திங்கள், 15 ஜூன், 2015

வேர்க்கடலை -பாதாம்தினமும் 10 அல்லது 15 கிராம் பாதாம் பருப்பு அல்லது வேர்க்கடலை உண்ணும் பழக்கம் இருந்தால், ஆரோக்கியம் கூடி நீண்ட ஆயுளைப் பெற முடியும் என்று உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். 

சமீபத்தில் நெதர்லாண்ட் நாட்டில் உள்ள மாஸ்டிரிக்ட் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், தினந்தோறும் வேர்க்கடலை அல்லது பாதாம் பருப்பு உண்பவர்களுக்கு, உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய பிரச்சனைகளான மாரடைப்பு, புற்று நோய், சுவாசக் குழாய் நோய்கள் போன்றவை ஏற்படுவதில்லை என தெரிய வந்துள்ளது. 
இது போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்கள் வராமல் இருப்பதற்கு காரணம் அவற்றில் காணப்படும் நிறைவுறாத கொழுப்பு அமிலங்கள், விட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்டுகள் போன்ற முக்கிய ஊட்டச் சத்துக்களே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். 

நிறைவுறாத கொழுப்பு அமிலங்கள், மாமிசம், நெய் போன்றவற்றில் இருக்கும் கெட்ட கொழுப்புகளைப் போல் இருதயம் மற்றும் மூளையின் ஆரோக்கியத்தை பாதிப்பதில்லை என்றும், இவற்றில் காணப்படும் நார்ச்சத்தும் ஆன்டிஆக்ஸிடன்டுகளும் புற்று நோய்கள் வரவிடாமல் தடுப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். 
இவற்றை தினந் தோறும் உண்டு வந்தால் ஆபத்தான நோய்களில் இருந்து நம்மைக் காத்து கொள்வதுடன், பக்கவாதம், பசியின்மை, பலவீனம், எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்தும் விடுபட முடியும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
பாதாம் பருப்பு விற்கும் விலையில் நம்மைப்போன்றவர்கள் தினமும் வாங்கி சாப்பிடுவது என்பது நம் பர்சுக்கு எட்டாத விடயம்.
ஆனால் பாதாம் பருப்பின் அத்துணை நலன்களையும் கொண்ட வேர்க்கடலை எனும் நிலக்கடலை கைக்கூடும் காரியம்தான்.

பாதாமை விட சில சத்துக்களை அதிகம் கொண்ட நம் வேர்க்கடலையைஅதாவது  நிலக்கடலை குறித்த மூடநம்பிக்கைகள்அவ நம்பிக்கைகள் இந்தியா முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டுப் பரப்பிவிடப்பட்டுள்ளன.காரணம் தங்கள் நாட்டு பருப்புகள பெரியவை என்று காட்டி விற்பதற்காகத்தான்.
 நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம்வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய் பிடிக்கும் பருவத்திற்குப் பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதைக் காணலாம். நிலக்கடலைச் செடியைச் சாப்பிடும் ஆடுமாடுநாய் வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

  நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பைசீராகச் செயல்படுவதுடன் கர்ப்பப்பைக் கட்டிகள்நீர்க்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப்பேறும் உடன் உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

  நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ்மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கியப் பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்குக் கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாகப் பெண்கள்நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் 
எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

  நிலக்கடலையை நாள்தோறும் 30 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும்.
 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

  நிலக்கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளைப் பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாகத் திகழ்கிறது.


  இது இளமையைப் பராமரிக்கப் பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையால் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதைத் தடுப்பதுடன்இளமையைப் பராமரிக்கவும் பயன்படுகிறது.


  நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக்
போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்குப் பயன்படும் விட்டமின் நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. இரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.


  நிலக்கடலையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப்பொருள் உற்பத்திக்குப் பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளைத் தூண்டுகிறது. மன அழுத்தத்தைப் போக்குகிறது. நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

   நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்புச் சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில் உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாகச் சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பைக் குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது.
 பாதாமைவிட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

  பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக்கட்டி உண்டாவதையும் தடுக்கிறது.
 பெண்களுக்குப்  பெரிதும் தேவையான போலிக்அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம்,   இரும்பு, விட்டமின்கள் ஆகியவை நிலக்கடலையில் நிறைந்துள்ளன.  பெண்களுக்குக் கருப்பைக்கட்டிகள்நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.       

பாதாம் பிஸ்தாவைவிடச் சிறந்தது :
நம் நிலக்கடலை.
 நாம் எல்லாம் பாதாம்பிஸ்தாமுந்திரிப்பருப்புகளில் தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றையெல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும்நிலக்கடலைக்குத்தான் உண்டு.

இனி கடலை போடும் நேரங்களில் வேர்க்கடலையை கொறிப்பது மனதுக்கும்,உயிருக்கும்  நல்லதாக அமையட்டும்.கண்டபடி கடலை போடுவது சில நேரங்களில்  உடலுக்கு ஆபத்தாக அமைந்து விடும்.ஆனால் வேர்க்கடலை,பாதாம் பருப்பும் உடல்,உயிர்களுக்கு நல்லது,.
========================================================================
இன்று,
ஜூன்-15.


  • சர்வதேச காற்று தினம்
  • டென்மார்க் கொடி நாள்
  • ரப்பர் பதப்படும் முறை, சார்லஸ் குடியர் என்பவரால் காப்புரிமம் பெறப்பட்டது(1844)
========================================================================
ஊழலை ஒழிக்கும் லட்சணம்.

மோடியும் -லேடியும் ?

தங்கள் ஆட்சியில் ஊழல் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று பாஜக கட்சியினர் ஒராண்டு விழாவில் மார் தட்டினர்.
அமைச்சர்கள் அளவில் வெளியெ வராத ஊழல்கள் இருக்கலாம்.
ஆனால் அமைச்சர்கள் அனைவருமே ஊழல் பெருச்சாளிகளுக்கு துணை போவது வெட்ட வெளிச்சமாகத் தருகிறது.
வங்கியில் பல கோடிகளை வாங்கி வராக்கடனாக்கிய அதானியை பிரதமர் நாடு,நாடாக கூட்டிக்கொண்டு அலைகிறார்.ஆயிரம் கோடிகளை வங்கிகளை கடனாக கொடுக்கக் கோரி வற்புறுத்தி வருகிறார்.இப்படி பல.
இப்போது சுஷ்மா சுவராஜ் சித்து வேலை.
ஐ.பி.எல். (இந்தியன் பிரிமீயர் லீக்) அமைப்பின் முன்னாள் தலைவர் லலித்மோடி. ஐ.பி.எல். முறைகேடு தொடர்பாக இவர் தலைவர் பதவியை இழந்தார்.
லலித்மோடி               சுஷ்மா சுவராஜ்           
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உருவாக காரணமாக இருந்த லலித் மோடி 2008 முதல் 2010ம் ஆண்டு வரை தலைவராக பணியாற்றினார்.நிதிமுறைகேடு செய்தது நிரூபணம் ஆனதால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) 2013ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவருக்கு வாழ்நாள் தடை விதித்தது.லலித்மோடி மீதான நிதிமுறைகேடு புகார் கூறப்படும் போதே அவர் இந்தியாவில் இருந்து தலைமறைவாகி லண்டனில் குடியேறினார்.
49 வயதான அவர் அந்நிய செலாவணி மோசடியிலும் ஈடுபட்டு இருந்தது தெரிய வந்தது. 
அவருக்கு எதிராக அமலாக்க பிரிவும் குற்றச்சாட்டு பதிவு செய்து இருந்தது.இதன் காரணமாக லலித் மோடி இந்தியாவுக்குள் வராமலேயே டுவிட்டர் மூலம் தனது கருத்துக்களை தெரிவித்து வந்தார்.
சுஷ்மாவின் கணவர் சுவராஜ் கவுசல் மற்றும் அவர்களது மகள் பன்சூரி ஆகியோர் லலித் மோடியின் வழக்கறிஞர்களாக செயல்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மத்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பயண ஆவணங்களை பெறுவதற்கு லலித் மோடிக்கு உதவியதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஜூலை மாதம் லலித் மோடி லண்டனில் பயண ஆவணங்களை பெற சுஷ்மா உதவி புரிந்துள்ளார்.
 இந்திய வம்சாவழி எம்.பி.யான கெய்த் வாசை தொடர்பு கொண்டு இது தொடர்பாக பேசி இருக்கிறார்.லலித்மோடிக்கு பயண ஆவணங்களை பெறுவதற்கு சுஷ்மா சுவராஜ் அங்குள்ள முக்கிய குடியுரிமை அதிகாரிகளுக்கு கெய்த் வாஸ் மூலம் நெருக்கடி கொடுத்துள்ளார்.
இதை கெய்த் கூறியதாக இங்கிலாந்து பத்திரிகை தெரிவித்துள்ளது.மேலும் லலித்மோடி பயண ஆவணம் பெற்ற விவகாரம் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றும் தகவல்களை வெளியிட்டுள்ளது.இந்த பரபரப்பான தகவலையடுத்து லலித்மோடிக்கு உதவியதை சுஷ்மா சுவராஜ் ஒப்புக் கொண்டுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் இதை செய்ததாக அவர் கூறியுள்ளார். இது குறித்து டுவிட்டரில் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது:கடந்த ஆண்டு ஜூலை மாதம் லலித்மோடி என்னிடம் பேசினார். தனது மனைவி புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், போர்ச்சுக்கல்லில் ஆகஸ்ட் 4-ந்தேதி அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதா கவும் தெரிவித்தார்.
தான் மருத்துவமனைக்கு சென்று சில பேப்பர் களில் கையெழுத்திட வேண்டும்.இதனால் பயண ஆவணம் பெற லண்டனில் விண்ணப்பித்து இருந்ததாகவும், இங்கிலாந்து அரசு தயாராக இருந்த போது அது தடுக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார். இதனால் மனிதாபி மான அடிப்படையில் நான் இங்கிலாந்து தூதரக அதிகாரிகளிடம் இது தொடர்பாக பேசினேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட் டுள்ளார்.
சுஷ்மாவின் கணவர் சுவராஜ் கவுசல் மற்றும் அவர்களது மகள் பன்சூரி ஆகியோர் லலித் மோடியின் வழக்கறிஞர்களாக செயல்பட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுஷ்மா சுவராஜின் முறைகெட்ட நடவடிக்கையை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் ஆதரித்துள்ளது. 
இந்தியர் ஒருவருக்கு மனிதாபிமான அடிப்படையில் சுஷ்மா சுவராஜ் உதவி செய்துள்ளதாக இந்த அமைப்புகள் கூறியுள்ளன.
அப்படி என்றால் தாவுத் இபராகிமுக்கும் பாஜக மனிதாபிமானமாக உதவுமா என்ன? பிரதமர் மோடியை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுஷ்மா சுவராஜின் நடவடிக்கையை நியாயப்படுத் தினார்.
இந்த நிலையில் சுஷ்மா மீதான குற்றச்சாட்டால் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர் கட்சிகள் கோரி வருகின்றன.
==================================================