ஸ்டார்பக்ஸ்

நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்சை தொடர்ந்து இப்போது டாடா ஸ்டார்பக்ஸ் காபி, கெல்லாக்ஸ் உட்பட 32  உணவு பொருட்களுக்கு  தடை வரும் என்று அஞ்சப்படுகிறது. 
மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், அவ்வப்போது உணவுப்பொருட்களை ஆராய்ந்து,   மனித உடலுக்கு பாதுகாப்பானதா, தரமானதா என்று சோதித்து சில வற்றை கருப்பு பட்டியலிலும், சில பொருட்களை தடை பட்டியலிலும் சேர்த்து  வருகிறது. 
இதன்படி,  கடந்த ஏப்ரல் மாதத்துடன் 500 பொருட்களை கருப்பு பட்டியலில் வைத்துள்ளது. இதில் புதிதாக டாடா ஸ்டார்பக்ஸ், கெல்லாக்ஸ்  பாக்கெட் உணவுப்பொருட்களையும் சேர்த்துள்ளது. 

இதில் இந்த இரண்டு உணவுப்பொருட்கள் மீதும் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது ஆணையம். 
மாநில அரசுகளுக்கு அவ்வப்போது பட்டியலை  அனுப்பி வைப்பதுடன் ஆணையத்தின் வேலை  முடிந்து விடுகிறது. ‘பட்டியலில் உள்ள உணவுப்பொருட்கள் தரம் குறைவாக உள்ளது; மனித  உடலுக்கு பாதிப்பு தரக்கூடியது’ என்று உணவு மட்டுமின்றி, உணவு சார்ந்த மருந்து, சிரப், ஜூஸ் போன்ற பட்டியலையும் அனுப்பி வைப்பதுண்டு. 
  இதன் அடிப்படையில் சில சமயம், மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்கும். சில மாநில  அரசுகள் தொடர்ந்து ஆய்வு செய்து நடவடிக்கை   எடுக்கும். சிலரோ, இது பற்றி கண்டும் காணாமல் இருந்து விடுவதும் உண்டு. 

 பெரிய அளவில் பாதிப்பு வரும் போது தான், ஏற்கனவே தடை செய்யப்பட்ட உண்மை தெரியவரும். ஆனால், அது ஆவணமாக மட்டுமே பைலில்  இருந்திருக்கும். அதிகாரிகளோ, அரசோ இது பற்றி பெரிதாக நடவடிக்கை எடுக்காமல் இருந்து விட்டு, பின்னால் விழித்து கொள்வதும் நடக்கத்தான்  செய்கிறது. 
நெஸ்லே விவகாரத்துக்கு பின் இப்போது பல மாநில  அரசுகள் விழித்து கொண்டு விட்டன. சிக்கன், பெரி வகை உணவு, சாஸ், ஜூஸ்  என்று பல வகை உணவுப் பொருட்களுக்கு ஆணையம் அபாயச்சங்கு ஊதியுள்ளது. ‘எங்கள் நோக்கம் மாநில அரசுகளை உஷார்படுத்துவது தான்; 
  அவர்களுக்கு  தான் முழு நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளது’ என்று ஆணையம் விளக்கம் தெரிவித்துள்ளது.
ஸ்டார்பக்ஸ் என்பது அமெரிக்காவில் பிரபலமானது; 
அதில் ப்ராபிசினோ என்ற ரசாயன ப்ளேவர் பொருள் கலப்பதாக ஆணையம் ஆய்வில்  தெரியவந்துள்ளது. இதனால் மனித உடலுக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது. ஆணையம் சமீப காலமாக அதிரடி நடவடிக்கைகளை  எடுத்து வருவதால் உணவு பொருள் தயாரிப்பு நிறுவனங்களும் விழித்து கொண்டுள்ளன.
 பேக்கேஜ், லேபிள், இடுபொருட்கள், சோதனை என்று எல்லா  மட்டத்திலும் முழு கவனம் செலுத்தி வருகின்றன. 

அமெரிக்க உணவு பாதுகாப்பு, தர கட்டுப்பாட்டுக்கும் இந்திய கட்டுப்பாட்டுக்கும் வேறுபாடு உள்ளது. சத்துக்களை பொருத்தவரை இந்தியா கடும்  விதிகளை பின்பற்றி வருகிறது.
 இது தான் சிக்கலுக்கு காரணமே. வெளிநாட்டு தயாரிப்பு பொருட்களுக்கு இந்தியாவில் கிடுக்கிப்பிடி துவங்கி விட்டது.  பெரும்பாலான பொருட்களுக்கு பாதுகாப்பு, தர சான்றிதழ் தருவதில் சிக்கல் எழுந்துள்ளது. 

இந்தியாவில் கடைபிடிக்கப்படும் விதிகள் தான் காரணம். ‘இப்படி இந்திய சூழ்நிலைக்கு ஏற்ப பல விதிகள் அடிப்படையில் உணவுப்பொருட்களுக்கு  தடை விதிக்கலாம் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம்.  
ஆனால், அதை மாநில அரசுகள் முழுமையாக மீண்டும் பரிசோதிக்க வேண்டும்’ என்றும்  ஆணையம் கூறியுள்ளது.


மேகி உட்பட பல பாக்கெட் உணவு வகைகள் விற்பனையில் சக்கை போடு போட்டு வந்தன; இன்னும் பல பொருட்கள், சந்தையில் குவிந்து  இருக்கின்றன.
 அவற்றை தடை செய்ய மத்திய அரசால் முடியாது. மாநில அரசிடம் தான் அதிகாரம் உள்ளது. பொதுவாக பல மாநிலங்களில் பிரச்னை  வந்தால் மத்திய  அரசு தலையிடும். 
எனினும்் உணவு பாதுகாப்பு  ஆணையத்தின் பெரும்பாலான பரிந்துரைகள் காற்றில் பறக்க விடப்படுகின்றன   என்பது தான் உண்மை என்று நுகர்வோர் அமைப்புகள் பொதுவான கருத்து. 

உணவுப்பொருட்களில் பெரும்பாலும் சர்க்கரை சத்து,  ஒரு வகை இனிப்பு பொருளான கேராமல், உப்பு, இரும்பு உட்பட கனிம சத்துக்கள், காபின்  ஆகியவை தான் அதிக அளவில் சேர்க்கப்படுகிறது. 
பல நோய்களுக்கு இது தான் காரணம். மேலும், சில சாக்லெட் உட்பட பொருட்களில் அசைவ  பொருட்கள் சேர்க்கப்படுவதும் அதிகரித்துள்ளது. ஜூஸ், சாஸ், சிரப் போன்றவற்றில் இப்படி ரசாயன, இனிப்பு சேர்க்கப்படுவது உடலுக்கு பாதுகாப்பானது  அல்ல என்று ஆணையம் கருதுகிறது.


========================================================================
இன்று,
ஜூன்-11.

  • நியூசிலாந்து தன்னுடன் குக் தீவுகளை இணைத்துக் கொண்டது(1901)
  • இந்திய அரசியல் தலைவர் லாலு பிரசாத் பிறந்த தினம்(1947)
  • ஆன்டானியோ மெயூச்சி, தொலைபேசியை முதன் முதலில் கண்டுபிடித்தவர் என அமெரிக்க காங்கிரசால் அறிவிக்கப்பட்டது(2002)
  • தமிழறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் இறந்த தினம்(1995)
==============================================
இப்போதெல்லாம் இளமைத் தோற்றத்தை பாதுகாப்பதில் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால், பெரும்பாலும் இளமைத் தோற்றம் தவறான பழக்கங்களால் தான் கெட்டு விடுகிறது.
இவற்றால் உங்கள் இளமைத் தோற்றம் பறி போவதுடன், நோய்கள் ஏற்பட காரணமாகி வாழ்நாட்களையும் குறைத்து விடுகின்றன. இதோ, உங்கள் இளமைத் தோற்றத்தை பாதுகாக்க நீங்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்:
---------------------------------------------
இளமை இதோ... இதோ... 
--------------------------------------------
1. இறுக்கமான வாழ்க்கை முறையை மாற்றிவிடுங்கள். பல வேலைகளையும் ஒரே நேரத்தில் இழுத்துப்போட்டுக் கொண்டு செய்வதால் மன அழுத்தம் ஏற்பட்டு ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு இளமைத் தோற்றம் குறையும்.

2. இனிப்புப் பண்டங்களை உணவில் அதிகம் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். அதிக இனிப்பு கண்களுக்கு கீழ் கரு வளையம், தோல் சுருக்கம், உடல் பருமன் போன்றவற்றிற்கு காரணமாகிறது.

3. இரவு குறைந்தது ஏழு மணி நேரமாவது உறங்க வேண்டும். உறக்கத்தை தொலைத்தால் ஆரோக்கியம் கெட்டு, இளமையும் தொலைந்து விடும்.

4. தொலைக்காட்சிக்கு அடிமையாக வேண்டாம். தற்போதைய ஆய்வுகளின் முடிவுகள், உலகில் தொலைக்காட்சிக்கு அடிமையான பெரும்பாலானவர்கள் இளம் வயதிலேயே முதுமைத் தோற்றத்தை அடைந்து விடுகிறார்கள் என கூறுகின்றன. மணிக்கணக்கில் தொடர்ந்து தொலைக்காட்சி முன் அமரும் போது மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

5. பெரும்பாலான இளமைத் தோற்ற பாதிப்புகளுக்கு சூரியனிடமிருந்து வெளிப்படும் புறஊதாக் கதிர்களே காரணம். எனவே, வெயில் காலங்களில் தகுந்த பாதுகாப்பு அணிகலன்கள் இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

6. அதிக எண்ணிக்கையிலான வாசனை திரவியங்கள், கிரீம்கள் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். முக வசீகரத்தைக் கூட்டுவதற்காகப் பயன்படும் வாசனை திரவியங்களிலும் கிரீம்களிலும் செயற்கை ரசாயனப் பொருட்கள் கலந்திருப்பதால் அவற்றை தேர்வு செய்வதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

7. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களாவது 15 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது நம் இளமைத் தோற்றத்தை காக்கும். காலை அல்லது மாலை நடைப்பயிற்சியும் நல்ல பலன் கொடுக்கும்.

8. ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் இளமைத் தோற்றத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சாலமன் மற்றும் மெக்கரல் மீன் வகைகளிலும், வாதுமைப் பருப்புகளிலும் இவ்வகைக் கொழுப்பு அமிலங்கள் போதுமான அளவு உள்ளன.
-தினமலர்.



========================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?