திங்கள், 1 ஜூன், 2015

சமூகவிரோதி சீமான்.

இங்கு பிரபாகரனின் வழித்தோன்றல் நான் தான்.ஈழம் வாங்கும் பொறுப்பை என்னிடம்தான் பிரபாகரன் ஒப்படைத்தார்.பெரியார் தமிழர் இல்லை,முருகனுக்கு காவடி தூக்குங்கள் என்று நாளுக்கு நாள் மாற்றி மாற்றிப் பேசும் சீமோன் பற்றி ஈழ நாட்டில் என்னவிதமான கருத்து ஓடுகிறது தெரியுமா?ப்ச்ச்சைத்தமிழ்ன் நான் தமிழனைத்தான் ஆதரிப்பேன் என்று கூறிக்கொண்டு கருணாநிதியை எதிர்த்து, கர்னாடக ஜெயலலிதாவை ஆதரித்தும் முரண்பட்டு குரல் எழுப்பும் சீமோனை பற்றி ஈழ நாடு ”இனியொரு” தளம் வெளியிட்ட கட்டுரை.


ஈழத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் அவலங்களை தமது வயிற்றுப் பிழைப்பிற்காகப் பயன்படுத்தும் பிரதானமானவர்களுள் சீமானும் ஒருவர். சினிமாவில் சேர்ந்து மில்லியன்களைச் சுருட்டலாம் என்ற கனவுகளோடு செல்கின்றவர்கள் தமது கனவு நனவாகாத போது ஈழத் தமிழர் பிரச்சனையை வியாபாரமாக்கி கொள்வார்கள். இது முள்ளிவாய்க்கால் இன அழிப்புக் காலத்தில் பிழைப்புவாதிகள் இடையே உருவான புதிய போக்காக அமைந்தது. ஈழப் போராட்டத்தைப் பயன்படுத்தி செல்வந்தர்களான சிலர் இவர்களுக்கு முன்னுதாரணமாக அமைந்தார்கள். அந்த வகையில் சீமான் என்ற கோமாளியும் சினிமாவில் தோல்வியடைந்த பின்னர் ஈழ வியாபாரத்தை ஆரம்பித்தார். . ஏனையவர்களோடு ஒப்பிடும் போது, சீமான் தனது வியாபாரத்தில் வெற்றியும் கண்டார்.
இந்த வெற்றியின் பின்புலத்தில் இந்திய உளவுத்துறையோ அல்லது வேறு நாசகார சக்த்திகளோ நேரடியாகத் தொடர்புறு இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை எனினும் அவை ஏற்படுத்தக் கூடிய அழிவுகளை சீமான் ஏற்படுத்துகிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆக, சீமான் என்ற கோமாளிக்கு உளவுத்துறைகளின் உதவி கிடைக்கலாம் என்பது இன்றளவில் வெறும் அனுமானம் மட்டுமே.

ஜீ.என்.சாய்பாபா
ஜீ.என்.சாய்பாபா

மாவோயிஸ்டுக்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்த பேராசிரியர் ஜீ.என்.சாயிபாபா போன்றவர்களை சிறையிலடைத்துச் சித்திரவதை செய்யும் இந்திய அரசு, விசா இல்லாமல் வன்னிக்குச் சென்று விடுதலைப் புலிகளின் தலைவரோடு படம் பிடித்து அதனைப் போஸ்டர் போட்டு வியாபாரம் செய்த சீமானை சுந்ததிரமாக நடமாட அனுமதிக்கிறது. சீமான் மக்கள் ஆதரவற்ற சில பிழைப்புவாதிகளை இணைத்துக்கொண்டு ஈழப் பிடிப்போம் எனப் நரம்பு புடைக்கப் பேசும் வெற்றுக் கோமாளி. இப்படிப்பட்ட கோமாளி இந்திய உளவுத்துறை கைது செய்து அரசியலிலிருந்து நீக்கம் செய்யாமல் உலாவ விட்டிருக்கிறது என்றால் அனுமானம் சந்தேகமாக மாறுவதில் தவறில்லை.
உலகத்தில் எத்தனையோ நாடுகளில் ஈழத் தமிழர்கள் அகதிகளாகப் புலம் பெயர்ந்தனர். அந்த நாடுகள் மத்தியில் தமிழ் நாட்டிலேயே ஈழத் தமிழர்கள் மிருகங்களை விடக் கேவலமாக நடத்தப்படுகின்றனர். சீமான் ஜெயலலிதாவை ஈழத் தாய் என்று புராணம் பாடிய வேளையில் சிறப்பு முகாம்களில் ஈழத் தமிழர்கள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுக்கொண்டிருந்தனர். திருச்சியில் லட்சங்கள் செலவு செய்து மாநாடுவைத்த பணத்தின் ஒரு பகுதியையாவது மாட்டுத் தொழுவங்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி ஈழத் தமிழர்களுக்கு வழங்கியிருந்தால் அவர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள்.

தமிழ் நாட்டின் மாட்டுத் தொழுவங்களில் ஈழத் தமிழ் அகதிகள்
தமிழ் நாட்டின் மாட்டுத் தொழுவங்களில் ஈழத் தமிழ் அகதிகள்

சிறைகளில் வாடும் அகதிகளுக்கு ஆதரவாக இதுவரைக்கும் துண்டறிக்கை கூட விடாத சீமான் பிணங்களை வைத்து வியாபாரம் நடத்துவது அருவருப்பானது. சீமானின் வியாபாரத்திற்குப் புலம்பெயர் நாடுகளிலிருந்து துணைபோவது அதைவிட அருவருப்பானது. ஈழத் தமிழர்களை இன்னும் எத்தனை நாளைக்கு நீங்கள் மொட்டையடிக்கப் போகிறீர்கள்?
சீமான் வாக்குப் பொறுக்கி முதலமச்சராக வரவேண்டும் என்று கனவு காண்கிறார். இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதிலுமே ஆட்சியதிகாரத்தை யார் கையகப்படுத்துவது என்பதை அதிகார வர்க்கமே தீர்மானிக்கிறது. அந்த அதிகார வர்க்கத்தின் நிரந்தர அடிமையாக சீமான் தன்னைப் பிரகடனப்படுத்துவதற்கு தன்னாலான அனைத்தையும் செய்து முடிக்கிறார். மக்களை ஒடுகுவதற்குரிய அத்தனை தகமைகளும் தன்னிடம் உள்ளது என நிறுவ முயற்சிக்கிறார். ஆனால் இன்றும் அழிவின் விழிம்பில் நின்றுகொண்டிருக்கும் ஈழத் தமிழர்களைப் பயன்படுத்தி அதனை மேற்கொள்வதே அருவருப்பானது.
சீமான் இரண்டு முக்கிய விடையங்களைச் செய்யத் துணிகிறார். முதலாவதாக ஈழப் போராட்டத்தை அழித்து நிர்மூலமாக்குவது. இரண்டாவதாக தமிழ் நாட்டிலிருக்கும் முற்போக்கு ஜனநாயக சிந்தனையைத் தாக்கியழிப்பது.
இந்த வகையில் அண்மையில் நடைபெற்ற சீமான் கோமாளிகளின் திருச்சி மாநாட்டுக் கும்மாளம் அவர்களைத் தெளிவாக வெளிக்காட்டியது.

திருச்சிக் கூட்டத்தில் ஹிடலர் போல வணக்கம் செலுத்தும் நாஸி சீமான் குழு
திருச்சிக் கூட்டத்தில் ஹிடலர் போல வணக்கம் செலுத்தும் நாஸி சீமான் குழு

சீமான் தனது வழிகாட்டிகளில் ஒருவராக உலகின் அதிபயங்கரக் கொலையாளி ஹிட்லரின் படத்தை தனது திருச்சி மாநாட்டில் அறிவித்தார். இன்று ஜேர்மனியில் நிறவாதிகள் கூட ஹிட்லரின் பெயரை உச்சரிப்பதற்குக் கூட அவமானப் படும் நிலையில் சீமான் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவிலுள்ள சீமான் கோமாளிகள் ஹிட்லரை தனது வழிகாட்டியாக அறிவித்துள்ளனர்.
தவிர. ஹிட்லரின் நாஸிப் படைகள் வணக்கம் செலுத்தும் முறையில் மேடையில் நின்று வணக்கம் தெரிவித்து மாநாட்டை ஆரம்பித்தனர். இதையெல்லாம் காவல் துறை கண்ணாரப் பார்த்துக்கொண்டிருந்தது.

ஹிட்லரின் சின்னத்தோடு வெளிநாட்டவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடும் நாஸிக் குழுக்கள்
ஹிட்லரின் சின்னத்தோடு வெளிநாட்டவர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடும் நாஸிக் குழுக்கள்

இன்று ஜேர்மனியில் வெளி நாட்டவர்களுக்கு எதிராக முளைவிடும் பல்வேறு வன்முறை நாஸிக் ,குழுக்கள் ஹிட்லரையும், ஹிட்லரின் சின்னத்தயும், கோட்பாட்டையும் பயன்படுத்துகின்றன. ஜேர்மனியில் அகதிகளாகக் குடியேறிய ஈழத் தமிழர்கள் உட்பட அனைத்து வெளி நாட்டவர்களுக்கு எதிராகவும் வன்முறைகளில் ஈடுபடும் இந்த அமைப்புக்களில் சிலர் கடந்தமாதம் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். ஜேர்மனியில் மட்டுமன்றி,. பிரான்ஸ், அவுஸ்திரியா, பிரித்தானிஅ போன்ற நாடுகளிலும் ஹிட்லரின் நாஸிக் குழுக்கள் வெளி நாடுகளிலிருந்து வந்து குடியேறியவர்களுக்கு எதிரான வன்முறைகளைச் சிறிய அளவுகளில் ஆரம்பித்துள்ளன.
ஜேர்மனியில் சிறிய நாஸிக் கிராமங்கள் உள்ளன. அங்கு வெள்ளை நிறமற்றவர்கள் சென்றால் கொலை செய்யப்படுவார்கள்.
இந்தச் சூழலில், ஈழப் மக்களின் அவலத்தைப் பயன்படுத்தி நாஸிகளை ஆதரித்து அவர்களைப் புலம்பெயர்ந்த நாடுகளிலேயே அழிக்க முயலும் சீமான் போன்ற விசக் கிருமிகள் கோமாளிகளயினும் முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும்.
சீமான் என்ற சமூகவிரோதி, தமிழினத்தின் விரோதி மட்டுமல்ல; ஒட்டுமொத்த மனிதகுலத்தினதும் விரோதி என்பதையும் மாநாட்டில் நிறுவியியதை மக்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்திருந்தாலும் இந்த அப்பாயத்தைக் குறித்து பலர் அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை. தமிழ் நாட்டில் முதல் தடைவையாக கோமாளிகள் கூட்டம் ஒன்று ஹிடலரைப் போற்றி, ஹிட்லரின் வணக்கத்தை ஏற்று மக்கள் மத்தியில் பரப்ப முயல்வது தடை செய்யப்படாவிட்டால், இளைய சமூகத்தின் எண்ணங்களில் இது வெறியாக மாறும் நிலை உருவாகும். இது பல அழிவுகளைத் தோற்றுவிக்கும். சீமானின் பிழைப்பிற்கும், உளவுத் துறைகளிற்கும் இது தேவையான ஒன்று எனினும், மக்களைப் பொறுத்தவரை இது அபயகரமானது. சீமான் கோமாளிகளின் நாஸிக் கருத்துக்களைத் தடை செய்யக் கோரிப் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
நீல நிறக் கண்களும், வெள்ளை நிறத் தோலும் கொண்ட உயர்ந்த தோற்றமுடையவர்கள் ஆரியர்கள் என்று வரையறுத்துக்கொண்ட ஹிட்லர், ஆரியர் அல்லாதவர்கள் அழிக்கப்பட வேண்டிய மிருகங்கள் என்றர். இந்தவகையில் ஜேர்மனியில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த யூத இன மக்களைக் கைது செய்து, மனித குலம் வெட்கித் தலைகுனியும் அளவிற்கு சித்திரவதை செய்து, சாரிசாரியாகக் கொலைசெய்த ஹிட்லரை உலகத்தின் ஒவ்வொரு குழந்தையும் அறியும். ஹிட்லரின் வதை முகாம்களையும், கொலை கூடங்களையும் ஜேர்மனிய சாமானிய மனிதன் இன்று அவமானச் சின்னமாகவே கருதுகிறான்.
ஹிட்லர் தமது மக்களைச் சுரண்டி, பன்நாட்டு முதலீடுகளைக் குவிப்பதற்காகவே மிருகத்தனமான கொலைகளைத் திட்டமிட்டு நடத்தியதாகக் கூறுகின்றனர். இன்றும் ஹிட்லருக்கு மறைமுக உதவிகளை வழங்கிய ஐ.பி.எம் போன்ற நிறுவனங்களின் தகவல்கள் வெளியாகிகொண்டிருக்கின்றன.

ஹிட்லரை ஆட்கொண்ட பிளவாட்ஸ்கி சிங்கள பௌத்த ஆரியத் தத்துவத்தைத் தோற்றுவித்தார்
ஹிட்லரை ஆட்கொண்ட பிளவாட்ஸ்கி சிங்கள பௌத்த ஆரியத் தத்துவத்தைத் தோற்றுவித்தார்

இலங்கையில் சிங்கள மக்களை ஆரியர்கள் என்றும் ஏனையவர்கள் ஆரியர் அல்லாத திராவிடர்களும் முஸ்லிம்களும் என்று கூறியே சிங்கள பௌத்த பேரினவாதம் உருவாகியது. இலங்கைக்குக்ச் சென்ற ஹெலேனா பிளவாட்ஸ்கி என்ற பெண்ணும் கேணல் ஒல்கோட் என்ற அமெரிக்க இராணுவ அதிகாரியும், ஆரிய இனத்தைச் சேர்ந்த சிங்களவர்களே மேலானவர்கள் என்ற நஞ்சை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்தனர். அதனையே  சிங்கள அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொண்டு சிங்கள மக்கள் மத்தியில் வாக்குப் பொறுக்கினர்.
கரையோரச் சிங்களவர்கள் போச்சுகேயர் காலனியாதிக்க காலப்பகுதியில் இலங்கைக்கு வந்த தமிழர்கள் என்பது ஆதர பூர்வமாகப் பின்பு நிறுவப்பட்டது. கண்டிய மன்னன் போச்சுகேயருடன் எழுதிக்கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 23 பேரில் 21 பேர் தமிழிலேயே கையெழுத்திட்ட வரலாறெல்லாம் சீமான் போன்ற அயோக்கியர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.
சீமானின் வழிகாட்டியான ஹிடலர் ஆரியர்கள் மட்டுமே மனிதர்கள் என்ற கருத்தை ஹெலேனா பிளவாட்ஸ்கியிடமிருந்தே கற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஆக, சிங்கள மக்கள் ஆரியர்கள் என்றும் அவர்கள் மேலானவர்கள் என்ற கருத்தை சீமான் பரப்ப முயல்கிறார்.
ஐரோப்பிய நாடுகளில் 9,793,700 யூதர்களில் 5,709,329 யூதர்களைக் ஹிட்லர் கொன்று குவித்தான். பச்சிழம் குழந்தைகள் முதல் கர்ப்பிணித் தாய்மார்கள் ஈறாக முதியோர்கள் வரை, பட்டினி போட்டும், சித்திரவதைகள் செய்தும். உயிரோடு எரிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டனர்.

சீமான் தமிழர்களுக்கு ஒப்பிடும் ஹிடலரால் சித்திரவதை செய்யப்படும் குழந்தைகள்
சீமான் தமிழர்களுக்கு ஒப்பிடும் ஹிடலரால் சித்திரவதை செய்யப்படும் குழந்தைகள்

தமிழினத்தின் பெயரால் பிறந்த குழந்தைகளையும், கர்ப்பிணித் தாய்மார்களையும் கொன்றுகுவிக்கும் மிருகங்களாக ஈழத் தமிழர்களை உலகத்திற்குக் காட்ட முனையும் சீமான் அழிக்கப்பட்ட பிணங்களை வைத்து நடத்தும் பிழைப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
ஹிட்லர் அன்று தொடக்கிய நிற வெறியும், கொலை வெறியும் இன்று வரை பல்வேறு வழிகளில் தொடர்கின்றன. ஹிட்லருக்குப் பின்னான கொலையாளிகள் பலர் கூட தாம் ஹிடலரைப் பின்பற்றுவதாக வெளிப்படையாகக் கூறியதில்லை. அப்படிக் கூறுவதைக்கூட அவமானமாக கருதினர்.
ஆனால் சீமான் என்ற சமூகவிரோதி ஹிட்லரை வெளிப்படையாக ஆதரித்து வணக்கம் செலுத்துகிறான்.
அதற்குப் பின்னால் எந்தக் கூச்சமும் இல்லாமல் சில புத்தி சீவிகள் என்று தம்மக் கூறிக்குள்பவர்களும் அலைகின்றனர். உலகத்தில் வாழ்கின்ற ஏனைய இன மக்கள் ராஜபக்ச தமிழர்களை அழித்தது நியாயம் என்று கூற வைக்கும் அளவிற்கு சீமானின் நடவடிக்கள் அமைந்துள்ளன.
ஹிட்டலரை ஆதரிக்கும் மனித குல விரோதிகளை உலக மக்கள் வெறுக்க ஆரம்பிப்பார்கள். ஆக, உலக மக்களின் ஆதரவுடன் இலங்கை இனப்படுகொலை அரசு ஈழத் தமிழர்களை அழிக்க வசதி செய்யப்படும். சிங்கள பௌத்த மேலாதிக்க வாதிகளின் இனச் சுத்திகரிப்பு நியாயம் என உலக மக்கள் அனைவரும் கூற ஆரம்பிப்பார்கள். இதற்கான முகவராகவே சீமான் செயற்படுகிறார்.

சீமானின் எதிர்கால வழிகாட்டி ராஜபக்ச
சீமானின் எதிர்கால வழிகாட்டி ராஜபக்ச

ராஜபக்ச நடத்தி முடித்த இன அழிப்பை கருத்தியல் தளத்தில் தொடரும் சீமானின் இனகொலை மிக நிண்ட காலத்திற்கு தமிழினத்தை மீள முடியாத அவலத்திற்குள் தள்ளிவிடும். அதிலும் சீமான் குறிவைப்பது ஈழத் தமிழர்களையே. ஆக, சீமான் குழுமத்திற்கு எதிராக ஈழத் தமிழர்கள் அனைத்துத் தளத்திலும் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கைப் பேரினவாத அரசின் கொலையாளியான ராஜபக்சவை விடப் பயங்கரமான கொலையாளி தமிழர்கள் மத்தியிலிருந்தே தோன்றியிருப்பதற்குக் காரணம் எமக்கு மத்தியில் தெளிவான அரசியல் வேலைத்திட்டம் இன்னும் முன்வைக்கப்படாமையே.
தமிழர்களையும் அவர்களது சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டத்தையும் மனிதாபிமானமற்ற மிருகங்களின் கொலை வெறியாக உலகத்திற்குக் காட்டி அவர்களைத் தனிமைப்படுத்தி அழிப்பதை சமூகவிரோதி சீமானும் விசில்களும் நோக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஹிடலர் தனது இனத்திற்காகவே போராடினான் என்றும் அதனால் அவனே தங்களின் வழிகாட்டி என்றும் சீமானின் அயோக்கியக் கும்பல் ஈழத் தமிழர்களின் கண்ணீரைப் பயன்பன்படுத்திக் கூறுகின்றது. இன்னும் சில காலத்தில் ராஜபக்சவும் தனது இனத்திற்காகப் போராடினான் என்றும் ராஜபக்சவும் தங்கள் வழிகாட்டி என சீமான் கும்பல் முழங்கினாலும் வியப்படைவதற்கில்லை.

தமிழ் மக்கள் மத்தியில் முற்போக்கு சிந்தனையைத் தோற்றுவித்த பெரியார்
தமிழ் மக்கள் மத்தியில் முற்போக்கு சிந்தனையைத் தோற்றுவித்த பெரியார்

இனத்திற்காகப் போராடுவது என்ற பெயரில் இனத்தின் அயோக்கியர்களோடு தொடர்பு வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்துவது ஹிட்லர், ராஜபக்ச, சீமான் போன்றவர்களின் வழமை. ஈழப் போராட்டத்தையே பயங்கரவாதமாகக் கூறிய பச்சைமுத்துவைப் பாராட்டும் சமூகவிரோதி சீமான், மற்றப்பக்கத்தில் தமிழ் நாட்டின் மண்ணை அழிக்கும் மணல் கொள்ளைக்காரன் வைகுண்டராசனின் அடியாள்.
தமிழ் மக்க்ள் மத்தியில் மூட நம்பிக்கைய அகற்றி, முற்போக்கு சிந்தனையைப் பரப்பிய பெரியார் தமிழன் அல்ல, தமிழ் மக்களின் தலைவரும் அல்ல என அவதூறு கூறும் சீமானின் கருத்துக்கள் இந்திய பார்ப்பனீயக் கருத்துக்கள். தேவர் சாதி வெறியன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மாலை போட்டு அர்ச்சனை செய்த சீமான் இன்று ஹிட்லருக்கு அர்ச்சனை செய்வது அதிர்ச்சி தருவதல்ல. சீமான் ஈழத் தமிழர்களை அழிப்பதற்கு என்றே உருவாக்கப்பட்ட விசக் கிருமி என்பதைத் தெரிந்துகொண்டும் மௌனம் சாதிக்கும் ஈழத் தமிழர்கள் மக்கள் மீது பற்றற்றவர்கள். சீமான் இனவழிப்பின் முகவர் எனத் தெரிந்துகொண்டும் சீமானை ஆதரிப்பவர்களும் சமூகவிரோதிகளே.
நன்றி:-
========================================================================
இன்று,
ஜூன்-02.

  • வடகொரியா குழந்தைகள் தினம்
  • பூட்டானில் முதல்முறையாக தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்பட்டது(1999)
  • மார்க்கோனி தான் கண்டுபிடித்த வானொலிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்(1896)
  • முதல் முறையாக இரண்டாம் எலிசபெத் இங்கிலாந்தின் அரசியாக முடிசூட்டிய விழா தொலைக்காட்சியில் நேரடி ஒளிப்பரப்பானது(1953]
1767 - ஜூன் 2:
 1850ல் டில்லியிலிருந்து வெளியான, 'டில்லி ஸ்கெட்ச் புக்' என்ற இதழ், இந்தியாவில் முதன்முதலாக, கார்ட்டூன் எனப்படும் கருத்துப் படங்களை வெளியிட்டது.
 தமிழ் பத்திரிகை உலகில், கருத்துப் படங்களை புகுத்திய பெருமை, சுப்ரமணிய பாரதியாருக்கே உரியது. 
1906 மே மாதத்திலிருந்து வெளிவர துவங்கிய அவரது, 'இந்தியா' இதழில் 1906, செப்., 8 முதல் கருத்துப் படம் வெளியாகத் துவங்கியது. பாவேந்தர் பாரதிதாசன், 'இந்தியா பத்திரிகையில் படம் வெளிவரும்; சித்திர விளக்கமும் தெளிவாக எழுதியிருக்கும். அதை, வாசகர்கள் ஆவலோடு எதிர்பார்ப்பர். படத்தை வெட்டி, அட்டையில் ஒட்டி, வீட்டு சுவரில் தொங்க விட்டு வைப்பர். இங்கிலீஷ்காரனிடம், இந்தியன் துன்பம் அனுபவிப்பதை, குத்தலாக எடுத்துக் காட்டுவது தான், இப்படங்களின் நோக்கம்' என்றார். கார்ட்டூன் முதன் முதலில் லண்டனிலிருந்து வெளிவரும், 'பொலிட்டிக்கல் ரெஜிஸ்தர்' எனும் பத்திரிகையில் வெளிவந்த நாள், இந்நாள்!
========================================================================
சும்மா அதிருதுல்ல.

இந்தியாவில் உள்ள இந்துத் துவா அறிஞர்களுக்கு பாகிஸ்தானில் உள்ள பழமைவாத முஸ்லீம்கள் ஒன்றும் குறைந்தவர்கள் அல்ல.நாங்களும் விஞ்ஞானிகள்தான் புதிய அறிவியல் கண்டு பிடிப்புகளை அவ்வப்போது அறிவிப்பவ்ர்கள்தான் என்று காட்டியுள்ளனர்.ராமர் பாலம்,புஷ்பக விமானம்,மரபணு மாற்றம்,தலை மாற்று சிகிச்சை,குளோனிங் என்று பாஜக,இந்துத்துவா தூள் கிளப்புகையில் பாகிஸ்தான் மதகுரு கண்டு பிடிப்பு உண்மையில் அதிர்வுகளைத் தருகிறது.
பெண்கள் ஜீன்ஸ் போடுவதால் உலகம் முழுவதும் நிலநடுக்கங்கள் ஏற்படுவதாக பாகிஸ்தானின் மதகுருவான மவுலானா பசுலுர் ரெஹ்மான் தெரிவித்துள்ளார்.
 பாகிஸ்தான் அரசியல்வாதிகளில் ஒருவரும், ஜாமியத் உலேமா இ இஸ்லாமி பஸ்ல் இயக்கத்தின் தலைவரும், பிரபல முஸ்லிம் மதகுருவுமான மவுலானா பசுலுர் ரெஹ்மான், அடக்கமும், வெட்கமும் அற்ற பெண்களின் செயல்பாடுதான் உலகம் முழுவதும் ஏற்படும் நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களுக்கும், பொருளாதார சீர்குலைவுக்கும் காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளார். 
பாகிஸ்தானில் அட்டூழியம் செய்துவரும் தெஹ்ரிக் இ தலிபான் இயக்கத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ள இவர், தலிபான்கள் நமது சகோதரர்கள். பாகிஸ்தான் மீது தலிபான்களுக்கு ஏற்பட்டுள்ள கோபம் நியாயமனதுதான் என்று வக்காலத்து வாங்கியுள்ளார். 
"தலிபான்களின் தற்கொலைப்படை தாக்குதலில் மக்கள் பலியாவதை இறைவனின் கடும்கோபத்தால் நடக்கும் செயல் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். 
எனவே, பாகிஸ்தானின் உண்மையான எதிரி யார்? 
என்பதை குறித்து வைத்துக்கொண்டு அவர்களை அழிக்க நாம் முன்வர வேண்டும். ஜீன்ஸ் பேண்ட் அணியும் பெண்கள்தான் பாகிஸ்தானின் எதிரிகள். 
பாகிஸ்தானில் ஜீன்ஸ் அணிந்து நடமாடும் பெண்களை வேட்டையாடும்படி ராணுவத்துக்கு உத்தரவிட வேண்டும். 
அவர்களால் தான் உலகம் முழுக்க நில நடுக்கங்கள் உண்டாகுகின்றன.இதைத் தடுக்க பெண்களை ஜீன்ஸ் அணிய விடாமல் தடுக்க வேண்டும் ."
என்று தனது ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளார்.
நில நடுக்கக் காரணம் கண்டு பிடிப்பு?