ஆண்ட்ராய்க்கு போட்டியாக விண்டோஸ் -10.

நெட் நியூட்ராலிட்டிபற்றிய வில்லங்கத்தில் இப்போது தனியார இணைய நிறுவனங்களின் சாயம் வெளுத்துள்ளது.
 பெங்களூரூவைச் சேர்ந்த புரோகிராமர் தேஜேஷ் GN. 
கடந்த ஜூன் 3-ம் தேதி ஏர்டெல் 3ஜி நெட்வொர்க் மூலம் தன்னுடைய வலைதளத்தைப் பயன்படுத்திருக்கிறார். 
அப்போது தளத்தின் சோர்ஸைச் சோதனை செய்தபோது ஒரு வித்தியாசமான ஜாவாஸ்க்ரிப்ட் (Anchor.js) கோடு சேர்க்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்தார். ஏனென்றால் ஒரு வலைதளத்தில், பயனீட்டாளரின் அனுமதியில்லாமல் ஜாவாஸ்க்ரிப்டைத் திணிப்பது தவறானது. தேஜேஷ் தன் வலைதளத்தில் இன்னொரு iFrame கோடும் இருந்ததை பின்னர் கண்டுபிடித்தார்.
இந்த இரு கோடுகளிலும் இருந்தது ஒரே ஒரு ஐபி முகவரி. 223.224.131.144 எனும் இந்த ஐபி முகவரியை ட்ரேஸ் செய்தபோதுதான் தேஜேஷுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
 காரணம், இந்த ஐபியை வைத்திருந்தது பெங்களுரூவில் இருக்கும் பாரதி ஏர்டெல் நிறுவனம். இதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்காத தேஜேஷ், பிரபல GitHub வலைதளத்தில் இதை அம்பலப்படுத்தினார்.
இங்கேதான் ஒரு சின்ன ட்விஸ்ட்.

அடுத்த சில நாட்களில் இஸ்ரேலைச் சேர்ந்த பிளாஷ் நெட்வொர்க்ஸ் எனும் மும்பையில் இருந்த தனது வழக்கறிஞர்கள் மூலம் தேஜேஷுக்கு ஒரு Cease & Desist நோட்டீஸை அனுப்ப, ஷாக்காகி விட்டார் தேஜேஷ்.
ஏர்டெல் நிறுவனம் பயன்படுத்தியிருந்த ஜாவாஸ்க்ரிப்ட்டுக்கு உரிமை கோரியிருந்த இந்த நிறுவனம், இதைப் பற்றிய தகவல்களை இணையத்தில் இருந்து உடனடியாக நீக்குமாறு தேஷேஜ்-க்கு நோட்டீஸில் தெரிவித்திருந்தது. மேலும், தேஜேஷ்-ன் நடவடிக்கைகள் ஐ.பி.கோ 1860, தகவல் மற்றும் தொழில்நுட்ப சட்டம் செக்‌ஷன் 2000-படி சட்டப்படி தவறு என்கிறது ஃபிளாஷ் நெட்வொர்க்ஸ்.

இந்த நிறுவனம் தேஜேஷுக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு மட்டும் நிற்காமல், GitHub வலைத்தளத்துக்கும் DMCA (Digital Millenium Copyright Act) டேக்-டவுன் நோட்டீஸை அனுப்பி தேஜேஷ் பதிவேற்றியிருந்த தகவல்களை அகற்றவும் வைத்தது. ஃபிளாஷ் நெட்வொர்க்ஸ் நிறுவனம் நோட்டீஸில் தன்னுடைய Anchor.js ஜாவாஸ்க்ரிப்ட்டுக்கு உரிமை கோரியிருந்தால், இந்த ஜாவா கோடு மூலம் அந்த நிறுவனக்கும், ஏர்டெல்லுக்கும் என்ன காரியம் ஆகிறது என்று குறிப்பிடவேயில்லை. இத்தனைக்கும் ஏர்டெல், ஃபிளாஷ் நெட்வொர்க்ஸ்-ன் வாடிக்கையாளர்.

இங்குதான் நெட் நியூட்ராலிட்டி பிரச்னையும் சேர்கிறது. ஏற்கனவே இந்தப் பிரச்னையில் ஏர்டெல்லின் பெயர் அடிவாங்கியது எல்லோருக்கும் தெரியும். இப்போது ஏர்டெல்லின் இந்த செயல் அம்பலப்படுத்தப்பட்டு இருப்பதால், மேலும் பிரச்னைதான். ஏனென்றால், ஒரே வலைதளம் ஏர்டெல் நெட்வொர்க்கில் ஒரு மாதிரியும், வேறு ஒரு நெட்வொர்க்கில் வேறு மாதிரியும் தெரிவது தவறுதான்.
ஃபிளாஷ் நெட்வொர்க்ஸ் நிறுவனம் இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய வாடிக்கையாளர்கள் இணையப் பயன்பாட்டை கணக்கிடுவதற்கான தொழில்நுட்பம்தான் இது எனவும், ஒரு தனியார் நிறுவனம் மூலம் இதைச் செய்வதாகவும் விளக்கம் அளித்திருக்கிறது. மேலும், ஃபிளாஷ் நெட்வொர்க்ஸ் அனுப்பிய நோட்டீஸுக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்திருக்கிறது.

ஒரு இந்திய நிறுவனத்தின் செயல் குறித்து இணையத்தில் பதிவிட்டால், இஸ்ரேலில் இருந்து லீகல் நோட்டீஸ்! நல்லா இருக்கு!

பின்குறிப்பு: வோடஃபோன் நிறுவனமும் ஃபிளாஷ் நெட்வொர்க்ஸ் நிறுவனத்துக்கு வாடிக்கையார்தான்.இந்திய பாரதி ஏர்டெல் நிறுவனம் இப்படி வாடிக்கையாளர்களை வேவு பார்க்கையில் மோடியின் கனவான அந்நிய நிறுவனங்கள் என்னென்ன செய்யும்?இந்தியாவின் பாதுகாப்பே அசிங்கப்பட்டு விடாது?
     
நன்றி :விகடன்.                                                                                             -ர. ராஜா ராமமூர்த்தி

========================================================================
இன்று,
ஜூன் -10.
  • ஜோர்டான் ராணுவ தினம்
  • போர்ச்சுக்கல் தேசிய தினம்
  • நாசாவின் ஸ்பிரிட் தளவுளவி செவ்வாய் கோளை நோக்கி ஏவப்பட்டது(2003)
  • முதல் ஆட்டோமொபைல் சாப் என்பவரால் உருவாக்கப்பட்டது(1947)
தோழர். கே.முத்தையா நினைவு தினம்
                          தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க முன்னோடி.
========================================================================
ஆண்ட்ராய்க்கு போட்டியாக
 விண்டோஸ் -10

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமான ‘விண்டோஸ் 10’ ஜூலை 29 அன்று வெளியிடப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இன்னும் இருபது ஆண்டுகளுக்கு பயன்பாட்டில் இருக்கும் என்று கூறி அறிமுகமான விண்டோஸ் 8 இயங்குதளம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாத காரணத்தால் தோல்வியைத் தழுவியது. 
அடுத்த ஓராண்டுக்குள்ளாகவே புதிய இயங்குதளத்திற்கான தயாரிப்புப் பணிகளில் ஈடுபடவேண்டிய கட்டாய சூழலுக்கு மைக்ரோசாப்ட் தள்ளப்பட்டது.விண்டோஸ் 10 ன் சோதனைப் பதிப்பு வெளியிடப்பட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகிறது. 
இப்பதிப்பின் குறைகளை பயனரிடமிருந்து பெற்று மேம்படுத்தப்பட்டு முழுமையான பதிப்பாக தற்போது இது வெளியிடப்படுகிறது.
விண்டோஸ் 7, விண்டோஸ்8.1 அல்லது விண்டோஸ் போன் 8.1 மென்பொருளை பயன்படுத்தும் பயனர்கள், விண்டோஸ் 10 இயங்குதளத்தை இணையதளத்திலிருந்து பதிவிறக்கி அப்டேட் செய்து ஒரு வருடம் வரை இலவசமாக பயன்படுத்தலாம் என்று மைக்ரோசாப்ட் கூறியுள்ளது.
இந்த மென்பொருள் டெஸ்க்டாப், ஸ்மார்ட் போன்கள், டேப்லட்கள் மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஒன் கன்சேல் ஆகியவற்றில் இயங்கும் வகையில் ஒருங்கிணைந்த இயங்குதளமாக உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய வசதிகள்

இதில் மைக்ரோசாப்ட்டின் கார்டனா டிஜிட்டல் அசிஸ்டன்ட் என்ற புதிய வசதி இணைக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி கணினிக்கு குரல்வழிக் கட்டளைகளை இட முடியும். 
இது புகழ்பெற்ற சிரி தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது.விண்டோஸ் 10 மென்பொருள் மொபைல் மற்றும் கணினிகளுக்கும் ஒருங்கமைத்து வெளியிடப்படுவதால் செயலிகளை கணினிக்கும், மொபைல்களுக்கும் பகிர்ந்து கொண்டு பயன்படுத்துவது எளிதாகும்.செயலி(ஆப்ஸ்)களை எளிதாக வைத்துக்கொள்வதோடு மல்டி டெஸ்க்டாப் வசதியும் இதில் அடங்கியுள்ளது. இதன் மூலம் ஒரே சமயத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட திரைகளில் பயன்படுத்த முடியும்.விண்டோசின் பாரம்பரிய பிரௌசரான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இப்பதிப்பில் நீக்கப்பட்டு புதியதாக ஸ்பார்டன் என்ற ப்ரவுஸர் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த ப்ரவுசரானது, யூசர்கள் வலைப்பக்கங்களில் ஒரு பேனா போன்ற வசதியைப் பயன்படுத்தி குறிப்புகளை எடுத்து சக ஊழியர்களுக்கு அனுப்பலாம். 
மேலும், இதில் இணையதள வசதி இல்லாமலேயே படிக்கும் வகையில் பக்கங்களை சேமித்து வைத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.ஸ்பார்டன் ப்ரவுசரின் தோற்றம் கூகிள் குரோம் ப்ரவுசரைப் போன்று எளிமையாக இருக்குமென்றும் அதன் வேகம் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைவிட அதிகமாக இருக்கும் என்றும் மைக்ரோ சாப்ட் தெரிவித்துள்ளது.
விண்டேஸ் 10ல் உள்ள ஸ்டார்ட் மெனு, விண்டேஸ் 7ல் இருப்பதுபோலவும், அதன் பக்கத்தில் திறக்கும் டைல்ஸ் விண்டோ விண்டோஸ் 8ல் உள்ளது போலவும் அமைக்கப்பட்டுள்ளது.
டைல்ஸ் விண்டோ அதன் பக்கத்தில் திறக்கப்படும் டைல்ஸ் விண்டேஸ் 8ல் காண்பதுபோல தோன்றும். டெஸ்க்டாப், எக்ஸ்பாக்ஸ், ஸ்மார்ட்போன், டேப்லட் போன்ற அனைத்திலும் விண்டோஸ் 10 ஐபயன்படுத்த முடியும்.இதற்கென இப்பதிப்பு7 வகையாக ஒரே சமயத்தில் வெளியிடப்படுகிறது.

மேம்பட்ட அம்சங்களுடன் மொபைல் பதிப்பு
தற்போதுள்ள ஸ்மார்ட் போன் பயன்பாட்டிற்கு ஈடுகொடுக்கும் வகையிலும் போட்டியை சமாளிக்கும் வகையிலும் பலபுதிய வசதிகளை தனது மொபைல் இயங்குதளத்திற்காக மைக்ரோசாப்ட் வடிவமைத் துள்ளது. 
அதில் குறிப்பிடத்தக்கவை4 கே வீடியோ பதிவு: 
வீடியோ பதிவாகும்போதே ஜூம் செய்வதற்கான வசதி, பிளாஷை கட்டுப்படுத்தும் வசதி,உள்ளிட்ட வசதிகள் இதன் சிறப்பம்சமாகும்.புளூடூத்: ஹெட்செட்டிற்கும், ஸ்பீக்கர்களுக்குமான ஆடியோ வசதிகள் புளூடூத் பிரிவில் தரப்பட்டுள்ளன. 
வொய்ட் பேண்ட் ஸ்பீச் என்ற வசதியால்  ஒலியும், தொழில்நுட்பம் மூலமாக ஸ்டீரியோ வகை ஒலியும் கிடைக்கும்.
ஒய்ஃபீ: ஒய்ஃபீ டைரக்ட் எனப்படும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது. 
இதன் மூலம் ஒய்ஃபீ நெட்வொர்க் இல்லாமலேயே இரு ஸ்மார்ட்போன்களை இணைத்துக் கொள்ளலாம்.
 ஒய்ஃபீ ஹாட்ஸ்பாட் வசதியின் மூலம் ஒரு இணைப்பினை பலரும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.சி டைப் யுஎஸ்பி: பலவகையான யு.எஸ்.பி. சாதனங்களை குறிப்பாக மௌஸ், கீபோர்ட், ஸ்டோரேஜ் சாதனங்களை இணைத்துக் கொள்ளும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.இதுமட்டுமல்லாது கூடுதலான சென்சார்கள்,ஆக்டிவிட்டி டிரேக்கிங், ஸ்மார்ட் டயல் என இன்னும் பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
விண்டோசின் கடைசி பதிப்புகடந்த 29 ஆண்டுகளாக நிலைத்திருக்கும் விண்டோஸ் என்ற பெயரில் வெளியிடப்படும் கடைசி பதிப்பு இதுதான் என்றும் கூறப்பட்டுள்ளது.
 அசுர வளர்ச்சியில் இருக்கும் ஆண்ட்ராய்ட் இயங்குதளமும், பயன்படுத்துபவர் களின் உள்ளத்தைக் கொள்ளை கொண் டிருக்கும் ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதளத்திற்கும் மாற்றாக விண்டோசின் மொபைல் இயங்குதளத்தைக் கொண்டு சேர்ப் பதுதான் தற்போது மைக்ரோசாப்டிற்கு உள்ள மிகப்பெரிய சவாலாகும்.
ஜூன்21,உலக யோகா தினம்.

"நன்னா கேட்டுக்கோங்க ."......
''வரும் 21ம் தேதி, சர்வதேச யோகா நாளை முன்னிட்டு, நாடு முழுவதும் யோகாசனம் செய்யப்படுகிறது. 
அதில், சூரிய நமஸ்காரம் செய்வதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சூரியன் என்பது, நமக்கு சக்தி அளிக்கக் கூடியது. 
அதை எதிர்ப்போர், மத ரீதியாக பார்ப்போர் இருளில் தான் மூழ்குவர்; அத்தகையவர்கள் கடலில் மூழ்க வேண்டும்,'' 
என, உ.பி.,யின் கோரக்பூர் தொகுதி, பா.ஜ., - எம்.பி., யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
இந்த பாஜக விஞ்ஞானி கள்  தொல்லை தாங்க முடியலை.யோகா செய்வது உடல் நலத்துக்கு நல்லது .என்றும் இளமையாக இயங்கக வைப்பது .நோய் எதிர்ப்பு சக்தியை தந்து மனதையும் அமைதியாக வைப்பது என்று எவ்வளவோ நன்மைகள் இருப்பதை சொல்லா்மல் இருளில் ,கடலில்  ,கூவத்தில் மூழ்குவார்கள் என்று மத ரீதியில் 
பயங்காட்டுவது ஏன்?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
விளம்பரத்தாலே உயர்ந்தவர் வாழ்க்கை நிரந்தரமாகாது.

========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?