குப்பைத் தொட்டி ? இந்தியா!

உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் 4 கோடி டன்கள் மின்னணுக் கழிவுகள் (காலாவதியாகிவிட்ட ஸ்மார்ட் போன்கள், டிவி பெட்டிகள், மடிக்கணினிகள் போன்றவை) உற்பத்தியாகின்றன. 
இதில் பெரும்பகுதி சட்டவிரோதமாக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் கொணர்ந்து கொட்டப்படுகிறது என்கிறது ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்ட அறிக்கை. 
ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளே இக்கழிவுகளைக் கப்பலில் ஏற்றி அனுப்பும் நாடுகள். சீனா, இந்தியா, மலேசியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளே குப்பைகள் போய்ச் சேரும் இடங்கள்.
 (இந்த ஏமாளிகள் பட்டியலில் சீனா எப்படி சேர்ந்தது என்பது ஆச்சரியமானது).
ஆப்பிரிக்காவில் கானாவும் நைஜீரியாவும் பெருமளவுக்கு மின்னணுக் கழிவுகளைச் சுமக்கும் நாடுகள். 
வளர்ந்த நாடுகளில் இக்கழிவுகளை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த முடியும். 
ஆனால் அதற்காகும் செலவு அதிகம். 
அத்துடன் ஒப்பிடும்போது கப்பலில் ஏற்றி ஏமாளி நாடுகளுக்கு அனுப்பும் செலவு குறைவுதான். 
கழிவுகளை மறுசுழற்சி செய்ய ஆகும் செலவில் பத்தில் ஒரு மடங்கு செலவே கப்பலில் ஏற்றி அனுப்ப ஆகும் என்கிறது ஐ.நா. அறிக்கை.
 எனவே வளர்ந்த நாடுகள் இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுக்கின்றன.
ஐரோப்பிய மின்னணுக் கழிவுகள் பெருமளவுக்கு வந்து சேரும் நாடு நம் தாய்த்திரு நாடுதான்.
 மின்னணுக் கழிவுகள் போக, வீடுகளில் சேரும் கழிவுகள், உலோகக் கழிவுகள், துணிமணி மற்றும் கார் டயர்க் கழிவுகளும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் அனுப்பப்படுகின்றன.
 பிரதமர் மோடி ஒவ்வொரு நாடாகப் போய் இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் என்று கோரிக்கை வைக்கிறார். அதை மின்னணுக் கழிவுகளை இந்தியாவில் கொணர்ந்து கொட்டுங்கள் என்று அந்த நாடுகள் புரிந்துகொள்கிறார்கள் போலிருக்கிறது. 
பாகிஸ்தானுக்கு அனுப்பப்படும் காற்றழுத்திக் கழிவுகளில் மிகப் பெரிய சட்டவிரோத வர்த்தகம் நடைபெறுகிறது.
ஏற்றுமதிக்கு முன் காற்றழுத்திகளில் உள்ள விஷவாயுக்களை அகற்றிவிட்டு அனுப்ப வேண்டும்.
 ஆனால் அதற்கு செலவு ஆகும் என்பதால் இதில் வர்த்தகம் செய்பவர்கள் அதையெல்லாம் பற்றிக் கவலைப்படுவதில்லை. 
நமது உடல்நலன் பற்றி அவர்களுக்கென்ன கவலை? 
லாபம்தானே முக்கியம்? 
இப்படிக் கொணரப்படும் மின்னணுக் கழிவுகளில் பெரும்பகுதி குப்பை மேடாகக் குவிக்கப்படுகிறது; அல்லது எரி உலைகளில் எரிக்கப்படுகிறது. கழிவுக் குவியல்கள் எல்லாம் நம் சுற்றுச் சூழலுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் நச்சுத்தன்மையுள்ள வெடிகுண்டுகளைப் போன்றவைதான்.
அவை எப்போது வெடிக்கும் என்று சொல்ல முடியாத வiஅந bடிஅb ரகத்தைச் சேர்ந்தவை.
மின்னணுக் கழிவுகளை உற்பத்தி செய்வதில் ஐரோப்பாவும் வடஅமெரிக்காவும் முன்னணியில் இருந்தாலும், ஆசிய நகரங்களும் இதில் போட்டியிடத் தொடங்கிவிட்டன.
 உதாரணமாக, சீனா ஏழரைக் கோடி கணினிகள், 25 கோடி கைபேசிகள், 5.7 கோடி தொலைக்காட்சிப் பெட்டிகளை 2011-ஆம் ஆண்டில் விற்பனை செய்தது. 
இன்னும் இரண்டு வருடங்களில் உலகம் முழுதும் உற்பத்தியாகும் மின்னணுக் கழிவுகளின் அளவு 5 கோடி டன்களை எட்டிவிடும் என ஐ.நா. அறிக்கை எச்சரிக்கிறது.
நம் நாட்டைப் பொறுத்த அளவில் நம் நாட்டில் சேரும் கழிவுகளே இங்கே பெரும் பிரச்சனையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
 இந்த லட்சணத்தில் மற்ற நாடுகள் கழிவுகளை இங்கே கொணர்ந்து கொட்ட அரசு தொடர்ந்து அனுமதித்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்? 
வெகு விரைவில் மோடி அரசு இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

                                                                                                                       -பேராசிரியர் கே. ராஜு
மொட்டை போட்டதுக்கு கிடைத்த பரிசு.
இதற்குத்தானே ஆசைப்பட்டு மொட்டை போட்டீர்கள்?
========================================================================
இன்று,
ஜூன்  -01.


  • பன்னாட்டு குழந்தைகள் தினம்
  • கம்போடியா, தேசிய மரம் நடும் தினம்
  • தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1971)
  • ஜேம்ஸ் ரோஸ்,வடமுனையை கண்டுபிடித்தார்(1831)
  • தாமஸ் எடிசன், மின்சாரத்தால் இயங்கும் வாக்களிக்கும் இயந்திரத்திற்கான காப்புரிமத்தை பெற்றார்(1869)
1968 - ஜூன் 1: '
ஜோன் ஆப் ஆர்க் என்ற பிரெஞ்சு வீரப் பெண்ணுக்கு பின், மண்ணிலே உதித்த மகா கீர்த்தி வாய்ந்த பெண் இவளே' என்று, ஹெலன் கெல்லரை பற்றி கூறினார், புகழ் மிக்க எழுத்தாளர் மார்க் டுவைன். 
கண் பார்வையற்ற, காது கேளாத, வாய் பேச முடியாதவர். 
ஆனால், அறிவுத் திறத்தாலே இத்தகைய குறைபாடு ஏதுமே இல்லாதவர் போல் சாதித்துக் காட்டிய பெண், ஹெலன்.
பிரெய்ல் எழுத்து மூலம், ஆங்கிலம், ஜெர்மன், லத்தீன், கிரீக், பிரெஞ்சு ஆகிய மொழிகளை கற்று, நுால்களும் எழுதினார். 
இருபத்தைந்து ஆண்டுகள் தொடர்ந்து, குரல்வளத்துக்கு பயிற்சி அளித்து, பேசவும் துவங்கினார். 
மேடையேறி பிரசங்கமும் செய்தார். 
உலகத் தலைவர்கள், இவரைச் சந்திப்பதைப் பெருமையாகக் கருதினர். சார்லி சாப்ளின், இவர் வாழ்க்கையை, இவரையே கதாநாயகியாக வைத்து படமெடுக்க விரும்பினார்;
 இவர் மறுத்து விட்டார். 
உலகம் முழுவதும் பிரசங்கம் செய்து, பார்வையிழந்த, காது கேளாத, வாய் பேச முடியாதோருக்காக நிதி திரட்டினார். 
இரண்டாம் உலகப் போரில் கண்ணிழந்த, காதிழந்தவர்களின் நல்வாழ்விற்கு ஆதரவு திரட்டினார். 
ஹெலன் எழுதிய, 'நாம் வாழும் உலகம்' நுால் இன்றும் புகழ் பெற்று விளங்குகிறது.
 'பார்வையிழந்தோர் அனைவரும், ஒரே சகோதரக் கூட்டம்' என்று கூறி, அவர்களுக்காகவே வாழ்ந்த ஹெலன் கெல்லர், மறைந்த நாள் இது!
========================================================================

" தங்க டெபாசிட் "  

பலன் தருமா ? 

""  இந்தியாவில் தற்போது 20 ஆயிரம் டன் தங்கம் மக்களிடம் முடங்கி உள்ளது. அதாவது உபரியாக உள்ள ஆபரண தங்கம். இதைத்தான் இப்போது அரசாங்கம் புழக்கத்தில் கொண்டு வர திட்டம் தீட்டுகிறது.
 எனவே உள்நாட்டு தங்கம் சுழற்சிக்கும் வருவதன் மூலம் இறக்குமதி வரி செலுத்த தேவையில்லை. இதனால் குறைந்தபட்சம் இறக்குமதியும் குறையும், மக்களுக்கு ஒரு சவரனுக்கு ரூ 2,000 வரை விலை குறையவும் வாய்ப்புள்ளது.

இந்த தங்க டெபாசிட்டுக்கு நிலை யான வட்டி கிடைக்கும் என்பதால் மக்களிடம் வரவேற்பு இருக்கும் என்று நம்பலாம். இத்தனை சதவீதம் வட்டி கிடைக்கும் என்று தெளிவாக வரையறை இதுவரை வரவில்லை என்கிறார்கள் வங்கி துறையினர். ஆனால் 3 முதல் 5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது."

நகை­யா­கவோ, நாண­ய­மா­கவோ, நீங்கள், வீட்டில் வாங்கி வைத்­தி­ருக்கும் தங்கம் கொஞ்சம் வரு­மா­னத்­தையும் ஈட்­டித்­தந்தால் எப்­படி இருக்கும்? தங்க டெபாசிட் திட்டம் இதை சாத்­தி­ய­மாக்கும் நோக்­கத்­துடன் தான் சமீபத்தில் அறி­விக்­கப்­பட்­டு உள்­ளது.
இந்­தி­யாவில், ஏறத்­தாழ, 20 ஆயிரம் டன் தங்கம் மக்­க­ளிடம் உள்­ளது. இதன் தற்­போ­தைய சந்தை மதிப்பு, 51 லட்சம் கோடி ரூபாய். இவ்­வ­ளவும், நிதி சந்­தைக்கு வராமல், வீடு­களில் முடங்கிக் கிடக்­கி­றது. இதில் ஒரு பகு­தி­யை­யா­வது நிதி சந்­தைக்குள் வர­வ­ழைத்து, தொழில் முத­லீ­டு­க­ளுக்கு கிடைக்கச் செய்­வது இந்த திட்­டத்தின் முக்­கிய நோக்­கங்­களில் ஒன்று.அதே போல், வீடு­களில் உள்ள தங்­கத்தை சந்­தைக்கு கொண்டு வந்து, சுழற்சி ஏற்­ப­டுத்­தினால், தங்க இறக்­கு­ம­திக்­கான தேவையும் குறையும் என, மத்­திய அரசு எதிர்­பார்க்­கி­றது.இதில் தங்கம் வைத்­தி­ருப்­போ­ருக்கும் நல்ல லாபம் உள்­ளது. வங்­கி­களில், இந்த திட்­டத்தின்படி, தங்கம் டெபாசிட் செய்­யப்­பட்டால்...
 தங்கம் டெபாசிட் செய்­யப்­படும் நாளில் உள்ள அதற்­கான சந்தை மதிப்பின் படி, டெபாசிட் தொகை கணக்­கி­டப்­படும். அதற்கு குறைந்­த­பட்சம் ஒரு சத­வீதம் வட்டி வழங்­கப்­பட வேண்டும் என,
 மத்­திய அரசு அறி­வு­றுத்தி உள்­ளது. ஆனால், இதற்கு மேலும் வங்­கிகள் எவ்­வ­ளவு வேண்­டு­மா­னாலும் வழங்­கலாம். 
வல்­லு­னர்­களின் கருத்­துப்­படி, இது, 3ல் இருந்து 4 சத­வீ­த­மாக வங்­கிகள் நிர்­ண­யிக்க வாய்ப்பு உள்­ளது.= அதன்­படி, ஒருவர், 10 சவரன் ஆப­ரண தங்­கத்தை (குறைந்­த­பட்சம், 30 கிரா­மா­வது டெபாசிட் செய்­யப்­பட வேண்டும் என்­பது திட்­டத்தின் விதி), 
சவ­ர­னுக்கு, 20 ஆயிரம் ரூபாய் என்ற சந்தை மதிப்பில், இந்த திட்­டத்தின் படி, வங்­கியில் டெபாசிட் செய்தால், அவ­ருக்கு ஆண்­டுக்கு குறைந்­த­பட்சம், 2,000 ரூபாய் வட்டி கிடைக்கும். 
வங்­கி­களின் வட்டி விகித நிர்­ணயம், 4 சத­வீ­த­மாக இருக்கும் பட்­சத்தில், இது, 8,000 ரூபா­யாக இருக்கும்.= தங்க டெபாசிட் விதிகள் படி, குறைந்­த­பட்சம் ஓராண்­டிற்கு தங்­கத்தை டெபாசிட் செய்ய வேண்டும். 
அது முதிர்ச்சி அடையும் போது, அன்­றைய நிலையில் தங்­கத்தின் சந்தை மதிப்பு எவ்­வ­ளவு உள்­ளதோ அதற்­கேற்ப தங்­க­மா­கவோ, ரொக்­க­மா­கவோ திருப்பிப் பெற்­றுக் ­கொள்­ளலாம்.
=எப்­படி திருப்­பிப் ­பெற்றுக் கொண்டால் லாபம்? 
மேற்­கு­றிப்­பி­டப்­பட்ட உதா­ர­ணத்தின் படி, முதிர்ச்சி நாளில் தங்­கத்தின் விலை சவ­ர­னுக்கு, 18 ஆயிரம் ரூபாய் என, குறைந்­தி­ருந்தால், ரொக்­க­மாக பெறு­வதில் மூல­தன நஷ்டம் ஏற்­படும். 
அதனால், அப்­போது தங்­க­மா­கவே பெற்­றுக்­கொண்டால், இந்த திட்­டத்தின் விதிப்­படி, 10 சவரன் தங்­கமும், அதற்கு மேல­தி­க­மாக வட்­டிக்­கான தங்­கமும் திருப்­பிக்­ கி­டைக்கும். 
இதுவே தங்­கத்தின் விலை சவ­ர­னுக்கு, 22 ஆயிரம் ரூபாய் என, அதி­க­ரித்து இருந்தால், அதை ரொக்­க­மாக பெற்­றுக் ­கொண்டு, தங்­கத்தின் விலை மீண்டும் குறையும் போது, தங்­கத்தை வாங்­கு­வது லாப­க­ர­மாக இருக்கும். 
எப்­படி பார்த்­தாலும் லாபம் தான்.=
ஆனால், இதில் ஒரு கொக்கி இருக்­கி­றது. 
டெபாசிட் செய்­யப்­பட்ட தங்­கத்தை நாம் எப்­படி திருப்­பிப்­பெற விரும்­பு­கிறோம் என்­பதை டெபாசிட் செய்யும் போதே குறிப்­பிட வேண்டும்! 
ஆனால், டெபா­சிட்டை நீட்­டித்­துக் ­கொள்ளும் வசதி உள்­ளதால், இதில் உள்ள இழப்­பிற்­கான வாய்ப்பு பெரும்­பாலும் குறைக்­கப்­ப­டு­கி­றது.
இந்த திட்­டத்தில் சேர ஆர்­வ­மாக இருந்தால், நீங்கள் தெரிந்­து­ கொள்ள வேண்­டி­யவை;=
குறைந்­த­பட்சம், 30 கிராம் தங்கம் டெபாசிட் செய்ய வேண்டும்.
= குறிப்­பிட்ட, ‘ஹால்மார்க்’ மையங்­களில் இருந்து உங்கள் தங்­கத்­திற்­கான தர சான்­றி­தழை பெற வேண்டும்.
= அசல் மற்றும் வட்டி தங்­கத்­தி­லேயே மதிப்­பீடு செய்­யப்­படும்.= நீங்கள் கொடுக்கும் தங்­கத்தை, வங்­கிகள் உருக்கி, நகைக்­க­டை­க­ளுக்கு விற்­கவோ, லீசுக்கு விடவோ செய்யும். 
அதனால், நீங்கள் கொடுக்கும் ஆப­ர­ணங்கள் அப்­ப­டியே திருப்பிக் கிடைக்­காது.
========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?