழமையன்று அரியநாச்சியம்மன் மற்றும் சாந்தாரம்மன் கோயில்களில் 140 குருக்களைக்கொண்டு 5 யானைகளுக்கும், 5 குதிரை களுக்கும், 104 கன்றுடன் கூடியபசுக்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது .

இதில் நாடாளுமன்ற துணைச் சபாநாயகர் தம்பித்துரை, தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கோகுல இந் திரா, சுப்பிரமணியன் மற்றும்எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
இந்தப் பூஜையில் மாவட்ட ஆட்சியர் சு.கணேஷ், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிர மணியன் உள்ளிட்ட அரசு சார்ந்த அலுவலர்களும் கலந்து கொண்டுள்ளனர். 
அதிமுக அமைச்சர்கள், [அதிமுக]மாவட்ட ஆட்சியருக்கு மாலை அணிவித்து  மரியா தை செலுத்தப்பட்டன.பயபக்தியுடன் பிரசாதங்களை பெற்றுக்கொண்டார் அதிமுக மாவட்ட தலைவர் சு.கணெஷ் .

அதிமுகவினரின் யாகபூஜையில் மாவட்ட ஆட்சி யர் கலந்துகொண்டது அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஆச்சரியத் தையும் ஏற்படுத்தியுள்ளது.
 மாவட்ட ஆட்சித் தலைவர் என்பவர் ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகத்திற்கும் தலைமை வகிக்கும் உயர் அதி காரி மட்டும்தான்.அதிமுகவின் மாவட்ட செயலாளர் அல்ல.
அனைத்துத் தரப்பு மக்களின் நலனுக்காகவும் பணி யாற்றக்கூடிய மாவட்ட ஆட்சியர் ஒரு அரசியல் கட்சி நடத்துகின்ற யாகபூஜையில் கலந்து கொண்டது கடும் கண்டனத்திற்குரியது. இந் திய ஜனநாயகத்திற்கு விரோத மானது. இதுகுறித்து தமிழக அரசு துறைரீதியாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயலலிதா பிறந்த நாளில் பல இடங்களில் மாவட்ட ஆட்சியர்கள் மரம் நடும் விழா,குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கல் ,மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டனர்.
அதை கூட அமைச்சர்களுடன் சென்றதால் வந்த விளைவு என்று எண்ணினோம்.
ஆனால் இவர்கள் தெரிந்தே அதிமுக கட்சி உணர்வுடனும்,ஜெயலலிதா மீதுள்ள அடிமைத்தனத்திளும்தான் இவ்வாறு நடந்து கொண்டனர் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
இவைகளை எல்லாம் சாப்பிடும் விதமாக  மாவட்ட ஆட்சியர் ஜெயந்தி பெயரை அமைச்சர் கூட்டத்தில் கலந்து கொள்ள கருப்பு ,வெள்ளை,சிகப்பு என்று அதிமுக கட்சி வண்ணத்தில் கட்சி நிர்வாகிகள் பெயர்களுடன் சேர்த்து ஜெயந்தி[மாவட்ட ஆட்சியர்] என்று பொறுப்பையும் போட்டு நோட்டீஸ் அச்சிட்டு வசங்கும் அளவுக்கு ஆட்சி,கட்சி வித்தியாசம் இல்லாமல் தமிழ் நாடு அரசு நிர்வாகம் அசிங்கமாகப் போய்க்கொண்டிருக்கிறது.
இதற்கு அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் .ஆனால் அப்படி நடுநிலையுடன் நடவடிக்கை எடுக்க அதிமுக இல்லாத நடுநிலை அதிகாரிகள் யாராவது இருக்கிறார்களா?
தேடினாலும் கிடைக்க மாட்டார்கள்.அங்குதான் தலைமைச்செயலர் முதல் கலெக்டரின் டாவாலி வரை ஆலோசகர்கள் என்ற பெயரில் ஓய்வு பெற்ற அதிகாரிகள் அதிமுக,ஜெயா விசுவாசிகள் மட்டும் தானே நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் கையில்தானே ஆட்சியும் இருக்கிறது.
ஆளுனர் ரோசையா?
ஷீலா பாலகிருஷ்ணனை விட அவர்தான் இன்றைய பொழுது அதிக விசுவாசி. 
இவர்களை விட அதிமுக அடிமைகள் த்மிழ் நாட்டில் உள்ள நடுநிலை ஊடகங்கள்தான் .
இந்த செய்தியை வெளியிடாமல் மறைத்து விட்ட அவர்களை பின் என்னவென்று சொல்ல?
========================================================================
========================================================================
இன்று,

ஏப்ரல்-07.

  • சர்வதேச சுகாதார தினம்
  • உலக சுகாதார நிறுவனம் ஐ.நா.வால் தொடங்கப்பட்டது(1948)
  • ஐ.பி.எம்., தனது சிஸ்டம் /360 ஐ அறிவித்தது(1964)
  • பிரான்ஸ், மீட்டர் அளவு முறையை அறிமுகப்படுத்தியது(1795)
  • பிரான்சிடம் இருந்தான சிரியாவின் விடுதலை அங்கீகரிக்கப்பட்டது(1946)
========================================================================
உலக சுகாதார தினம்.

1950 ம் ஆண்டு முதல் ஏப். 7 ம் தேதி உலக சுகாதார தினமாக கொண்டாடப்படுகிறது. 
இயற்கை முறை வேளாண்மை, சுத்தமாக சமைப்பது, முழுமையாக சமைப்பது, உணவு கெட்டுப்போகாமல் சரியான வெப்பநிலையில் பாதுகாப்பது, சுத்தமான நீரை பயன்படுத்துவதே இந்தாண்டு நோக்கம்.
நமது உடலின் பெரிய உறுப்பான தோல் தான் பல்வேறு நுண்கிருமிகளின் வளர்ச்சிக்கும், நோய் தொற்றுக்கும் காரணமாகிறது. 
நமது தோலில் ஒரு சதுர சென்டிமீட்டரில் இயற்கையாகவே 3200 நுண்கிருமிகள் வாழ்கின்றன.
 தோலில் அமிலத்தன்மை உள்ளதால் பாக்டீரியா, பூஞ்சை, ஈஸ்ட், வைரஸ் கிருமிகள் எளிதில் வளர்கின்றன. எனவே தினமும் குளிப்பதும், கை, கால்களை சோப்பு போட்டு சுத்தம் செய்வதும் அவசியம். சாதாரண நிலையிலேயே விரல் இடுக்குகளில் 14 வகையான பூஞ்சை கிருமிகள், தொப்புளில் வீரியமிக்க 4வகை பாக்டீரியாக்கள், பல்துலக்கும் பிரஷில் 100க்கும் மேற்பட்ட பாக்டீரியாக்கள் உள்ளன. 
விரலில் உள்ள நுண்கிருமிகள் உணவு பரிமாறுதல் மற்றும் கைகுலுக்குவதன் மூலம் மற்றவர்களுக்கு நோய் பரவுகிறது.
தலைசீவும் சீப்பில் 3400, கழிப்பறை தொட்டியில் 2700, சாப்பிட்டு கழுவாத தட்டில் 2100, பாத்திரம் கழுவும் தொட்டியில் 12ஆயிரம், காலணியின் வெளிப்புறம் 4 லட்சத்து 20 ஆயிரம், உட்புறம் 2500 கிருமிகள் உள்ளன. 'டச் ஸ்கிரீன்' மொபைல் போனில் 10க்கும் மேற்பட்ட பாக்டீரியா காலனிகள் காணப்படுகின்றன. 
கம்ப்யூட்டர் கீபோர்டு, டாக்டர்களின் ஸ்டெதஸ்கோப்பில், மருந்துகளுக்கு கட்டுப்படாத சூப்பர் கிருமிகள் காணப்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொருவரும் சராசரியாக ஒரு நாளைக்கு 600 முதல் 700 கிராம் திடக்குப்பை கழிவுகளை உண்டாக்குகிறோம். 
இதில் 300 கிராமிற்கு மேற்பட்ட கழிவுகள், எளிதில் அழுகக்கூடிய, நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடியன. அளவோடு சமைத்து அளவோடு சாப்பிட்டால் வீட்டு குப்பையை குறைக்கலாம். சுற்றுப்புறத்திலும் குப்பை பெருகுவதை தடுக்கலாம். 
உணவுக்கழிவுகள், காய்கறி, கிழங்கு, மாமிச கழிவுகள் ஒன்றாக குப்பைக்கு செல்லும் போது, தரையில் கொட்டிய ஐந்து நொடிகளில் நுண்கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. பாக்டீரியாக்களால் தாக்கப்பட்டு அமிலங்களாகவும், ஈஸ்ட்களால் தாக்கப்பட்டு ஆல்கஹாலாக மாற்றப்பட்டு மண்ணோடு மட்குகின்றன.
 இடைப்பட்ட காலத்தில் குப்பையில் உள்ள கிருமிகள் ஈ, நாய், பன்றி, பறவைகள் மூலம் பல இடங்களுக்கு பரவுகின்றன. குப்பைகளை கையாள்பவர்கள் மூலம் தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களில் கிருமிகள் பரப்பப்படுகின்றன.

வீட்டிற்குள் வெளிச்சமின்றி அமைந்துள்ள கழிப்பறைகள், மலம் கழித்தபின் சோப்பு போட்டு கையை கழுவாத நிலையில் மலக்கழிவுகளின் மூலம் மஞ்சள் காமாலை மற்றும் புழுத்தொற்று ஏற்படுகின்றன.
 காய்கறி, உணவுக் கழிவுகளை 12 மணி நேரத்திற்கு மேல் வீட்டில் வைத்தால் அதிலிருந்து பாக்டீரியா பரவி, வயிறு சார்ந்த உபாதைகள் வரும். சமைத்த உணவுகளை இரண்டு மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும். 
அதற்கு மேல் எனில், பிரிட்ஜில் வைத்து பாதுகாக்கலாம்.
 மீண்டும் வெளியில் எடுத்து அரைமணிநேரம் கழித்து முழுமையாக சூடுபடுத்தி சாப்பிட வேண்டும். கெட்டுப்போன உணவு, பழைய இறைச்சி மற்றும் அழுகிய பழங்களை பிரிட்ஜில் ஒன்றாக வைத்தால் நல்ல உணவுகளிலும் கிருமிகள் வளரும். 
மூடப்படாத தோசைமாவு, பால், மிச்சம் வைத்த உணவுகள் விரைவில் கெட்டுப்போய் பாதிப்பை ஏற்படுத்தும். கெட்டுப் போன உணவை சாப்பிட்ட ஒன்று முதல் ஆறு மணி நேரத்திற்குள் வயிற்றுவலி, வாந்தி, காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது
. சிலநேரங்களில் மூன்று நாட்கள் கழித்து கூட இப்பிரச்னை ஏற்படலாம். சுகாதாரமற்ற கைகளால் உணவு சமைத்து பரிமாறுவதால், சாப்பிடுபவர்களின் வயிற்றில் தட்டை மற்றும் உருண்டை புழுக்கள் உண்டாகின்றன.

தெருவோர திறந்தநிலையில் விற்கப்படும் உணவு பண்டங்களால் காலரா, டைபாய்டு, வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. 
இந்தியாவில் பெரிய நகரங்களில் வசிப்பவர்களில் குறைந்தது 7 சதவீதம் பேர் சுகாதாரமற்ற சாலையோர உணவுகளை சாப்பிடுவதால் பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 கடையில் பார்சல் வாங்கும்போது பாலித்தீன் கவரை வாயால் ஊதியும், எச்சில் தொட்டும் சாம்பார், சட்னி ஊற்றப்படுவதால் காலரா, மஞ்சள்காமாலை, காசநோய், கக்குவான், டைபாய்டு, அமீபியாசிஸ் நம்மைத் தேடி வருகின்றன. சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்வதால் தெற்கு மற்றும் கிழக்காசியாவில் ஏழு லட்சம் குழந்தைகள் இறந்து போவதாக உலக சுகாதார நிறுவன ஆய்வுகள் தெரிவிக்கின்றன
. நமது உடல், உண்ணும் உணவு மற்றும் சுற்றுப்புறம் சுத்தமாக இருந்தால் தான் நிலம், நீர், காற்று மாசடையாமல் ஆரோக்கியமான வாழ்க்கையை பெறமுடியும்.
 இதைத் தான் நம் முன்னோர்கள் சுத்தம் சோறு போடும் என்றனர். 

------------------------------------------------------------------------------------------------------------