ஸ்மார்ட்போன்வாங்கினால் மட்டும் போதுமா?

ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்திருக்கும் நிலையில் அதன் பராமரிப்பது பற்றிய குறிப்புகளும் மிகவும் அவசியமாகிறது.
போன் வாங்கும் அனைவரும் உடனடியாக செய்வது அதன் ஸ்கீரினில் கீறல் விழாமலிருக்க ஸ்கீரீன் கார்டு ஒட்டுவதும், மொபைல் தவறி கீழே விழுந்தால் அடிபடாமலிருக்க கேஸ் கவர் மாட்டிக்கொள்வதும்தான்.ஃபோன் பராமரிப்பு இத்தோடு முடிந்துவிடுகிறதா என்றால் இல்லை.
 இன்னும் நாம் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் பல இருக்கின்றன.
எந்தக் கவலையுமின்றி பாடல்கள், வீடியோக்கள், படங்கள் என்று போன் மெமரி போதும் போதும் என்று சொல்லும்வரை இடத்தை நிரப்பிவைத்திருப்பவர்களே அதிகம்.
தேவையான அப்ளிகேஷனைத் தேடும்போது, விரலே தேய்ந்து போகும்அளவிற்கு கூகுள் பிளே ஸ்டோரில் இருக்கும் அப்ளிகேஷன்களையெல்லாம் ஸ்மார்ட்போனில் அடுக்கி வைத்திருக்கும் சிலரும் இருக்கிறார்கள்.
தேவையானது-தேவையற்றதுஸ்மார்ட் போனின் தேவை நமக்கு அவசியம்தான். 
அதற்கான செயலிகளும் அத்யாவசியம்தான்.
 எவை அடிக்கடி பயன்படுத்தும் செயலிகளோ அவற்றை மட்டும் வைத்துக்கொண்டு, குறிப்பிட்ட கால இடைவெளியில் பயன்படுத்த வேண்டிய செயலிகளை அவ்வப்போது இயக்கி பயன்படுத்திக் கொள்ளும் வகையில் மெமரி கார்டில் பேக்கப் செய்து வைத்துக் கொள்ளலாம்.
கணினியாக இருந்தாலும் ஸ்மார்ட்போனாக இருந்தாலும் பிரச்சனைக்கான தீர்வு பொதுவானதுதான். 
அதனுடைய மெமரி கொள்ளவில் பாதிக்கு மேல் நிரப்பி வைப்பதும், அதிகப்படியான அப்ளிகேஷன் களை பதிந்து வைப்பதும் கண்டிப்பாக பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
அதிக கொள்ளளவு கொண்ட மெமரி கார்டை நீங்கள் பயன்படுத்தினாலும், அடிக்கடி அவற்றை கணினியிலோ, ஆன்-லைன் ஸ்டோரேஜ் டிரைவ்களிலோ அல்லது பென்டிரைவ், ஹார்ட்டிஸ்க் போன்ற வேறு ஸ்டேரேஜ் டிவைஸ்களில் பேக்கப் செய்து வைத்துக்கொள்வது அவசியமாகும்.
செயல்பாடு முடங்கும் நிலைஅதிகமான அப்ளிகேஷன்களோ, மெமரியில் இடமில்லையென்றாலோ போனின் இயக்கம் தடைபட்டு முடங்கிவிடும் நிலைகூட ஏற்படும். இன்று பல ஸ்மார்ட் போன் பயனர்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனை இது.
இவ்வாறு மொபைல் போன் ஹேங் ஆவதை சரி செய்ய சில எளிய வழிமுறைகள் உள்ளன.உங்களது ஸ்மார்ட்போனிலுள்ள ரேம் அளவி குறைவாக இருந்து அளவுக்கு அதிகமான செயலிகளை பயன்படுத்தினால், ஸ்மார்ட்போன் ஹேங் ஆகும். 
இதோடு தேவையற்ற செயலிகளை பதிவிறக்கி வைத்திருப்பதும் பிரச்சனைக்கு முக்கிய காரணமாகும்.
நாம் பதிவிறக்கிய செயலிகளை பயன்படுத்தாமல் இருந்தாலும் அவை பின்னணியில் இயங்கிக் கொண்டுதான் இருக்கும். அதிகமான செயலிகள் இவ்வாறு செயல்பாட்டில் இருக்குமானால் போன் ஹேங் ஆவதை தவிர்க்க முடியாது. 
எனவே, தேவையற்ற அப்ளிகேஷன்கள் ஏதேனும் இயக்கத்தில் இருக்கிறதா என்பதை போன் செட்டிங்ஸ் பகுதியில் உள்ள ஆப்ஸ் என்ற பகுதியில் ஒவ்வொரு ஆப்ஸினையும் கிளிக் செய்து பார்த்து அறியலாம். தேவையற்ற அப்ளிகேஷன்களை  நிறுத்தி வைக்கவும். 
அத்துடன் அதற்கு அடுத்து காணப்படும் ஷோ நோட்டிபிகேஷன் டிக் மார்க்கையும் எடுத்துவிடவும்.மொபைல் ஹேங் ஆகும் நிலை ஏற்பட்டால் அதனை ஸ்விட்ச் ஆஃப் செய்து சிறிது நேரம் கழித்து ஆன் செய்யவும். அப்போதும் ஆஃப் செய்ய முடியாவிட்டால் போன் பேட்டரியை கழற்றிவிட்டு மாட்டவும். 
பொதுவாக ரீஸ்டார்ட் செய்யும்போது போன் இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.
ஆனால், அப்போதும் பிரச்சனை இருந்தால் செயல்பாட்டை இயக்கி போன் வாங்கும்போது இருந்த நிலைக்கு மாற்றலாம்.
 இதனை செய்வதால் 90 சதவீதம் பிரச்சனைகளை சரிசெய்து விடலாம். ஆனால், இச்செயல்பாட்டை மேற்கொள்ளும் முன் போனில் நீங்கள் பதிந்துள்ள அனைத்தையும் பேக்கப் செய்து வைத்துக்கொள்ளவேண்டியது அவசியமாகும்.
பேட்டரி பராமரிப்புபேட்டரி பராமரிப்பில் முக்கியமானது அதற்கு குறிப்பிட்ட நேரம் ஓய்வளிப்பதாகும். 24 மணிநேரமும் செயல்பாட்டிலிருக்கும் பேட்டரியை வாரம் ஒரு முறை இரவு நேரத்திலோ அல்லது அதிகம் பயன்படுத்தாத நேரத்திலோ குறைந்தபட்சம் 2 மணி நேரமாவது முழுமையாக ஃபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவைக்கவேண்டும்.
பேட்டரி மின் அளவு 20 சதவீதத்திற்கு கீழே குறையும்போது சார்ஜ் செய்வதுதான் நல்லது.
 பாதியளவிற்கு மேல் மின்சக்தி இருக்கும்போது சார்ஜ் செய்வதும், முற்றிலும் மின்சக்தி தீர்ந்தபிறகு சார்ஜ் போடுவதும் நல்லதல்ல. 
சார்ஜ் செய்யும்போது குறைந்த பட்ச மின்சக்தி இருப்பது அவசியமாகும்.
அடிக்கடி இதுபோன்று பேட்டரியை சார்ஜ் செய்வதால் விரைவிலேயே அதன் ஆயுள் முடிந்துபோகும்.
செயலிகளால் பிரச்சனைகுறிப்பிட்ட செயலியைப் பயன்படுத்தும்போது போன் செயல்பாடு மந்தமானாலோ ஹேங் ஆனாலோ அந்த செயலியை தொடர்ந்து பயன்படுத்தாமல் உடனே நீக்கிவிடவும்.
தரமான நிறுவனங்களின் செயலிகளை மட்டுமே பயன்படுத்தவும். மாதம் ஒரு முறையாவது நீங்கள் பயன்படுத்தும் செயலிகளுக்கான அப்டேட்களை பெற்றுக் கொள்ளவேண்டும்.
மொபைல்போன் நிறுவனம் தரும் சாப்ட்வேர் அப்டேட்களை கண்டிப்பாக நாம் பதிவிறக்கிக் கொள்வது அவசியமாகும். 
காரணம், உங்கள் போனில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளுக்கான தீர்வுகள் சாப்ட்வேரை அப்டேட் செய்வதன் மூலம் கிடைக்கக்கூடும். 
இன்னும் சிறப்பாக ஃபோனை பயன்படுத்தும் வாய்ப்புகளை அது ஏற்படுத்தித்தரும்.
==================================================
========================================================================
இன்று,
ஜுன் -24
  • மணிலா நகரம் அமைக்கப்பட்டது(1571)
  • நியூஜெர்சியில் குடியேற்றம் ஆரம்பமானது(1664)
  • தமிழறிஞர் கா.அப்பாத்துரை பிறந்த தினம்(1907)
  • கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்(1921)
  • மணிக்கொடி எழுத்தாளர் சிட்டி பெ.கோ.சுந்தரராஜன் இறந்த தினம்(2006)
========================================================================
பின்னால் உட்காரவங்கத்தானே கண்டிப்பா கெல்மட் போடணும் ?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?