அனைத்து வசதிகளும் கொண்டது எங்கள் அதானி சிறையே!

கொடுக்கும் பணத்துக்கு எற்ற வசதிகள் எராளம்?
4 ஆண்டுகளுமேல்  தண்டனைக்கு சிறப்பு தள்ளுபடிகள்!

இன்று உலகில் மிகப்பெரிய அரசு நிறுவனம் என்ற பெயர் கொண்ட இந்திய ரெயில்வே வேயை தனியாரிடம் கொடுக்க மோடியால் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு ஆலோசனைகளை அள்ளி வீசியுள்ளது.
இந்தியாவையே அன்னியருக்கு விற்று விட்டு நாடு,நாடாக சுற்றுப்பயணம் செல்லத்துடிக்கும் மோடி அமைக்கும் குழு பின்னர் எப்படி அறிக்கை தரும்?
அடுத்து சிறைகளை ,காவல்துறையை தனியாரிடம் ஒப்படைக்கு எண்ணம் அய்யா மோடிக்கு வந்திருக்கிறதாம்.அப்படி கொடுக்கப்பட்டால் அதானி,அம்பானி வகையறாக்களுக்குத் தானே கொடுப்பார்.
அவர்கள் இனி ஊழல்,முறைகேடுகள்  செய்து உள்ளே சென்றாலும் அவர்கள் குத்தகை எடுத்த சிறையில் எப்படி இருப்பார்கள்.சொகுசுக்கு கேட்கவா வேண்டும் ?போர்டு மீட்டிங்கிற்கு ராஜ மரியாதையுடன் சென்று வருவார்கள்தானே?
இதோ மோடியின் அந்நிய மயமா க்கள் ஞானகுரு அமெரிக்காவில் தனியார் மயமாக்கப்பட்ட சிறைத்துறையின் செயல்பாடுகள்.
லாபத்தை அதிகரிப்பதற்காக சிறைத்தண்டனை பெற்று வருபவர்களின் தண்டனைக் காலத்தைத் தாண்டி அவர்களை சிறைகளில் தனியார் நிர்வாகம் அடைத்து வைக்கிறது என்று ஆய்வில் அம்பலமாகியுள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தனியார் நிர்வாகங்களின் வசம் சிறைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
 1984ல் அமெரிக்காவிலும், 1992ல் பிரிட்டனிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
 லாபம் மட்டுமே குறியாக இருக்கும் தனியார் நிறுவனங்கள் சிறை நிர்வாகத்தைக் கையில் எடுத்துக் கொண்டபிறகு, சிறையிலிருந்து வெளியேறிச் செல்பவர்கள் மீண்டும் குற்றம் செய்யும் மனநிலையில்தான் செல்கிறார்கள். 
சொல்லப்போனால் அத்தகைய குற்றங்களை அவர்கள் செய்ய வேண்டும் என்பதைத்தான் சிறை நிர்வாகம் விரும்புகிறது என்று விஸ்கோன்சின் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.
சிறை நிர்வாகத்தை தனியார் வசம் ஒப்படைத்த பிறகு, தரமான மற்றும் புதுமையான மறுவாழ்வுத் திட்டங்கள் நடைமுறையில் உள்ளதாகத் தனியார் நிறுவனங்கள் கூறிவந்தன. 
ஒரு படுக்கைக்கு இவ்வளவு என்று நிதி ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு படுக்கையிலும் கைதி இருக்கிறாரா என்று கணக்கிட்டு, அதன்படி நிதி ஒதுக்கப்படும் என்பதால், தண்டனைக்காலம் முடிந்தபிறகும் கைதிகளை விடுவிக்காமல் அப்படி வைத்துக் கொள்கிறார்கள். வேறு ஒருவர் வந்தால், தண்டனைக்காலம் முடிந்தவரை வெளியே அனுப்புகிறார்கள். சிறை நிர்வாகத்தின் கவனம் முழுவதும் நிதியை முழுமையாகப் பெறுவது, லாபத்தை அதிகப்படுத்துவது என்பதில்தான் இருக்கிறது.
அரசுச் செலவைக் குறைப்பதற்காகவே தனியார் நிறுவனங்கள் வசம் சிறை நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், தற்போது அரசு வசம் இருக்கும் சிறைகளை விட தனியார் நிர்வாகத்தில் உள்ள சிறைகளில் அதிக செலவு ஆகிறது.
கைதிகளின் எண்ணிக்கை குறையாமல் பார்த்துக் கொள்கிறார்கள். தனியார் மயமாக்கல் எதற்காகச் செய்தார்களோ, அதற்கு எதிர்மறையான விளைவை அது ஏற்படுத்திவிட்டது. அரசுக்கு செலவு எகிறியுள்ளது. 
நாட்டில் குற்றங்கள் குறைந்துவிட்டால், தங்கள் லாபம் போய் விடுமோ என்ற மனநிலைக்கு தனியார் சிறை நிர்வாகம் வந்துவிட்டது.
பணம் கொழிக்கும் துறை
அமெரிக்காவின் தனியார் சிறை, பணம் கொழிக்கும் துறையாக மாறியுள்ளது. 25 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவாகிறது. இதனால் தனியார் நிறுவனங்கள், சிறைகளில் எப்போதும் கைதிகள் இருப்பதை விரும்புகின்றன. ஒரே தண்டனை பெற்ற இருவரில் ஒருவர் அதிக நாட்கள் கம்பி எண்ணுகிறார். அவரை தனியார் சிறைக்கு அனுப்பியதே அதற்குக் காரணம் என்கிறார் இந்த ஆய்வை மேற்கொண்ட விஸ்கோன்சின் பல்கலைக்கழக குழுவிற்கு தலைமையேற்றுள்ள அனிதா முகர்ஜி. அமெரிக்காவில் தண்டனை பெற்று சிறைகளில் உள்ளவர்களில் 10 சதவிகிதம் பேர் தனியார் நிர்வகிக்கும் சிறைகளில் உள்ளனர்.
தனியார் சிறைகளை உடனடியாக மூட வேண்டும் என்று தொடர்ந்து அமெரிக்காவின் மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்து வருகின்றன. சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் இந்த சிறைகள் அமைந்துள்ளன என்று அந்த அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. 
மேலும் பல சிறைகளைத் திறக்க அமெரிக்கப் பெரு நிறுவனங்கள் தயாராகி வருகின்றன.
========================================================================
இன்று,
ஜூன்-13.

  • சோவியத் ஒன்றியத்தில் முதலாவது வைரச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்ட
  • து(1955)
  • இஸ்ரேலின் பாதுகாப்புப் படையினர் லெபனானை விட்டு விலகினர்(1978)
  • பயனியர் 10, சூரியக் குடும்பத்தைத் தாண்டிய முதலாவது விண்கப்பல் ஆனது(1983)



========================================================================
இதுதாண்டா பிரசாரம்?
 முதலமைச்சரை எதிர்த்துக் களம் இறக்கிவிடப்பட்டுள்ள தோழர் சி. மகேந்திரனுக்கு ஆதரவு திரட்டுவதற்காக சென்னை ஆர்.கே.நகர் 
எனப்படும் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியின் வ.உ.சி. நகர் பகுதிக்குப் போயிருந்தோம். 
 கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பணிமனையினுள் அமர்ந்து செயல்திட்டங்கள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம்.விடியல் நாடகக்குழுவின் நாடகம், புதுயுகம் இசைக் குழுவின் பாடல்கள், ஜீவா, வி.பி.சிந்தன், நல்லக்கண்ணு, சங்கரய்யா போன்ற தோழர்கள் குறித்த சிறுசிறு ஆவணப்படங்கள் முதலியவற்றோடு தெருத் தெருவாய்ச் செல்வது, மக்களிடையே காட்டுவது, தப்பாட்டம் பயிற்சி, பாரதி கலைக்குழுவின் நையாண்டி தர்பார் என கலைக்குழு வழியாக கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஆளுங்கட்சி உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்குமான வித்தியாசத்தைச் சொல்லி வாக்குகளை சேகரிப்பது என்றெல்லாம் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டன.
வெளியேயிருந்து பேண்டு மேள சத்தம் கேட்க எட்டிப்பார்த்தோம்.
200 பேர் ஆண்கள் பெண்கள் அதிமுக கொடியேந்தி நடைபோட்டுக் கொண்டிருந்தார்கள். 
கூட்டத்தின் முன் 4 திருநங்கைகளை மோசமான உடல் அசைவுகளோடு ஆட வைத்துக் கொண்டிருந்தார்கள்.
ஆண்கள் அத்தனை பேரும் ஒரு நாளுக்கு இவ்வளவு என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்ட வெளியூர் ஆட்கள். 
பெண்கள் அதே போல் கூலி அடிப்படையில் வரவழைக்கப்பட்ட உள்ளூர் குடிசைப்பகுதியினர். ஊர்வலத்தில் சென்றுகொண்டே பேச்சு கொடுத்தபோது தெரியவந்த விவரம் மலைக்க வைத்தது.
இவர்களின் இன்றைய டியூட்டி மாலை 6 முதல் 8 வரை கொடி பிடித்து சென்று வருவதாம்.
தலைக்கு 650 ரூபாய் கூலியாம். 
இப்படி ஏழு வட்டத்தின் 42 நகர்களில் 200 பேர் வீதம் 200ஓ42ஓ650 என் கணக்குப் போட்டால் 54,60,000 ரூபாய் இவர்களுக்கான கூலி மட்டும் வருகிறது. 
இது இல்லாமல் இவர்களுக்கான மதிய உணவு 100 பேர் ஒரு நகருக்கு என வைத்தால் 42 நகர் சார்ந்து 4200 பேர்களுக்கு 200 ரூபாய் வீதம் கணக்கு போட்டால் அதுவே 8,40,000 ரூபாய் என்றாகிறது.
தொகுதி முழுவதுமுள்ள 90 பூத் மையங்களில் 25 பேர் வீதம் கணக்கு போட்டு தலைக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய், சாப்பாடு கணக்கு போட்டால் அது ஒரு 11,25,000 ரூபாய்.
தொகுதியில் ஓடும் இவர்களது கார்கள், ஆட்டோக்களைக் கணக்குப் போட்டால் 500 வாகனங்களுக்கு 50 கிமீ ஓட பெட்ரோல் செலவு தினசரி 1 லட்சம். 
ஒலிபெருக்கி செலவு 42 நகர் சார்ந்து 5000 எனக் கொண்டால் 2,10,000 எனக் கணக்குப் போட்டால் 77,35,000 ரூபாய் வருகிறது.
இதை 27 வரை கணக்குப் போட்டால் 17ஓ77,35,000 என்றால் ரூ.13,14,95,000 வரும்.

இது தேர்தல் ஆணையத்தின், செலவு கண்காணிப்பாளர் கவனத்திற்காக எழுதப்பட்டதல்ல,அப்படி இதையெல்லாம் தேர்தல் ஆணையம் கண்கானித்து ஜெயலலிதாவுக்கு எதிராக நடவடிக்கை 
எடுக்கும்  என்று நம்புவது சுத்த பைத்தியக்காரத்தனம்.
ஜனநாயகம் கொச்சைப்படுத்தப்படக்கூடாது என்ற அக்கறையுள்ள தொகுதி மக்களின் கவனத்திற்காகக் கொண்டுவரப்பட்டது.வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா நடக்கிறது என்று ஏற்கெனவே அது தேர்தல் ஆணையம் ஆசியுடன்,காவல்துறையினர் ஆதரவுடன், தொடங்கிவிட்டது என்றும் பேச்சு அடிபடுகிறது. 
ஒரு லட்சம் பேருக்கு தலைக்கு குறைந்தது ரூ.1,000 எனக் கொண்டால் பத்து கோடி வரும்!
இப்படி குமாரசாமி கணக்கு போட்டாலே 23 கோடி ரூபாயை செலவளித்து, தொகுதி மக்களின் தன்மானத்தை வாங்க முயற்சிக்கும் பணபலத்தையும் அதிகார பலத்தையும் எதிர்த்து தோழர்கள் கட்டுச் சோற்றோடும் சிங்கிள் டீயோடும் உழைப்பை நல்கி வருகிறார்கள். ஒரு அரசியல் போராட்டத்தை நடத்துகிற, அதில் பங்கேற்கிற உணர்வு ஒவ்வொரு தோழரின் முகத்திலும் சோர்விலா உற்சாகத்தை ஏற்றியிருக்கிறது.பண,அதிகார,அடக்குமுறையை எதிர்த்து தேர்தலில் தோற்றாலும் அசிங்கமில்லை என்ற உணர்வை தந்தது.

பிரசாரத்துக்கு சென்ற போது பார்த்து எழுதியவர் -இரா.தெ.முத்து.நன்றி:தீக்கதிர்.
ரா.கி .நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் போது .


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?