செல்பேசி எண் 112.



இன்றைய காலத்தில் செல்பேசி கையில் இல்லாதவர்களே கிடையாது அதுமட்டுமின்றி செல்பேசி இல்லாமல் இனி எவராலும் இயங்க முடியாது. 
அதன் பல்வேறு அம்சங்கள், பயன்பாடுகள் பற்றி அனைவரும் அறிந்தும் இருக்கிறார்கள். 
ஆனால் அறிய வேண்டிய அத்யாவசிய அம்சங்களை அறிந்திருக்கிறார்களா என்பது கேள்விக்குறி.
முதலாவதாக, அவசர நிலைகளில் செல்பேசி ஓர் உயிர் காப்பானாகப் பயன்படும் என்பது பலருக்குத் தெரியாது. 
அதாவது, செல்பேசிகளுக்கு என்று உலகளாவிய ஒரு அவசர நிலை எண் இருக்கிறது. 
அது, 112. இக்கட்டான நிலையில், உங்களுக்குச் சேவையை வழங்கும் நிறுவனத்தின் ‘நெட் ஒர்க்’ கிடைக்காத இடத்தில் நீங்கள் இருந்தால் உங்களால் வெளியிடங்களுக்குத் தொடர்பு கொள்ள முடியாது. 
ஆனால் இந்த அவசர நிலை எண்களை அழுத்தும் போது, வேறு ஏதாவது செல்போன் சேவை நிறுவனத்தின் ‘நெட் ஒர்க்’ இருந்தாலும் அதைத் தேடிக் கண்டுபிடிக்கும். 
அதன் மூலம் வெளியே ‘எமர் ஜென் சி’ தகவலை அனுப்பும்.
 ‘கீ பேட்’லாக் செய்யப்பட்டிருந்தாலும் இந்த எண்ணை அழுத்த முடியும் 
என்பது ஆச்சரியமான விஷயம்.
இன்று பெரும்பாலானவர்கள், பல்வேறு நவீன வசதிகளைக் கொண்ட ‘ஸ்மார்ட்போன்களை’ பயன்படுத்துகிறார்கள். 

கூடுதல் வசதிகளைப் பயன்படுத்துவதன் காரணமாகவே இத்தகைய செல்போன்களில் சீக்கிரமே ‘சார்ஜ்’ தீர்ந்து விடுகிறது. செல்போன்களில் ‘ரிசர்வ் சார்ஜ்’ என்ற ஒன்று இருப்பது நிறையப் பேருக்குத் தெரியாது. அது, பேட்டரியின் உண்மையான மின் சேமிப்புத் திறனில் 50 சதவீதமாகும்.

இந்த ‘ரிசர்வ் சார்ஜை’ பயன்படுத்துவதற்கு நாம், *3370# என்ற ‘கீ’க்களை அழுத்த வேண்டும். இந்த வகையில் அழுத்தியவுடனே, ‘சார்ஜ்’ இன்றி முடங்கிய செல்போன் உயிர்ப்பெறும். 50 சதவீத பேட்டரி சார்ஜை காட்டும். அடுத்த முறை நீங்கள் செல்போனை ‘சார்ஜ்’ செய்யும் போது இந்த ‘ரிசர்வ்’ இருப்பு, சார்ஜ் ஆகிக்கொள்ளும்.

செல்போன் தொலைந்து போனாலோ, திருட்டுப் போனாலோ அதை முறைப்படி ‘பிளாக்’ செய்யவோ, மீட்கவோ வழியிருக்கிறது. இது பற்றிச் சிலர் அறிந்திருப்பார்கள் என்றாலும், முழுமையாகப் பார்க்கலாம்.

ஒவ்வொரு செல்போனுக்கும் ஒரு வரிசை எண் உள்ளது. 
ஐ.எம்.ஈ.ஐ. எண் என்ற அது, ஒவ்வொரு செல்போனுக்கும் தனித் தன்மையானது ஆகும். 
உங்கள் செல்போனின் ஐ.எம்.ஈ.ஐ. எண்ணை அறிய, *#06# என்ற ‘கீ’க்களை அழுத்துங்கள். உடனே செல்போன் திரையில் ஒரு 15 இலக்க எண் தோன்றும். இந்த ஐ.எம்.ஈ.ஐ. எண் , ஒவ்வொரு செல்போனுக்கும் வேறுபடும். இந்த எண்ணைக் குறித்து வைத்துக் ள்ளுங்கள்.
உங்கள் செல்போன் தொலைந்து போனாலோ, திருட்டுப் போனாலோ உங்களுக்கு செல்போன் சேவையை அளிக்கும் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு இந்த எண்ணைக் கொடுங்கள். அவர்கள் உடனே குறிப்பிட்ட செல்போனை ‘பிளாக்’ செய்வார்கள். செல்போனை யாராவது திருடி அதன் ‘சிம் கார் டை’ மாற்றினாலும் அவர்களால் முற்றிலுமாக செல்போனை பயன்படுத்த முடியாமல் போகும்.
====================================================================
இந்தியா முழுக்க கேடு தரும் .
மே.வங்கத்தில் மேகி ஆரோக்கியம் தரும்.

ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் வகையில்அதிக அளவு வேதிப் பொருட்கள் கலந்திருப்பதால் "மேகி நூடுல்ஸ்' ன் விற்பனை நாட்டின் பல் வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட நிலையில் மேலும் பல பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கும் விற்பனைக்கும் தடை வரும் நிலை உருவகி உள்ளது. 
"ருசியானது, ஆரோக்கியமானது' என்று மேகி தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டாலும், பதப்படுத்தப்பட்டு பேக்கிங் செய்யப்பட்ட ரெடிமேட் நூடுல்ஸ் உணவு வகைகள் என்றுமே உடல் நலத்திற்கு நல்லதல்ல.
கடந்த வாரம் "மேகி நூடுல்ஸ்' நாடு முழுவதும் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டதில் அளவுக்கு அதிகமான காரீயம் மற்றும் மோனோ சோடியம் குளுக்கோனேட் போன்ற வேதிப் பொருட்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. 
இவை தலைவலி, இதய படபடப்பு, நெஞ்சு வலி, குமட்டல், நரம்பு மண்டல பாதிப்பு, பசியின்மை போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை என்பதால். நாடு முழுவதும் உள்ள கடைகளில் மேகி நூடுல்ஸ் விற்பனை தடை செய்யப்பட்டது.

ஆனால், காரீயம் மற்றும் எம்.எஸ்.ஜி மட்டும் மேகியில் பிரச்சனையாக இல்லை என்பது இப்போது தெரிய வருகிறது. 
2012ல் டில்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் ஆராய்ச்சி மையம் தந்துள்ள தகவலின் படி "மேகி நூடுல்ஸ்' போன்ற உணவு வகைகளில் அதிக அளவு உப்பும், குறைந்த அளவு நார்ச்சத்தும், கார்போஹைரேட்டும் இருப்பதால் உடல் பருமன் ஆவதோடு நீரிழிவு நோய்க்கும் வழிவகுக்கும் என்று சொல்கிறது.

மேகி நூடுல்ஸ் மட்டுமில்லாமல் பல வகையான உணவுப் பொருட்களின் தரமும் ஆராயப்பட வேண்டியவையாக இருக்கின்றன. 
பெரும்பாலான மக்கள் லேபல்களை ஆராய்ந்து அவற்றில் என்ன பொருட்கள் கலக்கப்பட்டுள்ளன என்பதை கவனிப்பது இல்லை. மொறு மொறு பிஸ்கட்டுகளையும் சிப்ஸ்களையும் வாங்கும் மக்கள், அதற்குள் ஒளிந்திருக்கும் ஆபத்து மிகுந்த வேதிப் பொருட்களைப் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேகி போன்று மற்ற "பாஸ்ட் புட்' வகைகளில் சோடியம் அளவு அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
இது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கக் கூடியது. 
"பாஸ்ட் புட்' தயாரிப்புகள் பல வேதி செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு தானியங்கள் பாலிஷ் செய்யப்படுவதால், அவை இயற்கை தன்மையை இழந்து ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கின்றன. 
கேக்குகள், பிஸ்கட்டுகள், தானியங்கள் மற்றும் பல ஸ்நாக்ஸ்கள் இந்த வகையில் அடங்கும்.

தீங்கு விளைவிக்கும் வேதிப் பொருட்கள்: 

பி.எச்.ஏ (புடிலேடட் ஹைட்ராக்ஸிஅனிசோல்):
 இது உணவுப் பொருள் கெட்டுப் போகாமல் நீடித்து வருவதற்காக கலக்கப்படும் வேதிப் பொருள். 
இது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை பாதிக்கக் கூடியது. உருளைக் கிழங்கு சிப்ஸ், சூயிங் கம், பாஸ்ட் புட் செரியல்ஸ் வகைகளில் கலக்கப்படுகிறது.

சோடியம் நைட்ரேட் : 
உணவுக்கு நிறம் ஊட்டவும், சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்கவும் சேர்க்கப்படுகிறது. பெரும்பாலும் மாமிசம் பதப்படுத்தப் பயன்படுகிறது. வயிற்று வலி, மூளை மற்றும் சிறுநீரக புற்று நோய், தலை வலி, வாந்தி போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். எனவே, பதப்படுத்தப்பட்ட மாமிசங்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

செயற்கை வண்ணம் மற்றும் வாசனைப் பொருட்கள்: 
சிப்ஸ், குக்கிஸ் போன்ற பேக்கிங் .உணவு வகைகளின் தயாரிப்பில் பயன்படுகிறது. ஒவ்வாமை, கிறுகிறுப்பு போன்ற விளைவுகள் ஏற்படும். பிரிலியண்ட் ப்ளு, டார்ட்ரஜைன், சன்செட் மஞ்சள் போன்ற செயற்கை நிறங்கள் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்.

கலப்பான்கள்: 
இவை ஐஸ்கிரீம்கள், பிஸ்கட்கள், ரொட்டி தயாரிப்புகளில் அதிகம் பயன்படுகின்றன. அதிகம் உட்கொள்ளும் போது குடலில் ஒவ்வாமை ஏற்படுகிறது.

மோனோ சோடியம் குளுடமேட்: 
குளுடாமிக் அமினோ அமிலத்தின் சோடியம் உப்பான இது நூடுல்ஸ், சிப்ஸ், ஸ்நாக்ஸ் உணவுத் தயாரிப்பில் சுவையை அதிகரிப்பதற்காக சேர்க்கப்படுகிறது. இதனால் தலைவலி, இதய படபடப்பு, நெஞ்சு வலி, மூளை மற்றும் ஜீரண மண்டல பாதிப்பு ஏற்படுகிறது. 
இவ்வளவு கெடுதல் பொருட்கள் கலந்திருப்பதால்தான் எல்லா மானிலங்களும் மேகி நூடுல்சை தடை செய்கின்றன்.
ஆனால் மேற்கு வங்கம் முதல்வர் மட்டும் மேகிக்கு வக்காலத்து வாங்கியுள்ளார்.
அவரை ‘திரினாமுல்”ஆய்வுக்கூடத்தில் மட்டும் மேகி ஆரோக்கிய உணவு என்று ஆய்வின் முடிவில் தெரிந்துள்ளதாம்.
ஆய்வின் முடிவில் அறிக்கையில் கைமாறும் பணத்தின் ஆரோக்கிய அளவு அதிகளவு இருந்ததால் இம்முடிவை மம்தா பான்ர்ஜி எடுத்துள்ளார்.
எல்லோரும் வடக்கு போனால் இவர் தெற்கு போவதைத்தான் வளர்ச்சிக்கான பாதையாக கொண்டுள்ளார்.
இடது சாரிகள் மேகியை ,துரித உணவு வகைகளை எதிர்ப்பதுதான் இந்த அமமையார் ஆதரிப்பதற்கான அடிப்படை காரணம்.
இதில் மக்கள் நலன் எங்கிருந்து வருகிறது.

மேகி தனது பொருட்களை மக்கள் தலையில் சுமத்த விளம்பரங்களுக்கு 445 கோடிகளை கொட்டிக்கொடுத்துள்ளது.
ஆனால் தனது தயாரிப்பு தரம், தகுதி பற்றிய ஆய்வுக்கு வெறும் 18 கோடிகளை மட்டும் செலவிட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த,'நெஸ்லே' நிறுவனத்தின் தயாரிப்பான, 'மேகி' நுாடுல்சில், அனுமதிக்கப்பட்ட அளவை விட, காரீயம் மற்றும் ரசாயன உப்பு அதிகமாக இருப்பது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டது.இதனால், மேகி நுாடுல்ஸ் நிறுவனத்தின் ஒன்பது வகையான நுாடுல்சுகளுக்கு, நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டது. 
இந்நிலையில், நெஸ்லே நிறுவனத்தின் செலவு கணக்கு பற்றிய விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளன.
கடந்தாண்டில் மட்டும், மேகி நுாடுல்ஸ் விளம்பரத்துக்காவும், அதன் விற்பனையை அதிகரிப்பதற்காகவும், அந்த நிறுவனம் சார்பில், 445 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால், மேகி நுாடுல்ஸ் தர பரிசோதனை குறித்த விஷயங்களுக்கு, 19 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.கடந்த ஐந்தாண்டுகளாகவே, ஒவ்வொரு ஆண்டும், விளம்பரத்துக்காக, 300 கோடி ரூபாயிலிருந்து, 400 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளது. ஆனால், தர பரிசோதனைக்கு, 12லிருந்து, 20 கோடி ரூபாய் வரை மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

கடந்த, 2010ல், விளம்பரத்துக்காக, 302 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. தற்போது, விளம்பரத்துக்கான தொகை, 445 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஆனால், 2010ல், மேகியின் தர பரிசோதனைக்காக, 13 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. இது தற்போது, ஒரு சில கோடி ரூபாய் மட்டுமே அதிகரித்துள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
========================================================================
இன்று,
ஜூ்ன் -07.

  • உலக கடல் நாள்
  • படிவ நிரலாக்க மொழி பி.எம்.பி வெளியிடப்பட்டது(1995)
  • உலகக் கடல் தினம் முதன் முதலில் கொண்டாடப்பட்டது(1992)
  • அட்லாண்டிஸ் விண்கப்பல் 7 பேருடன் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏவப்பட்டது(2007)
========================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?