97,00,00,000/-சுருட்டும் கல்வித்துறை.


சுரன் 20150618

தனியார் பள்ளிகளில் 25சதவீத ஏழைக் குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு செய்ததாக கண்துடைப் பாக அறிக்கையை உருவாக்கி, இதற்காக அரசு ஒதுக்கியுள்ள ரூ.97கோடியை பாக்கித்தொகை என்ற பெயரில் சுருட்டு வதற்கு திட்டமிட்டிருப்ப தாக சந்தேகம் எழுந்துள்ளது.
கல்வி உரிமைச் சட்டத் தின்படி தனியார் பள்ளிகள் ஏழை மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டிய 25சதவீத இடஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் தனியார் பள்ளி நிர்வாகங்களும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையும் கூட்டுச்சேர்ந்து அரசியல் சட்டத்தை ஏமாற்றி வருகின்றன என்றுஇந்திய மாணவர் சங்கம் ஏற்கெனவே குற்றம்சாட்டியுள்ளது.
இதற்காக ஆவேசமிக்க போராட் டங்களையும் நடத்தியது நினைவுகூரத்தக்கது. 
இந்நிலையில் 25சதவீத இடஒதுக்கீட்டை முன் வைத்து ஒரு பெரும் மோசடி அரங்கேறப்போவது தெரியவந்துள்ளது. 
இதுதொடர்பான விபரம் வருமாறு:கடந்த இரண்டு நாட் களுக்கு முன் (ஜூன் 15ம்தேதி) தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகளுக்கான இயக்கு நர் அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார்.
 அதன் படி தனியார் பள்ளிகளில் “கல்வி உரிமைச் சட்டத் தின் 25 சதவீத இட ஒதுக்கீட்டிற்காக அரசு ஒதுக்கியுள்ள 97 கோடி ரூபாய் பாக்கித் தொகையை வரு கின்ற ஜூன் 26ம் தேதி வழங்க உள்ளது. 
அதற்கு முன்னதாக மாவட்ட வாரி யாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஆகியோர் அடங்கிய ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
சுரன் 20150618
இந்த ஆய்வுக் குழு மூன்று நாளைக்குள் அதாவது இம்மாதம் (ஜூன்) 15 முதல் 18ம் தேதிக்குள் தலா 10 முதல் 15 பள்ளிகளை நேரடியாக ஆய்வு செய்யும். இந்த ஆய்வின் போது 25 சதவீத ஒதுக்கீட்டின்படி பள்ளிச்சேர்க்கை, குழந்தை களின் வருகைப் பதிவேடு, பள்ளிக் கட்டணம், கட் டண ரசீது, ரசீதுக்கான நிர்வாக நகல், கூடுதல் கட்டணங்கள் ஏதேனும் வசூலிக்கப்பட்டுள்ளதா என்ற விபரம் மற்றும் பெற்றோர் கருத்து ஆகியவற்றை ஆய்வுக் குழு நேரடியாக ஆய்வு செய்யும்.
ஏதேனும் பள்ளிகளில் கூடுதல் கட்டணங்கள் பெற்றிருந்தால் அதை உடனே ஆய்வுக் குழுவிற்கு முன்பாக சம்பந்தப்பட்ட பெற்றோரி டம் திருப்பிச் கொடுக் கப்படும்” என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

அதாவது, தனியார் பள்ளிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக 25 சதவீதஏழை - எளிய குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு செய்துஅனுமதித்ததற்காக தமிழ்நாடு அரசின் கல்வித்துறையானது வழங்க வேண்டிய பாக்கித் தொகையை உடனே வழங்கத் திட்டமிட்டுள்ளது. 
இதற்காக தமிழ்நாட்டில் உள்ள சுமார் 12,000 தனியார் பள்ளிகளை, வெறும் 60 பேர் கொண்ட ஆய்வுக் குழு மூலமாக மூன்றே நாட்களில் ஆய்வு செய்து 97 கோடி ரூபாயை தனியார் பள்ளிகளுக்கு வழங்கவுள்ளது.
ஒரு மாவட்டத்திற்கு ஒரு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு இந்த ஆய்வுக் குழு மூன்று நாட்களுக்குள் மாவட்டம் முழுவதும் தமது ஆய்வை முடிக்க முடியுமா? 
சுரன் 20150618
என்ற கேள்வி எழுந்துள்ளது.
 ஏற்கனவே 25 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் பள்ளிக்கட்டண விசயத்தில் கொள்ளை லாபம் அடிக்கும் பல பள்ளிகளுக்கு இந்தஆய்வுக்குழு செல்வதற்கான காலக்கெடு கூட வழங்கப்படவில்லை.
ஆய்வுக் குழுக்கள் எந்தெந்தப் பள்ளிகளுக்கு எப்போது செல்கின்றது என்ற திட்டமிடலும், அறிவிப்புகளும் செய்யாமல் அவசர கதியில் இப்படிஒரு அறிவிப்பை செய்ததின் நோக்கம் என்ன என்று கல்வியாளர்களும், பெற்றோர்களும் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
“தனியார் பள்ளிகளின் கட்டணம் சம்மந்தமான பிரச்சனைகள், 25 சதவீத இட ஒதுக்கீடு ஆகிய பிரச்சனைகள் சம்பந்தமாக குழந்தைகளுக்காக பள்ளிக் கட்டணம் செலுத்தி சிரமப்படும் பெற்றோரிடம் நேரடியாக ஆய்வு செய்தால் தானேஉண்மையான நிலைமையைக் கண்டறியமுடியும்.
அதை விடுத்து பள்ளி நிர்வாகங்களிடம் உள்ள கோப்புக்களை மட்டும் ஆய்வு செய்வதால் உண்மையை அறியமுடியாது. 
குறைந்தபட்சம் தொலைக்காட்சி, செய்தித்தாள் மற்றும் ஊடகங்களில் பிரச்சனைகள் வரும் பள்ளிகளைக் கூட இந்த ஆய்வுக் குழுவோ அல்லது சம்பந்தப்பட்ட கல்வித்துறையோ முழுமையான ஆய்வுகளையோ அல்லது விசாரணைகளையோ செய்யவில்லை என்பதுதான் நிதர்சனம். ஆய்வின்போது தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டது தெரியவந்தால், ஆய்வுக்குழுவிற்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட பெற்றோரிடம் கொடுக்கப்படும் என்று அரசின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். 
சுரன் 20150618
ஆனால் குழந்தைகள் இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் பிரிவு 13ன்படி வசூலிக்கப்பட்ட கட்டணத்தைப் போல 10 மடங்குத் தொகை திருப்பிச் செலுத்த வேண்டும்.
மேலும்தமிழக அரசின் கல்வி உரிமைச் சட்ட விதி 13ன்படி,தவறு செய்யும் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்தல் வேண்டும். 
ஆனால் தற்போதைய இந்த அறிக்கை மேற்படி கல்வி உரிமைச் சட்டத்தையும், விதிகளையும் மீறிய தனியார் பள்ளிகளுக்கான சட்டவிரோத நடவடிக்கையாக உள்ளது” என்கிறார்கள் கல்வியாளர்கள்.
மேற்படி இந்த ஆய்வு சம்பந்தமாக மதுரையில் உள்ள மனித உரிமைக் கல்வி நிறுவனத்தின் சார்பில், சில மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களை ஜூன் 17 அன்று விசாரித்த போது, ஆய்வுகள் முடிந்துஅறிக்கைகள் அனுப்பப்பட்டுவிட்டது என்று தான் தகவல் கிடைத்தது. 
எனவே ஆய்வுக் குழுவானது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு தனியார் பள்ளிஅலுவலர்கள் மூலம் கோப்புகளை எடுத்துவரச் செய்து ஒரே நாளில் ஆய்வுகளை முடித்து அறிக்கை அனுப்பியதாகவே அறிய முடிந்தது .

சுரன் 20150618

========================================================================
இன்று,
ஜூன் -18.
  • எகிப்து குடியரசானது (1953)
  • சலி ரைட், விண்ணுக்கு சென்ற முதல் அமெரிக்க பெண் ஆனார்(1983)
  • இந்திய ரூபாய், அதன் வெள்ளியில் குறிக்கப்பட்ட துணை அலகுகளுடன் இலங்கையின் சட்டப்பூர்வ நாணயமாக அறிவிக்கப்பட்டது(1869)
  • ஜெனீவாவில் இயற்பியல் ஆராய்ச்சி மையத்தில் 2 மீட்டர் உயரமுள்ள நடராஜர் சிலை நிறுவப்பட்டது(2004)


” கக்கன்”![ 18.6.1909]


'தேடிச்சோறு நிதம் தின்று பலசின்னஞ்சிறு கதைகள் பேசி-
 மனம்வாடித் துன்பம் மிக உழன்று- பிறர்வாடப் பலச் செயல்கள்
செய்து நரைகூடிக் கிழப்பருவமெய்தி கொடுங்கூற்றுக்கு இரையெனப் பின் மாயும் சில
வேடிக்கை மனிதர் போலவீழ்வேனென்று நினைத்தாயோ?"
சுரன் 20150618
இப்படி சாதாரண மனிதர்களாய் இல்லாமல், சாதனை மனிதர்களாக திகழ்ந்தவர்களில் ஒருவர், 
எளிமையின் அடையாளம், கக்கன்!மதுரை - திருச்சி நெடுஞ்சாலையில் மேலூருக்கு வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தும்பைப்பட்டியில் 18.6.1909ல் கக்கன் பிறந்தார்.தந்தை பூசாரிக் கக்கன். தாயார் குப்பி. இவர், நான்கு பிள்ளைகளில் மூன்றாவது மகன். பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தவர்.

25.01.1934ல் மதுரை வந்த காந்தியடிகள், 'மதுரை காந்தி' என அழைக்கப்பட்ட என்.எம்.ஆர்., சுப்பு
ராமனின் வீட்டில் தங்கினார். அங்கு தான் சுப்பராமனால் காந்தியிடம் கக்கன் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். இதன்பின் காந்தியோடு நெருங்கி பழகும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது. இதன்மூலம் காந்தியம் மற்றும் சர்வோதய கோட்பாடுகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதே காலகட்டத்தில் தான் வைத்தியநாத அய்யருடனும் நெருக்கம் ஏற்பட்டது. 8.7.1939ல் வைத்தியநாத அய்யர் தலைமையில் நடந்த ஆலயப்பிரவேசத்தில் கக்கனும் பங்கேற்றார்.
செல்லுமிடமெல்லாம் 'வந்தே மாதரம்...' சொல்லி நாட்டுப் பற்றை ஏற்படுத்தினார். இதை கண்காணித்த ஆங்கில அரசு, அவரை கைது செய்தது.விடுதலை போராட்ட காலங்களில் இரவு நேரத்தில் கூடுவதும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முடிவு எடுப்பதும் வழக்கம். சில நேரங்களில் போலீஸ் கண்காணிப்பில் இருந்து பெண் வேடமிட்டு தப்பிப்பார். 
சுரன் 20150618
உளவுத்துறை தொடர்ந்து கண்காணித்து அவரை கைது செய்தது.மேலூர் காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில் எதையும் அவர் சொல்ல மறுத்தார். 
இதனால் ஐந்து நாட்கள் தொடர்ந்து கசையடி கொடுத்தனர். 
அதை பார்க்க அவரது மனைவி அழைத்துவரப்பட்டார்.
 இக்கொடுமையை பார்த்து கண்ணீர் சிந்தினார். 
தம்மை இழந்து பிறரை காப்பாற்றும் மன வலிமையும் எந்த சூழலிலும் எவரையும் காட்டிக்
கொடுக்காத மாண்பும் உடையவர் கக்கன். நேரு அளித்த 'ஜி' 
ராஜாஜி பதவி விலகிய பின் காமராஜர் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை பொறுப்பு இவரை தேடி வந்தது. தேசிய காங்கிரசின் 70வது ஆண்டு அகில இந்திய மாநாடு சென்னையில் நடந்தது. அது 'திறன் மிக்க நிர்வாகி' என கக்கனை அடையாளம் காட்டியது. 
மாநாட்டுக்கு தலைமையேற்ற பிரதமர் நேரு, அவரை குறிப்பிடும் போதெல்லாம் 
'கக்கன்ஜி..." என்றே அழைத்தார். 
அதன் பிறகு பிற தலைவர்கள் அனைவரும் அவரை அவ்வாறே அழைத்தனர்.
1957ல் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். காமராஜரின் ஏழு பேர் கொண்ட அமைச்சரவையில் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார். ஒவ்வொரு கிராமத்திலும் ஓராசிரியர் பள்ளியை தொடங்கிட உத்தரவிட்டார்.
 'கல்வியே ஆன்மாவின் உணர்வு. அது இன்றேல் நம் ஆற்றல்கள் செயலற்று போகும்' என்பதை அறிந்திருந்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று தனி வீட்டு வசதி வாரியம் அமைத்து குடிசை வாழ் மக்களுக்கும் கிராம வாழ் மக்களுக்கும் உதவுமாறு நடைமுறைப்படுத்தினார்.
பதவி மயக்கம் இல்லாதவர் மாநிலப் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது முன்னறிவிப்பின்றி மதுரை வந்தார். 
சுரன் 20150618
எப்போதும் போல அரசு பயணியர் மாளிகைக்கு சென்றார். 
அப்போது இரவு 10 மணி. அங்கு யாரோ தங்கியிருந்தனர். "தனியார் விடுதியில் அறை ஏற்பாடு செய்துள்ளோம்" என்று அதிகாரிகள் சமாளித்தனர். 
கண்காணிப்பாளரோ "அங்கு தங்கியிருப்பவரை காலி செய்ய சொல்கிறேன்" என்று விரைந்தார். 
ஆனால், "அவரை தொந்தரவு செய்ய வேண்டாம். அவரும் நம்மை போல மனிதர்தானே" எனக் கூறி, ரயில்வே காலனியிலுள்ள தனது சகோதரர் வீட்டில் தங்கினார். 
அரசியலால் வாழ்வு பெற்றவர்கள் இன்று எதையெல்லாம் மிகப் பெரிய மரியாதையாக கருதினார்களோ அதை மிகச் சாதாரணமாக அன்று அவர் கருதினார்.
விளையாட்டு வீரரான தம்பி விஸ்வநாதனை பார்த்து அவரை காவலர் பணிக்கு விண்ணப்பிக்க செய்தார், அப்போதைய ஐ.ஜி., அருள். 
பணி நியமனத்திற்கான ஏற்பாடும் நடந்தது. 
இதை கேள்விப்பட்டு, "விஸ்வநாதனின் வலது கை விரல்கள் சரியாக செயல்படாது. அவனால் 
துப்பாக்கி சுட முடியாது. நாட்டின் பாதுகாவலர் பதவிக்கு எப்படி இவரை தேர்வு செய்யலாம்' என கேட்டு பணி நியமனத்தை நீக்க 
உத்தரவிட்டார்.
மக்களால் வழங்கப்பட்ட பதவியை சுயநலத்திற்கு பயன்படுத்தாமல் மக்கள் நலன், சமுதாய வளர்ச்சிக்காகவும், பொதுவாழ்வில் கறை படியாத கரங்களுடன் வாழ்ந்து காட்டிய அந்த நேர்மை விளக்கு, 1981, டிச., 23ல் அணைந்தது.
'ஒருவர் பிரிவால் நம் மனதில் சோகம் சூழ்ந்து அவரை பற்றிய நினைவுகளில் பெருமிதம் அடைகிறோம் என்றால் அந்த மனிதர் மிகச் சிறந்தவர். அவரை மனித இனம் மறப்பதே இல்லை' என்று எழுத்தாளர் ஜெயகாந்தன் கூறியது பொருத்தமானது தான்.
                                                                                                                                           - முனைவர் ரேவதி சுப்புலெட்சுமி, 
========================================================================




சுரன் 20150618

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?