நிலக்கடலை அல்லது வேர்க்கடலை.



லகின் சத்து மிகுந்த உணவுப்பொருள் பட்டியலில் முக்கிய இடத்தில் இருப்பது நிலக்கடலை. 

இது நீரழிவு, இதயநோய், கர்ப்பப்பை பிரச்னைகள், கேன்சர் மற்றும் உடல் பருமனையும் கட்டுப்படுத்தும். 

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் உள்ளது. 

நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களுக்கு கர்ப்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்ப்பபை கட்டிகள், நீர்க்கட்டிகள், குழந்தை பேறு இன்மை பிரச்னை இருக்காது.

இதில் உள்ள மாங்கனீஸ், ரத்தத்தில் உள்ள மாவுச்சத்து மற்றும் கொழுப்பு மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

இது நீரழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
 எனவே நீரழிவு நோயாளிகள் தினமும் ஒரு கைப்பிடி அளவு நிலக்கடலை உண்பது நல்லது. நம் உணவில் இருக்கும் கால்சியம் உடலுக்கு கிடைக்க உதவுகிறது. 

குறிப்பாக பெண்கள், முதியவர்கள் நிலக்கடலை சாப்பிட்டு வந்தால் ஆஸ்டியோ போரோசிஸ் என்னும் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாக்கலாம்.

தினமும் 30 கிராம் நிலக்கடலை சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதை தடுக்க முடியும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 
நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது.
 இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. 

இதயநோயை தடுக்கிறது.

 இது மிகச்சிறந்த ஆண்டி ஆக்சிடெண்டாகவும் உள்ளது. ஸ்ட்ரோக் அபாயத்தை கட்டுப்படுத்துகிறது.

நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்து உடலில் உள்ள தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது.

நிலக்கடலையில் உள்ள பாலிபனீல்ஸ் என்ற ஆன்டிஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, இளமையை பராமரிக்க உதவுகிறது. 
இதில் உள்ள நியாசின் மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும், 
ரத்த ஓட்டத்தை சீராக்கவும் உதவும்.

.பபிப்டோபான் என்ற அமினோஅமிலம் செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும் வேதிப்பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மன அழுத்ததை போக்குகிறது.

நாம் மிகவும் சத்தானவை என கருதும் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்பை 
விட வேர்கடலை அதிக சத்து மிக்கது ஆகும்.

 பெண்களுக்கு தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டா சியம், துத்தநாகம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் இ 1, இ 12, நியாசின், புரதம், நார்ச்சத்து உள்ளிட்டவை இதில் ஏராளம் உள் ளன.

நிலக்கடலை பாலூட்டும் பெண்களுக்கு சிறந்த உணவாகும்.
========================================================================
ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாக கண்நோய்க்கு பயன்படுத்தப்பட்ட ஒரு மருந்து, தற்போதைய சூப்பர்பக் எனப்படும், பெரும்பாலான நுண்ணுயிர் கொல்லி மருந்துக்கு கட்டுப்படாத நோய்கிருமிகளை அழிக்க உதவும் என்று நிபுணர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

எம் ஆர் எஸ் ஏ பக்றீரியா
                            எம் ஆர் எஸ் ஏ பக்டீரியா

வெங்காயம், வெள்ளைப் பூண்டு மற்றும் மாட்டின் பித்தநீர் ஆகியவை உள்ளடங்கிய 9 ஆம் நூற்றாண்டின் ஆங்கிலேயர்களின் நாட்டு மருந்து ஒன்று இந்த சூப்பர்பக்ஸ்களை கொல்லும் என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
எம்ஆர்எஸ்ஏ எனப்படுகின்ற நோய்க்கிருமிகளை இந்த மருந்து கிட்டத்தட்ட முற்றாக அழித்ததைப் பார்த்த விஞ்ஞானிகள் பெரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.
பிரிட்டிஷ் நூலகத்தில் காணப்பட்ட ஒரு நாட்டு மருந்துக் குறிப்பில் இந்த விபரங்கள் காணப்பட்டுள்ளன. ஆங்கிலோ சாக்ஸன் நிபுணரான, நொட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தை சேர்ந்த, டாக்டர் கிறிஸ்டினா லீ அவர்கள், வெள்ளைப்பூண்டு, வெங்காயம், மாட்டு பித்தநீர் ஆகியவற்றைக் கொண்ட இந்த மருந்தை மொழிபெயர்த்துள்ளார்.


அதனைக் கொண்டு அந்த மருந்தை தயாரித்த அதே பல்கலைக்கழக நுண்ணுயிர் நிபுணர்கள், பெருமளவில் வளர்க்கப்பட்ட எம்ஆர்எஸ்ஏ கிருமியில் அதனை சோதித்துள்ளனர்.
ஆங்கிலோ சாக்ஸன் மருத்துவர்கள், தற்போதைய மருத்துவ முறைக்கு கிட்டத்தட்ட சமனான ஒரு மருத்துவ சிகிச்சை முறையை பின்பற்றியுள்ளது போல தோன்றுகிறது.
நுண்ணுயிர் கொல்லிகள் குறித்த தற்போதைய ஆய்வுகளுக்கு அந்த பண்டைய மருத்துவ குறிப்புகள் ஒரு நல்ல பாடத்தையே தந்துள்ளன.
இந்த குறிப்பிட்ட மருந்து 90 வீதமான எம்ஆர்எஸ்ஏ பக்டீரியாவை கொல்வதாக அறியப்பட்டுள்ளது.


கண்நோய்க்கான இந்த மருந்து சிறிய அளவில் நுண்ணுயிர் கொல்லியாக பயன்படும் என்றுதான் விஞ்ஞானிகள் நினைத்திருக்கிறார்கள். ஆனால், அது இவ்வளவு செயற்பாட்டுத் திறனுடன் இருக்கும் என்று அவர்கள் நினைத்திருக்கவில்லை.
பக்டீரியாக்களால் வரும் பல நோய்களுக்கான மருந்துகள் அந்த குறிப்பில் இருப்பதாக டாக்டர் லீ கூறுகிறார்.
பக்டீரியாக்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே அதற்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறுகிறார்.
பேர்மிங்ஹாமில் நடக்கவுள்ள பொது நுண்ணுயிரியல் அமைப்பின் வருடாந்த மாநாட்டில் இந்த கண்டுபிடிப்பு குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
========================================================================
விபத்துக்கு முதலுதவி.


விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக்கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிக் செல்லவேண்டும்.
 ஒரு வேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும்.
எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்து கொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. 
இதனால் கால்கள் கோணலாக, குட்டையாக மாறக்கூடிய ஆபத்து இருக்கிறது.

பிஸியோதெரபி என்பது இயற்கை வலி நிவாரணி. 
மாதக் கணக்கில் வலி நிவாரணி மாத்திரைகள் சாப்பிடுவதன் மூலம் குணமாகும் பிரச்னையை, வாரக் கணக்கிலேயே குணமாக்கிவிடும்.

எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரோட்டீன்ஸ் மிக முக்கியம். புரோட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ்தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரோட்டீன்ஸ் அதிகமாக உள்ளது.

எடை குறைவான இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர், மிக மெதுவாக செல்லவேண்டும். 
வேகமாக செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் நேரடியாக முதுகு, கழுத்து மற்றும் இடுப்புப் பகுதியைப் பாதிக்கும்.

எலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன் பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள்தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.

வயதான காலத்தில் தடுமாறி விழுந்தால் முதுகு எலும்பு, இடுப்பு, எலும்பு உடைந்து போக வாய்ப்பு அதிகம். வயதானவர்கள் நடமாடும் பகுதிகளில் தரை வழவழப்பாக இருக்கக்கூடாது. 
நல்ல வெளிச்சத்தோடு இருக்கவேண்டும். கார்ப்பெட்டில் கூட தடுக்கி விழலாம். 
எனவே, அவர்கள் எதையாவது பிடித்தப்படி நடப்பதற்கு வழி செய்யவேண்டும்.

கால் தடுமாறி பிசகிவிட்டால், உடனே கையால் நீவிவிடு என்பார்கள். அது தவறு. ஒரு வேளை, எலும்பில் நூலிழை தெறிப்பு இருந்தால், நீவிவிடுவதன் மூலம் அந்தத் தெறிப்பு அதிகரிக்கலாம்.

குதிகால் வலி, கீழ் முதுகுவலி, கழுத்துவலி, போன்றவை வந்தால் உடனே டாக்டரைப் பார்க்க ஓடாதீர்கள். நாற்காலியும், செருப்பும்கூட காரணமாக இருக்கலாம். அணிந்திருப்பது தரமான செருப்புதானா, நாற்காலியில் முதுகு நன்றாகப் படியும்படி அமர்கிறோமா.. என்பதையெல்லாம் கவனியுங்கள். 

அரை மணி நேரத்துக்கு ஒரு முறை, ஐந்து நிமிடம் சாய்ந்து அமர்ந்து ரிலாக்ஸ் செய்து கொள்வதையும் வழக்கமாக்குங்கள்.

 இவ்வளவுக்குப் பிறகு்ம்  தொல்லை இருந்தால், டாக்டரைப் பார்க்கலாம். 
========================================================================
கணீர் குரலுக்கு சொந்தக்காரர், இசை முரசு நாகூர் அனிபா இன்று (09-04-2015) இயற்கை எய்தினார்.இவரின் ஓடி வருகிறான் உதய சூரியன் ,இறைவனிடம் கையேந்துங்கள் பாடல்களை மறக்க முடியாது.

========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?