மனிதாபிமானம் எனப்படுவது,
அன்புள்ள சுஷ்மாஜிக்கு,
ஐபிஎல் கமிஷனராக இருந்த லலித் மோடி பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் ரூபாய் 700 கோடி அளவிற்கு இந்திய அரசாங்கத்தை ஏமாற்றினார்.
மோசடி செய்தார் என்பதற்காக அவர் தேடப்படுகிற குற்றவாளியாக இருக்கிறார்.
இதெல்லாம் முந்தைய ஆட்சிக்காலத்தில் நடந்தது.
இந்திய அரசால் பாஸ்போர்ட் முடக்கி வைக்கப்பட்டதை மீறி வெளிநாட்டிற்கு பயணம் செய்ய அனுமதிக்க வேண்டுமென்று இங்கிலாந்து அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தீர் கள் என்று மற்றவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
அது ‘மனிதாபிமான’ அடிப்படையில் அமைந் தது என்பதை தாங்கள் சொன்ன பிறகு அந்தபிரச்சனை முடிந்து போய் விட்டது.
எல்லாவற் றையும் தாண்டி உங்களுக்கு ஆதரவாக பாஜக முழுமையும், ஏன் அருண் ஜெட்லியும் கூட நிற்கிறார்.
இதற்கு கைமாறாக லலித் மோடி உங்கள் கணவரின் உறவினருக்கு சஸ்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் உயர்படிப்புக்கு இடம் வாங்கிக்கொடுத்தார் என்பதையும், லலித் மோடிக்காக ஏழு வழக்குகளில் உங்கள் மகள் ஆஜராகி இருக்கிறார் என்பதையும் அவர் ஆஜரான ஒரு வழக்கில் முடக்கப்பட்டிருந்த பாஸ்போட்டை தில்லி உயர்நீதின்றம் விடுவித்து விட்டது என்பதையும் அதன்மீது பாஜக அரசாங்கம் மேல்முறையீட்டுக்கு கொண்டு செல்லவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி சில பேர் விமர்சிக்கிறார்கள்.
இதெல்லாம் மனிதாபிமானம் அடிப்படையிலான உதவிகள் என்பதை கூட அறியாதவர்கள்.
நாம் ஊழல் செய்வதில்லை ,ஊழலற்ற அரசு என்றுதான் உறுதியளித்துள்ளோம்.
ஊழல்வாதிகளுக்கு உதவுவதில்லை என்று சொல்லவே இல்லை.
இதற்கு முன்பே கூட இப்படி ஒரு பிரச்சனையை நீங்கள் எதிர்கொண்டீர்கள். அதனால் என்ன கெட்டு விட்டது.
அதன் பிறகுதான் தற்போதைய மத்திய அமைச்சரவையில் மிக முக்கியமான பொறுப்புக்கு வந்திருக்கிறீர்கள்.
அம்மாவின் பிள்ளைகள்
ஜனார்த்தன ரெட்டி, கருணாகர ரெட்டிஎன்கிற 2 சகோதரர்கள் கர்நாடகத்தில் இரும்புத் தாதுக்களை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்கள்.
இந்தக்குற்றச்சாட்டு வந்த போது, அவர்கள் இருவரும் கர்நாடகாவில் பாஜக அரசாங்கத்தில் அமைச்சர்களாக இருந்தார்கள். அவர்களுடைய மற்றொரு சகோதரர் சோமசேகர ரெட்டி அமைச்சர்களுக்கு நிகரான ஒரு பொறுப்பில் நியமிக்கப்பட்டிருந்தார்.
ரெட்டி சகோதரர்கள் |
குற்றச் சாட்டு வந்து கைது செய்யப்பட்ட போது, யார் இந்த ரெட்டி சகோதரர்கள்? என்று நம் கட்சிகுள்ளேயே சிலர் குழப்பம் விளைவிக்கப் பார்த்தார்கள். அந்த மூன்று பேரும் உங்களை தாயாக மதிப்பதாக சொன்னதால் நீங்கள் தான் அவர்களுடைய வளர்ச்சிக்கு காரணமாக இருந்தீர்கள் என்று குற்றச்சாட்டுகளை வைத்தார்கள்.
பாஜகவில் உறுப்பினராகவே இல்லாதவர்கள் திடீரென பாஜகவிற்கு வந்து எம்எல்ஏக்களாகவும் ஆகி 2 பேர் அமைச்சர்களாகவும் ஆனது எப்படி என்று கேட்டு அதற்கு நீங்கள்காரணம் என்றார்கள்.
ஆனால் என்னவா யிற்று?
எல்லோரும் சேர்ந்து தான் முடிவெடுத் தோம் என்று நம் கட்சி சொல்லி விடவில் லையா?
நாம் இதைப்போல் எவ்வளவையோ பார்த்து விட்டோம்.
தொழிலே பிரதானம்
உங்களுக்குத்தான் இந்தப்பிரச்சனை என்று கருதாதீர்கள்.
நம்முடைய கட்சி ஃபேர் குரோத் வழக்கில் அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை குறிவைத்து அவர் ராஜினாமா செய்ய வேண்டுமென்று இயக்கம் நடத்திக் கொண்டிருந்தது.
ஆனால் அந்த வழக்கில் சிதம்பரத்திற்கு ஆதரவாக அவர் குற்றவாளி அல்ல என்று தற்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள்தான் வாதாடினார் என்பதற்காக அவர் மீது கட்சி நடவடிக்கை எடுத்து விட்டதா என்ன?
எனவே நீங்கள் கவலைப்படாதீர்கள்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் அதற்கு முன்பு நமது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்காலத்தில் முதலில் வந்தால் தூக்கிக் கொடுப்பது என்று கொடுத்த நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளெல்லாம் 2014ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
இதில்முறை கேட்டில் ஈடுபட்டதற்காக பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
அமெரிக்காவில் இருந்த அருண் ஜெட்லி பிர்லா மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்தார்.
முதலீடுகளெல்லாம் இந்தியாவில் இருந்து ஓடிப்போகும் என்று சொன்னார். ஆனால் அதற்குப் பின்தானே இந்திய மக்கள் நமக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்தார்கள். கவலைப்படாதீர்கள், உங்களுக்கு ஒன்றும் ஆகாது. வோடபோன் நிறுவனம் 3,200 கோடி ரூபாய்க்கு வரிஏய்ப்பு செய்தது. வரித்துறைஅதிகாரிகள் அதை வசூலிக்க முயற்சித்தார் கள்.
அதை எதிர்த்து அந்த நிறுவனம் நீதிமன்றத்துக்கு போனது.
மும்பை உயர்நீதிமன்றமும் வோடபோனுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. வரித்துறை அதிகாரிகள் அதன் மீது மேல்முறையீட்டுக்கு போக வேண்டுமென்று வலியுறுத்தினார்கள்.
ஆனால், பாஜக அரசாங்கம் மேல்முறையீடு வேண்டாம் என்று முடிவு செய்தது.
வோடபோன் நிறுவனத்திற்கு அருண் ஜெட்லிதான் ஆலோசகராக இருந்தார். அதனால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று கொஞ்சம் கத்திக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் அதன்பிறகுதான் கட்சிக்குள்ளும், அரசாங்கத்திற் குள்ளும் அருண்ஜெட்லியின் கை ஓங்கியது. எனவே இதைப்பற்றியெல்லாம் கவலைப் படாதீர்கள்.
கருப்புப் பணத்தின் ஊற்றுக்கண் கார்ப்பரேட் நிறுவனங்களில் வரி ஏய்ப்பும் முறைகேடுகளும்தான்.
லோக்பால் மசோதா விவாதிக்கப்பட்ட போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீத்தாராம் யெச்சூரி லோக்பால் வரம்பிற்குள் தனியார் நிறுவனங்களையும், தனியார் அரசு கூட்டு நிறுவனங்களையும் கொண்டு வர வேண்டுமென்று பேசினார்.
அருண் ஜெட்லி தான் அதை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என்று எதிர்த்தார்.
யார் தவறு செய்தாலும் குற்றமே என்கிற வரையறையை கார்ப்பரேட் நிறுவனங்கள் என்ன செய்தாலும் தப்பில்லை என்றார்.
வானமா இடிந்து விட்டது.
அருண் ஜெட்லி தான் பெப்சி கோலா கம்பெனிக்கு வழக்கறிஞர் என்பது தெரியுமா?
இமயமலையில் மணாலி-ரோஹிடங் மலைச்சாலையில் சுற்றுச்சூழலைப் பாழ்படுத்தும் விதமாக அவர்கள் தங்கள் விளம்பரத்திற்கு பெயிண்ட் அடித்திருக்கிறார்கள்.
இதன் மீது அரசு அமைப்பு தொடுத்த வழக்கில் அரசுக்கெதிராகத்தான் அவர் வாதாடினார்
. அவர் அரசியலிலிருந்து ஒதுங்கி விட்டாரா?
கட்சி தலைமை ஏனென்று கேட்டதா?
கவலைப்படாதீர்கள் சுஷ்மாஜி உங்களை யாரும் அசைத்து விட் முடியாது.
கெயில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம். பக்கத்திலுள்ள தங்கள் கிணறுகளில் ஓட்டை போட்டு இயற்கை வாயுவை அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் திருடிக் கொண்டது.
திருட்டின் அளவு ரூ.3,000 கோடிக்கும் அதிகம். கெயில் வழக்கிற்குப் போனது.
அந்த வழக்கில் மத்திய அரசு பதிலுரை தாக்கல் செய்துள்ளது. கெயில் வாதம் சரியல்ல;
ரிலையன்ஸ் திருடவில்லை என்று.
இது நமது கொள்கைக்கு மாறானது என்று பாஜகவோ ஆர்எஸ்எஸ்ஸோ பேசியதில்லையே.
மனிதாபிமானம்‘மனிதாபிமான’ முறையில் நாம் இன்னும் பல நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம்.
பாஜக தலைவர் அமித்ஷாவை என்கவுண்டர் வழக்கில் விடுதலை செய்தவர் நீதிபதி சதாசிவம்.
அவர் பச்சை குத்திய அதிமுக காரர் என்றபோதும் மனிதாபிமான அடிப்படையில் நாம் கேரள ஆளுநராக நியமித்திருக்கிறோம்.
ஊழலுக்கு எதிராக நம் கட்சி பேசிக் கொண்டிருக் கிறது.
ஆனாலும் ‘மனிதாபிமான’ அடிப்படை யில் நாம் பி.வி. ஆச்சார்யாவை ஜெயலலிதாவிற்கு எதிராக வாதாட வேண்டாம் என்று வற்புறுத்தி விலகச் செய்ததை ஆச்சார்யாவே சொல்லியிருக்கிறார்.
அதற்கு ஒருமாதம் முன்புதான் அதிமுக நமது தேசிய ஜனநாயக கூட்டணியில் இல்லையென்ற போதிலும் அத்வானி அவர்கள்அதிமுக நமது இயல்பான கூட்டாளி என்றார். ‘மனிதாபி மான’ தொடர்பு அதிலிருந்துதான் ஆரம்பித்தது.
ஜெயலலிதாவிற்காக நம் கட்சியின் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆஜரானார். ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட பிறகு அருண்ஜெட்லி நேரடியாக அவரை சந்தித்துப் பேசினார்.
ரவி சங்கர் பிரசாத் |
தமிழகத்தில்பாஜக செல்வி ஜெயலலிதாவை ஊழல் பேர்வழி என்று சொல்லிக் கொண்டிருந்தாலும் கர்நாடக நீதிமன்றத்தில் அவருக்காதரவாக தீர்ப்பு வந்ததை நாடாளுமன்றத்திலேயே ரவி சங்கர் பிரசாத் இனிப்பு வழங்கி கொண்டாடி யதை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.
இதுபோன்று ‘மனிதாபிமான’ அடிப்படையில் அதானி குழுமம் சூரியசக்தி மின்சாரம் தயாரிக்க தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது.
மீண்டும் லலித் மோடி விவகாரத்திற்கே வருவோம். ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா லலித் மோடிக்கு ஆதரவாக இங்கிலாந்து அரசுக்கு கடிதம் எழுதி அதை இந்திய அதிகாரிகளுக்கு காட்டக்கூடாதென்று கொடுத்த கதையும் வெளியாகியிருக்கிறது.
பிரதி ‘மனிதாபிமான’ முறையில் சிந்தியாவின் மகன் துஷ்யந்த் - அவரும் நமது கட்சி எம்.பி. தான் - நிறுவனத்தின் 10 ரூபாய் பங்கை 9,600 ரூபாய் கொடுத்து வாங்கியும் கடனாகவும் ரூ.11 கோடி லலித்மோடி கொடுத்திருக்கிறார்.
எனவே, சுஷ்மாஜி கவலைப்படாதீர்கள்.
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது முதுமொழி.
குற்றம் பார்க்கில் நமது கட்சியே இருக்காது.
எனவே கவலைப்படாதீர்கள் சுஷ்மாஜி.
பாஜக உங்களுடன் துணை நிற்கிறது.
-தங்கள் விசுவாசிஸ்வயம் சேவக்.
நன்றி:தீக்கதிர்.
========================================================================
இதயத்தை பலப்படுத்தும் புதிய புரதம் .
இதய செல்களை பலப்படுத்தும் புதிய "வின்குலின்' எனப்படும் புதிய புரதத்தை அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்கின்ஸ் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
மற்ற உடல் உறுப்புகளைப் போல் இல்லாமல் இதயம் குறைந்த அளவில் தான் புதிய செல்களை உற்பத்தி செய்கிறது. அதே நேரம் இரவு பகலாக மனிதனின் ஆயுட்காலம் முழுவதும் உழைக்கிறது.
இடைவிடாத உழைப்பினால் இதயத்தின் செல்கள் பலம் இழந்து வேலைத் திறனை இழக்கிறது. அதனால் வயதான காலத்தில் அதனுடைய ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு இதய நோய்கள் தலை தூக்க ஆரம்பிக்கின்றன.
உலகில் கோடிக்கணக்கில் இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். மாரடைப்பு போன்றவை திடீரென ஏற்படுவதால் பலரும் உயிரை இழக்கின்றனர்.
இது தவிர மூச்சு விடுவதில் சிரமம், பலவீனம், படபடப்பு, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.
எனவே இதய தசைகளுக்கு பலம் கொடுக்கும் புதிய சிகிச்சை அவசியம் ஆகிறது. ஆராய்ச்சியாளர்கள் குரங்கு, எலி போன்றவற்றில் மரபு ரீதியாக வின்குலின் புரத உற்பத்தியை அதிகரித்ததில் அவற்றின் வாழ்நாள் அதிகரிப்பதை கண்டனர்
இதயத்தை பலப்படுத்தும் இப்புதிய புரதத்தின் மூலமாக இதய சிகிச்சைக்கு புதிய வழி கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
========================================================================
இன்று,
ஜூன்-19.
1843 -காரல் மார்க்ஸ் -ஜென்னி திருமணம்.
- 1269 - பிரான்சில் மஞ்சள் அடையாளம் இல்லாமல்திரியும் அனைத்துயூதர்களும் தண்டம்செலுட்த்த வேண்டும் என ஒன்பதாம் லூயி
- மன்னன் கட்டளையிட்டான்.
- 1867 - மெக்சிகோவின் மன்னன் முதலாம் மாக்சிமிலியன் மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டான்.
- 1870 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அனைத்து தெற்கு மாநிலங்களும் ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்ட பின்னர், அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புகலைக்கப்பட்டது.
- 1910 அமெரிக்காவில் வாஷிங்டனில் முதல் தடவையாக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது.
- 1912 - ஐக்கிய அமெரிக்காவில் 8-மணி நேர வேலைத்திட்டம் அமுலாகியது.
- 1961 - குவெய்த் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
========================================================================
மேகியின் உண்மையான உபயோகம்?
கடைகளில் இருந்து திரும்பப் பெறப்பட்ட மேகி நூடுல்ஸ் சிமெண்ட் ஆலைகளில் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக காரீயம் மற்றும் மோனோசோடியம் குளூட்டமேட் கலந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து உத்தரப்பிரதேசம், பீகார், தமிழ் நாடு, மகாராஷ்டிரா, தில்லி உட்பட பலமாநிலங்களில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 35 லட்சம் கடைகளில் இருந்து 27 ஆயிரத்து 240 டன் மேகிநூடுல்ஸ் பாக்கெட்டுகள் நெஸ்லே நிறுவனத்தால் திரும்பப் பெறப்பட்டது.
இது குறித்து காலபர்கி உணவு பாதுகாப்பு அதிகாரி ஆர்.எஸ்.பிராதார் கூறுகையில், முதலில் மேகி 40 மி.மீட்டர் அளவிற்கு பொடியாக்கி அதை உமியுடன் சேர்த்து சிமெண்ட் ஆலைகளில் பாய்லர்களுக்கு எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது என்றார்.
கடந்த 9ம் தேதி முதல் 13 மாநிலங்களில் இருந்து சுமார் 1110 டன் மேகி நூடுல்ஸ் ஏசிசி ஆலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது .
இவ்வாறு ஆலைகளுக்கு அனுப்பப்பட்ட மேகியில் கடந்த புதன் கிழமை வரை 780 டன் நூடுல்ஸ் பொடியாக்கப்பட்டுள்ளது .
இது தொடர்பாக ஏசிசி சிமெண்ட் மற்றும் நெஸ்லே நிறுவங்களின் மத்தியில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது .
========================================================================
2004ல் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படி, பிளஸ் 1, பிளஸ் 2 பாடப்புத்தகங்கள், 2006ல் புதிதாக உருவாக்கப்பட்டன. இந்தப் புத்தகங்கள், பத்து ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளன.
கடந்த தி.மு.க., ஆட்சியில், தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத் தலைவராக இருந்த நாகநாதன், தலைமையிலான குழு, இந்த புத்தகங்களை உருவாக்கியது. அதனால், நாகநாதன் எழுதிய முகவுரையில், அப்போதைய முதல்வர் கருணாநிதி, அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு நன்றி கூறிஉள்ளார்.
ஜெயலலிதா ஆட்சியில் பாடத்திட்டம்
மாற்றப்படாததால், பழைய புத்தகமே அப்படியே அச்சடிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த பெயர்கள் இடம் பெற்று உள்ளன. தற்போது, முகவுரை பக்கத்தை என்ன செய்வது என்று, ஆலோசனை நடந்து வருகிறது.
------------------------------------------------------------------------------------------------------------